KalviseithiDaily: Teacher's

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Teacher's. Show all posts
Showing posts with label Teacher's. Show all posts

Friday, March 25, 2022

17 வயது பள்ளி மாணவனை திருமணம் செய்த 26 வயது ஆசிரியை போக்சோவில் கைது

March 25, 2022 0
துறையூரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியையும், அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் துறையூரை சேர்ந்த மாணவனும் கடந்த 5 ஆம் தேதி, திடீரென மாயமாகினர். இது குறித்து, மாணவனின் பெற்றோர் துறையூர் போலீசில் மகனை காணவில்லை எனவும், ஆசிரியை சர்மிளா மீது சந்தேகம் உள்ளதாகவும் புகார் அளித்தனர். பின்னர், போலீசாரின் தீவிர விசாரணையில் ஆசிரியை சர்மிளா, திருச்சி எடமலைப்பட்டி புதூரில், தனது தோழியின் வீட்டில் தங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஆசிரியை கைது செய்த போலீசார், மாணவரை மீட்டனர். விசாரணையில், ஆசிரியை திருவாரூரில் மாணவருடன் சுற்றித்திரிந்ததும், பின்னர், தஞ்சை பெரிய கோயிலில் ரகசிய திருமணம் செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, சர்மிளாவை போக்சோவில் கைது செய்தனர்
Read More

Saturday, March 19, 2022

ஆசிரியர் பணியிடம் நிரப்ப கல்வி அமைச்சர் உறுதி

March 19, 2022 0
''கர்நாடகாவில் 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும்,'' என தொடக்க மற்றும் உயர் கல்வி துறை அமைச்சர் நாகேஷ் கூறினார்.

இதையும் படிக்க | Budget Speech for the year 2022-2023 - Tamil - PDF

இது குறித்து அவர் கூறியதாவது:கர்நாடகாவில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி கொடுத்துள்ளது. மொத்தம் 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அரசாணை வரும் 21ல் வெளியிடப்பட உள்ளது. வரும் 23 முதல் ஏப்ரல் 22 வரை விண்ணப்பம் அனுப்பலாம். பி.எட்., - டி.இ.டி., படித்த இன்ஜினியரிங் மாணவர்களுகளுக்கும் இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படும்.வயது வரம்பும் இரண்டு ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி எஸ்.சி., - -எஸ்.டி., பிரிவினருக்கு 47; பிற்படுத்தப்பட்டோருக்கு 45; பொதுப்பிரிவினருக்கு 42 எனவும் வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Wednesday, January 5, 2022

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்களை EMIS இணையத்தில் பதிவு செய்யலாம்!

January 05, 2022 0
🟢 தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசியர்கள் கவனத்திற்கு...
EMIS WEB PORTAL - இணையதள வழியில் ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

🟢 ஏற்கனவே  வந்த சுற்றறிக்கைகள் அடிப்படையில் விண்ணப்பங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்க  கோரப்பட்டிருந்தது.

🟢 ஆனால் , 05.01.2022  மாலை தான்
முதன்மை க்கல்வி அலுவலர் அறிவுறுதிய தகவல்  படி ஆசிரியர்களுடைய EMIS USERNAME PASSWORD  பயன்படுத்தி, பதிவேற்றம் செய்ய வேண்டும் என தகவல் வந்துள்ளது. 

🟢 எனவே, பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய ஆசிரியர்கள் உடனடியாக தங்களுடைய, 08- இலக்க எண்ணை பயன்படுத்தி, EMIS WEB PORTAL லில் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பத்தை பதிவேற்றம்  செய்து, அதனை PRINT OUT எடுத்து, 03 - நகல்களில் தலைமையாசிரியர் பரிந்துரை ஒப்பம் பெற்று உடன் அலுவலகத்தில்,  நாளை 07.01.22 காலை 11.00 மணிக்குள்  ஒப்படைத்திட  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

🟢 EMIS WEB PORTAL - லில் பதிவேற்றம் செய்வதில் தவறுகள் ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பும் சம்பந்தப்பட்ட ஆசிரியரையே சாரும்.

🟢  எனவே, மிக கவனமாக புள்ளி  விவரங்கள் பதிவேற்றம் செய்திட  மாறுதல் கோரும் பள்ளி  ஆசிரியர்களுக்கு, தலைமையாசிரியர்கள் தகவல் தெரிவித்து (சுற்றறிக்கையை பதிவேட்டில் கையெழுத்து பெற்று) வழிகாட்டுதல்  தெரிவித்திட  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

🟢 மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை கோருகிற ஆசிரியர்கள் அதற்கான சான்று ஆவணங்களை இணைத்து  முன்னிலைப்படுத்த வேண்டும்.
கல்வி அலுவலர்கள் - தஞ்சாவூர் மாவட்டம்.
Read More

Monday, December 27, 2021

உபரி ஆசிரியர்கள் இருக்கின்ற மாவட்டத்தில் பணி நீட்டிப்பு வழங்க இயலாது - தமிழக அரசின் வாதத்தை நீதிமன்றம் ஏற்பு

December 27, 2021 0
ஆசிரியர்கள் கல்வியாண்டின் நடுவில் ஓய்வு பெற்றால் பணிநீடிப்பு வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.தமிழக அரசின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்பு.

உபரி ஆசிரியர்கள் இருக்கின்ற மாவட்டத்தில் பணி நீட்டிப்பு வழங்க இயலாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Read More

Thursday, December 23, 2021

தொழிற்கல்வி ஆசிரியர் பட்டியல் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

December 23, 2021 0
மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தொழிற்கல்வி ஆசிரியர்களின் விபரங்களை சேகரிக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள்ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகள் உள்ளிட்டவை குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

ஜனவரியில் நடக்கும் இடமாறுதல் கவுன்சிலிங்கில் ஆசிரியர்களை உரிய இடங்களில் பணியமர்த்தும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதன்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தொழிற்கல்வி மாணவர்களின் எண்ணிக்கையும் அவற்றுக்கு ஏற்ப எத்தனை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்ற விபரங்களையும் பிழையின்றி பட்டியல் தயாரித்து அனுப்புமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குனர் ஜெயகுமார் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
Read More

ஆசிரியர் பொது மாறுதல் குறித்த தகவல்.

December 23, 2021 0
ஆசிரியர் பொது மாறுதல் குறித்த தகவல்.

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு online பதிவு துவக்கம் , திங்கள் கிழமையில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

09.01.2022 முதல் 13.01.2022 வரை தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்வி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு என எதிர் பார்க்கப்படுகிறது....
Read More

Wednesday, December 22, 2021

அரையாண்டு தேர்வு விடுமுறை - சாதகமான செய்தி வரும் - ஆசிரியர் கூட்டணி தகவல்.

December 22, 2021 1
பள்ளிக்கல்வி ஆணையர் தற்போது திருநெல்வேலி மாவட்ட மண்டல கல்வி மாநாட்டிற்கு சென்றுள்ளதால் அவரின் கவனத்திற்கு அரையாண்டு தேர்வு விடுமுறை பற்றி மாநிலத் தலைவர் பேசி இருப்பதாகவும் நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் சாதகமான செய்தி வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக தற்போது என்னிடம் கூறியுள்ளார் என்ற தகவலை தோழர்களுக்கு தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

மாவட்ட முகமை



தமிழ்நாடு உயர்நிலைமேல்நிலைப்பள்ளி பட்டதாரி

ஆசிரியர் கழகம் தேனி மாவட்டம்
Read More

Friday, December 17, 2021

2021-22ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான நெறிமுறைகள்

December 17, 2021 0
*✍️2021-22ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல்   கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியீடு!*👇👇👇

1️⃣ *அலகு விட்டு அலகு மாறுதலில்  செல்ல அனுமதி!*

2️⃣ *தற்போது பணிபுரியும் நிலையில் ஒரு ஆண்டு பணி செய்து இருக்க வேண்டும்!*

3️⃣ *8 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணிபுரிவோர் கட்டாயமாக மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்!* (ஒரு நிலையத்தில் அதிகபட்ச சேவை:

ஒரு குறிப்பிட்ட பள்ளியில் எட்டு ஆண்டுகள் (8ஆண்டுகள்) பணியாற்றிய ஆசிரியர்கள் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவார்கள். இருப்பினும், இந்தக் கொள்கை
வெளியிடப்பட்ட நாளிலிருந்து புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மட்டுமே, இந்த விதி வருங்காலத்தில் மட்டுமே பொருந்தும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இந்த ஆசிரியர்களுக்கு 8 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு உபரி ஆசிரியர்களுக்கு இணையாக முன்னுரிமை அளிக்கப்படும் (அதாவது, பொது கவுன்சிலிங் நடைபெறும் முன் அவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்)

4️⃣ *ஆகஸ்ட் மாதம் - மாணவர்கள் எண்ணிக்கை நிலவரப்படி பணிநிரவல் மேற்கொள்ளப்படும்!*

*பள்ளியில் பணியேற்ற நாள் அடிப்படையில் ஜூனியர் ஆக உள்ளவர் பணிநிரவல் செய்யப்படுவர்!*

*அதே கல்வி ஆண்டில் பணி ஓய்வு பெற இருப்போர்.. பணிநிரவல் செய்யப்பட மாட்டார்கள்!*

*மாற்றுத்திறனாளிகள் பணிநிரவல் செய்யப்பட மாட்டார்கள்!*

*மாற்றாக, அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள ஜூனியர் ஆசிரியர் பணிநிரவல் செய்யப்படுவார்கள்!*

5️⃣ *மன மொத்த மாறுதல் பெறுவோர் 2 ஆண்டுகளுக்கு பிறகு தான் அடுத்த கலந்தாய்வில் பங்கு பெற முடியும்!*

6️⃣ *SPOUSE PERIORITY - கோருவோருக்கு தொலைவு 30 கி. மீ மேல் இருக்கவேண்டும்!*

*மேலும், 3 ஆண்டுகளுக்குள் இச்சலுகையை பயன்படுத்தி பணியிட மாறுதல் ஏற்கெனவே பெற்றிருக்க கூடாது.*

7️⃣ *பொது மாறுதல்-கலந்தாய்வு MAY மாதத்தில் அல்லது முதல் பருவ இறுதி அல்லது இரண்டாம் பருவ இறுதியில் நடைபெறும்!*

8️⃣ *பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து அறிவிப்பு வெளியான பிறகு 5 தினங்களுக்குள் EMIS- வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்!*
Read More

Monday, December 13, 2021

ஓய்வூதிய வல்லுனர் குழு அறிக்கை என்னாச்சு; அரசு ஊழியர், ஆசிரியர்கள் குமுறல்

December 13, 2021 0
ஓய்வூதிய வல்லுனர் குழு அறிக்கை என்னாச்சு; அரசு ஊழியர், ஆசிரியர்கள் குமுறல்

ஓய்வூதிய வல்லுனர் குழு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்து மூன்று ஆண்டுகளாகியும், எந்த முடிவும் எடுக்காதது அரசு ஊழியர், ஆசிரியர்களிடையே மனக்குமுறலை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் 1.4.2003 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் 6 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களிடம் பிடித்தம் செய்த தொகை ரூ.46 ஆயிரம் கோடி. இதுவரை பதவி விலகிய, மரணமடைந்த 23 ஆயிரம் பேருக்கு பண பலன்களை இதுவரை வழங்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. 2016ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த சாத்தியக் கூறுகளை ஆராய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் வல்லுநர் குழு அமைத்தார். அதன்பின் ஸ்ரீதர் தலைமையில் செயல்பட்ட இக்குழு 27.11.2018 அன்று அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

தகவல் அறியும் சட்டம்

இதுகுறித்து சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கல்வித் துறையிடம் சில கேள்விகளை கேட்டுள்ளார்.பங்களிப்பு ஓய்வூதிய நிதி, எந்த தேதிகளில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுளளது. மத்திய அரசு போல், தமிழக ஊழியர்களுக்கு பணிக்கொடை, குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் அரசின் பங்களிப்பு 14 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன, வல்லுனர் குழு அறிக்கை விவரம் என்ன என்று கேட்டு இருந்தார்.

இதற்கு கல்வித்துறை அளித்துள்ள பதிலில், முதல் கேள்விக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியில் ரூ.28 ஆயிரத்து 725 கோடியும், ஏல அடிப்படையில் கருவூல பட்டி கணக்கில் ரூ.16 ஆயிரத்து 500 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கேள்விக்கு அரசு ஆணை வெளியிடப்படவில்லை எனவும், 3வது கேள்விக்கு வல்லுனர் குழு அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படவில்லை என்றும் பதில் அளித்துள்ளது. அரசுக்கு உபரி நிதி கிடைக்கும்

பிரெடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: வல்லுனர் குழு அறிக்கை வெளியிடாதது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடையே மனக்குமுறலை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., தேர்தல் அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வோம் என்றனர். உடனே அதை செயல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தினால் அரசுக்கு ரூ.23 ஆயிரம் கோடி உபரி நிதியாக கிடைக்கும், என்றார்.
Read More

Sunday, December 12, 2021

இலங்கை ஆசிரியர் சங்கம் எழுப்பியுள்ள கேள்வி

December 12, 2021 0
இலங்கை; கல்வியை அழிக்க போகின்றாரா?. விவேகமற்ற கொள்கைத் தீர்மானங்களினால் நாட்டின் விவசாயத்தை அழித்ததைப் போன்று நாட்டின் கல்வியையும் அரச தலைவர் அழிக்கப் போகின்றாரா என்ற நியாயமான சந்தேகம் நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்(Joseph Stalin) இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் காலத்திற்கு காலம் எடுக்கும் தீர்மானங்களினால் நாட்டின் பல துறைகளிலும் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. அரச பல்கலைக்கழகங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்துக்கள் தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமானது கல்வியை தனியார் மயமாக்கும் சட்டமாகும். உயர்கல்வியை அந்நிய செலாவணி ஈட்டும் முறையாக மாற்றுவது தொடர்பான அரச தலைவரின் உணர்வுகளை மேற்கோள்காட்டி, அவருக்கு ஆலோசனை வழங்குவது யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மூன்று அமைச்சர்கள் இருந்த போதிலும் கல்வி முறைமை பிரச்சினைகளால் நிரம்பி வழிகிறது. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் கல்வியை புறக்கணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளரான மஹிந்த ஜயசிங்க(Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார்.
Read More

Saturday, December 11, 2021

ஆசிரியரால் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம்: உரிய நடவடிக்கை எடுக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

December 11, 2021 0
கோவையில் தனியார் பள்ளி மாணவர் ஆசிரியரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவனை இறுக்கமாக ஆடை அணிந்து வந்ததாகக் கூறி இயற்பியல் ஆசிரியர் அடித்ததாக புகார் எழுந்துள்ளது. இதில் அந்த மாணவனுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக மாணவனின் பெற்றோரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் கோவையில் தனியார் பள்ளி மாணவர் ஆசிரியரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கோவையில் தனியார் பள்ளி மாணவர் ஆசிரியரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.

இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் நலன் பேணவும், ஆசிரியர் மாணவர் நல்லுறவு பேணவும் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More

டிச., 18, 19ல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மாநில மாநாடு

December 11, 2021 0
சென்னையில் டிசம்பர் 18 மற்றும் 19ல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 14வது மாநில மாநாடு நடக்கிறது.

மதுரையில் மாநில பொது செயலர் செல்வம் கூறியதாவது:பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, புதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும். பறிக்கப்பட்ட சரண் விடுப்பு மீண்டும் அளிக்க வேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடக்கிறது. டிசம்பர் 19ல் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
Read More

கை இறுக்கமாக தைத்து சீருடை அணிவதா? பிளஸ் 1 மாணவனை சரமாரி தாக்கிய ஆசிரியர்

December 11, 2021 0
கோவை கணபதி உதயா நகரைச் சேர்ந்தவர் 16 வயது மாணவர். இவர் கோவை நகரில் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டது. இதை வாங்கி சென்ற மாணவர், சட்டை பெரியதாக இருந்ததால், அவரது தாய் சட்டையை சரியான அளவில் திருத்தம் செய்து தைத்து கொடுத்தார். அந்த சட்டையை அணிந்து கொண்ட பிளஸ் 1 மாணவர் வழக்கம்போல நேற்று காலை பள்ளிக்கு சென்றார். மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது வகுப்புக்கு வந்த ஆசிரியர் ஒருவர், சீருடை குறித்து விசாரித்தார். அந்த மாணவரை எழுந்து நிற்க வைத்து, ‘‘நாங்கள் என்ன அளவில் சீருடை கொடுத்தோம், நீ ஏன் ஸ்டைலாக ஆல்டர் செய்து போட்டு வந்திருக்கிறாய்?’’ எனக்கேட்டார். ‘‘கை இறுக்கமாக சீருடை அணியக்கூடாது என தெரிவித்தும் அதுபோல் ஏன் மாறுதல் செய்தாய்?” எனக்கேட்டு பிரம்பினால் அந்த மாணவரின் முகுது, கை, கால்களில் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த மாணவர் வலி தாங்காமல் அலறி துடித்தார். உடனே மற்ற ஆசிரியர்கள் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக புகாரின்படி சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More

Thursday, December 9, 2021

தகவல் தராமல் 'ஆப்சென்ட்' - அரசு பள்ளி ஆசிரியர்கள் 5 பேருக்கு நோட்டீஸ் - CEO அதிரடி

December 09, 2021 0
வேலுார் மாவட்டம், குடியாத்தம் காந்திநகர் பகுதியில் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பணி யாற்றும் ஆசிரியர்கள், பள்ளிக்கு உரிய நேரத்தில் வருகை தருவ தில்லை என முதன்மைக் கல்வி அதிகாரிக்கு புகார் சென்றது. இந்த அதிரடி நடவ டிக்கை, கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

Monday, December 6, 2021

‘TET’ தேர்விலிருந்து விலக்கு கிடைக்குமா? : ஆசிரியர்கள் கோரிக்கை

December 06, 2021 0
பத்தாண்டுகளாக பரிதவித்து வரும் தங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து விலக்களித்து காக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் முறையாக பணிநியமனம் பெற்ற சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் மட்டும் கடந்த பத்தாண்டுகளாக தகுதித் தேர்வு (டெட் தேர்வு) நிபந்தனையால் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களைப் போலவே 2012ம் ஆண்டு வரை தகுதித் தேர்வு நிபந்தனையுடன் பணியேற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவால் காப்பாற்றப்பட்டனர். அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு நிபந்தனையை ரத்து செய்து, புத்தாக்கப் பயிற்சி மட்டும் அளிப்பதாக அறிவித்ததால் இவர்களும் காப்பாற்றப்பட்டனர். ஆனால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத சிறுபான்மையற்ற ஆசிரியர்களாகிய எங்களுக்கு ஒரு வார கால புத்தாக்கப் பயிற்சி மட்டும் அளித்து பாதுகாப்பதாக கடந்த ஆட்சியில் துறைசார்ந்த அமைச்சர் உறுதியளித்தார். அது நிறைவேற்றப்படவில்லை. மாறாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து எங்களது பணியை தற்காலிகமாக காப்பாற்றிக் கொண்டுள்ளோம். ஆசிரியர் தகுதித் தேர்வு ஒன்றையே காரணம் காட்டி, இதுநாள் வரை எங்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, வளரூதியம், ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, பணிப்பதிவேடு தொடக்கம், விடுப்பு அனுமதிப்பு, தகுதி காண் பருவம் நிறைவேற்றல், பணிவரன்முறை செய்தல் போன்ற வழக்கமான நடைமுறைகள் கூட அனுமதிக்கப்படவில்லை.

கடந்த ஆட்சியாளர்களால் புரிதல் இல்லாத, துறைசார்ந்த ஒரு சில அதிகாரிகளால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வாழ்வா, சாவா என்ற வாழ்க்கைப் போராட்டத்துடன் நாட்களை நகர்த்தியபடி, ஆசிரியர் தகுதித்தேர்வு என்ற நிபந்தனையின் அடிப்படையில் பணிபுரியும் எங்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்திட வேண்டும். முதலமைச்சர் மனது வைத்தால் தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து ஒரே ஒரு தவிர்ப்பு ஆணை மூலம் எங்களை விடுவித்து விடலாம். அவ்வாறு விடுவிக்கப்பட்டால் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக கடந்த ஆட்சியாளர்களால் தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபசாகிவிடும். நல்லதொரு அறிவிப்பினை முதலமைச்சர் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More

மாணவர்களுக்கு வாசிப்புத் திறனை அதிகரிக்க வாரம் ஒருமுறை நூலகப் பாடவேளை கட்டாயம் - புத்தகங்கள் வழங்கப்பட்ட பதிவேடு தயார் செய்ய வேண்டும்.

December 06, 2021 0
மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க பள்ளியில் வாரம் ஒருமுறை நூலக பாடவேளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று சிஇஓக்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: நூலகங்கள் மாணவர்களின் அறிவையும் ஆற்றலையும் பெருக்கும் பேராதாரமாகும். நாடு போற்றும் பெரிய தலைவர்கள் பாட நூல்களுக்கு அப்பால் தங்கள் பள்ளிகளில் உள்ள இருப்பிடங்களுக்கு அருகிலுள்ள நூலகங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்தியுள்ளனர். மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க ஒவ்வொரு பள்ளியிலும் பல்லாண்டு காலமாக நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வகுப்புக்கும் நூலக பாடவேளை வாரம் ஒருமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகள் சிறப்பான முறையில் இப்பாட வேளையை செயல்படுத்தி வருகின்றன. எனினும், சில இடங்களில் நூலக பாடவேளை மற்றும் பள்ளி நூலகங்களின் பயன் முறையாக மாணவர்களைச் சென்றடையாமல் இருப்பது தெரியவருகிறது. எனவே, பள்ளி நூலகங்களையும் பாட வேளைகளையும் முறையாகப் பயன்படுத்தவும், அவற்றின் பயன் மாணவர்களை நன்கு சென்றடையவும் பாடநூல்களுக்கு வெளியே புத்தக வாசிப்பை ஒரு வாழ்வியல் முறையாக மாணவர்கள் கைகொள்வதை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு வகுப்புக்கும் வாரம் ஒருமுறை நூலக பாடவேளை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கூடுமானவரை தனி அறை ஒதுக்கீடு செய்து தேவையான மேஜை, அலமாரி வசதி ஏற்படுத்த வேண்டும். புத்தகங்கள் வழங்கல் பதிவேடு தயார் செய்ய வேண்டும். இடப்பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் இருக்கும் வகுப்பறையில் ஏதேனும் ஒரு வகுப்பறையை நூலகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளிகளில் தேவையான அளவிற்கு புத்தகங்கள் இல்லாவிட்டால், அருகிலுள்ள பிற நூலகத்தையும் அணுகி மாணவர்கள் வாசிப்பதற்கு தகுந்த நூல்களைப் பெறலாம். பள்ளிகள் தங்களுக்கு தேவையான தமிழ், ஆங்கில நாளிதழ்களை தற்போது வாங்கி வருகின்றன. நூலக நேரம் தவிர காலை, மாலை, உணவு இடைவேளை போன்ற நேரங்களில் மாணவர்கள் நாளிதழ்களை வாசிக்க ஏதுவாக நூலகம் திறந்து வைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வாரமும் நூலக பாட வேளையில் மாணவர்களை பள்ளி நூலகத்திற்கு அழைத்துச் சென்று ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு புத்தகத்தை கட்டாயம் வாசிக்க தர வேண்டும். மாணவர்கள் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். அடுத்த வாரங்களில் புத்தகத்தை வாசித்து முடித்த மாணவனுக்கு வேறு புத்தகம் கட்டாயம் அளிக்க வேண்டும். நூலை மாணவன் வாசித்து முடிக்கவில்லை எனில், அதே புத்தகத்தை மீண்டும் வழங்கலாம்.

எனவே அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தெடுப்பதற்கும், நூலக பாடவேளைகளையும் மற்றும் பள்ளி நூலகங்களை முறையாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தகுந்த அறிவுரைகளை வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More

Monday, November 29, 2021

ஆசிரியர்களுக்கு சுதந்திரம் அளியுங்கள்!!

November 29, 2021 1
வழக்கறிஞர் அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

இன்று, நம் சமூகம் ஒழுக்கமற்றதாக மாறிவிட்டது. அதற்கு முக்கிய காரணம், நம் கல்வி முறை சரியில்லாமல் இருப்பதும், ஒழுக்கம் இல்லாத தலைவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் தான்!தவறான நபர்கள் உயர்ந்த பதவியில், பெரும் செல்வாக்கோடு வலம் வருவது, மக்களிடையே எப்படி வாழ்ந்தால் என்ன என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டது.குற்றவாளிகள், மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; இது, குற்றங்கள் பெருகுவதற்கு காரணமாக மாறி விட்டது.தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்கக் கூடாது என, ஆசிரியர்கள் கைகள் எப்போது கட்டப்பட்டதோ, அப்போதே சமூகம் தீய வழியில் நடக்க துவங்கி விட்டது.மாணவர் மது குடிப்பதும், போதையோடு பள்ளிக்கு வருவதும், மாணவியர் மீது பாலியல் தாக்குதல்கள் நடத்துவதும் ஆங்காங்கே நடக்கிறது.

ஆசிரியரின் கண்டிப்பால் ஒழுக்கமான பிள்ளைகள் உருவான காலம் மலையேறி விட்டது. இன்று மாணவர்களிடம், ஒழுக்கம் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.அதிலும், இந்த கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளாக வகுப்பறை கல்வி இல்லாததால், மாணவர்களின் மனநிலை பாதை தவறி விட்டது.ஏராளமான குழந்தைகள், மொபைல் போன் எனும் மாய வலையில் சிக்கி விட்டனர். ஏழை, எளிய மாணவர்கள் பலர், சூழல் காரணமாக குழந்தை தொழிலாளர்களாக மாறி விட்டனர்.இளம் வயதில் சம்பாதிக்கும்போது, தீயப்பழக்கங்களுக்கு ஆளாகின்றனர். மேலும், இன்றைய சினிமாவில் பொறுக்கி, ரவுடிகள் தான், கதாநாயகனாக காட்டப்படுகின்றனர். அதை பார்த்து, இளைஞர்களும் தறுதலைகளாக திரிகின்றனர்.தற்போது, காவலர் பூமிநாதன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு சிறுவர்களில் ஒருவர் ஒன்பதாம் வகுப்பு; மற்றொருவர் ஐந்தாம் வகுப்பு படிக்கின்றனராம். இவர்களை ஆடு திருட அழைத்து சென்ற முக்கிய குற்றவாளியின் வயதோ, 19 என்பதும், அவன் மது அருந்தியிருந்தான் என்பதும் மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.இதன் மூலம், எப்படிப்பட்ட இளைய சமூகத்தை நாம் உருவாக்கி வருகிறோம் என்பதை அறிய முடிகிறது.இந்த மூன்று குற்றவாளிகள் உருவாக முக்கிய காரணமே, ஒழுக்கமின்மை தான்; அதை கற்று கொடுக்க இயலாதது கல்வி துறை தான்!ஒழுக்கமான மாணவர்களை உருவாக்க, ஆசிரியர்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
Read More

Thursday, November 25, 2021

கரூர் பள்ளி ஆசிரியர் தற்கொலை: பிளஸ் 2 மாணவி சாவில் ெதாடர்பா? டைரியில் உருக்கமான தகவல்கள்

November 25, 2021 0
: கரூர் தனியார் பள்ளி ஆசிரியர் மாமனார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து ஆசிரியர் 2 பக்கம் எழுதி வைத்துள்ள டைரி சிக்கியுள்ளது. கரூர் மாவட்டம், குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் சரவணன்(44). கரூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் கூறுகையில், தற்கொலை செய்த ஆசிரியர் சரவணனின் டைரி ஒன்று அறையில் கைப்பற்றப்பட்டது. அதில், ஜெயந்தி (மனைவி) ஐ லவ் யூ. பிரணவ்குமார், ரக்சிதன் (மகன்கள்) ஐ மிஸ் யூ. அம்மா, அக்கா அனைவரையும் மிஸ் பன்னுறேன். ஜெயந்தி என்னை மன்னித்து விடு, என்னை மாணவர்கள் அனைவரும் தவறாக நினைக்கிறார்கள். மாணவர்களின் முன் அவமானமாக இருக்கிறது. எனக்கு வாழ ஆசை இல்லை. நான் பள்ளிக்கு வந்தவுடன் மாணவன் என்னை தவறாக கூறுகிறான். நான் எந்த தவறும் செய்யவில்லை. ஏன் இப்படி கூறுகின்றனர் என்று தெரியவில்லை. மாணவர்களை கோபத்தில் திட்டி இருக்கிறேன். அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். நன்றாக படியுங்கள். ஐ மிஸ் யூ ஆல் என உருக்கமாக எழுதி வைத்துள்ளார் என்று தெரிவித்தனர். ஆசிரியர் சரவணன் பணியாற்றிய அதே பள்ளி பிளஸ் 2 மாணவிதான் கடந்த 19ம் தேதி ஆசிரியர் பாலியல் துன்புறுத்தலால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்போது ஆசிரியர் சரவணன் தற்கொலை செய்திருப்பதால் இவர்தான், அந்த மாணவி கடிதத்தில் குறிப்பிட்ட மற்றொரு நபரா? என விசாரணை நடக்கிறது. கைதான ஆசிரியருக்கு 2 நாள் போலீஸ் காவல் கோவை தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி, ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்த வழக்கில் கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியிடம் மேலும் பல தகவல்களை சேகரிப்பதற்கு கோவை அனைத்து மகளிர் போலீசார் முடிவு செய்தனர். அதன்படி அவரிடம் 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு கோவை நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்திருந்தனர். அவரை 2 நாள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி நேற்று அளித்தார். அதன்படி அவரை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். இதனிடையே ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கோர்ட்டில் இருந்து போலீசார் வெளியே அழைத்து வந்தபோது வாலிபர் ஒருவர், அவரை நோக்கி, ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பியபடி பாய்ந்து வந்தார்.
Read More

பயிரை மேயும் வேலிகள்!! - தினமணி நடுப்பக்க கட்டுரை!!

November 25, 2021 0
‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்பது முன்னோா் சொல்லிய வைர வரிகள். அம்மா, அப்பா இல்லாமல் யாரும் பிறக்க முடியாது. அவா்கள் இருவரும் ரத்த சொந்தங்கள். நம்பியவா்களுக்கு தெய்வம் என்பது பெரிய உலகம். கண்ணுக்குத் தெரியாத பெரும் சக்தி. ஆனால், ஆசிரியா்கள், தாங்கள் கற்றுக் கொடுக்கும் மாணவா்களுக்கு உறவினராக இருக்க வேண்டிய அவசியமிலலை. நண்பா்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் ஆசிரியா்கள் இந்த வரிசையில் மூன்றாவது இடம் பெற்றுள்ளனா். இப்படி மிக முக்கியவத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கும் ஆசிரியா்கள், தமக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தை உணா்ந்து செயல்பட வேண்டியது மிக அவசியம்.

இத்தகைய பெருமைமிகுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியா்களில் சிலரின் செயல்பாடுகள் வேலியே பயிரை மேய்ந்து விடுகிறதோ என்ற எண்ணத்தை பெற்றோா்கள், பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றன. நம் முன்னோா்கள் சொல்லிய வரிசையின் முக்கியத்துவத்தை மற்ற துறையைச் சோ்ந்தவா்கள் எளிதாக கடந்து சென்றால் கூட ஆசிரியா் சமூகம், இந்த வரிசையின் மகத்துவத்தை உணா்ந்து செயல்பட வேண்டும். ஆசிரியா்களுக்கு சமூகம் தரும் கௌரவம் மிக அதிகம். தனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியரை பிற்காலத்தில் சந்திக்க நேரும் மாணவன், அவரை உபசரித்து அவருக்கு வேண்டிய பணிகளை செய்து கொடுத்து வாசல் வரை சென்று வழியனுப்பி வைக்கும் நிகழ்வு ஆசிரியா்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய பொக்கிஷம். தன்னிடம் படித்த மாணவா் இவா் என்று பாா்ப்போரிடம் எல்லாம் பெருமையாக சொல்லி மகிழும் குணமுடையவா்கள் ஆசிரியா்கள். இப்படி ஆசிரியா்-மாணவா் உறவு என்பது அனைத்து வகை உறவுகளை விட நெகிழ்சியானது.

ஆட்சியா்,அரசியல்வாதி, அரசு ஊழியா், தனியாா் நிறுவன ஊழியா் என ஒவ்வொருவருக்கும் எப்படியும் ஓா் ஆசிரியா் கனவாசிரியராக இருந்திருப்பாா். அந்த ஆசிரியா் குறித்த நினைவு எப்போதும் அந்த மாணவருக்குள் இருக்கும்.

இபபடி, கனவு ஆசிரியராக, தன் வாழ்க்கைப் பாதையை காட்டிய முன்னவராக, தான் கற்பதற்கு பல வழிகளில் உதவி செய்த நல்ல மனதுக்காரராக, தன் வாழ்நாள் முழுதும் நினைத்துப் பாா்க்கும் மாணவச் செல்வங்கள் அதிகம். சத்தமின்றி நன்மைகள் செய்து வரும் ஆசிரியா்களும் மிக அதிகம்.

இப்படி ஆசிரியா்களை மிக உயா்ந்த இடத்தில் வைத்து சமூகம் ஆராதித்து வரும் நிலையில், சில ஆசிரியா்களின் செயல்பாடுகள், ஆசிரியா் சமூகத்தையே குறைத்து மதிப்பிடும் நிலையை ஏற்படுத்தி விடுகின்றன. பாலியல் ரீதியான தொந்தரவுகளை மாணவிகளுக்குக் கொடுத்து வரும் சில ஆசிரியா்களால் ஒட்டுமொத்த ஆசிரியா் இனத்துக்கே பெரும் அவமானம் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஆசிரியா்கள் குறித்த சமூகத்தின் பாா்வையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அண்மையில், கோவையில் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக, தனியாா் பள்ளி ஆசிரியரும், அப்பள்ளியின் முதல்வரும் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது. இது தொடா்பான செய்தி காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவ, மாணவிகள் பள்ளியிலோ ஆசிரியா்களால் நடத்தப்பட்டும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளிலோதான் அதிக நேரத்தை செலவிடுகின்றனா். தங்கள் பிள்ளைகள் நன்கு படித்து, நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும், நல்ல ஒழுக்கத்துடன் வளர வேண்டும் என்ற உயரிய நோக்கில்தான் குழந்தைகளைப் பெற்றோா் பள்ளிக்கும், சிறப்பு வகுப்புகளுக்கும் அனுப்பி வைக்கின்றனா். ஆசிரியா்கள் மீதுள்ள நம்பிக்கை காரணமாகத்தான் இருபாலரும் சோ்ந்து பயிலும் பள்ளிகளுக்கு, மாணவிகளை, பெற்றோா் பயமின்றி அனுப்பி வைக்கின்றனா். மேலும், சிறப்பு வகுப்புகளுக்கும், இரவு நேரப் படிப்புகளுக்கும் கூட பெற்றோா் தயக்கமின்றி அனுப்பி வைக்கின்றனா். இத்தகைய பெற்றோரின் மனதில் கோவை சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவறு செய்யும் மாணவா்களைக் கண்டிக்க வேண்டிய பொறுப்பும், அவா்களை நல்வழிப்படுத்த வேண்டிய கடமையும் ஆசிரியா் சமூகத்திற்கு உண்டு. மாணவா்களுக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டியவா்கள் ஆசிரியா்கள். இந்த நிலையில் கோவை ஆசிரியா் போன்ற சில ஆசிரியா்களின் செயல்பாடுகளால் ஆசிரியா் சமூகத்துக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டிருப்பதை ஆசிரிய சமூகம் உணர வேண்டும்.

இதில் வேதனை என்னவென்றால், சம்பந்தப்பட்ட மாணவிக்கு, அந்த ஆசிரியா் பாலியல் தொல்லை கொடுத்த விவரம் அப்பள்ளியின் முதல்வருக்கு முன்னரே தெரிந்திருந்தும்கூட அந்த ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டதுதான். கடமை தவறும் ஆசிரியரைக் கண்டிக்க வேண்டிய பொறுப்பு, அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அந்த முதல்வருக்கு உண்டு என்பதை அவா் மறந்தது எப்படி எனப் புரியவில்லை. இப்படி அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சிலா்தான் இந்த கீழ்த்தர செயல்களில் ஈடுபடுகின்றனா் என்றாலும், அது இந்த சமுதாயத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மாணவா்களுக்கு நீதி கதைகளையும், வாழ்க்கைக் கல்வியையும் போதிக்க வேண்டிய ஆசிரியா்களே இதுபோன்ற பாதகச் செயலைச் செய்தால் அதன் தாக்கம் எதிா்கால இளைஞா்களையும் தவறான பாதைக்குக் கொண்டு செல்லும். வருங்காலங்களில், தகுதித் தோ்வு நடத்தி ஆசிரியா் நியமனத்தை மேற்கொள்ளும் அதே நேரத்தில், ஆசிரியா்கள் மாணவிகளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற உளவியல் ரீதியான பயிற்சி வகுப்புகளையும் நடத்துவது அவசியமாகி விட்டது. ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியா்களையும், பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியா்களையும் நியமிக்க வேண்டும் என ஏற்கெனவே அரசு தெரிவித்துள்ள நிலையில், இரு பாலா் பள்ளிகளில் மாணவிகளின் எண்ணிகைக்கு ஏற்ற வகையில் ஆசிரியைகள் நியமிக்கப்பட வேண்டும்.

செயல்முறைத் தோ்வு , அகத் தோ்வு மதிப்பெண்கள் போன்றவற்றில் வெளிப்படைத்தன்மையுடன் ஆசிரியா்கள் மாணவிகளை அணுக வேண்டும். தனியாக மாணவா்களுக்கு அக மதிப்பீடு வழங்கும் முறையைக் கைவிட்டு கல்லூரிகளில் குழு புராஜெக்ட்டிற்கு மதிப்பெண் வழங்கப்படுவது போல், பள்ளிகளிலும் குழு செயல்முறை மதிப்பெண் வழங்கும் முறையை கொண்டு வந்தால் தனிப்பட்ட முறையில் மாணவிகள் மிரட்டப்படுவது தவிா்க்கப்படும்.

எதிா்கால இந்தியாவை வடிவமைக்க கூடிய மாணவா்களை, மாணவிகளை உருவாக்கும் பெரும் பொறுப்புள்ள ஆசிரியா்கள் தங்களின் சமூக கடமை உணா்ந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
Read More

Wednesday, November 24, 2021

1 முதல் 5ம் வகுப்பு வரை 81 மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிக்க ஒரே ஆசிரியர்!!

November 24, 2021 0
நாகை மாவட்டம் வேதா ரண்யம் தாலுகா தகட்டூர் ராமகோவிந்தன்காடு அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 68 மாண வர்களுடன் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு ஒரு மாணவரை வைத்து பள்ளி நடத்திய போது மூடப்பட்டது. பெற் றோர் வலியுறுத்ததால் மீண் டும் திறக்கப்பட்ட அந்த பள்ளிக்கு சுப்பிரமணியன் என்ற ஆசிரியர் பணி அமர்த்தப்பட்டார். அதன் பிறகு ஆசிரியர் சுப்பிரம ணியன் 38 மாணவர்களை இப்பள்ளியில் சேர்த்து, தற்போது மாணவர் எண் ணிக்கை 68 உயர்ந்தது.

இத்தகைய சிறப்புமிக்க இந்த அரசு பள்ளி பள்ளி பல விருதுகளை பெற்றுள் ளது. ஸ்மார்ட் கிளாஸ் மூல மும் ஆன்லைன் வகுப்பு கள் உள்ளிட்டவை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக ஒரே ஒரு ஆசிரியரை மட்டும் வைத்து இப்பள்ளியில் பாடம் நடை பெற்று வருகிறது. தலை மையாசிரியர் கிடையாது. கடந்த 18 மாதங்களாக ஒரே ஆசிரியர் மட்டும் இப்பள் ளியில் 1 முதல்5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கு முதல் வகுப் பிற்கு சேருவதற்காக 13 மாணவர்கள் தற்போதே பள்ளிக்கு வருகின்றனர். பதிவேட்டின்படி 68 மாணவ, மாணவிகளும் அடுத்த ஆண்டு சேர்க்கைக்கு 13 பேர் என மெத்தம் 81 மாணவர்கள் இப்பள்ளி யில் உள்ளனர். மாணவர் கள் இல்லாமல் முடியப் பட்ட இப்பள்ளி, மீண்டும் திறக்கப்பட்டது மகிழ்ச்சி யாக இருந்தாலும், ஆசி ரியர் இல்லாமல் மூடும் நிலைக்கு சென்றுவிடுமோ என்று பெற்றோர்கள் மத்தி யில் அச்சம் எழுந்துள்ளது.

இது குறித்து மேலும் பள்ளியின் அவலம் குறித்து பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியும் நடவடிக்கைஎடுக்க வில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இப்பள்ளிக்கு ஆசிரியரை நியமித்து மாணவர்களின் நலனில் அக்கறை காட்டு மாறு பெற்றோர்கள் வேண் டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதா வது, விரைவில் ஆசிரி யர்களை நியமித்து மாணவர்களுக்கு பாடம் நடைபெறவில்லை என் றால் வரும் இரண்டாம் தேதி வேதாரண்யத்தில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும் என் றும். எங்கள் குழந்தைக ளின் கல்வி நலன்கருதி மாற்று சான்றுபெற்று வேறு பள்ளியில் சேர்க்கும் நிலை ஏற்படும் என பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
Read More

Post Top Ad

Your Ad Spot