KalviseithiDaily: entrance exams

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label entrance exams. Show all posts
Showing posts with label entrance exams. Show all posts

Tuesday, December 13, 2022

ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை. தேர்வுகள்; மறுதேதி அறிவிப்பு

December 13, 2022 0
ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை. தேர்வுகள்; மறுதேதி அறிவிப்பு

மாண்டஸ் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகளுக்கான மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே மாமல்லபுரம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கரையை கடந்தது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனால் சென்னை பல்கலைகழகம், அண்ணா பல்கலைகழகளின் கீழ் உள்ள கல்லூரிகளில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் மறுதேதி குறிப்பிடமால் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து மாண்டஸ் புயல் காரணமாக சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி டிசம்பர் 9ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.24ம் தேதியும், டிசம்பர் 10ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.31ம் தேதியும் நடைபெறும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
Read More

Sunday, November 27, 2022

2748 கிராம உதவியாளர் பணியிடங்கள்: எழுத்துத் தேர்வு தேதி எப்போது? முக்கிய அறிவிப்பு இதோ...

November 27, 2022 0
2748 கிராம உதவியாளர் பணியிடங்கள்: எழுத்துத் தேர்வு தேதி எப்போது? முக்கிய அறிவிப்பு இதோ...

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான படித்தல் மற்றும் எழுதுதல் தகுதி தேர்வு வரும் 30ம் தேதி நடைபெற இருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் மாற்றியமைக்கப்பட்டுளளது. முன்னதாக, அனைத்து மாவட்ட வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி வெளியானது. இதற்கான, விண்ணப்பங்கள் நவம்பர் 7ம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்ச கல்வி தகுதியாக 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் இதற்கு விண்ணப்பித்திருந்தனர்.

மேலும், பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நவம்பர் 14ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும், படித்தல் மற்றும் எழுதுதல் தகுதி தேர்வு வரும் 30ம் தேதியன்று (புதன்கிழமை) நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வாசிக்கும் மற்றும் எழுதுதல் திறன் மதிப்பிடப்படும் என்றும், இதற்கு அதிகபட்சமாக 40 (வாசித்தல் 10, எழுதுதல் - 30 ) மதிப்பெண் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நிர்வாக காரணங்களால் இந்த தேர்வு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் வருவாய் நிருவாக ஆணையர் எழுதியுள்ள கடிதத்தில், " தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான படித்தல் மற்றும் எழுதுதல் தகுதி தேர்வு வரும் 30ம் தேதி நடைபெற இருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் டிசம்பர் மாதம் 4ம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாசித்தல் மற்றும் எழுதுதல் தகுதி தேர்வு:

எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். இதற்கு அதிகபட்சமாக, 10 மதிப்பெண் வழங்கப்படும். அதேபோன்று, ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம். இதற்கு 30 மதிப்பெண் வழங்கப்படும்

அதன்பின், நேர்கானல் தேர்வு, மூல சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் அதிகபட்ச மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
Read More

Saturday, October 1, 2022

GATE தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - Extension of time to apply for GATE exam

October 01, 2022 0
Can I apply GATE 2022 after last date? Can I apply for gate after last date? How much late fee for GATE exam? What is the last date for payment for GATE 2022?
GATE தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - Extension of time to apply for GATE exam

கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலகெடு நீட்டிப்பு; அக்டோபர் 4 வரை விண்ணப்பிக்க கான்பூர் ஐ.ஐ.டி அவகாசம் வழங்கியுள்ளது இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கான்பூர் (IIT-கான்பூர்) 2023 ஆம் ஆண்டுக்கான பொறியியல் பட்டதாரி திறன் தேர்வுக்கான (GATE) விண்ணப்பப் பதிவுக் காலக்கெடுவை நீட்டித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அக்டோபர் 4 ஆம் தேதி வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

GATE தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் ஜனவரி 3, 2023 முதல் வெளியிடப்படும் மற்றும் தேர்வு பிப்ரவரி 4, 5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். IIT-கான்பூர் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 23 புதிய நகரங்களில் தேர்வு மையங்களை அமைத்துள்ளது.

கேட் தேர்வு 2023: தகுதிகள்

எந்தவொரு இளங்கலை பட்டப்படிப்பு திட்டத்திலும் தற்போது மூன்றாம் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளில் படிக்கும் விண்ணப்பதாரர் GATE 2023 க்கு விண்ணப்பிக்கலாம். அல்லது, பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை, அறிவியல், வணிகம் அல்லது கலை உள்ளிட்ட பிரிவுகளில் ஏதேனும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பை விண்ணப்பதாரர் முடித்திருக்க வேண்டும்.

கேட் தேர்வு 2023: தேர்வு முறை

கேட் தேர்வுத் தாள் 100 மதிப்பெண்களுக்கு இருக்கும், ஒரு விண்ணப்பதாரர் இரண்டு தாள்களுக்குத் தோன்றினால் தலா 100 மதிப்பெண்கள் இருக்கும். தாளில் 15 மதிப்பெண்களுக்கு ஜெனரல் ஆப்டிட்யூட் (GA) இருக்கும், இது எல்லா தாள்களுக்கும் பொதுவானதாக இருக்கும். மேலும், அந்தந்த பாடத்திட்டத்தை உள்ளடக்கிய மீதமுள்ள தாளுக்கு 85 மதிப்பெண்கள் ஒதுக்கப்படும்.

தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். மூன்று வகையான கேள்விகள் இருக்கும். அவை கொள்குறி வகை கேள்விகள் (MCQ), பல தேர்வு கேள்விகள் (MSQ) மற்றும் எண் பதில் வகை (NAT). மொத்தம் 65 கேள்விகள் (10 GA + 55 பாடம்) இருக்கும்.

MCQ களில் தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் இருக்கும் மற்றும் MSQ அல்லது NAT இல் தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் இருக்காது
Read More

Friday, June 10, 2022

ஜிப்மேட் நுழைவு தேர்வு அவகாசம் நீட்டிப்பு

June 10, 2022 0
'ஜிப்மேட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. ஐ.ஐ.எம். எனப்படும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ. - பி.ஜி.பி. உட்பட ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளில் சேர மாணவர்கள் 'ஜிப்மேட்' என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. வரும் 2022- - 23ம் கல்வி ஆண்டுக்கான 'ஜிப்மேட்' நுழைவுத்தேர்வு கணினி வழியில் ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான இணைய விண்ணப்பப்பதிவு 9ம் தேதியுடன் முடிந்துள்ள நிலையில் பல்வேறு தரப்பினர் கோரிக்கை ஏற்று கால அவகாசம் ஜூன் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் jipmat.nta.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இது குறித்து கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 011- - 4075 9000 என்ற தொலைபேசி எண்ணிலும் விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot