KalviseithiDaily: Schools

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Schools. Show all posts
Showing posts with label Schools. Show all posts

Friday, September 30, 2022

பள்ளி படிப்பை கைவிடுவோர் அதிகரிப்பு! கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி - Increase in school dropouts! Shock in academic research

September 30, 2022 0
பள்ளி படிப்பை கைவிடுவோர் அதிகரிப்பு! கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி - Increase in school dropouts! Shock in academic research

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில், எட்டாம் வகுப்புடன் படிப்பை கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பள்ளிக் கல்வி துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதி தேர்வு முடிந்ததும், தேர்ச்சி பெறும் மாணவர்களில், உயர் வகுப்பில் சேர்ந்தோர் எண்ணிக்கை பற்றி ஆய்வு செய்யப்படும்.அதன்படி, கடந்த கல்வி ஆண்டில் பள்ளி படிப்பை முடித்தவர்கள், நடப்பு கல்வி ஆண்டில் படிப்பை தொடர்கின்றனரா என ஆய்வு செய்யப்பட்டது.

இதில், தென்காசி, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், ஐந்தாம் வகுப்புடன் படிப்பை முடிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது, ஆறாம் வகுப்பில் சேராமல், படிப்பை பாதியில் விட்டுள்ளனர்.

சென்னை, திண்டுக்கல் மற்றும் கடலுார் மாவட்டங்களில், எட்டாம் வகுப்புடன் படிப்பை கைவிடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது, 10ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாமல், பல மாணவர்கள் இடைநிற்றல் ஆவதாக தெரிய வந்துள்ளது. இதேபோல், தென்காசி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், எட்டாம் வகுப்புடன், படிப்பை கைவிடுவதும் தெரியவந்துள்ளது.

திண்டுக்கல், வேலுார், கரூர் மாவட்டங்களில், 10ம் வகுப்பு முடித்து, பிளஸ் 1 சேராமல் படிப்பை கைவிடுவோர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.சென்னை, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர் எண்ணிக்கையும், முந்தைய ஆண்டுகளை விட குறைந்திருக்கிறது.

திருப்பத்துார், பெரம்பலுார், நாகப்பட்டினம் மாவட்டங்களில், பல பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையே நடக்கவில்லை. அதனால், பல அரசு பள்ளிகளில், சில வகுப்புகள் மாணவர்கள் இன்றி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு தகவல்கள் அனைத்தும், பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் உத்தரவுப்படி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.
Read More

Monday, May 30, 2022

ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறப்பு - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

May 30, 2022 0
Schools open on June 23 for grades 1 to 10 and 12 in Puducherry and Karaikal

The day of the 11th grade will be announced, and then announced.

- Minister Namachivayam announces.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 10ம் வகுப்புகள் மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறப்பு

11ம் வகுப்புகள் தொடங்கும் நாள், பின்னர் அறிவிக்கபடும்.

- அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.
Read More

Sunday, April 10, 2022

பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்சி: ஆர்.பிரியா அறிவிப்பு

April 10, 2022 0
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்த மேயர் ஆர்.பிரியா, அதில் உள்ள திட்டங்கள் குறித்து அறிவித்ததாவது:

மாநகராட்சி அலுவலகங்களில் கோப்புகளைக் கையாள்வதற்கான நேரத்தைக் குறைக்க, மின்னணுஅலுவல் அமைப்பு அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் மக்களுக்கான சேவைகளை விரைவாக செய்துதர முடியும். பணியாளர்களின் வருகை, துறை செயல்பாடுகளைக் கண்காணிக்க புதிய செயலி வெளியிடப்படும். பொதுமக்கள் க்யூஆர் கோடு மூலம் சொத்துவரி செலுத்த வழிவகை செய்யப்படும். ரிப்பன் கட்டிடம் மற்றும் அனைத்து வட்டார அலுவலகங்களிலும் சொத்துவரி செலுத்த தானியங்கி கருவி நிறுவப்படும்.

நம்ம சென்னை செயலி மற்றும் வாட்ஸ்அப் மூலம் தொழில் வரி செலுத்துதல், வர்த்தக உரிமம் புதுப்பித்தல், ஆன்லைனில் கட்டிடத் திட்ட விண்ணப்பத்தின் நிலை அறிதல் போன்ற சேவைகள் வழங்கப்படும்.

பள்ளிகளில் பாலின சமத்துவம் குறித்து மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில், பாலினக் குழுக்கள் அமைக்கப்படும். 70 மாநகராட்சிப் பள்ளிகளில் ரூ.1.86 கோடியில் இணைய இணைப்பு வழங்கப்படும்.

மாணவிகள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி மூலம் ரூ.23.66 கோடியில் சானிட்டரி நாப்கின்கள் வழங்குதல், கழிவறைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். ரூ.5.47 கோடியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். ரூ.6.91 கோடியில் தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்கப்படும். திருவான்மியூர் பகுதியைச் சுற்றியுள்ள மாநகராட்சிப் பள்ளிமாணவர்களுக்கு, தன்னார்வலர்கள் மூலம் காலை உணவு வழங்கும் திட்டம், ஆங்கிலப் பயிற்சித் திட்டம் ஆகியவை விரிவாக்கம் செய்யப்படும்.

சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகளுக்காக 6 இடங்களில் டயாலிசிஸ் மையங்கள் செயல்படுகின்றன. ரூ.3.50 கோடியில் மேலும் 3 டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும்.

வீடு வீடாக குப்பை சேகரிக்க 795 பேட்டரி வாகனங்கள் வழங்கப்படும். சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில், ரூ.8.43 கோடியில் டிஜிட்டல் சாலை பெயர்ப் பலகைகள் நிறுவப்படும். 1,000 இடங்களில் தனியார் மூலம் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு, ரூ.52.26 கோடி வருவாய் ஈட்டப்படும்.

மாநகரில் பசுமைப் போர்வையை அதிகரிக்க 2.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். மாமன்ற உறுப்பினர்களுக்கு நிர்வாகப் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Friday, April 1, 2022

பள்ளிக் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.3,600 + ரூ.9,000 உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு

April 01, 2022 0
பாரம்பரிய இசை, நடனம், நாடகத்தில் பயிற்சி மேற்கொள்ளும் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.3,600 + சிறப்புப் பயிற்சிக்காக ரூ.9,000 உதவித்தொகை வழங்குகிறது மத்திய அரசின் கலை பண்பாட்டுத்துறை

உதவித்தொகை பெற தகுதியானவர்கள் ccrtindia.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Read More

Tuesday, March 29, 2022

அரசு பள்ளியில் புகுந்த பாம்பு

March 29, 2022 0
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் காலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறை ஒன்றில் பாம்பு படுத்திருப்பதை கண்டு, அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வகுப்பறை சுவற்றுக்கு அடியில் இருந்த 6 அடி நீளம் கொண்ட சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர், பிடிப்பட்ட பாம்பை வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Read More

Friday, March 25, 2022

பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற 14வயது சிறுமிகள் இருவர் மாயம்

March 25, 2022 0
வெங்கல் அருகே பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற 14வயது சிறுமிகள் இருவர் மாயம் அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் புதுகுப்பம் பகுதியை சேர்ந்த உறவினர்களான மோனிஷா(14) கீர்த்தனா(14) ஆகியோர் அலமாதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று பிற்பகல் இவர்கள் இருவரும் பள்ளியில் இருந்து அழைப்பு வந்துள்ளதால் பள்ளிக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து பள்ளி சீருடையில் சென்றுள்ளனர். மாலை வரை வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து வெங்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவிகளின் பெற்றோர், அரசு பள்ளி ஆகிய இடங்களில் விசாரணை நடத்தி சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற இரண்டு சிறுமிகள் மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More

Monday, January 10, 2022

தடுப்பூசி: சுகாதாரம், பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வர் பினராயி உத்தரவு

January 10, 2022 0
கேரளத்தில் 15 - 18 வயதுக்குட்பட்டோருக்கு இந்த வார இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா தொற்று திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். கடந்த வாரம் திருமணம், இறப்பு, அரசியல், கலாசார நிகழ்வுகளில் 75 பேர் வரை கலந்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது 50 நபர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசியல், கலாசார, பொது மற்றும் தனியார் அமைப்பு சார்ந்த நிகழ்வுகளை இணையம் வாயிலாக நடத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வார இறுதி நாள் ஊரடங்கு அல்லது மாலை நேர ஊரடங்கு விதிக்கப்படவில்லை. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து கரோனாவைக் கட்டுப்படுத்திவதில் அரசுக்கு உதவ வேண்டும்.

தற்போதைய சூழலில் பள்ளிகள் வழக்கம்போன்று செயல்படும். பள்ளிகளை மூடுவது குறித்து அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித் துறை அதிகாரிகளுடன் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

பள்ளிகளில் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Read More

Sunday, January 2, 2022

15-18 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி பள்ளிகளுக்கு அதிகாரி உத்தரவு

January 02, 2022 0
பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரில் 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசு 15 முதல் 18 வயதுக்குள்ளவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று சமீபத்தில் வழிகாட்டி நெறிமுறையை வெளியிட்டது. இதையடுத்து சென்னை நகரில் இயங்கும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பு ஊசி போடுவதற்கான ஏற்பாடுகளை அனைத்து தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்துள்ளார். அதில், கடந்த டிசம்பர் 31ம் தேதி அரசு வெளியிட்டுள்ள ஆணையின்படி, ஜனவரி 10ம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை என அறிவித்துள்ளது. ஆகவே அந்த நாட்களில் எந்த ஒரு பள்ளியிலும் மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தக் கூடாது. மேலும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளில் படித்து வரும் மாணவ மாணவியருக்கு ஏற்கெனவே தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்த வேண்டும். இது தவிர 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்காக மருத்துவப் பணியாளர்கள் தங்கள் பள்ளிகளுக்கு வரும் போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
Read More

Sunday, December 26, 2021

அரசு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு சிரமம்.

December 26, 2021 0
தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாமல் அரசு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.

கர்நாடகாவின் பல மாவட்டங்களில் குறிப்பாக கிராமப்பகுதிகளில் உள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தினர் பலரும் கொரோனா பாதிப்பால், அன்றாட வாழ்க்கையை சவாலாக எதிர்கொண்டு வருகின்றனர்.தனியார் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை சேர்த்து, கட்டணம் செலுத்த முடியாமல், பல பெற்றோர், மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர்.ஆனால், மீதமுள்ள கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே, மாற்று சான்றிதழ் வழங்கப்படும் என, தனியார் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்து வருகின்றனர். மாற்று சான்றிதழ் இல்லாமல், இரண்டாண்டுகளுக்கு பிறகும், பள்ளியில் சேர்க்க முடியாமல் பல பெற்றோர் சிரமப்படுகின்றனர்.கட்டணத்தை காரணமாக வைத்து தாமதம் செய்யக்கூடாதென அரசு அறிவுறுத்தியுள்ளது.

இருப்பினும், இது போன்று சில தனியார் பள்ளிகள் செயல்படுவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:கட்டணத்தை செலுத்துமாறு தனியார் பள்ளிகள் அறிவுறுத்தலாம். ஆனால், மாற்று சான்றிதழ் வழங்குவதில் மறுக்க கூடாது.இதனால், அரசு பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்படாது. மாணவர்களை பெற்றோர் நம்பிக்கையுடன் சேர்க்கலாம்.மாற்றுச்சான்றிதழ் தர மறுக்கும் பள்ளி நிர்வாகம் குறித்து புகார் அளிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Read More

Saturday, December 25, 2021

பள்ளியில் பசுமை வகுப்புகள் தொடக்கம்

December 25, 2021 0
Read More

Tuesday, December 21, 2021

பள்ளிகளில் லேண்ட்லைன் போன் கட்டாயம்: அமைச்சர் உத்தரவு

December 21, 2021 0
கேரளாவில் அரசு கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தரைவழி தொலைபேசி (லேண்ட் லைன் போன்) இணைப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் அரசு பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் தொலைபேசி இல்லாததால், கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள முடியவில்லை என்று கல்வி துறை அமைச்சர் சிவன்குட்டிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. மேலும் தொலைபேசி உள்ள பள்ளிகளில் யாரும் போன் எடுப்பதில்லை என்றும் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் சிவன்குட்டி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:கேரள கல்வித்துறையின் கீழ் உள்ள தொடக்க பள்ளி முதல் மேல்நிலை பள்ளி வரை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தரைவழி தொலைபேசி கட்டாயம் இருக்க வேண்டும். பழுதாகி இருந்தால் அவற்றை உடனே சரி செய்ய வேண்டும். தொலைபேசி இல்லாத பள்ளிகளில் புதிதாக இணைப்பு எடுக்க வேண்டும். தொலைபேசியில் விவரங்களை கேட்பதற்கு ஊழியரை நியமிக்க வேண்டும். யார் புகார் செய்தாலும் அதை பதிவு செய்ய வேண்டும்.

புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 வாரத்திற்கு ஒரு முறை பரிசீலனை செய்ய வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்தில் இருந்து கொடுக்கப்படும் கடிதங்களில் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். யாராவது போன் செய்தால் அவர்கள் கேட்கும் முழு விவரங்களை பணிவுடன் தெரிவிக்க வேண்டும். இந்த உத்தரவு வெளியான 10 நாட்களுக்குள் அந்தந்த கல்வி நிறுவனங்களில் தொலைபேசி எண்ணுடன் அறிக்கை தாக்க செய்ய வேண்டும். அவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More

Monday, December 20, 2021

அரையாண்டு விடுமுறை கிடையாது? Thanthi Tv Video

December 20, 2021 0
Read More

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறுவனை கடித்த பாம்பு

December 20, 2021 0
பள்ளி கழிவறையில் சிறுவனை கடித்த பாம்பு!

திருச்சி: மணப்பாறை அடுத்த பிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கழிவறைக்குச் சென்ற பாலாஜி (11 வயது) என்ற சிறுவன், கதவைத் திறந்தபோது கையில் பாம்பு கடித்தது

சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கழிவறை அருகே புதர் மண்டி கிடப்பதாலும், சுற்றுச்சுவர் இல்லாததுமே இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் தகவல்
Read More

Saturday, December 18, 2021

தமிழக அரசு பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று – விடுமுறை அறிவிப்பு!

December 18, 2021 0
தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியின் அரசு பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2ம் அலையின் பாதிப்பு காரணமாக கடந்த கல்வி ஆண்டு முதல் கல்வி நிலையங்கள் செயல்படாமல் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. இதனால் கல்வி நிலையங்களை விரைவில் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், சமீபத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் தமிழகத்தில் குறைந்த பிறகு அரசு பள்ளிகளை திறக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1 ம் தேதி முதலும், நவம்பர் 1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்புகள் வரை நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனால் அரசு முறையான நோய் தடுப்பு வழிமுறைகளை அறிவித்து பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. அவ்வப்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் மாணவர்களின் உடல் வெப்ப நிலை சோதித்த பிறகே பள்ளியில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில்,கோவை மாநகரில், பொள்ளாச்சியில் உள்ள சேரிபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 3 மாணவிகள் மற்றும் 1 மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளி முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு, கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் மற்ற பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு கொரோனா தொற்று குறித்த அச்சம் அதிகரித்துள்ளது
Read More

Wednesday, December 15, 2021

பள்ளி, கல்லூரி விழாக்களில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள்: தமிழக அரசு உத்தரவு

December 15, 2021 0
'பள்ளி, கல்லுாரி விழாக் களில், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்' என, அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக, கலை பண்பாட்டு இயக்ககம் கூடுதல் பொறுப்பு ஆணையர் சந்தீப் நந்துாரி, செய்தித் துறை இயக்குனருக்கு அனுப்பி உள்ள கடிதம்: தமிழகத்தில் உள்ள நாட்டுப்புறக் கலை களை இனம் கண்டு, அவற்றை அழியாமல் பாதுகாத்து, நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வை செம்மைப்படுத்தவேண்டும். நாட்டுப்புறக் கலைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல, தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

இதற்கான நடவடிக்கையை, தொழில் மற்றும் வணிகத் துறை ஆணையரகமும், 'எல்காட்' நிறுவனமும் எடுக்க வேண்டும். இது குறித்து தொழில் துறையும், தொழில்நுட்பத் துறையும், உரிய ஆணைகளை வெளியிடவேண்டும். பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலை விழாக்களிலும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, சட்டத் துறை உரிய ஆணைகளை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More

Tuesday, December 14, 2021

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ்

December 14, 2021 0
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். மேலும் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Read More

Sunday, December 12, 2021

அரசுப்பள்ளி கட்டிடத்தை இடித்து நொறுக்கிய ஒன்றிய கவுன்சிலர் மீது புகார்: கலெக்டர் விசாரணை

December 12, 2021 0
பள்ளி கட்டிடத்தை இடித்து நொறுக்கிய அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மீது புகார்: கலெக்டர் விசாரணை

திருவள்ளூர்: பள்ளி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்திய அதிமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திருவள்ளூர் கலெக்டர், போலீசில் புகார் கொடுத்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெண்மனம் புதூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் வடக்கு பக்கம் உள்ள கட்டிடம் சேதம் அடைந்து மோசமான நிலையில் இருந்தது. இதனால் அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற ஒன்றியக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து சேதம் அடைந்து காணப்பட்ட கட்டிடத்துக்கு பதிலாக கிழக்கு புறத்தில் நன்றாக இருந்த வகுப்பறை கட்டிடத்தை இடித்து அகற்றப்பட்டது. இதற்கு எவ்வித அனுமதியும் ஒப்பந்தமும் இல்லாமல் கடம்பத்தூர் ஒன்றியம் 2 வது வார்டு அதிமுக கவுன்சிலர் சுரேஷ், தன்னிச்சையாக முடிவெடுத்து கிழக்கு பக்கம் நன்றாக இருந்து கட்டிடத்தை இடித்துவிட்டார்.

இதுபற்றி திமுக மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர், மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ‘’ இதுபற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராம்குமார், கடம்பத்தூர் போலீசில் கொடுத்துள்ள புகாரில், ‘’ 2வது வார்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் என்பவர் கடம்பத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட வெண்மனம் புதூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் வகுப்பறை கட்டிடத்தை எந்தவித அனுமதியும் இல்லாமல் விதிகளை மீறி இடித்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

‘’நன்றாக இருந்த அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய அதிமுக கவுன்சிலர் சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Read More

Monday, December 6, 2021

மீண்டும் அதிகரித்த கொரோனோ எண்ணிக்கை.! அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவு.!

December 06, 2021 0
கர்நாடகா மாநிலம் சிவமொக்காவில் 29 நர்சிங் மாணவர்களுக்கு கொரோனோ உறுதியானதை அடுத்து அப்பகுதியில் உள்ள பள்ளி,கல்லூரிகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் ஓமிக்ரான் மாறுபாட்டின் வருகையைத் தவிர, மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான கொரோனோ வழக்குகள் பதிவாகியுள்ளன. இது தொற்றுநோயின் மூன்றாவது அலை மாநிலத்தைத் தாக்கும் என்ற அச்சத்தை பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் சிவமொக்கா மற்றும் சிக்கமகளூர் மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 68 மாணவர்கள் கொரோனோவுக்கு நேர்மறை சோதனை செய்துள்ளனர்.

சிக்கமகளூர் மாவட்டத்தில் உள்ள சீகோடு கிராமத்தில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா விடுதியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்ததில் 40 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஆரம்பத்தில், மூன்று மாணவர்கள் மற்றும் நான்கு ஊழியர்களுக்கு பாதிப்பு உறுதியானது. மற்றொரு சம்பவத்தில், சிவமொக்காவில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 29 நர்சிங் மாணவர்களுக்கு கொரோனோ பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என துணை கமிஷனர் கே.சிவக்குமார் கூறினார். மேலும் பாதிப்புக்கு உள்ளான அனைவரும் அறிகுறியற்றவர்கள் என்றும் கூறினார். மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுதி மூடி வைக்கப்பட்டுள்ளது. இதே போல அப்பகுதியில் உள்ள பள்ளி,கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இதுமட்டுமின்றி, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களையும் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணை கமிஷனர் கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் மாணவர்களிடையே அதிக எண்ணிக்கையிலான கொரோனோ வழக்குகள் இருப்பது மட்டுமல்லாமல், ஓமிக்ரான் மாறுபாட்டின் வழக்குகளைப் பதிவு செய்த முதல் மாநிலமாகும். இதுவரை, இந்தியா முழுவதும் ஓமிக்ரான் மாறுபாட்டின் மொத்தம் ஐந்து வழக்குகள் பதிவாகியுள்ளன. கர்நாடகாவில் இரண்டு வழக்குகளும், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லியில் தலா ஒரு வழக்கும் சில நாட்களில் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

மத்திய அரசு பள்ளியில் வேலை வாங்கி தருவதாக மோசடி

December 06, 2021 0
செங்கல்பட்டு மாவட்டம் பெரிய நத்தம் கெங்கையம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி வேதவள்ளி. செங்கல்பட்டு அனுமந்தபொத்தேரி பகுதியை சேர்ந்த சரவணனும், லோகநாதனும் நண்பர்கள். ஆசிரியர் படிப்பு முடித்த வேதவள்ளி அரசு பள்ளி வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில், சரவணனுக்கு, சென்னை தண்டையார்பேட்டை பிரின்ஸ் வில்லேஜ் பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் ரவிக்குமார் (50) என்பவரது தொடர்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, ரவிக்குமார் சரவணனிடம், ‘‘இந்தியா முழுவதும் செயல்படும் மத்திய அரசு பள்ளிகளான கேந்திர வித்யாலாயா பள்ளியில் ஆசிரியர் மற்றும் அலுவலக பணிக்கு ஆட்கள் எடுப்பதாகவும், கேந்திர வித்யாலாயா பள்ளி தலைமை நிர்வாகத்தில் எனக்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும், யாரேனும் ஆட்கள் இருந்தால் சொல்லுங்கள். நான் கேந்திர வித்யாலாயா பள்ளியில், இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது கட்டாயமாக வேலை வாங்கி தருகிறேன். அதற்கு பணம் செலவாகும்.’’ என ஆசைவார்த்தை கூறினார். அதில் மயங்கிய சரவணன், லோகநாதனிடம் இத்தகவலை சொல்லியுள்ளார். இதை நம்பிய வேதவள்ளி மத்திய அரசில் வேலை கிடைக்கபோகிறது என்ற கனவில் 13 லட்சத்தை சென்னை ரவிக்குமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால், ஒரு வருடமாகியும் வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திரும்ப தராமல் முறையான பதிலும் அளிக்காமல் ரவிக்குமார் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், சந்தேகமடைந்த வேதவள்ளி செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் ரவிக்குமார் மீது மோசடி புகார் அளித்தார். அதனடிப்படையில், நகர காவல் ஆய்வாளர் விநாயகம் தலைமையில் தனிப்படை அமைத்து ரவிக்குமாரை கைதுசெய்து அவர்மீது பண மோசடி வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், செங்கல்பட்டில் மட்டும் வேதவள்ளி, சரவணன் உள்பட 5க்கும் மேற்பட்டோரிடம் சுமார் 50 லட்சம் வரை ரவிக்குமார் மோசடி செய்திருப்பதும், வேதவள்ளி தவிர மற்றவர்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ரவிக்குமார் மீது புகார் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Read More

Tuesday, November 30, 2021

சேதமடைந்த பள்ளி கட்டிடம் இடிக்க நோட்டீஸ்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்

November 30, 2021 0
தமிழகம் முழுவதும் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்க நோட்டீஸ் அனுப்பப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் 469 குடும்பங்களுக்கு அரசு சார்பில் பாத்திரம், உடைகள், இலவச காஸ் சிலிண்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: 2015க்கு பிறகு தமிழகத்தில் தற்போது பெரிய அளவு மழை பெய்துள்ளது. இந்த மழையினால் தண்ணீர் தேங்கியுள்ள பள்ளிகளை கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிகவும் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்றுவதற்கும் பொதுப்பணித்துறை அமைச்சகத்திடமிருந்து விவரம் கேட்கப்பட்டுள்ளது. அவற்றை இடிக்க நோட்டீஸ் தரப்படும். மேலும் சேதமடைந்துள்ள நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களில் மாணவ, மாணவிகள் அமர்வதை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Post Top Ad

Your Ad Spot