Post Top Ad
Your Ad Spot
Showing posts with label School Morning Prayer Activities. Show all posts
Showing posts with label School Morning Prayer Activities. Show all posts
Thursday, June 16, 2022
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகளை - 17.06.2022
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகளை - 17.06.2022
திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்:நட்பியல்
அதிகாரம்: மருந்து
குறள் : 949
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
பொருள்:
நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்
பழமொழி :
Never cast the oar till you are out
கரையை அடையும் முன் துடுப்பை எறியாதே.
இரண்டொழுக்க பண்புகள் :
1. புதிய வருடத்தில் நான் கற்றுக் கொள்ள அநேக காரியங்கள் உண்டு. என் முழு கவனமும் அவற்றை கற்றுக் கொள்வதில் மட்டுமே வைத்து கொள்வேன்.
2. தேவையில்லாமல் பள்ளிக்கு விடுப்பு எடுக்க மாட்டேன்.
பொன்மொழி :
அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால் அரசியல் உங்கள் வாழ்க்கையில் தலையிடும்! - லெனின்
பொது அறிவு :
1.சர்வதேச யோகா தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஜுன் 21.
2. உலக சுற்றுலா தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
செப்டம்பர் 27.
English words & meanings :
Eaglet - baby Eagle. Noun. கழுகுக்குஞ்சு. பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
வெற்றிலை எடையைக் குறைக்கும், குரல் வளம் உண்டாகும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.
NMMS q - 5
விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி: 5,9,17,29,45, ?
விடை: 65
நீதிக்கதை
நாயின் தந்திரம்
ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது.
அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது.
புலி அருகில் வந்தவுடன் ஆஹா... புலியின் மாமிசம் எவ்வளவு சுவை! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே என்றது நாக்கைச் சுழற்றியபடியே!
அதனைக் கேட்ட புலிக்குக் பயம் வந்ததும், நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம் என்று எண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது.
இந்த சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று, நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது. அதனைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது.
குரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும் கோபம் கொண்ட புலி, என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடு படுகிறது என்பதைப் பார் என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.
குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே! என்றது சத்தமாக...
பின் என்ன நடந்திருக்கும் என்று சொல்லத் தேவை இல்லையே...
இன்றைய செய்திகள்
17.06.22
◆அங்கீகாரம் இன்றி நடத்தப்படும் குழந்தைகள் இல்லங்கள் மீது கடும் நடவடிக்கை என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
◆தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இம்மாதம் 20-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
◆நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
◆காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: வரும் 23-க்கு ஒத்திவைப்பு.
◆ராணுவம், கடற்படை, விமானப் படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இளைஞர்களும் இளம்பெண்களும் முப்படைகளில் சேரலாம்.
◆இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,213 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரிக்குப் பின் முதன்முறையாக 12,000ஐ கடந்து ஒரு நாள் தொற்று பதிவாகியுள்ளது.
◆பாரா பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் : முதல் நாளில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்
◆தகுதி சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்தி உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு கோஸ்டாரிகா அணி தகுதி.
◆ஐசிசி-யின் பிரத்யேக திட்டத்தில் இணையும் ஐபிஎல் : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு.
Today's Headlines
🌸The child care centres will be punished severely if they run the home without approval from the Government - Chennai Commissioner warned.
🌸The 10th and 12th results will be published on 20th of this month - School Education Department.
🌸For the workers at the ration shop and the for the workers in construction there is a hike of 28% DA.
🌸The Cauvery Water Tribunal Committee meeting was postponed to 23rd of June.
🌸To work in all three defensive forces for 4 years the federal government proposed 'Agni Path' scheme which was approved by Central Cabinet Ministry. As per this scheme both male and female youth from 17.5 age to 21 years can join in the armed forces.
🌸For the past 24 hours the recorded Corona count is 12,213. After last February first time the count crossed 12,000.
🌸In para power lifting championship India won 2 bronze medals in the first day.
🌸In the Qualifying round for the Football World Cup Coast Rica got qualified after pushed down the New Zealand team.
🌸IPL is going to join in the ICC this may lead to draw back in international cricket matches
Tuesday, April 26, 2022
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.04.22
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.04.22
திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: சூது
குறள்: 933
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
பொருள்:
பணையம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈட்டும் வழிமுறையும் அவனைவிட்டு நீங்கிவிடும்
பழமொழி :
When the well is full, it will run over.
நிரம்பிய நீர் வழிந்துதான் போகும்
இரண்டொழுக்க பண்புகள் :
1. முயற்சி பயிற்சி இரண்டும் பாதியில் விட மாட்டேன். தொடங்குவதில் இல்லை வெற்றி தொடர் தில் தான்.
2. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே
பொன்மொழி :
யாரையும் வெறுப்பது கூடாது. அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். தனித்து வாழாதீர்கள். மனம் விட்டு பிறரிடம் பழகுங்கள்.____அன்னை தெரேசா
பொது அறிவு :
1. இந்தியாவின் நயாகரா என்றழைக்கப்படும் அருவி எது?
ஒகேனக்கல்.
2.தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் எது?
சுதேச மித்திரன்.
English words & meanings :
quash-stopping something by force, அடக்கு,
quell- end something. ஒன்றை முடித்திடுதல்
ஆரோக்ய வாழ்வு :
வெட்சி பூ உடல் சோர்வு, காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தக்கூடியது. உடல் அசதி, கழிச்சல், சீத கழிச்சல் ஆகியவை இருக்கும் போது வெட்சிப்பூ தேநீரை காலை, மாலை என இருவேளைகள் குடிக்க வேண்டும்.பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கிய வெட்சி பூவை பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து மோரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும். கருப்பையில் ஏற்படும் புண்களை ஆற்றும். புற்றுநோய் வராமல் தடுக்கும். வயிற்றுப்போக்கை நிறுத்தும் மருந்தாக இது விளங்குகிறது.
கணினி யுகம் :
Ctrl + Home - Move to the first character.
Ctrl + End - Move to the last character.
நீதிக்கதை
கைக்கடிகாரம்
ஒரு நாள் ஒரு விவசாயி தன் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார். அது அவரது திருமணத்தின்போது மனைவி அவருக்கு ஆசையாக பரிசளித்த கைக்கடிகாரம். அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்துவிட்டார். அவருக்கு அந்த கைக்கடிகாரம் கிடைக்கவில்லை.
மோட்டார் கொட்டகைக்கு அருகில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களை அழைத்து, என் கைகடிகாரம் தொலைந்துவிட்டது. அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன் என்றார்.
சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார் கொட்டகைக்குள் சென்று தேட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வந்து, எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லைஎன்று சொல்லி விட்டு கிளம்பி விட்டனர்.
ஒரு சிறுவன் மட்டும் மீண்டும் வந்து, எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். நான் தேடி தருகிறேன் என்றான். விவசாயியும், சரி! நீ போய் தேடிப்பார் என்றார். மோட்டார் கொட்டகைக்குள் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் கைகடிகாரத்துடன் வெளியே வந்தான். அதை பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன், எப்படி உன்னால் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது? என்று கேட்டார்.
நான் உள்ளே சென்று தரையில் அமைதியாக உட்கார்ந்து காதுகளை கூர்மையாக்கி கேட்டேன். எந்த திசையில் இருந்து டிக் டிக் சத்தம் வருகிறது என்று. பிறகு சுலபமாக கண்டுபிடித்து எடுத்து வந்தேன் என்றான்.
நீதி :
அமைதியான மனநிலையில் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியும்.
இன்றைய செய்திகள்
27.04.22
🔸கோடை மின் தேவைக்காக 4.8 லட்சம் டன்கள் வெளிநாட்டு நிலக்கரி இறக்குமதி: தமிழக அரசு தகவல்.
🔸மலேரியா தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்ட தமிழக அரசுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
🔸தமிழக விமான நிலையங்கள் ரூ.7,000 கோடியில் மேம்படுத்தப்படும்: விமான நிலைய ஆணையக் குழும தென்மண்டல செயல் இயக்குநர் தகவல்.
🔸6 - 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
🔸கவச வாகன அழிப்பு ஏவுகணைகள்: ராணுவம் மற்றும் விமானப் படையில் சேர்ப்பு.
🔸பெய்ஜிங்கிலும் கரோனா அதிகரிப்பதால் ஊரடங்கு அச்சம் - சீனாவில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு.
🔸சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; அரையிறுதிக்குள் நுழைந்த மேற்கு வங்கம், கர்நாடகா அணிகள்.
Today's Headlines
🔸For the summer power supply 4.8 lakh tonnes of foreign coal was imported - information to Government of Tamil Nadu
🔸 The National Award has been given on behalf of the Central Government to the Government of Tamil Nadu for its outstanding work to prevent malaria
🔸 Tamil Nadu Airports will be upgraded at the cost of Rs 7,000 crore: Airports Authority Board for Southern Regional Executive Director's Information.
🔸It has been reported that the Federal Drug Control Board has approved the vaccination of covaxin for children between the ages of 6 and 12.
🔸Armored anti-aircraft missiles: enlisted in the Army and Air Force.
🔸Fear of lockdown as corona rises in Beijing - Food shortages in China.
🔸Santosh Cup Football Series; West Bengal and Karnataka enter the semi-finals.
Sunday, April 24, 2022
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.04.22
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.04.22
திருக்குறள் :
அதிகாரம்:பயனில சொல்லாமை
திருக்குறள்:200
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
விளக்கம்:
சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.
பழமொழி :
Don't bargain for fish that is still in the water.
கைக்கு வராததைக் கணக்குப் பார்க்காதே
இரண்டொழுக்க பண்புகள் :
1. முயற்சி பயிற்சி இரண்டும் பாதியில் விட மாட்டேன். தொடங்குவதில் இல்லை வெற்றி தொடர் தில் தான்.
2. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே
பொன்மொழி :
மேடு பள்ளம் நிறைந்தது தான் உலகம். அதுபோல இன்ப துன்பம் நிறைந்தது தான் மனித வாழ்க்கை.___அன்னை சாரதா தேவி
பொது அறிவு :
1. தஞ்சை பெரிய கோயில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு எது?
2010.
2. இந்தியாவில் சிமெண்ட் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலம் எது?
மத்திய பிதேசம்.
English words & meanings :
Oriental - belong to East or far East countries, தூர கிழக்கு நாடுகள் சார்ந்த,
Otters - a brownish river animal that eats fish, நீர் நாய்
ஆரோக்ய வாழ்வு :
பலாக்காய் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது. பலாக்காயை சமைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவைகள் குணமாகும். பழுத்த பலாச்சுளையில் பழ சர்க்கரை சத்து அதிகளவு உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் பலாச்சுளைகளை உண்பதை தவிர்ப்பது நல்லது.பலாக்காய் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது. பலாக்காயை சமைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவைகள் குணமாகும். பழுத்த பலாச்சுளையில் பழ சர்க்கரை சத்து அதிகளவு உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் பலாச்சுளைகளை உண்பதை தவிர்ப்பது நல்லதுபலாக்காய் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது. பலாக்காயை சமைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவைகள் குணமாகும். பழுத்த பலாச்சுளையில் பழ சர்க்கரை சத்து அதிகளவு உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் பலாச்சுளைகளை உண்பதை தவிர்ப்பது நல்லதுபலாக்காயில் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க வல்ல பல சத்துக்கள் நிறைந்துள்ளது.
வைட்டமின் ஏ, பி, சி,
இரும்பு சத்து,
பொட்டாசியம்,
கால்சியம்,
புரதம்,
உயர்தரமான மாவுச்சத்து,
நார்ச்சத்து மற்றும் சபோனின்,லீக்கினேஸ் போன்ற தாவர ஊட்டச்சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது.
கணினி யுகம் :
Alt + Shift + D - Insert the current date.
Alt + Shift + T - Insert the current time.
ஏப்ரல் 25
உலக மலேரியா நாள்
உலக மலேரியா நாள் (World Malaria Day, WMD) ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். உலக அளவில் 3.3 பில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிப்படைகின்றனர்.[1] மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007இல் ஏப்ரல் 25 ம் நாளை மலேரியா நாளாக அறிவித்தது.
2012 ஆம் ஆண்டில் அண்ணளவாக 627,000 பேர் மலேரியாவ் நோயால் இறந்துள்ளனர், இவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழும் குழந்தைகள் ஆவர்.
புதுமைப்பித்தன் அவர்களின் பிறந்தநாள்
புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார்.[2] கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது.
மார்க்கோனி அவர்களின் பிறந்தநாள்
மார்க்கோனிஎனப்படும் குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi; ஏப்ரல் 25, 1874 – ஜூலை 20, 1937) வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்தவர். 'நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை" எனப்படுபவர். ' கம்பியற்ற தகவல்தொடர்பு முறை' மற்றும் 'மார்க்கோனி விதி' ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் 'மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்', 'வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.
நீதிக்கதை
உருவத்தை பார்த்து எடை போடாதே!
28 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான். அப்பா இங்கே பாருங்கள்... மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று! அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார். ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாபபட்டுக்கொண்டனர். மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.
அப்பா மேலே பாருங்கள், மேகங்கள் நம்மோடு வருகின்றன என்றான். இதைக்கேட்டு தாங்க முடியாத தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம் நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர். அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக் கொண்டே சொன்னார்.
நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்… என் மகன் பிறவிக் குருடு இன்றைக்கு தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார். அன்பு நண்பர்களே... உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை இழந்துவிடலாம். சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம். உருவத்தை பார்த்து யாரும் யாரையும் எடை போடவேண்டாம்.
இன்றைய செய்திகள்
25.04.22
✨கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் இன்று ஆலோசனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
✨தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
✨10, 11, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்.
✨ஆதாரமற்ற, வன்முறையை தூண்டும் தகவல்களை பரப்ப வேண்டாம் என தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
✨நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, எரிபொருள் இறக்குமதி செய்வதற்காக மேலும் 50 கோடி டாலர் கடன் வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
✨ஆசிய மல்யுத்த போட்டி: இந்திய வீரர் ரவிகுமார் தங்கம் வென்று சாதனை.
✨இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி- போட்டி விவரங்கள் அறிவிப்பு.
Today's Headlines
✨Chief Minister will consult about corona protection measures today: Minister Ma. Subramaniam
✨There is a chance of rain for 5 days in Tamil Nadu: Chennai Meteorological Center announced.
✨10th, 11th, and 12th class practical exams start today.
✨The federal government has ordered television channels not to spread unauthenticated and violent information.
✨India has agreed to provide another $ 500 million in fuel imports to Sri Lanka, which is facing a financial crisis.
✨Asian Wrestling Championship: Indian wrestler Ravi Kumar wins gold.
✨South African cricket team touring India - Match details announced.
Tuesday, April 19, 2022
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.04.22
திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: கள் உண்ணாமை
குறள்: 923
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
பொருள்:
கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்?
பழமொழி :
A bad tree does not yield good apples.
நஞ்சு மரம் நற்கனி ஈனாது.
இரண்டொழுக்க பண்புகள் :
1.நன்மை என்றாலும் தீமை என்றாலும் நான் எதை விதைப்பேனோ அதை அறுப்பேன்.
2. எனவே கீழ்படிதல், அமைதி, பொறுமை போன்ற நல் விதைகளை இம்மாணவ பருவத்தில் விதைக்க முயற்சிப்பேன்
பொன்மொழி :
பிறரின் இன்பத்தைக் கண்டு மகிழ்ச்சி கொள்க. மற்றவர் துன்பத்தில் பங்கேற்று உதவி செய்க___ புத்தர்
பொது அறிவு :
1. ஐ.நா வின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்.
2. இந்தியாவில் எத்தனை இரயில்வே மண்டலங்கள் உள்ளன?
18.
English words & meanings :
Keypad - a miniature keyboard to operate portable devices like mobile, சிறு விசைப்பலகை,
keynote - the central idea of a book or a speech, மையக்கருத்து
ஆரோக்ய வாழ்வு :
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. மேலும், இப்பழத்திலுள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. உடலில் அமிலப் பண்புகள் அதிகரிக்கும் போது நமக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள் இந்த உடல் நலக்குறைவை தகர்த்து விடுகிறது. தினமும் எலுமிச்சை சாறு நீரில் கலந்து பருகி வர மூட்டு வலி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
கணினி யுகம் :
Ctrl + ' - Copy the above formula.
Ctrl + ~ - Show formulas
நீதிக்கதை
அனுபவமே குரு
ஒரு வயதான மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். அதனால் அவருடைய முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை சொன்னார். தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்!
சில விநாடிகள் யோசித்தவர், எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா? என்று பணிவோடு கேட்டார். மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும், அவரால் முழு ஈடுபாட்டுடன் அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை.
ஏதோ ஒருபொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோதானோவென்று வீடு கட்டினார். வேலையிலிருந்தே ஓய்வு பெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது என்கிற அலட்சிய மனதுடன் வேலை செய்தார்.
வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பார்வையிட வந்தார் முதலாளி.வாசலிலேயே வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டுச் சாவியை எடுத்து நீட்டினார். இந்தாருங்கள்.. இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்கான வெகுமதி! என்றார் முதலாளி.
மேஸ்திரிக்கு ஒரே அதிர்ச்சி! என்ன கொடுமை இது! இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், அழகாக கட்டியிருப்பேனே.. இருப்பதிலேயே உயர் தரமான பொருட்களை பயன்படுத்தியிருப்பேனே! இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே என்று மனதுக்குள் மிகவும் வருத்தப்பட்டார்.
பல சந்தர்ப்பங்களில் நமக்கான வாழ்க்கையை நாம்தான் நிர்மாணிக்கிறோம் என்பதை அறியாமல், பல சந்தர்ப்பங்களில் நம் திறமையில் மிகவும் கொஞ்சம் மட்டுமே பயன்படுத்துகிறோம். பிறகு, அப்படி உருவாக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழவேண்டிய சூழல் வரும்போது, அதிர்ச்சி அடைகிறோம்! இப்படி ஆகும்னு தெரியாம போயிடுச்சே.. என்று மனம் புழுங்குகிறோம்
நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம்தான் மேஸ்திரி. ஒவ்வொரு நாளும், ஒரு சுவர் எழுப்புகிறோம். ஆணி அடிக்கிறோம்.. ஜன்னல் பொருத்துகிறோம். நம் மனப்போக்கும், அர்ப்பணிப்பும், நாம் தேர்ந்தெடுத்து செயல்படுத்தும் விஷயங்களும்தான் நாளை நாம் வாழப் போகும் வாழ்க்கை எனும் வீட்டின் தரத்தை நிர்ணயிக்கின்றன.
இன்றைய செய்திகள்
20.04.22
🌸இந்தோனேஷியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் அது 6.0 ஆக பதிவானது.
🌸உத்தரப் பிரதேசத்தில் 6 மாவட்டங்களில் முகக் கவசம் கட்டாயம் என்று அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
🌸ஸ்டெர்லைட் கழிவு குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
🌸ராமேஸ்வரம்: இந்தியா - இலங்கைக்கு இடையே உள்ள தனுஷ்கோடி - தலைமன்னாரை இணைக்கும் பாக் ஜலசந்தியை 10 மணி நேரத்திற்குள் நீந்தி நவி மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவர் அன்சுமான் இன்று சாதனை படைத்தார்.
Today's Headlines
🌸A powerful earthquake shook Indonesia this morning. On the Richter scale, it was recorded as 6.0.
🌸 The state government has issued an order mandating face masks in six districts in Uttar Pradesh
🌸 Chennai High Court orders Pollution Control Board to respond to Sterlite waste
🌸Rameswaram: Ansuman, a student from Navi Mumbai, set a new record today by swimming the Dhanushkodi-Thalaimannar link between India and Sri Lanka within 10 hours.
Sunday, April 10, 2022
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.04. 22
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.04. 22
திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: உட்பகை
குறள் : 882
வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு
பொருள்:
வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
பழமொழி :
Doubt is the key of knowledge.
ஐயமே அறிவின் திறவுகோல்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. அதிக பேச்சு என்னை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் எனவே அதிகம் பேசாத படி பார்த்துக் கொள்வேன்.
2. பொறுமை பெருமை தரும் எனவே எப்போதும் பொறுமையாக இருக்க முயல்வேன்.
பொன்மொழி :
இடைவிடாமல் குருவிடம் (ஆசிரியர்) பக்தி செலுத்துவதன் மூலம் சீடன் (மாணவன்) முக்தியடைகிறான் _____ சாரதா தேவி
பொது அறிவு :
1. எந்த விலங்கின் பால் தயிராக மாற்ற முடியாது?
ஒட்டகம்.
2. விண்வெளிக்கு சென்ற முதல் விலங்கு எது?
நாய் (லைக்கா).
English words & meanings :
Viewpoint கண்ணோட்டம்
சிந்திக்கும் விதம்
Worse மிகவுகம் கெட்ட
Tragedy. சோக சம்பவம்
Stun வியப்படைய செய்
பிரமிக்க வை
Revile திட்டுதல்,ஏசுதல்
ஆரோக்ய வாழ்வு :
ஆரஞ்சு பழத்தில் லெமோனாய்டுகள் என்னும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை சாப்பிட்டால், பல வகையான புற்றுநோய்கள் வருவதை தடுக்கலாம்.ஆரஞ்சுப் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்தானது அதிகம் நிறைந்திருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.பொட்டாசியம் என்னும் கனிமச்சத்து நிறைந்துள்ளது. இது இதயத்தை சீராக இயக்கக்கூடிய ஒரு பொருள். மேலும் உடலில் எப்போது பொட்டாசியம் சத்துக் குறைகிறதோ, அப்போது தான் இதயத்தில் பிரச்சனை ஏற்பட ஆரம்பிக்கிறது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது நல்லதுஹெஸ்பெரிடின் என்னும் ஃப்ளேவோனாய்டு, ஆரஞ்சுப் பழத்தில் நிறைந்திருப்பதால், அதனை தினமும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தமானது குறைவதோடு, அதில் உள்ள மக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.
கணினி யுகம் :
Ctrl + 5 - Strike through highlighted selection.
Ctrl + N - Open new document
ஏப்ரல் 11
மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே (மராத்தி: जोतीबा गोविंदराव फुले ஆங்கில மொழி: Mahatma Jyotirao Govindrao Phule) இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதியாவார். சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு அவற்றைக் களையும் முயற்சிகளிலும் இறங்கியவர். ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்கென்று பள்ளிகளை நடத்தியவர்.
நீதிக்கதை
திருந்திய மகன்
சிவாவின் தந்தை கல் உடைக்கும் கூலித் தொழிலாளி. வெயிலில் மாதம் முழுவதும் உழைத்தாலும் கூட அவருக்கு மாத வருமானம் மிகவும் குறைவுதான். அந்த வருமானத்திலேயே அவர் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை, உணவு மற்றும் இதரச் செலவுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். தான் படும் கஷ்டங்களைப் போல் தன்மகன் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சிவாவை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என எண்ணினார்.
சிவா ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். சிவா! கடமைக்காக பள்ளிக்கு சென்று வந்தானே தவிர, ஒழுங்காகப் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குச் சிறிது கூட இல்லை. பள்ளியில் சிறிதுநேரம் இருப்பான். பிறகு சில மாணவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டும் பொழுதை கழித்து வந்தான். தன் தந்தையிடம் செலவுக்குக் காசு வாங்கிக் கொள்வான்.
அவர், சிவா தனக்கு ஒரே மகன் என்பதாலும், படிக்கும் மாணவர்கள் ஏதாவது வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்றும் எண்ணி அவன் கேட்கும்பொழுதெல்லாம் பணம் கொடுப்பார். சிவா, தன் தந்தையார் கொடுத்த பணத்தை வாங்கிச் சாப்பிடாமல், தீய நண்பர்களுடன் சேர்ந்து சூதாட்டம் ஆடினான். மற்றவர்கள் அவன் கெட்டவன் என வெறுத்து ஒதுக்கும்படி அவனுடைய செயல்கள் இருந்தன.
அவனுடைய வகுப்பாசிரியர், அவனுடைய நடவடிக்கைகள் சரியில்லை என்று கண்டித்தார். பிறகு, அவனுடைய அப்பாவிடம் அவனைக் கண்டித்து வளர்க்குமாறும் சொன்னார். ஆனால், இவற்றால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. சிவாவின் தந்தையார் அவனுடைய செயல்களால் பெரிதும் மனம் வருந்தினார்.
ஒருநாள் காவல்துறையினர் 10 பேரை சாலையில் அடித்து உதைத்தபடி, இழுத்துச் சென்று கொண்டிருந்தனர். இதை பார்த்த சிவா கூடியிருந்தவர்களிடம், அவர்களை ஏன் காவல் துறையினர் அடிக்கிறார்கள்? என்று கேட்டான். அவர்கள் சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்தவர்கள், என்று கூறினர். பலநாட்களாக அவர்கள் அகப்படவில்லையென்றும், இன்று வகையாக அகப்பட்டுக் கொண்டார்கள் என்றும் அவர்கள் அவனிடம் கூறினர்.
அதைக் கேட்டதும் சிவாவிற்கு கை, கால்கள் உதறல் எடுத்தது. மற்றவர்கள் வெறுக்கும்படி நடந்தால் இப்படித்தான் உதைபட வேண்டும் போலிருக்கிறது என்று எண்ணி அன்றிலிருந்து திருந்திவிட்டான். அன்றிலிருந்து தீய நண்பர்களுடன் சேராமல், தந்தையிடம் பணம் வாங்காமல் பள்ளிக்கு ஒழுங்காக சென்று பாடங்களை நன்றாக படித்து வந்தான். தன் மகன் சிவா திருந்தியதைக் கண்ட அவன் தந்தை மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
இன்றைய செய்திகள்
11.04.22
✔இந்தியாவில் இருந்து வாழைப்பழம், சோளம் ஏற்றுமதி - கனடா அரசு அனுமதி
✔மாணவர்கள்மற்றும்ஆசிரியர்களின்கோரிக்கையை ஏற்று தேர்வுக் கட்டணம் உயர்த்தப்படுவதை பாரதிதாசன் பல்கலைக்கழகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
✔ சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 3000 ச. மீ பனகல் பூங்கா இடத்தை பயன்படுத்திக் கொள்ள சென்னை மாநகராட்சி அனுமதியளித்துள்ளது.
✔ 14-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு.
மையம் .
✔இந்திய ஹாக்கி அணி 0-3 என்ற விகிதத்தில் உலக கோப்பை அரை சுற்றில் அதிர்ச்சி தோல்வி
Today's Headlines
✔ Export of Bananas and Maize from India - Government of Canada Permission
✔Bharathi Dasan University has suspended the raising of examination fees at the request of students and teachers.
✔3000 crore for Chennai Metro Rail project. Chennai Corporation has given permission to use the space of m Pangal Park.
✔ Chance of rain in Tamil Nadu till 14th - Chennai Meteorological Center.
✔Indian hockey team suffered a shock defeat in the World Cup semi-finals at a rate of 0-3
Wednesday, December 22, 2021
Tuesday, December 14, 2021
Friday, November 19, 2021
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.11.21
திருக்குறள் :
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து.
பொருள்
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.
பழமொழி :
Justice for the self is not the same to others.
ஊருக்கு ஒரு நியாயம். தனக்கு ஒரு நியாயம்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. படுத்த படுக்கையை மடித்து வைப்பேன்.
2. உணவு உண்ட தட்டை கழுவி வைப்பேன்.
பொன்மொழி :
என்னைப் பற்றி போற்றி பாடுபவர்களை விட, என்னை கடுமையாக விமர்சிப்பவர்களால் தான் நான் அதிகம் நன்மை பெற்றுள்ளேன். - காந்தியடிகள்
பொது அறிவு :
1. கோள்களின் இயக்கத்தை கண்டு பிடித்தவர் யார்?
கோப்ளர்.
2. கணிப்பொறி மொழியைக் கண்டு பிடித்தவர் யார்?
கிரேஸ் கோப்பர்
English words & meanings :
I am stuffed - my stomach is full, என் வயிறு நிறைந்து உள்ளது,
fit as a fiddle - very healthy, நல்ல ஆரோக்கியமாக
ஆரோக்ய வாழ்வு :
இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் உண்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இது இரத்தத்தில் உள்ள நச்சு தன்மை சுத்தப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கணினி யுகம் :
Alt + 0191 - ¿
Alt + 0176 - ° (degree symbol)
நவம்பர் 20
திப்பு சுல்தான் அவர்களின் பிறந்தநாள்...
திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனஹள்ளி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), மைசூரின் புலியென அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார். ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு அகற்றுவதற்காகப் பிரான்சின் மாவீரன் நெப்போலியனுடன் பேச்சுவார்த்தைகூட நடத்தினார்.[1]மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில-மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார். மே 4, 1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் போரின்போது இறந்தார்.
நீதிக்கதை
யார் ஏழை?
ஒரு பணக்கார அப்பா, அவர் குழந்தைகளை கிராமத்தை சுற்றி காட்ட அழைத்துச் சென்றார். இரண்டு நாள் ஒரு குடிசையில் ஏழை விவசாயிகள் கூட இருந்தாங்க. திரும்ப வரும் போது, அப்பா கேட்டார்,
ஏழை எப்படி இருக்காங்கன்னு பார்த்தியா?… இப்ப என்ன சொல்றே? மகன் சொன்னான் ஆமா..அப்பா..என் கிட்ட ஒரு நாய் குட்டி தான் இருக்கு. ஆனால் அவங்க கிட்ட நாலு இருக்கு.
நம்ம வீட்ல ஸ்விம்மிங் பூல், கார்டன்ல நடுவிலே இருக்கு. ஆனால் அவங்க வீட்டு பக்கத்துல அழகான ஆறு ஓடுது. நாம கலர் கலரா லைட் போட்டு, படங்கள் மாட்டி நம்ம வீட்டு அழகு படுத்தறோம். ஆனா அவங்க வீட்டுல் ரெயின்போ அழகு படுத்துது... நம்ம சுவரோட நம்ம வீட்டு எல்லை முடிஞ்சுடுது. ஆனால் அவங்களுக்கு கண்ணுக்கு எட்டுன் தூரம் வரை அவங்க எல்லை.
நாம காசு குடுத்து அரிசி வாங்குறோம். ஆனா இவங்க நம்ம கிட்ட அதை விக்கறாங்க. நம்மை பாதுக்காக்குறதுக்கு நம்மை சுற்றி சுவர் மட்டும் தான் இருக்கு... ஆனால் இவங்க பாதுகாப்புக்கு நண்பர்கள்h இருக்காங்க.. அப்பா!..நாம எவ்வளவு ஏழைனு புரிய வைத்ததற்கு நன்றி அப்பானு சொன்னான். அவங்க அப்பா வாயடைச்சே போயிட்டார். அவருக்கும் இப்ப நிறைய விஷயங்கள் புரிஞ்சது.
இன்றைய செய்திகள்
20.11.21
◆முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியை எட்டியதால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. நீர்மட்டத்தை நிலைநிறுத்த கேரளப் பகுதிக்கும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
◆தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்திய குழு வருகிறது.
◆2027-க்குள் போர்க்கப்பல்கள் 170 ஆக உயரும்: இந்திய கடற்படை துணைத் தளபதி தகவல்.
◆மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
◆தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம் - உலக வங்கி தகவல்.
◆பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் : ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி முதலிடம் பிடித்துள்ளார்.
◆ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2021 போட்டியில் இந்திய மகளிர் ரிகர்வ் குழு வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
Today's Headlines
Phase 2 flood warning issued for Mullaperiyaru Dam as the water level reaches 141 feet Water was also opened to the Kerala region to stabilize the water level.
A central team of 7 people is arriving to study the effects of rain floods in Tamil Nadu.
Warships to rise to 170 by 2027 informed by Indian Navy Deputy Commander
Prime Minister Narendra Modi has announced the withdrawal of three agricultural laws of the Central Government.
Indians are in the Top of Home Remittances - World Bank Information.
Women's Singles Tennis: Australia's Ashley Party tops the list.
Indian women's Archery team wins silver at Asian Archery Championship 2021
Thursday, November 18, 2021
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.11.21
திருக்குறள் :
தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்.
பொருள்
பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.
பழமொழி :
If you run after two hares you will catch neither.
இரண்டு படகில் காலை வைப்பவன் கரை சேருவதில்லை.
இரண்டொழுக்க பண்புகள் :
1. படுத்த படுக்கையை மடித்து வைப்பேன்.
2. உணவு உண்ட தட்டை கழுவி வைப்பேன்.
பொன்மொழி :
இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒரு பக்கத்தை உலகத்தையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. - அப்துல் கலாம்
பொது அறிவு :
1. இந்தியாவின் மிகப் பெரிய நூலகமான தேசிய நூலகம் எங்கு அமைந்துள்ளது?
கொல்கத்தா
2. இந்தியாவில் கயிறு தயாரிக்கும் தொழிலில் முக்கியத்துவம் பெறும் மாநிலம்?
கேரளா
English words & meanings :
Not in my book - not according to my views, என் கருத்துக்கு ஒத்தது அல்ல,
give me a break - leave me to relax, என்னை சற்று ஓய்வு எடுக்க விடு
ஆரோக்ய வாழ்வு :
நுரையீரலுக்கு முள்ளங்கி
அகத்திக்கீரையின் பூவும் முள்ளங்கியும் நுரையீரலுக்கான சிறந்த உணவு. அகத்திப்பூ, உடலில் இருக்கும் நிக்கோட்டினின் அளவைக் குறைக்க உதவும். உடலில் உள்ள நஞ்சை வெளியேற்றிவிடும்.
மேலும், கண் சிவந்து போதல், கண்களில் நீர் வழிதல், அலர்ஜி காரணமாகக் கண்களில் பிரச்னை, சூரிய வெப்பம், தூசு, புகையால் ஏற்படும் கண் எரிச்சல், கண் அழுத்தம் (Glucoma),கண் அரிப்பு ஆகிய பிரச்னைகளுக்கு அகத்திப்பூ கலந்த நீரால் கண்களைக் கழுவினால், மேற் சொன்ன பிரச்னைகள் அனைத்தும் குணமாகும். முள்ளங்கியில் உள்ள ராபனைன் (Raphanine)என்ற ரசாயனம் புற்றுநோயை நீக்கக் கூடியது. ராபனைனை எலிக்குக் கொடுத்துப் பரிசோதனை செய்ததில், எலியின் நுரையீரலில் உள்ள கட்டிகளின் வளர்ச்சி வெகுவாகக் குறைந்தன.
எம்பிசெமா(Emphysema)என்ற நுரையீரல் பாதிப்புப் பிரச்னையும் முள்ளங்கி சாற்றால் குணமாகிறது. நிமோனியா, புகையிலையால் வந்த புற்றுநோய் போன்றவைக்கு, இந்தச் சாறு அருமருந்து. தொடர்ந்து குடித்து வந்தால் மூச்சுக்குழாய் சுருக்கநோய் (Chroni cobstructive pulmonary disease) குணமாகத் தொடங்கும். நுரையீரல் பலப்படும். நுரையீரல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னைகளின் வீரியமும் வெகுவாகக் குறையும். இதனுடன், பத்மாசனம், சித்தாசனம் (யோகமுத்திரை) , பிராணயாமம் போன்றவற்றை செய்து வந்தால், இயற்கையாகவே நுரையீரல் பலப்படும். பாதிக்கப்பட்ட நுரையீரல் கூட புத்துயிர் பெறும்.
கணினி யுகம் :
Alt + 0198 - Æ.
Alt + 0231 - ç
நவம்பர் 19
இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாள்...
இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி. இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.
உலகக் கழிவறை நாள்
உலகக் கழிவறை நாள் (World toilet day) ஆண்டு தோறும் நவம்பர் 19 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 2001 ஆம் ஆண்டில் உலகக் கழிவறை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.[1] அன்று முதல் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் இந்நாளை உலகளாவிய முறையில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. அடிப்படைக் கழிவறை வசதிகள் பற்றியும், அது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
நீதிக்கதை
சுத்தம் தேவை
புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான். ஏண்டா இன்னைக்கு குளிச்சியா என்றாள் அப்புவின் அம்மா. நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஓடினான்.
அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது. அடுத்தநாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார். ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா? என்று ரகசியமாக அவனிடம் கேட்டார்.
மறந்துட்டேன் சார் சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான். அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், யானை பல் விளக்குகிறதா என்று கிண்டலாகப் பதில் சொல்வான்.
அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை. அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது. ஆனால் பையன்கள் இவனை அழுக்குமாமா என்று அழைத்தனர்.
அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். டேய் குளிச்சிட்டுப் போய் படிடா இது அப்புவின் அம்மா. குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா என்பான் அப்பு.
பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான். மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது.
அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை. விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.
அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து என்றார் டாக்டர். அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான். தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சனையெல்லாம் வரவே வராது என்றார் டாக்டர்.
அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான். அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது. அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. முதல் மார்க் ரங்கராஜன் என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான். ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார்.
சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்றார். அப்பு மௌனமாக இருந்தான். அடுத்தநாள் அவன் பள்ளிக்கு பளிச் என்று வந்தான். அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா என்று ஒருவன் சொல்ல பையன்கள் கொல்லென்று சிரித்தனர். அப்புவுக்கும் சிரிப்பு வந்தது.
இன்றைய செய்திகள்
19.11.21
★18 வயதிற்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்கள் ரூ.25,000 ரொக்கம் மற்றும் கேடயத்துடன் கூடிய கவிமணி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
★இந்த நூற்றாண்டின் அபூர்வ நிகழ்வான, மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளதாக வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
★இன்று நடக்கவிருந்த அமைச்சரவைக் கூட்டம் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
★இந்தியாவின் பூடான் எல்லைப்பகுதியில் சீனா ஒரு வருடத்தில் 4 கிராமங்களை நிர்மாணித்து உள்ளது. இது குறித்த செயற்கை கோள் படங்கள் வெளியாகி உள்ளன.
★நிலவு சுற்றுப்பாதையில் இந்திய-அமெரிக்க விண்கலங்கள் ஒன்றோடு ஒன்று மோத இருந்த நிகழ்வை விஞ்ஞானிகள் துரிதமான நடவடிக்கை மூலம் தடுத்து உள்ளனர்.
★கனடாவை தாக்கிய சக்தி வாய்ந்த புயல் மற்றும் அதனை தொடர்ந்து பெய்த மழை வெள்ளத்தால் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
★அரசுப் பணியில் விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டும் சேர்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு.
★இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்:காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து.
★ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா தங்க பதக்கம் வென்றுள்ளார்.
Today's Headlines
★ The Tamil Nadu government has announced that young writers under the age of 18 can apply for the Kavimani Award with Rs. 25,000 cash and a shield.
★ Astronomers predict that the longest lunar eclipse of this century will occur today.
★ The Tamil Nadu government has announced that the cabinet meeting scheduled to be held today will be postponed due to heavy rains.
★ China is building 4 villages a year on the Bhutan border with India. Satellite images of this have been released.
★ Scientists have swiftly prevented the collision of INDO-US Space craft which is going to collide with each other in lunar orbit.
★ The worst hurricane to hit Canada, followed by flash floods, has caused unprecedented damage in 100 years.
★ The game Silampam is included in the 3% reservation for sportspersons in government service
★ Indonesian Masters Badminton: PV Sindhu advanced to the quarterfinals.
★ Indian archer Jyoti Sureka wins gold at the Asian Archery Championships.
Wednesday, November 17, 2021
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.11.21
திருக்குறள் :
குறள் 165:
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
பொருள்
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.
பழமொழி :
who sows thorns will never reap grapes.
விதை ஒன்று போட்டால் செடி ஒன்று முளைக்குமா?
இரண்டொழுக்க பண்புகள் :
1. படுத்த படுக்கையை மடித்து வைப்பேன்.
2. உணவு உண்ட தட்டை கழுவி வைப்பேன்.
பொன்மொழி :
எல்லோரையும் நம்புவது ஆபத்து தான். ஆனால் யாரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து!
- ஆபிரஹாம் லிங்கன்
பொது அறிவு :
1. எந்த ஆற்றங்கரை மீது லூதியானா நகர் அமைந்துள்ளது?
சட்லெஜ்
2. கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய் ______
ஆந்த்ராக்ஸ்
English words & meanings :
Freezing - very cold, அதிக குளிர்,
jubilant - very happy, அதிக சந்தோசம்
ஆரோக்ய வாழ்வு :
பற்களில் மஞ்சள் கறைகளைப் போக்கும் வழிகள்
💂பற்களை வெண்மையாக்குவதில் பேக்கிங் சோடா பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை 1/2 கப் குளிர்ந்த நீரில் கலந்து, தினமும் மூன்று முறை வாய் கொப்பளித்து வந்தால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.
💂எலுமிச்சை சாற்றில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து பற்களை தேய்க்கலாம் அல்லது எலுமிச்சையின் தோலைக் கொண்டு பற்களை தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் வாயை கொப்பளிக்கலாம். இதன் மூலமும் பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.
💂தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகளும் நீங்கிவிடும். ஏனெனில் அதில் இயற்கையாக உள்ள அசிட்டிக் தன்மையானது, பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கிவிடும்.
💂அனைத்தையும் விட மிகவும் விலை மலிவில் கிடைக்கும் ஒரு பொருள் தான் உப்பு. இந்த உப்பைக் கொண்டு பற்களை தினமும் தேய்த்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் அகன்றுவிடும். அதே சமயம் உப்பை அளவாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அளவுக்கு அதிகமாக உப்பை பயன்படுத்தினால், அவை ஈறுகளையும், எனாமலையும் பாதித்துவிடும்.
💂தினமும் பற்களை துலக்கப் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் சிறிது சாம்பல் சேர்த்து, பின் பற்களை துலக்கினால், பற்களை வெண்மையாகும். அதிலும் இதனை தினமும் இரண்டு முறை செய்து வந்தால், விரைவில் பற்களில் உள்ள கறைகள் அகலும்.
💂இரவில் படுக்கும் போது, ஆரஞ்சு தோலைக் கொண்டு பற்களை நன்கு தேய்த்துவிட்டு, வாயை அலசாமல் இரவு முழுவதும் ஊற வையுங்கள். இதனை அதில் உள்ள வைட்டமின் சி சத்தானது, வாயில் உள்ள கிருமிகள் மற்றும் நுண்ணுயிரிகளை அழித்து, பற்களை வலுவாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளும்.
கணினி யுகம் :
Alt + 0248 - ø.
Alt + 0223 - ß
நவம்பர் 18
வ. உ. சி அவர்களின் நினைவுநாள்
வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை[2](V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936)[3] ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது.
நீதிக்கதை
குகையில் தங்கம்
ஒரு காட்டில் ஒரு சாமியார் மூச்சுத்திணற ஓடிக் கொண்டிருந்தார். அவரை யாரும் துரத்தவில்லை. அவர் ஓடுவதை அருகிலிருந்த மூன்று திருடர்களுக்கு வியப்பை உண்டு பண்ணியது. அவர்கள் சாமியாரைப் பிடித்து வந்து மூச்சுத்திணற ஓடியதன் காரணத்தைக் கேட்டனர். அதற்கு பயத்திலே நடுங்கி நின்ற சாமியார் தன்னைச் சாவு துரத்துவதாகக் கூறினார். திருடர்கள் சாமியாரைப் பைத்தியம் என்று எண்ணினர். அந்த சாவைக் காட்டுமாறு சாமியாரிடம் கூறினர்.
சாமியார் அவர்களை அழைத்துச் சென்று ஒரு குகையைக் காண்பித்தார். அந்த குகையில் கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் குகை நிறையத் தங்கம் இருந்தது. தங்கத்தைப் பகிர்ந்து கொள்ள திருடர்கள் எண்ணினர். ஆனால் அவர்களை பசி வாட்டியது. அவர்கள் தம்மில் ஒருவனை உணவு வாங்கி வர அருகில் உள்ள ஒரு நகருக்கு அனுப்பினர்.
அவன் உணவுடன் திரும்பியதும் இரு திருடர்களும் அவனைக் கொலை செய்தனர். ஏனெனில் தங்கம் முழுவதையும் தாங்களே கவர எண்ணினர். உணவு வாங்கி வந்த திருடனோ உணவில் நஞ்சு கலந்திருந்தான். அவனும் மற்ற இருவரைப் போலவே தங்கம் முழுவதையும் தானே அபகரிக்க விரும்பினான். நஞ்சூட்டப்பட்ட உணவு உண்ட திருடர்களும் மாண்டனர். தங்கம் பிழைத்தது. சாமியாரின் வாக்குப்பலித்தது.
நீதி :
பேராசை பெரு நஷ்டம்
இன்றைய செய்திகள்
18.11.21
◆தமிழகத்தில் ஆசிரியர்களின் பணியிட மாறுதலுக்கான விதிமுறைகள் வரும் வாரத்தில் இறுதி செய்யப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
◆அதி கனமழை எச்சரிக்கை; 2 நாட்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் கையிருப்பு வைத்துக்கொள்ளும்படி சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.
◆உலகின் மிக உயர்ந்த சாலை லடாக் சாலை: கின்னஸ் உலக சாதனை.
◆வட தமிழகத்தில் நாளை மிக அதிகனமழை வரை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
◆அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி உலகின் பெரும் பணக்கார நாடு என்ற அந்தஸ்தை சீனா கைப்பற்றி உள்ளது.
◆உலக ஆண்கள் டென்னிஸ்: ரஷ்யாவின் டேனில் மெட்விடேவ் வெற்றி.
◆இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த், துருவ் கபிலா-சீக்கி ரெட்டி இணை அடுத்த சுற்றுக்கு தகுதி.
Today's Headlines
* In Tamil Nadu a draft for Teacher's transfer will be drawn by the end of this week.
* On the warning of extremely heavy rain Madras Corporation advised people to keep stock of eatables for 2 days.
* Ladak Road is declared by Guinness Record as the world's highest road.
* In North Tamil Nadu districts there will be the heavy pouring of rain - warning by IMD.
* By pushing down the US in the richest country's list China hit the list and captured first place.
* World Male Tennis - Russian star Danil Metvidev won the match.
*Indonesian Masters Badminton: Kitambi Srikanth, Dhruv Kapila-Sikki Reddy pair qualified for next round.
Sunday, November 14, 2021
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.11.21
திருக்குறள் :
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
பொருள் - ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்
பழமொழி :
Little strokes fell great oaks
அடி மேல் அடியடித்தால் அம்மியும் நகரும்
இரண்டொழுக்க பண்புகள் :
1. படுத்த படுக்கையை மடித்து வைப்பேன்.
2. உணவு உண்ட தட்டை கழுவி வைப்பேன்.
பொன்மொழி :
தன்னம்பிக்கை கொண்டவர்கள் ஒவ்வொரு பிரச்சனையிலும்
உள்ள வாய்ப்பை பார்க்கின்றார்கள்.. நம்பிக்கை
இல்லாதவர்கள் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள
பிரச்சனையை பார்க்கிறார்கள்.------கமலா ஹாரிஷ்
பொது அறிவு :
1. உலகின் மிக பெரிய நீர் வீழ்ச்சி எது?
வெனிசூலாவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி.
2. உலகின் மிகப்பெரிய அணைக்கட்டு எது?
கனடாவில் உள்ள சின்குரூட் டெய்லிங்ஸ் அணைக்கட்டு
English words & meanings :
Little - not much அதிகம் என்னிடம் இல்லை ,
a little - some, என்னிடம் கொஞ்சம் உள்ளது
ஆரோக்ய வாழ்வு :
மூங்கில் அரிசி
மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிசிரி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துச் சேர்த்து அரைத்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர தேகமெல்லாம் வலுவடையும். வஜ்ரம்போல் இறுகும். சர்க்கரை நோய் கட்டுப்படும். மூட்டுவலியை குணமாக்கும். இன்று பலருக்கும் பத்துப் படிகள் ஏறினாலே, மூச்சு வாங்குகிறது, முழங்கால் மூட்டு வலிக்கிறது.
ஆனால், நம் முன்னோர்கள், பல மைல் தூரங்களை நடைப்பயணமாகவே கடந்தவர்கள். உரமேறிய அந்த உடல்வாகிற்கான அடிப்படைக் காரணம் சத்துமிக்க உணவுப் பழக்கம்தான். அவர்கள் சாப்பிட்ட மூங்கில் அரிசிக் கஞ்சியின் விவரம் - மூங்கில் அரிசி, நொய் அரிசி - வகைக்கு 150 கிராம், சீரகம், ஓமம் - வகைக்கு அரைத் தேக்கரண்டி, பல்பூண்டு - 6, சுக்கு - ஒரு துண்டம், நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி, உப்பு - தேவைக்கு.
மூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும். பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். அதில், நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும். அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியையும் அதில் போட்டுக் கொதிக்கவிடவும்.
நன்றாகக் கொதித்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும். இதை உண்பதால் மூட்டு வலி, மூட்டில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும். மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது. உடல் வலிமை பெறும். சர்க்கரை அளவைக் குறைக்கும். எலும்பை உறுதியாக்கும். நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்.
கணினி யுகம் :
Alt + 0236 - ì.
Alt + 0242 - ò
நவம்பர் 15
கிஜூபாய் பதேக்கா அவர்களின் பிறந்தநாள்...
கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை[1] அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை [2] நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.
நீதிக்கதை
தங்க மஞ்சள் குருவி!
விஜயநகர் விழா கோலம் பூண்டிருந்தது! அரச உற்சவம்! அதில் கலந்துகொள்ள அண்டை நாட்டு அரசன் விஜயவர்தனர் வந்தார். விழா முடிந்த பிறகும் சில தினங்கள் விஜயநகரில் தங்கினார். ஒருநாள் அரசர் அவரிடம், அரசே நான் கேள்விப்பட்டேனே...? தங்கள் அவைப் புலவர் தெனாலிராமன் மிகவும் சாதுரியசாலியாமே! அவரிடம் சொல்லி, எனக்குக் காலையில் தங்கமஞ்சள் நிறத்திலும், நடுப்பகலில் சிவப்பு நிறத்திலும், இரவில் ஏழு வர்ணங்களிலுமாக உருமாறும் அற்புதக் குருவி ஒன்றைக் கொண்டு வந்து தரச் சொல்லுங்களேன்... என்றார்.
மேலும், அது சில சமயம் மூன்று காலாலும், சில சமயம் இரட்டைக் காலாலும், பிறகு ஏழு இறக்கை கொண்டு வானில் பறக்கவும் வேண்டும் என்றார். அரசர் உடனே தெனாலியை அழைத்து, விரைவில் அத்தகைய குருவியைக் கொண்டு வா... என்று உத்தரவிட்டார். அதைக் கேட்டுத் தெனாலிராமனுக்குத் தலை சுற்றியது. அத்தகைய பறவை பற்றி அவர் ஒரு போதும் கேள்விப்பட்டது கூட இல்லை. ஆனால் சிரித்தவாறே, சரி.... அரசே! நாளைக்கு நான் அத்தகைய பறவையோடு வருகிறேன் என்றார்.
மறுநாள் தெனாலி, சபைக்குத் தாமதமாக வந்தார். அவர் நிலைமை மிக மோசமாக இருந்தது. கிழிந்த உடைகள். அதில் புற்களும், முட்களும், மண்ணும் ஒட்டியிருந்தன. கையில் குருவி எதுவும் இல்லாத ஒரு பறவைக் கூண்டு இருந்தது. அவர் அரசரிடம், என்ன சொல்வேன் அரசே! அதிசயமான கதை நடந்து விட்டது. அந்தக் குருவி கையில் கிடைத்து விட்டது. நானும் அதைக் கூண்டில் அடைத்து விட்டேன். அதை இங்கு எடுத்து வரும்போது, அது தனது மாயமான ஏழு இறக்கைகளை விரித்துப் பறந்து சென்று விட்டது. காட்டில் அதைத் துரத்திக் கொண்டு வெகுதூரம் சென்று விட்டேன். அது மீண்டும் என் கையில் சிக்கவில்லை என்றார்.
தொடர்ந்து, சற்று தூரத்தில் பறந்து சென்றவாறே அது என்னிடம் சொல்லிற்று, அரசரிடம் போய்ச் சொல்... காலையாகிற போதோ அல்லது இரவாகிறபோதோ அல்லது நடுப்பகல் ஆகிறபோதோ, வெளிச்சமோ இருட்டோ இல்லாத போது, நானே எனது ஏழு இறக்கைகளால் பறந்து, திரும்ப வந்து விடுகிறேன்... என்றது என்றார். அதைக் கேட்டதும் அரசருக்கு மட்டுமல்ல, அண்டை நாட்டு மன்னர் விஜயவர்தனருக்கும் தலை சுற்றியது. அப்படிப்பட்ட சமயம் எங்கு உண்டாகும்? காலை ஆகாமல், நடுப்பகல் ஆகாமல், இரவு ஆகாமல் வெளிச்சம், இருட்டு ஆகும் சமயம் எது? என்று அனைவரும் வியப்படைந்தனர். அதைக் கேட்டு விஜயவர்தனர், அரசர் இருவரும் சிரித்து விட்டனர். விஜயவர்தனர் சொன்னார், தெனாலியின் சாதுர்யம் பற்றி இதற்கு முன்பு கேள்விப்பட்டுள்ளேனே தவிர, இப்போது தான் நேரில் பார்த்தேன்... என்று புகழ்ந்தார்.
நீதி : அறிவுடையார் எல்லாம் உடையார்
இன்றைய செய்திகள்
15.11.21
* முதல்வர் சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். கன்னியாகுமரி மாவட்டம் செல்ல உள்ளார்.
* சம்பா நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள் என்று வேளாண்மை, உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.
* மேட்டூர் அணையின் 88 ஆண்டு கால வரலாற்றில் 41வது முறையாக நேற்றிரவு முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. இதனால் அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையம், உபரிநீர் போக்கியான 16 கண் மதகு பாலம் வழியாக 24 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
* டோக்கியோ ஒலிம்பிக்கில், ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 12 பேருக்கு, கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
* தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக வி.வி.எஸ்.லெட்சுமணன் நியமிக்கப்படவுள்ளதை பி.சி.சி.ஐ தலைவர் சவ்ரவ் கங்குலி உறுதி செய்துள்ளார்.
* T20 உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் என்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.
Today's Headlines
* CM MK Stalin inspects rain-affected areas in Chennai and will visit Kanyakumari District also.
* For the crop insurance of Samba Rice, tomorrow is the last day said the department of Agriculture and Farmer Welfare.
* In the history of 88 years Mettur Dam water reaches its full capacity of 120 feet for the 41st time yesterday night. Due to this 24,000 cc surplus water is released through the hydropower stations and 16 eyes sluice gate. So flood Warning is given to 11 districts.
* For 12 sports stars including Neeraj Sopra who won gold in Tokyo Olympics in Javelin throw President Ramnad Govind gave Kel Ratna Award.
* VVS Lakshman becomes the Head of the National Cricket Academy. It is confirmed by BCCI head Sourav Ganguly.
* In T20 world Cup finals Australia won against New Zealand by 8 wickets and won the championship.
Post Top Ad
Your Ad Spot
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.
