KalviseithiDaily: exam result

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label exam result. Show all posts
Showing posts with label exam result. Show all posts

Tuesday, December 20, 2022

விரைவில் வெளியாகிறது TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்?

December 20, 2022 0
விரைவில் வெளியாகிறது TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்?

அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் தட்டச்சர், பண்டகக் காப்பாளர் உள்ளிட்ட குரூப் 4 நிலை பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 1 பதவிக்கு 2 பேர் என்ற விகிதத்தில் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கலந்தாய்வின் முடிவில் 7301 பேர் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணி அமர்த்தப்பட உள்ளனர்.

குரூப் 4 எழுத்துத் தேர்வு முடிவுற்று கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் நெருங்கும் நிலையில்,அதற்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும், அடுத்த ஆண்டு குரூப் 4, குரூபி 2/2ஏ, குரூப் 1 தேர்வுகள் நடைபெறாத என்று அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், தற்போதைய குரூப் 4 முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது.

முன்னதாக, குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, இந்த புதிய முறையைப் பின்பற்றி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிட இருக்கிறது

எனவே, இன்றிலிருந்து எப்போது வேண்டுமானாலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வர்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை அவ்வப்போது பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்
Read More

Saturday, July 9, 2022

குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

July 09, 2022 0
முதன்மைத் தேர்வுக்கு, ஒவ்வொரு பதவிக்கும் 10 மடங்கு விண்ணப்பத்தாரர் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்வி தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

முன்னதாக, அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்காக ஆட்சேர்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த ஆட்சேர்ப்பு மூலம் 5413 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

சில பதவிகள் முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. அதே சமயம், பெரும்பாலான பதவிகளுக்கு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு நிலைகளில் மட்டும் நியமனங்கள் நடைபெறும் என்று தெரிவிக்கிப்பட்டது.

அனைத்து பதவிகளுக்காமான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. 11 .78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். முன்னதாக, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட விரிவான ஆட்சேர்ப்பு அறிவிப்பில் ஜுலையில் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. கட் ஆப் மதிப்பெண்கள்:

ஆதிதிராவிடர்(எஸ்சி), ஆதிதிராவிடர் பழங்குடியினர், மகளிர், அனைத்து வகுப்பைகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினர் முதல்நிலைத் தேர்வில் 130 கேள்விகளுக்கு மேல் சரியான விடையளித்திருந்தால் முதன்மை தேர்வுக்கு தகுதி பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 140க்கு மேற்பட்ட சரியான கேள்விகள் எடுத்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் நல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏணைய பிரிவினர் 147 முதல் 150 வரை சரியான கேள்விகளுக்கு பதிலளித்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு பதவிக்கும் 10 மடங்கு விண்ணப்பத்தாரர் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். எனவே, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட உத்தேச விடைகள் மூலம் தேர்வர்கள் தங்களை மதிப்பீடு செய்து கொண்டு உடனடியாக முதன்மைத் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 7138 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. முற்பகல் 9.30 மணி வரையில் 12.30 மணி வரையில் இந்த தேர்வு நடைபெறும். எனவே , குரூப் 4 தேர்வு நடந்து முடிந்த பிறகே குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More

Friday, July 1, 2022

திறனாய்வு தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

July 01, 2022 0
தமிழகம் திறனாய்வு தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

பள்ளிப்பட்டு: ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களை போட்டி தேர்வுக்கு ஊக்கிவைக்கும் வகையில், மத்திய வருவாய் வழி மற்றும் படிப்புதவி தொகை திட்டத்தின் கீழ் தேசிய திறனாய்வுத் தேர்வு நடக்கிறது. இதில், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 ஊக்க தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், நடப்பாண்டு நடைபெற்ற இத்தேர்வில் ஆர்.கே.பேட்டை அருகே சந்திரவிலாசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலிருந்து 13 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 11 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். கிராமபுற அரசுப் பள்ளி மாணவர்களை, ஊக்குவித்த ஆசிரியர்களை கல்வியாளர்கள், கிராமபொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து அந்த பள்ளி தலைமை ஆசிரியை துளசிபாலா கூறுகையில், `கிராம பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். போட்டித் தேர்வு மட்டுமே ஒருவரின் சிறந்த எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும் என்பதால், காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இப்பள்ளி 8ம் வகுப்பு மாணவர்கள் திறனாய்வு தேர்வில் பங்கேற்று 90 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்’ என கூறினார்.
Read More

Post Top Ad

Your Ad Spot