KalviseithiDaily: Part Time Teacher

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Part Time Teacher. Show all posts
Showing posts with label Part Time Teacher. Show all posts

Wednesday, December 28, 2022

12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, பொங்கல் போனஸ் வழங்குக: வேல்முருகன்

December 28, 2022 0
12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, பொங்கல் போனஸ் வழங்குக: வேல்முருகன்

“12,000 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்க; ஊதிய உயர்வு, பொங்கல் போனஸ் வழங்குக” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 11.11.2011 அன்று, தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177-ன் படி வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் என்ற முறையில் பணியமர்த்தப்பட்டனர்.

இந்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மாதம் ரூ.5,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. இவர்கள், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் நிலையில், ரூ.5000 மட்டுமே உயர்த்தப்பட்டு, தற்போது ரூ 10,000 ஊதியமாக பெற்று வருகின்றனர். வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது. அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணியாற்றலாம். ஒரு பள்ளிக்கு ரூ.5,000 வீதம் 4 பள்ளிகளுக்கு மாதம் ரூ.20,000 ஊதியம் ஈட்ட முடியும் என்று அரசு அறிவித்ததால் தான், அவர்கள், பகுதிநேர ஆசிரியர்களாக இப்பணியில் சேர்ந்தனர். ஆனால், பகுதி நேர ஆசிரியர்கள், ஒரு பள்ளியில் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். அதனால் அவர்களுக்கு அதிகபட்சமாகவே ரூ.5000 மட்டும் தான் ஊதியம் கிடைத்தது. அதுதவிர, பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றினாலும், தங்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்யும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். கடந்த 2017 மற்றும் 2019- ஆம் ஆண்டுகளில், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் என அப்போதைய அதிமுக அரசு அறிவித்த போதும், அந்த அறிவிப்பு அறிவிப்பாகவே நின்றுபோனது. இது தொடர்பாக, தங்களை பணி நிரந்தரம் செய்யவும், ஊதிய உயர்வு கோரியும், பகுதி நேர ஆசிரியர்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

எனவே, 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, பகுதி நேர ஆசிரியர்களின் நலன் கருதி, அவர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களின் அனுபவத்தை கருத்தில் கொண்டு, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக, ஊதிய உயர்வு வழங்கு வேண்டும். எதிர் வரும் தமிழர் திருநாளான, தை திருநாளையொட்டி பொங்கல் போனஸ் வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது” என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
Read More

Tuesday, December 27, 2022

பகுதிநேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்ய மாா்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை

December 27, 2022 0
பகுதிநேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்ய மாா்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை

பகுதி நேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை விடுத்த அறிக்கை:

அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உடல்கல்வி, ஓவியம், கணிணி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன் உள்ளிட்ட பாடங்களை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 12 ஆயிரம் பகுதிநேரஆசிரியா்கள் கற்றுக் கொடுத்து வருகின்றனா்.

இவா்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ. 10 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஊதிய உயா்வோ, பணிநிரந்தரமோ வழங்கப்படவில்லை.

இவா்களின் வாழ்வாதாரத்தையும், குடும்பத்தினரையும் பாதுகாக்கும் வகையில் பணிநிரந்தரம் செய்வதுடன் பொங்கல் போனஸ் வழங்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் கே.பாலகிருஷ்ணன்.
Read More

Saturday, December 24, 2022

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்

December 24, 2022 0


பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம்செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசுப் பள்ளிகளில், பத்தாண்டுகளாக உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை உள்ளிட்ட 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்திட பல வருடங்களாக கோரி வருகிறார்கள்.

ஏழை, எளிய, அடித்தட்டு, விளிம்பு நிலையில் இருக்கின்ற பட்டதாரி ஆசிரியர் குடும்பங்கள் வறுமையிலிருந்து விடுபட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை கருணையோடு பரிசீலனை செய்து, பணி நிரந்தரம் செய்து தை திருநாள் பொங்கல் பரிசாக 12 ஆயிரம் குடும்பங்களில் விளக்கேற்றிட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
Read More

Friday, December 16, 2022

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

December 16, 2022 0
பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

பகுதி நேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களான தையல், இசை, கணினி அறிவியல் தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன்கல்வி ஆகியவற்றை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட வேலையில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு மாதம் ரூ.5,000 தொகுப்பு ஊதியம் வழங்கப்படும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார். இவர்களில், கடந்த 10 ஆண்டுகளில் 4 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு, 12 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2014ம் ஆண்டு ரூ.2 ஆயிரமும், 2017ம் ஆண்டு ரூ.700-ம், கடைசியாக 2021ம் ஆண்டு ரூ. 2300-ம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.10ஆயிரம் தொகுப்பூதியத்தோடு அவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 19 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், பகுதி நேர ஆசிரியர்களை தற்போது வரை பணி நிரந்தரமும் செய்யவில்லை, சம்பளத்தையும் உயர்த்தவில்லை.

மேலும் பொங்கல் போனஸ், பண்டிகை முன்பணம் போன்றவை இதுவரை மறுக்கப்பட்டு வருகிறது. 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட, அவர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதால் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More

Friday, November 25, 2022

டிச .7 முதல் பகுதிநேர ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு

November 25, 2022 0
டிச .7 முதல் பகுதிநேர ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு

பள்ளிக் கல்வித் துறையில் பகுதி நேர ஆசிரியா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு, முதல் கட்டமாக வரும் டிச.7-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதுகுறித்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியா்களுக்கு சுயவிருப்பத்தின் அடிப்படையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி பகுதிநேர பயிற்றுநா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு முதல் கட்டமாக டிச.7-ஆம் தேதி இணைய வழியில் நடைபெறவுள்ளது.

இதில் ஓவிய ஆசிரியா்கள் மட்டுமே பங்கேற்க முடியும். தொடா்ந்து உடற்கல்வி, தொழிற்கல்வி பிரிவுகளில் உள்ள பயிற்றுநா்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தனித்தனியாக நடத்தப்படும்.

முதலில் மாவட்டத்துக்குள்ளும், அதன்பின் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கும் இடமாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு நடைபெறும்.

இதில் விருப்பமுள்ள பகுதிநேர ஆசிரியா்கள் தங்கள் விண்ணப்பங்களை நவ.30-ஆம் தேதிக்குள் சாா்ந்த பள்ளி தலைமை ஆசிரியா்கள் வாயிலாக எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய வேண்டும்.

ஒரு பணியிடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால், பணியில் சோ்ந்த நாள், நோய் பாதிப்பு உடையவா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இதுகுறித்த வழிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வை எந்த புகாருக்கும் இடமளிக்காதபடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் நடத்தி முடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுதிநேர ஆசிரியா்கள் பணியில் சோ்ந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட சூழலில், முதல் முறையாக இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Read More

Thursday, June 30, 2022

தற்காலிக ஆசிரியர் நியமனம் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு

June 30, 2022 0
தமிழக அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பிற்கு இடைக்கால தடை

*உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

*ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா தாக்கல் செய்த மனு

Read More

Saturday, April 30, 2022

பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரத்தை வலியுறுத்தி மாபெரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

April 30, 2022 0
பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரத்தை வலியுறுத்தி மாபெரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

கடந்த அ தி மு க ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 2012ல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஓவியம், உடற்கல்வி, தையல், இசை முதலான எட்டுத் துறைகளில் 16,549 பேர் பகுதிநேர ஆசிரியர்களாக ₹5000 ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் வாரம் மூன்று அரை நாட்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும். மேமாதம் பணியும், ஊதியமும் கிடையாது. மேலும் மற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல் எந்த சலுகையும் கிடையாது. நீண்ட இடைவெளிகளில் ₹ 7000,7700 என்ற சிறு ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டு, கடந்த வருடம் முதல் ₹10,000 மட்டுமே பெற்று வருகிறார்கள். இதிலும் வறுமை, மரணம், பணி பாதுகாப்பு இன்மை ஆகிய காரணங்களால் தற்போது 12,100 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்கள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பணி நிரந்தரம் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். கடந்த ஆட்சியில் நிரந்தரம் செய்ய முடியாது என்று மறுத்து வந்தனர். இந்நிலையில், திமுக தனது தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற உறுதி அளித்தது. மிகுந்த நம்பிக்கையுடன் வாக்களித்து வெற்றி பெறச் செய்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று 11 மாதங்களாகியும் ' நிதி நிலையை கருத்தில் கொண்டு படிப்படியாக நிறைவேற்றப்படும்' என்று மட்டுமே கூறி வருகிறது.

தற்பொழுதும் ஆளும் கட்சியை ஆதரித்து பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், இவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல் பணிக் குறிப்பேடு, கொடை ஊதியம், பணி மாறுதல், விடுப்பு மற்றும் மகப்பேறு விடுப்பு, தேர்தல் பணி போன்ற அனைத்துச் சலுகைகளும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. 2022ல் மே மாதம் பள்ளி இருந்தும் ஊதியம் கிடையாது பணியும் கிடையாது என்று அறிவித்துள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்ற மானியக் கோரிக்கை விவாதத்திலும் இது பற்றி எதுவுமே கூறப்படாதது பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர் புறக்கணிப்பினால் அனைவரும் மிகுந்த மனநலப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, பகுதிநேர ஆசிரியர்கள் தங்கள் வாழ்வாதார உரிமையை மீட்க வரும் 05.05.2022 வியாழன் டிபிஐ வளாகம் சென்னையில் தமிழகம் முழுவதிலுமிருந்து பெருந்திரளாகக் கூடி உச்சகட்டப் போராட்டமான மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையிலாவது தமிழக அரசு கவனத்துடன் பரிசீலித்து அறிவிப்பு வெளியிட்டு பணி நிரந்தரம் செய்யுமா? என்று மிகுந்த ஏக்கத்துடன் வறுமையில் வாடும் பகுதிநேர ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.

விடியல் அரசினால் விடியுமா?பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்க்கை...

பொன். சங்கர் செய்தித் தொடர்பாளர், திருப்பூர்.
Read More

Post Top Ad

Your Ad Spot