KalviseithiDaily: TNPSC GROUP 2

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label TNPSC GROUP 2. Show all posts
Showing posts with label TNPSC GROUP 2. Show all posts

Friday, October 28, 2022

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி

October 28, 2022 0
குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பிரிவில் 5 ஆயிரத்து 400 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலைத் தோ்வு கடந்த மே மாதம் 21-ஆம் தேதி நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளை சுமார் 11 லட்சம் போ் எழுதினர்.

இந்த நிலையில், முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

மேலும் அவர் கூறியிருப்பதாவது, உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் விதமாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

எனவே, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் குறித்து சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை நாடவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Saturday, July 9, 2022

குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

July 09, 2022 0
முதன்மைத் தேர்வுக்கு, ஒவ்வொரு பதவிக்கும் 10 மடங்கு விண்ணப்பத்தாரர் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்வி தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

முன்னதாக, அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்காக ஆட்சேர்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த ஆட்சேர்ப்பு மூலம் 5413 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

சில பதவிகள் முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. அதே சமயம், பெரும்பாலான பதவிகளுக்கு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு நிலைகளில் மட்டும் நியமனங்கள் நடைபெறும் என்று தெரிவிக்கிப்பட்டது.

அனைத்து பதவிகளுக்காமான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. 11 .78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். முன்னதாக, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட விரிவான ஆட்சேர்ப்பு அறிவிப்பில் ஜுலையில் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. கட் ஆப் மதிப்பெண்கள்:

ஆதிதிராவிடர்(எஸ்சி), ஆதிதிராவிடர் பழங்குடியினர், மகளிர், அனைத்து வகுப்பைகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினர் முதல்நிலைத் தேர்வில் 130 கேள்விகளுக்கு மேல் சரியான விடையளித்திருந்தால் முதன்மை தேர்வுக்கு தகுதி பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 140க்கு மேற்பட்ட சரியான கேள்விகள் எடுத்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் நல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏணைய பிரிவினர் 147 முதல் 150 வரை சரியான கேள்விகளுக்கு பதிலளித்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு பதவிக்கும் 10 மடங்கு விண்ணப்பத்தாரர் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். எனவே, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட உத்தேச விடைகள் மூலம் தேர்வர்கள் தங்களை மதிப்பீடு செய்து கொண்டு உடனடியாக முதன்மைத் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 7138 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. முற்பகல் 9.30 மணி வரையில் 12.30 மணி வரையில் இந்த தேர்வு நடைபெறும். எனவே , குரூப் 4 தேர்வு நடந்து முடிந்த பிறகே குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More

Friday, June 3, 2022

TNPSC குரூப் 1, 2, 4 தேர்வுகளுக்கு ஜூன் 5-இல் இலவச வழிகாட்டும் முகாம்

June 03, 2022 0
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 தேர்வுகளுக்கு ஜூன் 5-இல் இலவச வழிகாட்டும் முகாம்


சென்னை, ஜூன் 2: சென்னை அண்ணாநகர் திருமலங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் அகாதெமியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 தேர்வுகளுக்கான வழிகாட்டும் முகாம் வரும் ஞாயிற்றுக்கி ழமை நடைபெறவுள்ளது.


குரூப் 1, 4 மற்றும் குரூப் 2 முதன்மைத் தேர்வினை எழுதவுள்ள தேர்வர்களுக்கு படிக்க வேண்டிய பாடநூல்கள், நேர மேலாண்மை மற்றும் திட்டமிடுதல் தொடர்பாக பயிற்சி முகாமில் விளக்கப்படும். தேர்வர்களுக்கு பாடக் குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரித் தேர்வுக ளும் நடத்தப்படும். இதில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை. தகுதியுள்ள தேர்வர்கள் தங்களது சுய விவரங்களுடன் அண் ணாநகர், திருமங்கலத்தில் உள்ள ஜெ.ஜெ.வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் அகாதெமியில் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 93605 33992, 7010136605 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஃபோக்கஸ் அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read More

Saturday, May 21, 2022

1.83 லட்சம் பேர் குரூப் 2 தேர்வு எழுதவில்லை

May 21, 2022 0
According to its chairman Balachandran, 1.83 lakh people did not appear for the DNBSC Group 2, 2A examination held today.

The first round of filling of 5,529 vacancies in Group 2,2A of the Government of Tamil Nadu was held today. The examination started at 9.30 am at 117 centers across Tamil Nadu and continued till 12.30 pm.

4 thousand 12 Bo were appointed as Primary Supervisors and 58 thousand 900 Bo Supervisors were appointed to monitor the skin. In this situation, 1.83 lakh people did not write the DNPSC Group 2, 2A exam held today.

While 11.78 lakh people downloaded the hall tickets, only 9.94 lakh people took part in the exam, said DNBSC chairman Balachandran. இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வை 1.83 லட்சம் பேர் எழுதவில்லை என்று அதன் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் குரூப் 2,2ஏ பிரிவுகளில் காலியாக உள்ள 5,529 இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தோ்வு இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 117 மையங்களில் காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு நண்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது.

தோ்வை கண்காணிக்க 4 ஆயிரத்து 12 போ் முதன்மை கண்காணிப்பாளா்களாகவும், 58 ஆயிரத்து 900 போ் கண்காணிப்பாளா்களாகவும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வை 1.83 லட்சம் பேர் எழுதவில்லை.

11.78 லட்சம் பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில் 9.94 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Read More

TNPSC குரூப் 2 தேர்வு எப்படி இருந்தது? - தேர்வர்கள் பேட்டி

May 21, 2022 0
Read More

Friday, May 20, 2022

Thursday, May 19, 2022

TNPSC - 'குரூப் - 2' தேர்வுக்கு 58,900 தேர்வறைகள் - 'ஹால் டிக்கெட்' கலரா? கறுப்பு வெள்ளையா?

May 19, 2022 0
வரும் 21ம் தேதி நடத்தப்படும், 'குரூப் - 2, 2 ஏ' பதவிகளுக்கான முதல்நிலை தேர்வில், 58 ஆயிரத்து 900 தேர்வு அறைகளில், 11.78 லட்சம் பேர் எழுத உள்ளனர். வினா, விடைத்தாள் வாகனங்களை கண்காணிக்க, கேமரா மற்றும் ஜி.பி.எஸ்., வசதி செய்யப்பட்டுள்ளது,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: தமிழக அரசின் பல்வேறு துறைகளில், 'குரூப் - 2, 2 ஏ' பதவிகளில், 5,529 இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், முதல் நிலை தகுதி தேர்வு வரும், 21ம் தேதி நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு, 6.82 லட்சம் பெண்கள், 48 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 14 ஆயிரத்து 531 மாற்று திறனாளிகள் உள்பட, 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ் வழியில் படித்ததாக, 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

உடல் குறைபாடுடைய மாற்று திறனாளிகள் தேர்வு எழுத, 1,800 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வில் பொது தமிழ்ப் பாடத்துக்கு, 9.47 லட்சம் பேரும்; பொது ஆங்கிலம் பிரிவுக்கு, 2.31 லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.நேற்றைய நிலவரப்படி, மொத்த தேர்வர்களில், 9.10 லட்சம் பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துள்ளனர். மற்றவர்களும் விரைந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.58,900 தேர்வறைகள்தமிழகம் முழுதும், 38 மாவட்டங்களில், 58 ஆயிரத்து 900 தேர்வறைகள் உள்ளன. ஒரு பதவிக்கு 10 பேர் வீதம், 5,529 பதவிகளுக்கு, 55 ஆயிரத்து 290 பேர் பிரதான தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இதில், 1:10 விகிதத்தில், ஒரே மதிப்பெண்ணில் ஆயிரக்கணக்கானோர் இருந்தாலும், அவர்களும் பிரதான தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

தேர்வில் எந்த முறைகேடும் நடக்காமல் இருக்கும் வகையில், அனைத்து வகை பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வினா மற்றும் விடைத்தாள்களை கையாளும் வாகனங்களுக்கு, அந்தந்த மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஏற்பாட்டில், முன்னும், பின்னும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். அந்த வாகனங்களின் நகர்வுகளை அறிந்து கொள்ள, கேமரா மற்றும் ஜி.பி.எஸ்., வழி கண்காணிப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

பேட்டியின் போது, தேர்வாணைய உறுப்பினர்கள் பேராசிரியர் ஜோதி சிவஞானம், பாலுசாமி, ஆரோக்கியராஜ், டி.என்.பி.எஸ்.சி., செயலர் உமா மகேஸ்வரி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா ஆகியோர் உடனிருந்தனர். 'ஹால் டிக்கெட்' கலரா

கறுப்பு வெள்ளையா?

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:

'குரூப் - 2, 2ஏ' தேர்வு, காலை 9:30 மணிக்கு துவங்கி 12:30 மணிக்கு முடியும். பின், தேர்வர்கள் கையெழுத்திடுவது போன்ற நடைமுறைக்காக, கூடுதலாக 15 நிமிடங்கள் தேர்வறையில் இருக்க வேண்டும்; 12:45 மணிக்கு பிறகே தேர்வர்கள் வெளியே வர முடியும்.காலை 8:30 மணிக்கு தேர்வு மையத்துக்குள் வந்து விட வேண்டும். அதிகபட்சம் 8:59 மணி வரையில் மட்டுமே, தேர்வர்கள் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். அதன்பின் வருவோர் எந்த காரணம் கூறினாலும், உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வர்கள் முக கவசம் அணிந்து வருவது, சானிடைசர் பாட்டில் எடுத்து வருவது சிறந்தது. ஹால் டிக்கெட்டை பொறுத்தவரை கலர் அல்லது கறுப்பு வெள்ளை என, எந்த வகையில் பிரதி எடுத்து வந்தாலும் ஏற்கப்படும். ஆனால், ஹால் டிக்கெட்டில் உள்ள விபரங்கள், புகைப்படம் தெளிவாக தெரிய வேண்டும். அதனுடன், பாஸ்போர்ட், ஆதார், டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில், ஏதாவது ஒன்றின் நகல் எடுத்து வர வேண்டியது கட்டாயம். இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Tuesday, May 17, 2022

TNPSC குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு 5,529 பணியிடத்துக்கு 11.78 லட்சம் பேர் போட்டி

May 17, 2022 0
குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு திட்டமிட்டப்படி வருகிற 21ம் தேதி நடைபெறும். 5,529 பணியிடத்துக்கு நடத்தப்படும் தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அறிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பதவி(நேர்முக தேர்வு பதவி) 116 பணியிடம். குரூப் 2ஏ(நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) பதவியில் 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்கான முதல்நிலை தேர்வு வரும் 21ம் தேதி நடைபெறும். சென்ற ஆண்டுகளை விட இந்த தேர்வுக்கு கூடுதலாக 1.5 லட்சம் முதல் 2 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். 21ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை என 3 மணி நேரம் முதல்நிலை தேர்வு நடைபெறும். தேர்வு எழுதுபவர்கள் அனைவரும் காலை 8.30 மணிக்கே தேர்வு நடைபெறும் இடங்களுக்கு வர வேண்டும். காலை 8.59 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும். 9 மணிக்கு பிறகு வரக்கூடிய தேர்வர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அதே போல காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணிக்கு முடிந்தாலும் கூட, பிற்பகல் 12.45 மணி வரை தேர்வர்கள் தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் இத்தேர்வை 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் எழுத உள்ளனர். இன்று(நேற்று) பிற்பகல் 3.15 வரை 9 லட்சத்து 10,327 பேர் வரை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து இருக்கிறார்கள். இன்னும் இரண்டு, மூன்று தினங்கள் இருக்கின்ற காரணத்தால், தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 11 லட்சத்து 78,175 தேர்வர்களுமே ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து விடுவார்கள். குரூப் 2, குரூப் 2ஏ தேர்வை எழுதுபவர்களில் 4 லட்சத்து 96 ,247 பேர் ஆண்கள், 6 லட்சத்து 81,880 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 48 பேர், மாற்று திறனாளிகள் 14,531 பேரும் தேர்வு எழுத உள்ளனர். இரண்டு கைகள் இல்லாதவர்கள், கண்பார்வையில்லாமல் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவி செய்வதற்காக பல்வேறு மையங்களில் 1800 பேர் ஈடுபடுத்தபடுகிறார்கள். குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுக்கு தமிழ் வழியில் படித்த 79,942 பேர் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வை பொறுத்தவரை ஜெனரல் இங்கிலிஷ் சப்ஜெக்டில் 2 லட்சத்து 31,586 தேர்வு எழுத உள்ளனர். ஜெனரல் தமிழ் பிரிவில் 9 லட்சத்து 46,589 பேர் தேர்வு எழுகிறார்கள். 38 மாவட்டங்களில் 117 இடங்களில் 4012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுக்காக 4012 தலைமை கண்காணிப்பாளர்கள், 58,900 கண்காணிப்பாளர்கள், 323 பறக்கும் படையினரும், 6,400 பரிசோதனை குழுவும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குரூப் 2, குரூப் 2ஏ தேர்வை அதிகப்பட்சமாக சென்னையில் 7 மையங்களில் 1,15,843 பேர் தேர்வு எழுதுகின்றனர். மிக குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 மையங்களில் 5,624 பேர் தேர்வு எழுதுகிறார்கள். 6 லட்சத்து 93 ஆயிரத்து 361 பேர் முதல்நிலை தேர்வுக்கு எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுக்கான வினாக்கள் கொள்குறி வகையில் இருக்கும். மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஜெனரல் தமிழ் அல்லது ஜெனரல் இங்கிலிஸில் 100 கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவில் 75 கேள்விகள், திறனறிவு தேர்வில் 25 கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கான ரிசல்ட் ஜூன் மாதம் இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் மெயின் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. மெயின் தேர்வுக்கு ஒரு பணிக்கு 10 பேர் என்ற அடிப்படையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்கள். தற்போதைய பணியிடங்கள் அடிப்படையில் 55 ஆயிரம் பேர் வரை மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஒரே மார்க்கில் 100 பேர் வருகிறார்கள் என்றால் 100 பேரையும் மெயின் தேர்வு எழுத அனுமதிப்போம். இதனால் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 1 பணியிடத்துக்கு 12 பேர் என்ற அடிப்படையில் மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் ஒரிஜினல் வாட்டர் கலரில் வழங்கப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டை கலர் மற்றும் பிளாக் அன்ட் ஒய்ட்டில் ஏதுவென்றாலும் பிரிண்ட் எடுத்து கொண்டு வரலாம். ஹால் டிக்கெட் 4 பக்கம் உள்ளது. அந்த 4 பக்கத்தையும் தேர்வர்கள் கொண்டு வர வேண்டும். தேர்வர்களின் அடையாளத்தை கண்காணிக்கும் வகையில் அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்று கொண்டுவர வேண்டும். அதே நேரத்தில் தேர்வர்களின் வருகையை பயோமெட்ரிக் முறையில் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதலின்படி தேர்வர்கள் மாஸ்க் அணிந்து வந்தால் நல்லது. குரூப் 1 தேர்வுக்கான ரிசல்ட்டை இந்த மாதம் இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளோம். விடைத்தாள் திருத்தும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கு அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தற்போது 100 இடங்கள் கூடுதலாக நிரப்ப வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Post Top Ad

Your Ad Spot