KalviseithiDaily: Computer's

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Computer's. Show all posts
Showing posts with label Computer's. Show all posts

Monday, September 6, 2021

நடுநிலைப்பள்ளிகளில் கணினி, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கிட வலியுறுத்தல்

September 06, 2021 0
நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்க ளின் எண்ணிக்கையை அதி கரிக்ககணினி, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கிட ஈரோட்டில் நடந்த தமிழ்நாடு பட்ட தாரி ஆசிரியர் கூட்டமைப் பினர் வலியுறுத்தி, தீர்மா னம் நிறைவேற்றியுள்ளனர்.

ஈரோட்டில் தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட பொதுக்குழுகூட்டம்நடந் தது.கூட்டத்திற்கு,கோவை மாவட்ட செயலாளர்மணி கண்டன் தலைமைதாங்கி னார். முன்னாள் மாநில தலைவர் ஆனந்த கணேஷ், மாநில பொருளாளர் தங்க வேலு, இணை செயலாளர் ஷசீனா பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தைரத்து செய்து, பழைய ஓய்வூதியதிட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கி யதை போன்றே நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப் படிஉயர்வைமாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.

பள்ளிகளில் மாணவர் களின் நலனை கருத்தில் கொண்டு அதிகளவில் கொரோனா குறித்த விழிப் புணர்வும், உளவியல் ரீதி யான பாதிப்புகளைகளைய நடவடிக்கை எடுக்க வேண் டும். அனைத்து நடுநிலை பள்ளிகளிலும் அலுவலக பணியாளர், கணினி ஆசி ரியர், உடற்கல்வி ஆசிரியர், அலுவலக உதவியாளர், தூய்மைபணியாளர் ஆகிய பணியிடங்களை உருவாக்கி நியமிக்கப்பட வேண்டும். காலிப் பணியிடங்கள் மற் றும்கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். ஒவ்வொரு நடுநிலை பள்ளியி லும் மாணவர்களின் எண் ணிக்கையை அதிகரிக்க கணிதஆசிரியர், அறிவியல் ஆசிரியர்,ஆங்கில ஆசிரியர் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக் கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, புதிய நிர் வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.இதில், மாவட்ட தலைவராகவீராகார்த்திக், மாவட்ட செயலாளராக நளினி, மாவட்ட பொரு ளாளராக சிவராமன், மாநில செயற்குழு உறுப் பினராக அருள் மற்றும் மாவட்டதுணை தலைவர்க ளாகதனகுமார், ஹாகிதா. இணை செயலாளர்களாக பாலகிருஷ்ணன், இந்துமதி, மாநில பொதுக்குழு உறுப் பினர்களாக பூபதி, சதீஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
Read More

Sunday, September 5, 2021

1 லட்சம் ஆசிரியர்களுக்கு இன்று முதல் கணினி பயிற்சி: கல்வி துறை ஏற்பாடு

September 05, 2021 0
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 1 லட்சம் ஆசிரியர்களுக்கு, இன்று முதல் கணினி பயிற்சி நடத்த தொடக்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் 12 ஆயிரம் உள்ளன. இந்த பள்ளிகளில் 1 லட்சம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டாக 1 முதல் 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியர் வீடுகளில் உள்ளனர். விரைவில் இவர்களுக்கு பள்ளிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் நடந்து வருகிறது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்கள் கணினி மயமாக்கப்பட உள்ளது. எனவே, ஆசிரியர்களுக்கு கணினி அறிவு அவசியம் என்பதால், அதன் தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, 1 லட்சம் ஆசிரியர்களுக்கு இன்று தொடங்கி 6 நாட்கள் கணினி பயிற்சி அளிக்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பயிற்சிக்காக ஒரு வட்டாரத்தில் ஒரு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற உள்ள ஆசிரியர்கள் தாங்களே முன்வந்து இணைய தளம் மூலம் தங்கள் பெயர்களை அந்தந்த மையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து ஆசிரியர்கள் அனைவரும் போட்டி போட்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து வருகின்றனர். தவற விட்டால் வேறு மையங்களில்தான் பயிற்சி பெற முடியும் என்பது தான் இதற்கு காரணம்
Read More

Post Top Ad

Your Ad Spot