KalviseithiDaily: Elections

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Elections. Show all posts
Showing posts with label Elections. Show all posts

Thursday, October 27, 2022

2023 இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு வாக்காளர் முகாம் நாட்கள் 2022 - அறிவிப்பு

October 27, 2022 0
2023 இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு வாக்காளர் முகாம் நாட்கள் 2022 - அறிவிப்பு
Read More

Saturday, January 8, 2022

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில், வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு உச்சவரம்பு உயர்வு - Order Copy

January 08, 2022 0
சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில், வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது!
Read More

Tuesday, December 21, 2021

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வளர்ச்சி நிதி - ரூ.609 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

December 21, 2021 0
உள்ளாட்சி அமைப்புகளுக்கான வளர்ச்சி நிதி - ரூ.609 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை.
Read More

Friday, November 26, 2021

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்றும், நாளையும் 2ம் கட்ட சிறப்பு முகாம்: மாநகராட்சி அறிவிப்பு

November 26, 2021 0
சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2022 நடைபெறுவதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்கள் 27ம் தேதி சனிக்கிழமை மற்றும் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தேதிகளில் மண்டலங்கள் 4, 5, 6, 8, 9, 10 மற்றும் 13க்குட்பட்ட சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளன.

எனவே, பொதுமக்கள் ஜனவரி 1ம் தேதியன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் (1.1.2004ம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள்) வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்க்கலாம். மேலும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் விவரங்களை திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய மற்றும் பெயர்களை நீக்கம் செய்ய இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நவ., 1ல் துவக்கப்பட்டது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

வாக்காளர்கள் வசதிக்காக, 13, 14, 20, 21ம் தேதிகள் என நான்கு நாட்கள், சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இம்முகாம்களில் மொத்தம், 8.59 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றன. பெயர் சேர்க்க மட்டும், 61.41 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கடைசியாக இன்றும்( நவ.,27), நாளையும், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடக்க உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பங்கள் வழங்கலாம்.இது தவிர, www.nvsp.in என்ற இணையதளத்திலும், VOTER HELPLINE என்ற மொபைல் ஆப் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
Read More

Thursday, November 18, 2021

வாக்காளா் பட்டியல் திருத்தம்: வரும் சனி, ஞாயிறில் சிறப்பு முகா

November 18, 2021 0
P.R.No:1142

Date:18.11.2021

PRESS RELEASE

As per the instructions of the Election Commission of India, the Special Summary Revision of Photo Electoral Rolls, 2022 is being conducted across the State of Tamil Nadu from 01.11.2021 to 05.01.2022. Also, the Special campaigns are being arranged on 13.11.2021, 13.11.2021, 14.11.2021, 27.11.2021 and 28.11.2021 which are Saturdays and Sundays at the designated locations to facilitate the electors to enrol their name and make correction of entries in the Electoral Roll. However, due to heavy rainfall the activities related to Special campaigns were hampered in some of the districts. In order to facilitate and encourage the eligible electors to enrol their name and to make correction of entries in the Electoral Roll, the Commission has announced additional Special campaigns on 20.11.2021 (Saturday) and 21.11.2021 (Sunday) which will be conducted across the State of Tamil Nadu.

வாக்காளா் பட்டியலில் திருத்தப் பணிகளை மேற்கொள்ள வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை வெளியிட்டாா். அவரது அறிவிப்பு விவரம்:-

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. வாக்காளா்கள் தங்களது பெயரைச் சோ்ப்பதற்கும், வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக நவம்பா் 13, 14 மற்றும் 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த தீா்மானிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், பலத்த மழை காரணமாக சில மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் தொடா்பான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, திருத்தப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் வரும் சனி (நவ.20), ஞாயிற்றுக்கிழமை (நவ. 21) ஆகிய இரண்டு நாள்களில் மாநிலம் முழுவதும் கூடுதலாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.
Read More

Wednesday, November 17, 2021

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை தயாரிப்பு நிறைவு - இம்மாத இறுதியில் அறிவிப்பு வெளியீடு!

November 17, 2021 0
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை தயாரிப்பு பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் முடித்துள்ளது.தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

இதில், ஊரக உள்ளாட்சி பதவிகள், 2019 டிச., மற்றும் சமீபத்தில் நடந்த தேர்தல்கள் வாயிலாக நிரப்பப்பட்டு விட்டன.மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டிஉள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது.புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், வார்டு மறுவரையறை செய்யும் பணி நடந்து வருகிறது.

இந்த தேர்தலை மூன்று கட்டங்களாக நடத்தி, 2022 ஜனவரியில் புதிய நிர்வாகிகளை பொறுப்பேற்க வைக்க, ஆணையம் திட்டம் வகுத்துள்ளது.இது ஒருபுறம் இருக்க, எந்தெந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு, எந்த கட்டத்தில் தேர்தல் நடத்தலாம் என்பது குறித்த அட்டவணை தயாரிப்பு பணிகள் நடந்து வந்தன.தேர்தல் பணியில் போலீசார் மற்றும் அலுவலர்களை சிரமமின்றி ஈடுபடுத்தும் வகையில், அட்டவணைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.

தற்போது, தேர்தல் அட்டவணை தயாரிப்பு பணிகள் நிறைவடைந்து உள்ளன.இட ஒதுக்கீடு அடிப்படையில், வார்டு வரையறை பணிகள் விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சியான தி.மு.க.,வும், பயிர் நிவாரணம், பொங்கல் பரிசு என அறிவித்து, தேர்தலுக்கு தயாராகி விட்டது. தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனு பெறவும் ஏற்பாடு நடக்கிறது.எனவே, இம்மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என, ஆணைய வட்டாரத்தில் கூறப்படுகிறது. கலெக்டர்களுடன் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுடனான ஆலோசனை கூட்டம், நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே நடந்தது. மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் கூட்டம் நடந்தது. மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சுமுகமாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்,'' என, கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரித்தல்; தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் காலியிடங்களை நிரப்புதல்; ஓட்டுப்பதிவு அலுவலர்களின் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.மண்டல அலுவலர்களை நியமித்தல்; ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, பெல் நிறுவன பொறியாளர்களை வைத்து சோதனை செய்தல்; தேர்தலுக்கான பொருட்களை இருப்பு வைத்தல்; ஓட்டு எண்ணும் மையங்களை இறுதி செய்தல் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மாநில தேர்தல் ஆணைய செயலர் சுந்தரவல்லி, கூடுதல் டி.ஜி.பி., வெங்கட்ராமன், பேரூராட்சிகள் ஆணையர் செல்வராஜ், நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
Read More

Tuesday, October 5, 2021

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாளன்று விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

October 05, 2021 0
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாளன்று விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

காஞ்சிபுரம், அக்.4 :காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) லிங்கேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 6 மற்றும் 9 ம் தேதி நடைபெற உள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தொழில் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகள், ஓட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், பீடி சுருட்டு நிறுவனங்கள் பொது தனியார்துறை உள்ள அனைத்து நிறுவனங்களில் தற்காலிக, ஒப்பந்த தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கவேண்டும். அன்றைய தினம் விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக புகார்கள் பெற தொழிலாளர் துறை, தொழிலாளர் ஆணையரால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தேர்தல் நாளான 6 மற்றும் 9 ம் தேதி ஆகிய 2 நாட்களிலும் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள் ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நாளன்று விடு முறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக புகார்கள் தெரிவிக்க தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக் கம்) லிங்கேஸ்வரன் (9778619552), தொழிலாளர் துணை ஆய்வர் கமலா (9952639441), தொழிலாளர் உதவி ஆய்வர் மாலா (9790566759), பரங்கிமலை தொழிலாளர் உதவி ஆய்வர் சிவசங்கரன் (9444152829), காஞ்சிபு ரம் முத்திரை ஆய்வர் வெங்கடாச்சலம் (9444062023) ஆகிய செல்போன் எண்களிலும் 044-27237010 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக் கலாம். மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில், பரங்கிமலை தொழிலாளர் துணை ஆய்வர் மனோஜ் ஷியாம் சங் கர் (8667570609), செங்கல்பட்டு தொழிலாளர் உதவி ஆய்வர் பிரபாகரன் (9944214854) மதுராந்தகம் தொழி லாளர் உதவி ஆய்வர் பொன்னிவளவன் (9789253419). தாம்பரம் தொழிலாளர் உதவி ஆய்வர் வெங்கடேசன் (8870599105), செங்கல்பட்டு முத்திரை ஆய்வர் சிவ ராஜ் (7904593421), பரங்கிமலை முத்திரை ஆய்வர் வேதநாயகி (9884264814) ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Read More

Thursday, September 16, 2021

அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை - நாள் 17.09.2021

September 16, 2021 0
உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதை தடுக்க வேண்டும்! அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை.


நாள் 17.09.2021 செய்தி வெளியீடு


ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் - ஜனநாயகத்திற்கு ஊறுவிளைவிப்பதை தடுத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வேண்டுகோள்


காஞ்சிபுரம் செங்கல்பட்டு வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை விழுப்புரம், கள்ளக்குறிச்சி திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட மாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதரணத் தேர்நங் அறிமிக்கைகளையும், ஏனைய 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட அரசு உள்ளாட்சி அமைப்புகளில் பதவியிடங்ககுக்கான சுற்செயம் நேர்தல் அறிவிக்கைகளையும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டதைத் தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வண்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைமி மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதலியிடங்களுக்கு 1.5.09.2021 முதல் வேட்பு:ணுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதலியிடங்கள் ஏலம் விடப்படுவதாக நாளிதழில் செய்றி வெளியாகியுள்ளது.


இதுகுறிந்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அலுவலர்மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், மக்களாட்சி தத்துவத்திற்கும் புறம்பாக நடைபெறும் இத்தகைய செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி, தண்டனைக்குரியது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவியிடங்கள் இவ்வாறு ஏலம் விடுவது மக்களின் உணர்வுகளுக்கு ஊறுவிளாலிங்கும் செயல் என்பதால் ஜனநாயகத்திற்கு உறுயிளையிப்பதை தடுத்திட மாவட்ட தேர்தல் அலுவகம் மற்றும் மாலட்ட நிருவாகம் சட்டபூர்வ நடாபடிக்கைகயா எடுப்பதுடன் இத்தகைய நிகழ்வுகள் ஜனநாயகத்திற்கு எதிரானவை என்பதனை மல்கள் உணரச் செய்ய உரிம நடவடிக்கைகளை மேற்கொள்ளதுடன் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாவணிணம் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையிட்டுள்ளது. முன்னேற்பாடு


மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும். பிரதிநிதிகள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி கிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகளை பூர்தமி செய்யதற்காக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருங்க சே என்பதால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பதவியிடங்கள் அனைத்தும் தேர்தல் மூலம் நிரப்பிட அளையரும் ஒத்துழைப்பு நல்க வோண்டும் மன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆக கேட்டுக்கொள்கின்றது.
Read More

Wednesday, September 8, 2021

Breaking News: தமிழகத்தில் 2 ராஜ்யசபா இடங்களுக்கு அக்.,4ல் தேர்தல்

September 08, 2021 0
Breaking News: தமிழகத்தில் 2 ராஜ்யசபா இடங்களுக்கு அக்.,4ல் தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவைத் இடங்களுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறுகிறது.

அதிமுகவின் கேபி முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர்.
Read More

Post Top Ad

Your Ad Spot