KalviseithiDaily: Admissions

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Admissions. Show all posts
Showing posts with label Admissions. Show all posts

Monday, January 9, 2023

அரசு தொழில்பயிற்சி நிலையத்தில்மாணவா் சோ்க்கை கால நீட்டிப்பு

January 09, 2023 0
அரசு தொழில்பயிற்சி நிலையத்தில்மாணவா் சோ்க்கை கால நீட்டிப்பு

செய்யாறு அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கான தேதி ஜனவரி 13-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை எதிரே புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தொழில்பயிற்சி நிலையத்துக்கு 100 சதவீத சோ்க்கையை நிறைவு செய்யும் வகையில் மாணவா் சோ்க்கைக்கான தேதி ஜனவரி 13-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்கள் உரிய சான்றிதழ்களுடன் நேரில் வரலாம்.

மின்சாரப் பணியாளா், கம்மியா் மிண்ணணுவியல், மேம்பட்ட இயந்திரங்கள் மற்றும் இயக்குபவா் ஆகிய தொழில்பிரிவுகளின் 2 ஆண்டு கால பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

பற்றவைப்பாளா் பிரிவின் ஓராண்டு பயிற்சிக்கு எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

மாணவா்களுக்கு பயிற்சிக் காலத்தில் பயிற்சிக் கட்டணம் ஏதும் இல்லை.

பயிற்சி பெறும் மாணவா்களுக்கு அரசு உதவித் தொகையாக மாதம் ரூ.750, விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, 2 செட் சீருடைக்கான துணி, தையல்கூலி, இலவச பாடப் புத்தகம், இலவச சேப்டி ஷூ, இலவச பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு முதல்வா், அரசு தொழில்பயிற்சி நிலையம், செய்யாறு-604 401 என்ற முகவரியிலோ, 9444621245, 942219959 என்ற கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.
Read More

Thursday, December 29, 2022

இக்னோ பல்கலையில் நுழைவு தேர்வின்றி எம்.பி.ஏ., - எம்.சி.ஏ.,

December 29, 2022 0
இக்னோ பல்கலையில் நுழைவு தேர்வின்றி எம்.பி.ஏ., - எம்.சி.ஏ.,

நுழைவுத் தேர்வு இன்றி, எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளில், தொலைதுார கல்வியில் மாணவர்கள் சேரலாம் என, இக்னோ பல்கலை அறிவித்து உள்ளது.

இக்னோ எனப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை, தொலை துார கல்வி வாயிலாக இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.

தற்போது, 2023க்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து, இக்னோ சென்னை மண்டல முதுநிலை இயக்குனர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஒப்புதலுடன், இப்பல்கலையில் வழங்கப்படும், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, நுழைவுத்தேர்வு இன்றி சேர்க்கை நடக்கிறது.

இதில் சேர விரும்புவோர், https://ignouiop.samarth.edu/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி, 'ஆன்லைன்' வாயிலாக சேர்ந்து கொள்ளலாம்; விண்ணப்பிக்க கடைசி நாள் ஜன., 31.

குறிப்பிட்ட சில இளங்கலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளில் எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பினருக்கு கல்வி கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.

கூடுதல் விபரங்களை, www.ignou.ac.in என்ற பல்கலை இணையதளம் அல்லது சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் இயங்கும் மண்டல அலுவலகத்தை, 044- - 2661 8040 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Read More

Saturday, November 19, 2022

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய H.M

November 19, 2022 0
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய ஹெச்.எம்

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பஞ்சாயத்து மேலக்கடலாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 128 மாணவர்கள் படித்து வருகின்றனர். 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தலைமையாசிரியையான சற்பிரசாதமேரி தனது சொந்த பணத்திலிருந்து ஒன்றாம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கினார். இந்த சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்வேல் முருகன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

தலைமையாசிரியை சற்பிரசாதமேரி பேசுகையில் ‘‘பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஒரு நாளில் இரண்டு முறை பராமரிக்கப்படும் கழிவறை, சத்துணவு மற்றும் அரசு வழங்கக்கூடிய திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடலாடி, மேலக்கடலாடி மற்றும் அருகிலுள்ள கே.கரிசல்குளம், இந்திரா நகர், தேவர் நகர் உள்ளிட்ட கிராம மக்கள், வரும் கல்வியாண்டில் எங்கள் பள்ளியில் அதிகளவு மாணவர்களை சேர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சைக்கிள் வழங்கப்பட்டது’’ என்றார். அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்திய தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
Read More

Monday, September 26, 2022

பி.எட்., கல்லுாரிகளில் 2,040 இடங்களில் சேர்க்கை - Admission to 2,040 seats in B.Ed., colleges

September 26, 2022 0
பி.எட்., கல்லுாரிகளில் 2,040 இடங்களில் சேர்க்கை - Admission to 2,040 seats in B.Ed., colleges

The Higher Education Department has sanctioned 2,040 seats in government and government-aided Ph.D. colleges.

In Tamil Nadu seven government colleges and 14 government aided colleges, B.Ed., admission counseling application registration started yesterday. It has been notified that the graduates have to upload the details online at tnga saedu.in/. In this case, the higher education department has given permission to conduct Ph.D. Also, permission has been given to start admissions in private colleges.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட்., கல்லுாரிகளில், 2,040 இடங்களில் மாணவர்களை சேர்க்க, உயர் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும் 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், பி.எட்., சேர்க்கைக்கான கவுன்சிலிங்குக்கான விண்ணப்ப பதிவு, நேற்று முன்தினம் துவங்கியது. பட்டதாரிகள், tnga saedu.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விபரங்களை பதிவேற்ற வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு கல்லுாரிகளில், 900 இடங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 1,140 இடங்களில், பி.எட்., சேர்க்கை நடத்த, உயர் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. மேலும், தனியார் கல்லுாரிகளிலும் சேர்க்கையை துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Read More

Friday, September 9, 2022

இன்ஜி., சேர்க்கை பொது கவுன்சிலிங் நாளை1.50 லட்சம் இடங்களுக்கு 1.59 லட்சம் பேர் பங்கேற்பு

September 09, 2022 0
1.59 lakh candidates for 1.50 lakh seats in Eng., admission general counseling tomorrow

இன்ஜி., சேர்க்கை பொது கவுன்சிலிங் நாளை1.50 லட்சம் இடங்களுக்கு 1.59 லட்சம் பேர் பங்கேற்பு

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான 'ஆன்லைன்' பொது கவுன்சிலிங், நாளை துவங்க உள்ளது.

இதில், 1.50 லட்சம் இடங்களுக்கு, 1.59 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டில் சேர்வதற்கான ஆன்லைன் கவுன்சிலிங்கை, தமிழக உயர் கல்வித் துறை சார்பில், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துகிறது.

இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், 1.59 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 443 கல்லுாரிகளில், 1.50 லட்சம் இடங்கள், கவுன்சிலிங் வழியே நிரப்பப்பட உள்ளன.விளையாட்டுப் பிரிவு, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு, கடந்த மாதம் 20 முதல் 23ம் தேதி வரை கவுன்சிலிங் நடந்தது. மற்ற மாணவர்களுக்கான பொது கவுன்சிலிங், கடந்த 25ம் தேதி துவங்க இருந்தது. 'நீட்' தேர்வு முடிவு தாமதத்தால், கவுன்சிலிங் தேதி இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டது.

நவ., 20 வரை

நேற்று முன்தினம் நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, நாளை இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங் துவங்க உள்ளது. இந்த கவுன்சிலிங் நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்டு நவ., 13ல் முடிகிறது. நவ., 15 முதல் 20 வரை துணை கவுன்சிலிங் நடக்கிறது. கவுன்சிலிங்கின் முதல் சுற்று நாளை துவங்குகிறது. இரண்டாம் சுற்று, இம்மாதம் 25; மூன்றாம் சுற்று, அக்., 13; நான்காம் சுற்று அக்., 29ல் துவங்குகிறது.

ஒவ்வொரு சுற்றிலும் தர வரிசைப்படி மாணவர்கள் பங்கேற்கும் வகையில், பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இடங்களை தேர்வு செய்வதற்கான, 'சாய்ஸ் பில்லிங்' முறையில், கல்லுாரிகளின் பதிவுக்கு இரண்டு நாட்கள்; தற்காலிக ஒதுக்கீட்டை இறுதி செய்ய இரண்டு நாட்கள்; கல்லுாரிகளில் சேர ஒரு வாரம் என, ஒவ்வொரு சுற்றுக்கும் 11 நாட்களுக்கு மேல் ஒதுக்கப்படுகின்றன.

7.5 சதவீதம்

மாணவர்கள் குழப்பமின்றி பங்கேற்கும் வகையில், ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து, உயர் கல்வித் துறை சார்பில் வழிகாட்டுதல் 'வீடியோ' வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணைப்புகள், தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியின், www.tneaonline.orgஎன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.

அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் படித்து தேர்ச்சி பெற்றவர்கள், தங்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கவுன்சிலிங்கும் நான்கு சுற்றுகளாக, பொது கவுன்சிலிங் நாட்களிலேயே நடக்கிறது.அரசு பள்ளி ஒதுக்கீடுக்கு தகுதி பெற்ற மாணவர்கள், பொது கவுன்சிலிங் மற்றும் அரசு பள்ளி ஒதுக்கீடு என, இரண்டு இடங்களை ஒரே நேரத்தில் பதிவு செய்யலாம். ஒதுக்கப்படுவதில் எந்த இடம் மாணவருக்குப் பிடித்துள்ளதோ, அதில் சேரலாம் என கவுன்சிலிங் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read More

Friday, August 5, 2022

இன்ஜினியரிங் மாணவர் புதிய நடைமுறை; உயர்கல்வி துறை அறிவிப்பு

August 05, 2022 0
இன்ஜினியரிங் மாணவர் புதிய நடைமுறை; உயர்கல்வி துறை அறிவிப்பு

பொறியியல் படிப்பை தேர்வு செய்தும், அதில் மாணவர்கள் சேராமல் போகும் இடங்கள் கடைசி வரை காலி இடங்களாகவே இருந்து விடுகிறது. அதாவது, படிப்பை தேர்வு செய்து, அந்தந்த கல்லூரிகளில் சேராமல் போகும் மாணவர்களின் விவரங்களை அந்தந்த கல்லூரிகள் உடனடியாக தெரிவிக்கும் வகையில் ஏற்கனவே இணையதளம் உருவாக்கப்பட்டு இருந்தது.

அது நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் மூலம் படிப்பை தேர்வு செய்த 7 நாட்களுக்குள் அந்த இடத்தில் மாணவர்கள் சேரவில்லையென்றால், அந்த விவரத்தை அந்தந்த கல்லூரிகள் சுட்டிக்காட்டும் பட்சத்தில் 2ம் கட்ட கலந்தாய்வில் அந்த காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
Read More

Friday, July 29, 2022

பொறியியல் விண்ணப்ப பதிவு நிறைவு - 2,11,905 மாணவர்கள் விண்ணப்பம்!!

July 29, 2022 0
பொறியியல் படிப்பில் சேருவதற்காக 2,11,905 மாணவர்கள் விண்ணப்பம்!!

பொறியியல் படிப்பில் சேருவதற்காக 2,11,905 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இந்த தகவலை உயர்கல்வித்துறை அளித்துள்ளது
Read More

Tuesday, July 19, 2022

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 3.89 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

July 19, 2022 0
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 3.89 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ உள்ளிட்ட பல்வேறு பிடிப்புகளில் சேர கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இணையதளத்தில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அவரவர் படித்த பள்ளிகள் வாயிலாகவும், மாநிலம் முழுவதும் உயர்கல்வித் துறையால் அமைக்கப்பட்டுள்ள 110 சிறப்பு உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருப்பதாக உயர்கல்வித் துறை தெரிவித்திருந்த நிலையில், அறிவிப்பு வெளியான நாள் முதல் www.tngasa.in, www.tngasa.org ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பிக்கத் தொடங்கினர்.

அதன்படி, இதுவரை 3 லட்சத்து 89 ஆயிரத்து 969 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், இதில் 2 லட்சத்து 86 ஆயிரத்து 564 விண்ணப்பங்களுக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
Read More

Saturday, July 16, 2022

TAMILNADU MBA/MCA ADMISSION 2022 - M CA - TANCET MARK CUT OFF - 2020 - PDF

July 16, 2022 0
TAMILNADU MBA/MCA ADMISSION 2022

DIRECTORATE OF TECHNICAL EDUCATION, CHENNAI - 25

GOVERNMENT COLLEGE OF TECHNOLOGY, COIMBATORE - 13

MCA - TANCET MARK CUT OFF - 2020

CLICK HERE TO DOWNLOAD
Read More

TAMILNADU MBA/MCA ADMISSION 2022 - M CA - TANCET MARK CUT OFF - 2021 - PDF

July 16, 2022 0
TAMILNADU MBA/MCA ADMISSION 2022

DIRECTORATE OF TECHNICAL EDUCATION, CHENNAI - 25

GOVERNMENT COLLEGE OF TECHNOLOGY, COIMBATORE - 13

MCA - TANCET MARK CUT OFF - 2021

CLICK HERE TO DOWNLOAD
Read More

Monday, July 11, 2022

அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை: கலெக்டர் அறிவிப்பு

July 11, 2022 0
சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கை:

அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இந்த மாதம் 20ம் தேதி வரை இணையதளம் வாயிலாக நேரடி சேர்க்கை நடக்கிறது. 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியில் சேர்பவர்களுக்கு உதவி தொகையாக மாதம் ரூ.750, இலவச பஸ் பாஸ், சைக்கிள், பாட புத்தகங்கள், வரைபட கருவிகள், 2 செட் சீருடைகள், மூடு காலணி மற்றும் சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலை போன்றவை வழங்கப்படும் . விண்ணப்பதாரகள் வரும்போது 10ம் வகுப்பு கல்வி சான்றிதழ், மாற்று சான்றிதல், சாதி சான்றிதழ், ஆதார், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 5 ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More

Saturday, July 9, 2022

இரண்டாமாண்டு பி.யூ.சி. சோ்க்கை தேதி நீட்டிப்பு

July 09, 2022 0
இரண்டாமாண்டு பி.யூ.சி. சோ்க்கை தேதி நீட்டிப்பு

இரண்டாமாண்டு பி.யூ.சி. வகுப்பில் சோ்க்கை பெறுவதற்கான கடைசித் தேதியை ஜூலை 22-ஆம் தேதி வரை நீட்டித்து பி.யூ. கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பி.யூ. கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2022-23-ஆம் கல்வியாண்டில் மாநிலத்தில் உள்ள இரண்டாமாண்டு பியூசி வகுப்பில் மாணவா் சோ்க்கை ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது.

ஜூன் 18-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், அபராதம் செலுத்தி சோ்க்கைபெறுவதற்கு ஜூலை 8-ஆம் தேதிவரை வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.

பெற்றோா்கள் மற்றும் மாணவா்களின் வேண்டுகோளை ஏற்று சிறப்பு அபராதம் செலுத்தாமல் மாணவா் சோ்க்கை பெறும் கடைசிதேதி ஜூலை 22-ஆம் தேதிவரைநீட்டிக்கப்பட்டுள்ளது.

இரண்டாமாண்டு பி.யூ.சி. பொதுத்தோ்வு எழுதுவதற்கு குறைந்தப்பட்சம் 75 சத வருகைப்பதிவு இருக்க வேண்டும் என்பதால், இதற்கு மேலும் சோ்க்கை தேதி நீட்டிக்கப்படமாட்டாது. எனவே, இந்த வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்தி, உடனடியாக சோ்க்கை பெற கேட்டுக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ல்ன்ங்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Read More

Thursday, July 7, 2022

மீன்வள பல்கலையில் சேர்க்கை அறிவிப்பு

July 07, 2022 0
தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலையில், இளநிலை தொழில்நுட்ப படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பி.எப்.எஸ்சி., - பி.எப்.டெக்., - பி.பி.ஏ., - பி.வொகேஷனல் ஆகிய தொழில்நுட்ப படிப்புகளில் சேர பல்கலையின், www.tnjfu.ac.in/ என்ற இணையதளத்தில் ஆக.,8 வரை விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.கூடுதல் விபரங்களை, 04365 - 256430, 94426 01908 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
Read More

மாமல்லபுரம் சிற்பக் கலை கல்லுாரியில் சேர வாய்ப்பு

July 07, 2022 0
மாமல்லபுரத்தில் உள்ள அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலை கல்லுாரியில் கலைப் படிப் புகளுக்கு விண்ணப்பிக்க, இம்மாதம் 10ம் தேதி கடைசி நாள்.

ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல் கலையுடன் இணைக்கப்பட்டுள்ள, மாமல்ல புரம் அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரியில், பி.டெக்., மரபுக் கட்டடக்கலை, பி.எப்.ஏ., மரபு சிற்பக்கலை மற்றும் மரபு ஓவியம், வண்ணப்படம் ஆகிய பிரிவுகளில் சேரலாம்.

இதற்கான விண்ணப்ப வினியோகம், www.artandculture.tn.gov.in என்ற இணையதளத் தில் துவங்கியுள்ளது. பிளஸ் 2 முடித்த, 26 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு, 'முதல்வர், அரசு கட் டடக்கலை மற்றும் சிற்பக் கல்லுாரி, மாமல்ல புரம் அல்லது இயக்குனர், கலை பண்பாட்டுத் துறை, சென்னை -8' என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
Read More

Sunday, July 3, 2022

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை தாண்டியது

July 03, 2022 0
2022-23-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மாநகராட்சி பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டை போலவே மாணவர் சேர்க்கை உயரும் என்று எதிர்பார்க்கிறோம். சென்னை: சென்னை மாநகராட்சி மூலம் மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. மொத்தம் 281 பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்தவர்கள் தனியார் பள்ளிகளில் படித்த தங்கள் குழந்தைகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்தனர்.

கல்வி கட்டணம் எதுவும் இல்லாதது மட்டுமின்றி பாடப்புத்தகம், நோட்டு-புத்தகம், சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் மாணவ-மாணவிகளுக்கு அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளில் அரசு, மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 8 லட்சம் வரை உயர்ந்தது. சென்னையில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 11 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்தனர். இந்த நிலையில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மாநகராட்சி பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன.கடந்த 20 நாட்களில் 1 லட்சத்து 5 ஆயிரம் பேர் மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்து இருப்பதாக கல்வித் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி கல்வி அதிகாரிகள் கூறியதாவது:- கடந்த ஆண்டை போலவே மாணவர் சேர்க்கை உயரும் என்று எதிர்பார்க்கிறோம். இது வரையில் 1.5 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். செப்டம்பர் மாதம் விஜயதசமி வரை மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அதனால் கடந்த வருடத்தை போல மாணவர்கள் எண்ணிக்கை உயரும்.

கல்வித்துறை சார்பில் அனைத்து மாநகராட்சி பள்ளிகள் முன்பும் பேனர் வைத்துள்ளோம். இதுதவிர நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டு வீடு வீடாக வழங்கப்படுகிறது. மாநகராட்சி பள்ளியில் உள்ள வசதிகள், தரம், அரசு வழங்கும் கல்வி உபகரணங்கள் குறித்து பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

மேலும் தற்போது பள்ளிகளில் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு இருப்பதால் அதில் உள்ள உறுப்பினர்கள் மூலம் கூடுதலாக மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது. பள்ளிகள் உள்ள பகுதிகளில் ஆசிரியர்கள் துண்டு பிரசுரம் வழங்கி மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்
Read More

Friday, July 1, 2022

மதுரை காமராஜ் பல்கலையில் ( இளநிலை, முதுநிலை, டிப்ளமா, சான்றிதழ் படிப்புகள் ) மாணவர் சேர்க்கை - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 7

July 01, 2022 0

மதுரை காமராஜ் பல்கலையில் மாணவர் சேர்க்கை

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பல்வேறு இளநிலை, முதுநிலை, டிப்ளமா, சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

மதுரையில் கடந்த 1966ம் ஆண்டு நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகத்தில் தற்போது வழங்கப்படும் 45 முதுநிலை பட்டப்படிப்புகள், 9 இளநிலை பட்டப்படிப்புகள், 17 டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

முதுநிலை பட்டப்படிப்புகள்: 2 ஆண்டுகள்

எம்.எஸ்சி., - பயோகெமிஸ்ட்ரி, பயோடெக்னாலஜி, கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், கிரிமினாலஜி, எர்த் ரிமோட் சென்சிங் அண்டு ஜியோ இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஜெனோமிக்ஸ், ஜியோகிராபி, மரைன் பயோலஜி, மேத்மெடிக்ஸ், மைக்ரோபயல் ஜீன் டெக்னாலஜி, மைக்ரோபயோலஜி, பிசிக்ஸ்.

எம்.ஏ., - இங்கிலிஷ், பிரெஞ்ச், தமிழ்

எம்.பி.ஏ., - ஹாஸ்பிட்டல் அட்மினிஷ்ட்ரேஷன்

எம்.சி.ஏ., 

எம்.எட்., 

எம்.பி.எட்.,

குறிப்பு: மேற்கண்ட பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற பல்கலைக்கழகம் நடத்தும் பிரத்யேக நுழைவுத்தேர்வை எழுதவேண்டியது அவசியம்.

இளநிலை பட்டப்படிப்புகள்: 3 ஆண்டுகள்

பி.ஏ., - தமிழ், பி.ஏ.,- இங்கிலிஷ், பி.பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., - கணிதம், பி.எஸ்சி., - உளவியல்

முதுநிலை பட்டப்படிப்புகள்: 2 ஆண்டுகள்

எம்.எஸ்சி., - எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ருமெண்டேஷன், என்விரான்மெண்டல் சயின்சஸ், பிலிம் அண்டு எலக்ட்ரானிக் மீடியா ஸ்டடீஸ், மேத்மெடிக்கல் எக்னாமிக்ஸ், சைக்காலஜி, விசுவல் கம்யூனிகேஷன்

எம்.ஏ., - அட்மினிஷ்டிரேட்டிவ் ஸ்டடீஸ், எக்னாமிக்ஸ், இங்கிலிஷ் லேங்குவேஜ் ஸ்டடீஸ், ஹிஸ்ட்ரி, ஜர்னலிசம் அண்டு மாஸ் கம்யூனிகேஷன், கன்னடம், லிங்கிஸ்டிக்ஸ், மலையாலம், பிலாஷபி அண்டு ரிலிஜென், பொலிட்டிக்கல் சயின்ஸ், சமஸ்கிருதம், தெலுங்கு

எம்.பி.ஏ., - டூரிசம் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் - 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு

எம்.காம்., 

எம்.லிப்.ஐ..எஸ்சி.,

இவை தவிர, பல்வேறு பிரிவுகளில் டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. மேற்கண்ட படிப்புகளில் சேர்க்கை பெற நுழைவுத்தேர்வு எழுதவேண்டிய அவசியமில்லை.

தகுதிகள்: படிப்புகள் மற்றும் துறைகளுக்கு ஏற்ப கல்வித்தகுதிகள் மாறுபடும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 7

விபரங்களுக்கு: https://mkuniversity.ac.in/

Read More

Tuesday, June 28, 2022

புதுவையில் முதுநிலை மருத்துவபடிப்புகளுக்கு ஜூலை 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

June 28, 2022 0
புதுவையில் முதுநிலை மருத்துவபடிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்டாக் நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதுகுறித்து புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளா் பி.டி.ருத்ரகௌடு வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அரசு, அகில இந்திய ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியா் ஒதுக்கீட்டு இடங்களுக்கு இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

புதுவையில் உள்ள பல் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கு அரசு, அகில இந்திய ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியா் ஒதுக்கீட்டு இடங்களுக்கு இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை ஜூலை 11-ஆம் தேதி மாலை 6 மணி வரை இணையதளத்தில் சமா்ப்பிக்கலாம் என்றாா் அவா்.
Read More

Saturday, June 25, 2022

கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: அரசுக்கு மாா்க்சிஸ்ட் கோரிக்கை

June 25, 2022 0
கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கை காலம் மாறுபாடு இல்லாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவியா் பள்ளிக்கல்வி முடித்து உயா்கல்விக்காக கல்லூரிகளில் சோ்ந்திட விண்ணப்பித்து வருகின்றனா். மத்திய பள்ளிக் கல்வித்துறை வாரியத்தின் பிளஸ் 2 வகுப்பு தோ்வு முடிவுகள் ஜூலை 4 அல்லது 5 ஆம் தேதிகளில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. உயா்கல்வித்துறை அமைச்சா் பொன்முடி, சிபிஎஸ்இ பிளஸ் 2 வகுப்பு தோ்வு முடிவுகள் வந்த பின்னா் 5 நாள்கள் கழித்தே அனைத்து கல்லூரிகளும் தங்கள் மாணவா் சோ்க்கையை முடிக்க வேண்டும் என கூறியதை கவனத்தில் கொள்ளாமல் சில கல்லூரிகள் மாணவா் சோ்க்கையை தொடா்வதும், சில கல்லூரிகள் மாணவா் சோ்க்கை முடிந்துவிட்டது என அறிவிப்பதும் ஏற்கதக்கதல்ல. சிபிஎஸ்இ மாணவா்களும், அவா்தம் பெற்றோா்களும் மிகவும் பதற்றத்திலும், அச்சத்திலும் இருக்கிறாா்கள். மேலும், தோ்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை முடிந்துவிட்டால், தங்களது எதிா்காலம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் சிபிஎஸ்இ மாணவா்கள் உள்ளனா். எனவே, தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளும் மாணவா்களின் எதிா்கால நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ மாணவா்கள், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வாரிய மாணவா்கள், மறு மதிப்பீடு செய்ய கோரும் மாணவா்கள், மறு தோ்வு எழுதி தோ்வு முடிவுகள் வரப்பெற்ற மாணவா்கள் ஆகியோரது விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் அல்லது விண்ணப்பப் படிவம் மூலம் வரப்பெற்ற பின்னரே, தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி கல்லூரிகள் மாணவா் சோ்க்கையை நடத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கூறியுள்ளாா் கே.பாலகிருஷ்ணன்.
Read More

Tuesday, June 21, 2022

பிளஸ் 1ல் சேர்க்கை பள்ளிகளுக்கு அறிவுரை

June 21, 2022 0
Advice for Plus 1 Admission Schools

In government and government-aided schools, principals are instructed to assign the subjects of interest to the students according to the scorecard, plus plus 1.

In Tamil Nadu, as the Class 10 results were released yesterday, instructions have been issued on behalf of the Principal Secretaries of School Education to the Headmasters of Government and Government Aided Schools regarding Plus 1 admission. Accordingly, all schools are required to receive student applications, set a time limit, and then follow the scoring and reservation rules and prepare a ranking list.

Finally, follow the rules and assign students the courses they want. Instead there should be no irregularities such as assigning courses of their choice and, based on recommendation, providing the required courses.

In this regard, it has been warned that action will be taken against the concerned headmaster and student admission committee if complaints are received. பிளஸ் 1ல் சேர்க்கை பள்ளிகளுக்கு அறிவுரை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கையில், மதிப்பெண் தரவரிசைப்படி, மாணவர்கள் விரும்பும் பாடப் பிரிவுகளை ஒதுக்க, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில், பிளஸ் 1 சேர்க்கை தொடர்பாக, அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி முதன்மை செயலர்கள் தரப்பில், அறிவுறுத்தல் வழங்கப் பட்டுள்ளது. இதன்படி, அனைத்து பள்ளிகளும், மாணவர்களின் விண்ணப்பங்களை பெற்று, கால அவகாசம் நிர்ணயித்து, அதன்பிறகே மதிப்பெண், இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்றி, தரவரிசை பட்டியல் தயாரிக்க வேண்டும்.

இறுதியாக, விதிகளை பின்பற்றி, மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை ஒதுக்க வேண்டும். மாறாக தங்களின் விருப்பத்துக்கு பாடப் பிரிவுகளை ஒதுக்குவது, சிபாரிசு அடிப்படையில், தேவையான பாடப்பிரிவுகளை வழங்குவது போன்ற விதிமீறல்கள் இருக்கக் கூடாது.

இது குறித்து, புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர் சேர்க்கை குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Read More

Monday, June 20, 2022

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: உயர்க்கல்வித்துறை அறிவிப்பு

June 20, 2022 0
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22 முதல் விண்ணப்பிக்கலாம்: உயர்க்கல்வித்துறை அறிவிப்பு



அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22 முதல் இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்: உயர்க்கல்வித்துறை அறிவிப்பு

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22 முதல் இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது. www.tngasa.in, www/tngasa.org என்ற இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம். வரும் 27ம் தேதிக்கு பதில், 22ம் தேதியே ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot