KalviseithiDaily: Assistant Professors

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Assistant Professors. Show all posts
Showing posts with label Assistant Professors. Show all posts

Wednesday, November 16, 2022

உதவிப்பேராசிரியர்கள் நியமனம் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு போட்டித்தேர்வு: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

November 16, 2022 0
உதவிப்பேராசிரியர்கள் நியமனம் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு போட்டித்தேர்வு: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு போட்டித் தேர்வு நடத்த வேண்டும் என பாமக தலைவர்அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அன்புமணி வெளியிட்ட டிவிட்டர் பதிவு: அரசு கல்லூரிகளுக்கு 4,000 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில், அதில் 50% தங்களுக்கு ஒதுக்க வேண்டும் அல்லது சிறப்பு போட்டித் தேர்வு நடத்தி தங்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 5303 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களில் பலர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் உழைப்பும், சேவையும் மதிக்கப்பட வேண்டும். உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் கவுரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்திற்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதனால் கவுரவ விரிவுரையாளர்களுக்கு போதிய அளவில் பயன் கிடைக்காது என்று கூறப்படுகிறது.
Read More

Friday, September 23, 2022

955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம்: அமைச்சர் பொன்முடி

September 23, 2022 0

9 ஆண்டுகளுக்கு பிறகு 955 துணை பேராசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமைச்சர் தெரிவித்ததாவது:



அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வருகிற உதவிப் பேராசிரியர்களின் பணியை வரன்முறை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருந்தது.



இவர்களை பணி நிரந்தரம் செய்வதாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது. ஆனால், பணிநிரந்தரம் செய்யவில்லை. 9 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது.



41 உறுப்பு கல்லூரிகளை ரூ.152 கோடி செலவில் அரசு கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆணை நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கல்லூரிகளில் பணியாற்றிய கௌரவ விரிவுரையாளர்களுக்கு அரசிடமிருந்து ஊதியம் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



4000 உதவி பேராசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவுள்ளது.



பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1030 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் வழங்குகிறார்.



பொறியியல் படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிந்து விட்டது. இதில் 10,351 பேர் மாணவர்கள் கலந்து கொண்டு உள்ளனர். அதில் 6,009 பேர் கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Read More

Friday, November 26, 2021

உதவி பேராசிரியர் பணி - நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 29.11.2021

November 26, 2021 0
திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு எம்.பில், எம்.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : காந்திகிராம ஊரக நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம் : காந்திகிராம் பல்கலைக்கழகம், திண்டுக்கல்

பணி : Assistant Professor

தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Aricultural Engineering, Farm Machinery பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம், M.Phil, M.Tech, Ph.D டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 2 முதல் 3 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.ruraluniv.ac.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 29.11.2021 நேர்முகத் தேர்வு நடைபெறும் நேரம் : காலை 10.30 மணியளவில் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Board Room, Administrative Block.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.ruraluniv.ac.in/ அல்லது https://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/walk_in171121.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.
Read More

Sunday, November 21, 2021

கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம்

November 21, 2021 0
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ரகுநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் பணவிக்கு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதால் பேராசிரியர் ரகுநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Read More

Thursday, November 18, 2021

49 உதவி பேராசிரியர்கள் தேவை!!

November 18, 2021 0
சென்னை ஐ.ஐ.டி. கல்லூரியில் காலியாக உள்ள 49 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 49 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் www.iitm.ac.in இணையதளத்தில் வரும் டிசம்பர் 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Read More

Sunday, November 14, 2021

கல்லூரி, பல்கலை பேராசிரியைகள் சேலை அணிவது கட்டாயமில்லை: உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு

November 14, 2021 0
கேரளாவில் கல்லூரி மற்றும் பல்கலை கழக பேராசிரியைகள் சேலை அணிவது கட்டாயம் இல்லை என்று உயர்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. திருச்சூர் அருகே கொடுங்கல்லூரில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு பணிபுரியும் பேராசிரியைகள் அனைவரும் கண்டிப்பாக சேலை அணிய வேண்டும் என்று அந்நிறுவனம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கல்லூரி பேராசிரியை ஒருவர் கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்துக்கு புகார் கொடுத்தார்.

அதில், கல்லூரிக்கு தினமும் சேலை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். வேலை வேண்டும் என்றால் சேலை அணிய வேண்டும் என்றும் நிர்வாகம் கட்டாயப் படுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கேரளாவில் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்பட உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியைகள் சேலை அணிவது கட்டாயம் இல்லை என்று உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில், கல்லூரிகளில் சேலை அணிவதை கட்டாயப்படுத்த கூடாது. நாகரீகமான எந்த உடையையும் அணியலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் பிந்து கூறியதாவது; நானும் ஒரு கல்லூரி ஆசிரியையாக புணிபுரிந்து உள்ளேன். திருச்சூர் கேரள வர்மா கல்லூரியில் பணிபுரிந்த போது, சுடிதார் அணிந்து தான் கல்லூரிக்கு சென்று வந்தேன். உடை அணிவது என்பது ஒருவரது தனிப்பட்ட விசயமாகும்.

அதில் தேவையில்லாமல் தலையிட வேறு யாருக்கும் உரிமை இல்லை. உயர்கல்வி நிறுவனங்களில் சேலை அணிய கட்டாயப்படுத்த கூடாது என்று 2014ம் ஆண்டு அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இப்போதும் சில கல்வி நிறுவனங்கள் சேலை அணிவதை கட்டாயப் படுத்துவதால் தான் மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Wednesday, September 15, 2021

பேராசிரியர் பணி: மொத்த காலியிடங்கள்: 168 - விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.10.2021

September 15, 2021 0
ராய்ப்பூரில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் என 168 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 168


பணி: Professor


வயதுவரம்பு: 58க்குள் இருக்க வேண்டும்.


பணி: Associate Professor


பணி: Assistant Professor


வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள துறைகளில் தகுதியும் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.1000, எஸ்சி,எஸ்டி பிரிவினர் ரூ.800 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை: www.aiimsraipur.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.


ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Recruitment Cell, 2nd Floor, Medical College Building, AIIMS Raipur, Rajpur, Pin - 492 099


ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.10.2021


ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 18.10.2021


மேலும் விவரங்கள் அறிய https://www.aiimsraipur.edu.in/upload/vacancies/611b7f3068657___Final%20approved%20Advt.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Read More

Wednesday, September 8, 2021

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசுக் கல்லூரிகளில் புதிய ஆசிரியர்கள் நியமனம்

September 08, 2021 0
பேரவையில் பாமக தலைவர்ஜி.கே.மணி பேசும்போது,"தமிழகத்தில் 2006-ம் ஆண்டுக்கு முன் அரசுக் கல்லூரி இல்லை. நான்சட்டப்பேரவையில் கேட்டுக்கொண்டதன் பேரில், முதலில் மேட்டூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அன்று முதல் ஆசிரியரல்லாத பணியாளர்கள், 15 ஆண்டுகளாக மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். தற்போது பணி நியமனம் செய்யப்பட்டவர்கள், வயது மூப்பு அடைந்துள்ளனர். எனவே, அவர்களை பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயர்வு வழங்க வேண்டும்" என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் க.பொன்முடி பேசும்போது, "கடந்த 2006-ல் கருணாநிதி ஆட்சியில் உறுப்புக் கல்லூரியாக தொடங்கப்பட்ட அக்கல்லூரி 2018-ல் அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டது. அப்போது பல்கலைக்கழக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தற்போதுசம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத் துக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்காலிக பணியாளர்கள் அங்கேயே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்தஆட்சியில் குழு அமைத்து நியமிக் கப்பட்ட ஆசிரியர், ஆசிரியரல்லா பணியிடங்களில் தவறுகள் நடந்துள்ளதால், தற்போது வெளிப்படைத்தன்மையுடன் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும், ஆசிரியரல்லாதவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமும் நியமிக்கப்படுவார்கள். மேட்டூர் அரசுக் கல்லூரி மட்டுமின்றி, மற்ற கல்லூரிகளிலும் இதுபோன்ற நிகழ்வுகள் கடந்த காலத்தில் அதிகம் உள்ளதால், அரசின் நிதி நிலைக்கு ஏற்ப, வெளிப்படையாக பணி வழங்கப்படும். தற்போதுள்ளவர்களுக்கு இதுவரை பணியாற்றியதற்கான தகுதிகளும், மதிப்பெண்களும் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Read More

Post Top Ad

Your Ad Spot