KalviseithiDaily: Education Department

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Education Department. Show all posts
Showing posts with label Education Department. Show all posts

Friday, January 6, 2023

பள்ளிகளில் ஜப்பான் தொழில்நுட்ப கருவிகள் மூலம் கல்வி முறை சென்னையில் அறிமுகம்

January 06, 2023 0


ஜப்பான் தொழில்நுட்ப கருவிகள் மூலம் கல்வி முறை சென்னையில் அறிமுகம்

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஜப்பான் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்ப கருவிகள் மூலம் மாணவா்கள் எளிதாக கற்கும் முறையை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 18 சென்னைப் பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் காட்சிப்படுத்தும் சாதனம் மற்றும் வரைப்பட்டிகை ஆகிய ஜப்பான் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பச் சாதனங்கள் ரியான் டெக் நிறுவனத்தின் சாா்பில் விலையில்லாமல் வழங்கப்படவுள்ளது.

முதல்கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை சென்னை உயா்நிலைப்பள்ளி, கொய்யாத்தோப்பு சென்னை தொடக்கப்பள்ளி, உயா்நிலைப்பள்ளி, இருசப்பா தெரு சென்னை உயா்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்னை நடுநிலைப்பள்ளி என 5 பள்ளிகளில் இந்த தொழில் நுட்பச் சாதனங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இப்புதிய கல்வி கற்கும் முறையை, சிந்தாதிரிப்பேட்டை, மேற்கு கூவம் ஆற்றுச்சாலையில் உள்ள சென்னை உயா்நிலைப் பள்ளியில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதன் மூலம் ஆசிரியா்களின் கற்பித்தல் முறை, மாணவா்களின் கற்றல் முறை எளிதாக்கப்பட்டு, பொதுத் தோ்வுகள் மற்றும் போட்டித் தோ்வுகளை சுலபமாக மாணவா்கள் எதிா்கொள்ளவும் முடியும்.

நிகழ்ச்சியில், மேயா் ஆா்.பிரியா, பணிகள் குழுத் தலைவா் நே.சிற்றரசு , மண்டலக்குழுத் தலைவா்கள் எஸ்.மதன்மோகன், பி.ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினா் ரா. ஜெகதீசன், ரியான் டெக் நிறுவன இயக்குநா் ஸ்டீபன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
Read More

Tuesday, December 27, 2022

“ பள்ளி இல்ல நூலகத் திட்டத்தின்” வாயிலாக மாணவர்களின் வாசிக்கும் திறன் மற்றும் கற்றல் திறன் மேம்பட்டுள்ளது

December 27, 2022 0
சென்னைப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட “ பள்ளி இல்ல நூலகத் திட்டத்தின்” வாயிலாக மாணவர்களின் வாசிக்கும் திறன் மற்றும் கற்றல் திறன் மேம்பட்டுள்ளது

சென்னைப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட “ பள்ளி இல்ல நூலகத் திட்டத்தின்” வாயிலாக மாணவர்களின் வாசிக்கும் திறன் மற்றும் கற்றல் திறன் மேம்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி, சென்னைப் பள்ளி மாணவ, மாணவிகள் பாடப்புத்தகங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு புத்தகங்களை படித்து வாசிக்கும் திறனை மேம்படுத்திடும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் அனைத்து சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் “பள்ளி இல்ல நூலகத் திட்டம்” செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மேயர் அவர்கள் சிறப்புத் திட்ட அறிவிப்பில் அறிவித்தார்கள். பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும், 92 நடுநிலைப்பள்ளிகளும், 119 தொடக்கப்பள்ளிகளும் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்வியாண்டில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 66,414 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னைப் பள்ளிகளில் பள்ளி நூலகங்கள் மாணவர்களின் பயன்பாட்டிற்காக உள்ளன. அனைத்து சென்னைப் பள்ளி நூலகங்களிலும் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இந்த பள்ளி நூலகங்களில் உள்ள புத்தகங்களை மாணவர்கள் பள்ளிகளிலேயே அமர்ந்து படித்து திரும்ப ஒப்படைக்கும் வகையில் இருந்தன.

மேயர் அறிவிப்பின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னைப் பள்ளிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வாசிக்கும் திறன், கற்றல் திறன், விமர்சனம் எழுதுதல், பேச்சுத்திறன், வரைதல் மற்றும் குறு நாடகம் ஆகிய திறன்களை வளர்த்திடும் வகையில் பள்ளி நூலகங்களிலிருந்து கதை, கவிதை, நாடகம், கட்டுரை, வரலாறு, இலக்கியம், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களைப் பெற்று வீட்டிலும் விரும்பி வாசித்துப் பயன்பெறும் வகையில் “பள்ளி இல்ல நூலகமானது” கடந்த ஆகஸ்டு மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. “பள்ளி இல்ல நூலகம்” திட்டத்தின் மூலம் சென்னைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியரும் புத்தகங்களை இல்லங்களுக்கு எடுத்துச் சென்று விரும்பி வாசிக்கும் திறனை அதிகரிக்க, அதாவது 100 சதவீதம் பூர்த்தியடையும் வகையில் மாணவர்களை ஊக்கப்படுத்தி, இந்தத் திட்டம் உருவாக்கப்பட்ட நோக்கத்தினை அடையும் பொருட்டு முனைப்புடன் செயல்பட ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு, அதன்படி இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி நூலகங்களில் புத்தகங்களை மிகவும் விரும்பிப் பெற்று பயனடையும் மாணவர்களின் விவரங்கள் பெறப்படுகின்றன. அதனடிப்படையில், இந்தப் பள்ளி இல்ல நூலகத் திட்டத்தின் மூலம் கடந்த ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதம் 12,256 மாணவ, மாணவியரும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 13,324 மாணவ, மாணவியரும் புத்தகங்களை மிகவும் விரும்பிப் பெற்று இல்லங்களுக்கு எடுத்துச் சென்று வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தி பயனடைந்துள்ளனர். இதன் மூலம் சென்னைப் பள்ளிகளின் மாணவ, மாணவிகளிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கம் மேம்படுத்தப்பட்டு, அதன் வாயிலாக அவர்களது வாசிக்கும் திறன், கவனிக்கும் திறன், கற்றல் திறன் மேம்பாடு அடைந்து வருகிறது.
Read More

Saturday, September 24, 2022

Arts and cultural activities compulsory in government schools - Education Department notification - அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை கலை பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

September 24, 2022 0
அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை கலை பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Arts and cultural activities compulsory in government schools from class 6 to 9: Education Department notification

அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை கலை பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளி கால அட்டவணைகளில் கலை, பண்பாட்டு செயல்பாடுகள் முதன்முறையாக இணைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் வாரத்தில் இரு பாடவேளைகள் கலை, பண்பாட்டு செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இசை, நடனம், காட்சிக்கலை, நாடகம், நாட்டுப்புற கலை ஆகிய 5 கலைச்செயல்பாடுகளில் மாணவர்கள் ஒன்றை தேர்வு செய்யலாம்.

கலை, பண்பாட்டு செயல்பாடுகளை பயிற்றுவிக்க பள்ளிகளுக்கு அருகே உள்ள கலைஞர்களை ஈடுபடுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியும் கலை பண்பாட்டு செயல்பாடுகளுக்கு பொறுப்பாசிரியரை நியமிக்க வேண்டும். கலை, பண்பாட்டு செயல்பாடுகளில் சிறந்து விளக்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Sunday, April 24, 2022

ஒரு தரப்பினருக்கு மட்டும் மும்மொழி கொள்கை: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழக அரசு

April 24, 2022 0
தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் உருதை தாய்மொழியாக கொண்ட மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கிலத்துடன், மூன்றாவதாக அவர்களின் தாய்மொழியை கற்கும் முறை, தமிழகத்தில் நடைமுறையில் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக, தமிழகத்தில் ஒரு தரப்பினருக்கு, மும்மொழி கொள்கை அமலில் இருப்பது, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

விருப்ப மொழி தேர்வு

தமிழக பள்ளிக்கல்வி துறை வெளியிட்ட, பள்ளி ஆண்டு இறுதி தேர்வு அட்டவணையில், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கிலத்துடன், மூன்றாவதாக விருப்ப மொழி தேர்வும் நடத்தப்படும் என்று பட்டியலிடப் பட்டது. இதனால், மும்மொழி கொள்கை மறைமுகமாக அமலாவது குறித்து, நம் நாளிதழில் நேற்று விரிவான செய்தி வெளியானது.

இதையடுத்து, பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், நீண்ட காலமாக அமலில் உள்ள இருமொழி கொள்கையை மாற்றி, மும்மொழி கொள்கையை புகுத்தும் நடவடிக்கைகள் சத்தமின்றி துவங்கி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. தமிழக அரசு தங்களின் மொழி கொள்கையை, பல்வேறு கால கட்டங்களில் தெளிவுபடுத்தி வருகிறது. தாய்மொழியான தமிழ், உலகின் இணைப்பு மொழியாகிய ஆங்கிலம் என, இருமொழி கொள்கை மட்டுமே, வழக்கத்தில் இருந்து வருகிறது. இருமொழி கொள்கை மட்டுமே தொடரும். இருமொழி கொள்கை தமிழக அரசின், தமிழ் மொழி கற்கும் - 2006ம் ஆண்டு சட்டப்படி, ஒவ்வொரு மாணவரும், 10ம் வகுப்பு வரை, தமிழ் மொழியை கட்டாய பாடமாக படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழை தாய்மொழியாக கொள்ளாத தெலுங்கு, கன்னடம்,மலையாளம், உருது மாணவர்களும், தமிழ் மொழியுடன் சேர்த்து, அவர்களின் தாய்மொழியையும் விருப்ப பாடமாக தேர்வு செய்து எழுதும் முறை, பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

எனவே, தமிழக அரசின் தெளிவுபடுத்தப்பட்ட மொழி பாட கொள்கை குறித்து, மக்களை தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள், தமிழக பாடத்திட்டத்தின்படி இரு மொழிகளை மட்டுமே படிக்க முடியும்.

கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலத்தவர்கள் மற்றும் உருது மொழி பேசுவோர், தமிழக அரசின் மொழி கொள்கைப்படி, மூன்று மொழிகளை படிக்க முடியும் என்று, அரசு தெளிவுபடுத்தி உள்ளது. அதாவது, தமிழர்களுக்கு இருமொழி கொள்கையும், மற்ற அண்டை மாநிலத்தவருக்கு மும்மொழி கொள்கையும் அமலில் உள்ளது தெளிவாகி உள்ளது.
Read More

Monday, April 4, 2022

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் மாணவர்கள் எண்ணிக்கை - பள்ளி கல்வித் துறை தகவல்!

April 04, 2022 0
10th, 11th, 12th class general examination number of students - School Education Department information!

A total of 26,76,675 10th, 11th and 12th class students are scheduled to appear for the exam, according to the school education department. 9,55,474 students are appearing for the Class 10 general examination, 8,83,884 students are appearing for the Class 11 general examination and 8,37,317 are appearing for the Class 12 general examination.

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மொத்தமாக 26,76,675 பேர் தேர்வு எழுத உள்ளதாக பள்ளி கல்வித் துறை தகவல்

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மொத்தமாக 26,76,675 பேர் தேர்வு எழுத உள்ளதாக பள்ளி கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9,55,474 மாணவர்கள், 11ம் வகுப்பு பொதுத் தேர்வை 8,83,884 மாணவர்கள், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 8,37,317 பேர் எழுதுகின்றனர்.
Read More

Saturday, January 15, 2022

திருப்புதல் தேர்வு தொடங்கவுள்ள நிலையில் நாளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முக்கிய ஆலோசனை

January 15, 2022 0
10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19-ம் தேதி, முதல் திருப்புதல் தேர்வு தொடங்கவுள்ள நிலையில் நாளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முக்கிய ஆலோசனை
பிற மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் வகுப்புகளை மீண்டும் தொடங்குவது குறித்து நாளைய கூட்டத்தில் முடிவு.
Read More

Thursday, December 23, 2021

தொழிற்கல்வி ஆசிரியர் பட்டியல் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

December 23, 2021 0
மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தொழிற்கல்வி ஆசிரியர்களின் விபரங்களை சேகரிக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள்ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகள் உள்ளிட்டவை குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

ஜனவரியில் நடக்கும் இடமாறுதல் கவுன்சிலிங்கில் ஆசிரியர்களை உரிய இடங்களில் பணியமர்த்தும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதன்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தொழிற்கல்வி மாணவர்களின் எண்ணிக்கையும் அவற்றுக்கு ஏற்ப எத்தனை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்ற விபரங்களையும் பிழையின்றி பட்டியல் தயாரித்து அனுப்புமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குனர் ஜெயகுமார் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
Read More

Wednesday, December 22, 2021

வகுப்பறை சுத்த பணிகளில் மாணவர் ஈடுபடக்கூடாது

December 22, 2021 0
பள்ளி வகுப்பறைகளையும் கழிப்பறைகளையும் சுத்தம் செய்யும் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்' என பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருமங்கலம் அடுத்த கீழஉரப்பனூரைச் சேர்ந்தவர் ஆதிசிவன். இவரது மகன் சிவநிதி.திருமங்கலத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.2015ல் ஜூன் மாதம் வகுப்பறையை சுத்தம் செய்யும்படி வகுப்பாசிரியர் சிவநிதிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி சுத்தம் செய்த போது டெஸ்க் விழுந்து சிவநிதியின் இடதுகால் விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.வகுப்பறையை சுத்தம் செய்யக் கூறியதால் தான் தன் மகன் காயமடைந்ததாகவும் இது மனித உரிமை மீறல் எனக் கூறியும் ஆதிசிவன் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.

விசாரித்த ஆணையம் சுத்தம் செய்ய போதுமான ஊழியர்களை நியமிக்காததற்கு பள்ளி நிர்வகம் தான் காரணம் எனக்கூறி பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஒரு லட்சம் ரூபாயை இழப்பீடாக நான்கு வாரங்களுக்குள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும் பள்ளிகளில் வகுப்பறைகள் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்யும் விதமாக முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிக்க பள்ளி கல்வி இயக்குனரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Read More

Monday, December 20, 2021

விழுப்புரம் மண்டலத்திற்கு ஆய்வுக்கூட்டம் மாற்றம் - பள்ளிக்கல்வி அமைச்சர்

December 20, 2021 0
வரும் 22,23, ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த விழுப்புரம் மண்டல பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அன்றைய தேதியில் திருநெல்வேலி மண்டலத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்
Read More

Sunday, December 19, 2021

வரும் கல்வியாண்டில் ( 2022-2023 ) 1 லட்சம் மாணவர்களுக்கு Rain coats, Ankle Boots வழங்க கல்வித்துறை நடவடிக்கை!

December 19, 2021 0
வரும் கல்வியாண்டில் ( 2022-2023 ) மழைப்பொழிவு அதிகம் உள்ள மாவட்டங்கள், மலைப் பிரதேச மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு Rain coats, Ankle Boots வழங்க கல்வித்துறை நடவடிக்கை!
Read More

Saturday, December 18, 2021

மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகையுடன் சைக்யாலஜி - சைக்யாட்ரி படிப்புகள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31

December 18, 2021 1
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செயல்படும் மத்திய அரசின் கல்வி நிறுவனமான சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் சைக்யாட்ரியில் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வழங்கப்படும் படிப்புகள்:பிஎச்.டி., இன் கிளினிக்கல் சைக்யாலஜிஎம்.பில்., இன் கிளினிக்கல் சைக்யாலஜிஎம்.பில்., இன் சைக்யாட்ரிக் சோசியல் ஒர்க்டிப்ளமா இன் சைக்யாட்ரிக் நர்சிங்

தகுதிகள்: படிப்பு நிலைகளை பொறுத்து கல்வித் தகுதி மாறுபடும்.

உதவித்தொகை: தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

மாணவர் சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31

விபரங்களுக்கு:https://cipranchi.nic.in/
Read More

Friday, December 17, 2021

பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் ரூ.33,000 கோடியில் ரூ.31,000 கோடி சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

December 17, 2021 0
பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.33 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.அதில், ரூ.31 ஆயிரம் கோடி சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று ஆய்வு செய்தார். பின்னர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில், சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், எம்எல்ஏ வை.முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்பிறகு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியது: பள்ளிகளில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகளை தடுப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சில ஆசிரியர்கள் தவறான செயலில் ஈடுபடுவதால் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.பாலியல் புகார்களுக்கு உள்ளாவது யாராக இருந்தாலும் அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட உள்ளது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது தமிழக மக்களின் ஆசை. இதுகுறித்து தமிழக முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும். பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றார். பின்னர், பல பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளது, அவை எப்போது மேம்படுத்தப்படும் என்ற கேள்விக்கு, ‘‘பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.33 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. அதில், ரூ.31 ஆயிரம் கோடி சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது. எஞ்சியுள்ள ரூ.2 ஆயிரம் கோடியைத்தான் 45 ஆயிரம் பள்ளிகளுக்கும் பிரித்து கட்டமைப்பு பணிகளுக்கு வழங்கப்படுகிறது. திமுக ஆட்சியில்தான் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என்றார்
Read More

Thursday, December 9, 2021

தகவல் தராமல் 'ஆப்சென்ட்' - அரசு பள்ளி ஆசிரியர்கள் 5 பேருக்கு நோட்டீஸ் - CEO அதிரடி

December 09, 2021 0
வேலுார் மாவட்டம், குடியாத்தம் காந்திநகர் பகுதியில் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பணி யாற்றும் ஆசிரியர்கள், பள்ளிக்கு உரிய நேரத்தில் வருகை தருவ தில்லை என முதன்மைக் கல்வி அதிகாரிக்கு புகார் சென்றது. இந்த அதிரடி நடவ டிக்கை, கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

Thursday, December 2, 2021

உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு

December 02, 2021 0
உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உயர் கல்வி அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் திருத்தம் உள்ளிட்டவைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட நிலையில் கடிதம் அனுப்பியுள்ளார்.
Read More

Saturday, November 27, 2021

பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை

November 27, 2021 0
தனியார் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் 2 வாரத்தில் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்கப்படுவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அரசாணைக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு 2 வாரத்தில் பதில் தர தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.
Read More

Thursday, November 25, 2021

பயிரை மேயும் வேலிகள்!! - தினமணி நடுப்பக்க கட்டுரை!!

November 25, 2021 0
‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்பது முன்னோா் சொல்லிய வைர வரிகள். அம்மா, அப்பா இல்லாமல் யாரும் பிறக்க முடியாது. அவா்கள் இருவரும் ரத்த சொந்தங்கள். நம்பியவா்களுக்கு தெய்வம் என்பது பெரிய உலகம். கண்ணுக்குத் தெரியாத பெரும் சக்தி. ஆனால், ஆசிரியா்கள், தாங்கள் கற்றுக் கொடுக்கும் மாணவா்களுக்கு உறவினராக இருக்க வேண்டிய அவசியமிலலை. நண்பா்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் ஆசிரியா்கள் இந்த வரிசையில் மூன்றாவது இடம் பெற்றுள்ளனா். இப்படி மிக முக்கியவத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கும் ஆசிரியா்கள், தமக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தை உணா்ந்து செயல்பட வேண்டியது மிக அவசியம்.

இத்தகைய பெருமைமிகுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியா்களில் சிலரின் செயல்பாடுகள் வேலியே பயிரை மேய்ந்து விடுகிறதோ என்ற எண்ணத்தை பெற்றோா்கள், பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றன. நம் முன்னோா்கள் சொல்லிய வரிசையின் முக்கியத்துவத்தை மற்ற துறையைச் சோ்ந்தவா்கள் எளிதாக கடந்து சென்றால் கூட ஆசிரியா் சமூகம், இந்த வரிசையின் மகத்துவத்தை உணா்ந்து செயல்பட வேண்டும். ஆசிரியா்களுக்கு சமூகம் தரும் கௌரவம் மிக அதிகம். தனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியரை பிற்காலத்தில் சந்திக்க நேரும் மாணவன், அவரை உபசரித்து அவருக்கு வேண்டிய பணிகளை செய்து கொடுத்து வாசல் வரை சென்று வழியனுப்பி வைக்கும் நிகழ்வு ஆசிரியா்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய பொக்கிஷம். தன்னிடம் படித்த மாணவா் இவா் என்று பாா்ப்போரிடம் எல்லாம் பெருமையாக சொல்லி மகிழும் குணமுடையவா்கள் ஆசிரியா்கள். இப்படி ஆசிரியா்-மாணவா் உறவு என்பது அனைத்து வகை உறவுகளை விட நெகிழ்சியானது.

ஆட்சியா்,அரசியல்வாதி, அரசு ஊழியா், தனியாா் நிறுவன ஊழியா் என ஒவ்வொருவருக்கும் எப்படியும் ஓா் ஆசிரியா் கனவாசிரியராக இருந்திருப்பாா். அந்த ஆசிரியா் குறித்த நினைவு எப்போதும் அந்த மாணவருக்குள் இருக்கும்.

இபபடி, கனவு ஆசிரியராக, தன் வாழ்க்கைப் பாதையை காட்டிய முன்னவராக, தான் கற்பதற்கு பல வழிகளில் உதவி செய்த நல்ல மனதுக்காரராக, தன் வாழ்நாள் முழுதும் நினைத்துப் பாா்க்கும் மாணவச் செல்வங்கள் அதிகம். சத்தமின்றி நன்மைகள் செய்து வரும் ஆசிரியா்களும் மிக அதிகம்.

இப்படி ஆசிரியா்களை மிக உயா்ந்த இடத்தில் வைத்து சமூகம் ஆராதித்து வரும் நிலையில், சில ஆசிரியா்களின் செயல்பாடுகள், ஆசிரியா் சமூகத்தையே குறைத்து மதிப்பிடும் நிலையை ஏற்படுத்தி விடுகின்றன. பாலியல் ரீதியான தொந்தரவுகளை மாணவிகளுக்குக் கொடுத்து வரும் சில ஆசிரியா்களால் ஒட்டுமொத்த ஆசிரியா் இனத்துக்கே பெரும் அவமானம் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஆசிரியா்கள் குறித்த சமூகத்தின் பாா்வையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அண்மையில், கோவையில் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக, தனியாா் பள்ளி ஆசிரியரும், அப்பள்ளியின் முதல்வரும் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது. இது தொடா்பான செய்தி காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவ, மாணவிகள் பள்ளியிலோ ஆசிரியா்களால் நடத்தப்பட்டும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளிலோதான் அதிக நேரத்தை செலவிடுகின்றனா். தங்கள் பிள்ளைகள் நன்கு படித்து, நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும், நல்ல ஒழுக்கத்துடன் வளர வேண்டும் என்ற உயரிய நோக்கில்தான் குழந்தைகளைப் பெற்றோா் பள்ளிக்கும், சிறப்பு வகுப்புகளுக்கும் அனுப்பி வைக்கின்றனா். ஆசிரியா்கள் மீதுள்ள நம்பிக்கை காரணமாகத்தான் இருபாலரும் சோ்ந்து பயிலும் பள்ளிகளுக்கு, மாணவிகளை, பெற்றோா் பயமின்றி அனுப்பி வைக்கின்றனா். மேலும், சிறப்பு வகுப்புகளுக்கும், இரவு நேரப் படிப்புகளுக்கும் கூட பெற்றோா் தயக்கமின்றி அனுப்பி வைக்கின்றனா். இத்தகைய பெற்றோரின் மனதில் கோவை சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவறு செய்யும் மாணவா்களைக் கண்டிக்க வேண்டிய பொறுப்பும், அவா்களை நல்வழிப்படுத்த வேண்டிய கடமையும் ஆசிரியா் சமூகத்திற்கு உண்டு. மாணவா்களுக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டியவா்கள் ஆசிரியா்கள். இந்த நிலையில் கோவை ஆசிரியா் போன்ற சில ஆசிரியா்களின் செயல்பாடுகளால் ஆசிரியா் சமூகத்துக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டிருப்பதை ஆசிரிய சமூகம் உணர வேண்டும்.

இதில் வேதனை என்னவென்றால், சம்பந்தப்பட்ட மாணவிக்கு, அந்த ஆசிரியா் பாலியல் தொல்லை கொடுத்த விவரம் அப்பள்ளியின் முதல்வருக்கு முன்னரே தெரிந்திருந்தும்கூட அந்த ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டதுதான். கடமை தவறும் ஆசிரியரைக் கண்டிக்க வேண்டிய பொறுப்பு, அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அந்த முதல்வருக்கு உண்டு என்பதை அவா் மறந்தது எப்படி எனப் புரியவில்லை. இப்படி அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சிலா்தான் இந்த கீழ்த்தர செயல்களில் ஈடுபடுகின்றனா் என்றாலும், அது இந்த சமுதாயத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மாணவா்களுக்கு நீதி கதைகளையும், வாழ்க்கைக் கல்வியையும் போதிக்க வேண்டிய ஆசிரியா்களே இதுபோன்ற பாதகச் செயலைச் செய்தால் அதன் தாக்கம் எதிா்கால இளைஞா்களையும் தவறான பாதைக்குக் கொண்டு செல்லும். வருங்காலங்களில், தகுதித் தோ்வு நடத்தி ஆசிரியா் நியமனத்தை மேற்கொள்ளும் அதே நேரத்தில், ஆசிரியா்கள் மாணவிகளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற உளவியல் ரீதியான பயிற்சி வகுப்புகளையும் நடத்துவது அவசியமாகி விட்டது. ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியா்களையும், பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியா்களையும் நியமிக்க வேண்டும் என ஏற்கெனவே அரசு தெரிவித்துள்ள நிலையில், இரு பாலா் பள்ளிகளில் மாணவிகளின் எண்ணிகைக்கு ஏற்ற வகையில் ஆசிரியைகள் நியமிக்கப்பட வேண்டும்.

செயல்முறைத் தோ்வு , அகத் தோ்வு மதிப்பெண்கள் போன்றவற்றில் வெளிப்படைத்தன்மையுடன் ஆசிரியா்கள் மாணவிகளை அணுக வேண்டும். தனியாக மாணவா்களுக்கு அக மதிப்பீடு வழங்கும் முறையைக் கைவிட்டு கல்லூரிகளில் குழு புராஜெக்ட்டிற்கு மதிப்பெண் வழங்கப்படுவது போல், பள்ளிகளிலும் குழு செயல்முறை மதிப்பெண் வழங்கும் முறையை கொண்டு வந்தால் தனிப்பட்ட முறையில் மாணவிகள் மிரட்டப்படுவது தவிா்க்கப்படும்.

எதிா்கால இந்தியாவை வடிவமைக்க கூடிய மாணவா்களை, மாணவிகளை உருவாக்கும் பெரும் பொறுப்புள்ள ஆசிரியா்கள் தங்களின் சமூக கடமை உணா்ந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
Read More

Tuesday, November 23, 2021

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்: அமைச்சர் விளக்கம்

November 23, 2021 0
10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

பொதுத்தேர்வுகள் கடந்த ஆண்டைப் போலவே மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் எனவும், வினாத்தாள்கள் வடிவமைப்பில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படாது என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை.

தற்போதய நிலையில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே அமரவைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகிறது. 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உள்ளதால் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு 5.80 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 8.75 லட்சத்துக்கு மேல் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.
Read More

Monday, November 15, 2021

விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

November 15, 2021 0
கோவை: கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோவையில் பள்ளி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் அந்த மாணவி முன்னாள் படித்த தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் மாணவி புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அப்பள்ளியின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டு அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து அவர் நீதிபதி இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் கிடைக்கப்பெற்றுள்ள ஆதாரங்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், கோவை போன்ற சம்பவங்களை தடுப்பது தொடர்பாக வருகின்ற 23ம் தேதி முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Saturday, November 13, 2021

அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவு

November 13, 2021 0
சென்னை விடுமுறை நாட்களை ஈடுகட்ட, அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளில் வகுப்புகளை நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் பள்ளிகள் மூடப்பட்டு, 19 மாதங்களுக்கு மேலாக வகுப்புகள் நடக்கவில்லை.

அரசு பள்ளிகளில் பாடங்கள் நடத்தாமல், மாணவர்களுக்கு கற்பித்தல் குறைந்து பாதிக்கப்பட்டனர். தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும் 'ஆன்லைன்' வழியில் படித்தனர்.

இந்நிலையில், செப்டம்பர் 1 முதல், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.அதன்பின் பல்வேறு தரப்பிலும் எழுந்த கோரிக்கையால், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.அதன்பின் தீபாவளிக்காகவும், பின் மழைக்காகவும் விடுமுறை விடப்பட்டது.

இதையடுத்து, வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளை திறந்து, பாடங்களை நடத்த ஆசிரியர்கள் தயாராகி வருகின்றனர். குறிப்பாக, தனியார்பள்ளிகள் தரப்பில்முழு வீச்சில்பாடங்களை நடத்த முடிவு செய்துஉள்ளனர்.

இந்நிலையில், அரசு பள்ளிகளிலும் கற்பித்தல் பணிகளை கொஞ்சமாவது மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறந்து, பாடங்களை நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
Read More

Thursday, November 11, 2021

இல்லம் தேடிக் கல்வித் திட்டம்: தன்னாா்வலா் தகுதியற்றவா் என அறியப்பட்டால் உடனடியாக நீக்கம்

November 11, 2021 0
"இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தோ்வு செய்யப்படும் தன்னாா்வலா் பணிக்கு சரியான நபா் இல்லை எனத் தெரிந்தால், உடனடியாக அவா் பணியில் இருந்து விடுவிக்கப்படுவாா் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்பட உள்ள இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவா்களுக்குத் தினமும் மாலை நேரங்களில் கற்பிக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவா்களுக்கு பிளஸ் 2 வகுப்பு வரை படித்தவா்களும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவா்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவா்களும் தன்னாா்வலா்களாக தோ்வு செய்யப்பட்டு கற்பிக்க உள்ளனா்.

இந்தத் திட்டத்தில் தன்னாா்வலா்களாக சோ்ந்து பணியாற்ற இணையதளத்தின் மூலம் 1 லட்சத்து 60 ஆயிரத்து 972 போ் விருப்பம் தெரிவித்துள்ளனா். இவா்களை தோ்வு செய்வதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் எந்த காலகட்டத்திலும் தன்னாா்வலா், இந்தப் பணிக்கு சரியான நபா் இல்லை என அறியப்பட்டால் உடனடியாக அவா் அப்பணியில் இருந்து விடுவிக்கப்படுவாா். மாநில அளவில் பதிவு செய்துள்ள தன்னாா்வலா்களில் தரவுகளை ஆய்வு செய்தபின்னா் பெண்களுக்கு முன்னுரிமை, கல்வித்தகுதி, முகவரி இதர தகவல்கள் மாவட்ட வாரியாகப் பிரிக்கப்பட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதனைப் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் சரிபாா்த்து தன்னாா்வலா் தோ்வு செய்யப்பட வேண்டும். அவா் இல்லம் தேடி கல்வி மையம் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியைச் சாா்ந்தவராக இருத்தல் மற்றும் கல்வித் தகுதி உள்ளிட்டப் பிற தகுதிகளையும் சரிபாா்த்து தோ்வு செய்ய வேண்டும். மையத்துக்கு வரும் குழந்தைகளை சாதி, மதம், பாலினம் என பாகுபடுத்தாமல் விருப்பு, வெறுப்பின்றி சமமாக கருதுபவராக இருக்க வேண்டும். தன்னாா்வலா்களுக்குப் பேச்சு, விவாதிக்கும் ஆா்வம், குழு விவாதம் மூலம் சோதனை செய்யப்படும். பின்னா் மாவட்டக்குழுவின் மூலம் தன்னாா்வலா் தோ்வு செய்யப்பட்டு, பயிற்சிகள் அளிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது"
Read More

Post Top Ad

Your Ad Spot