KalviseithiDaily: Arts and science colleges

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Arts and science colleges. Show all posts
Showing posts with label Arts and science colleges. Show all posts

Saturday, January 14, 2023

அரசு கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் விரைவில் கல்லூரி: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

January 14, 2023 0
அரசு கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் விரைவில் கல்லூரி: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் விரைவில் கல்லூரிகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்க்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி கூறினாா். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் தொடங்கியதும், தங்கள் தொகுதிகளில் அரசு கல்லூரிகள் இல்லாதது குறித்து பேசினார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர் கிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று அரசு கலைக் கல்லூரி இருக்கிறது. கருணாநிதி பெயரில் ஒன்றும் அண்ணா பெயரில் ஒன்றும் வந்தவாசி பகுதியில் ஒரு கல்லூரியும் உள்ளது. செங்கம் தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லை.

செங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்டு கடந்த ஆண்டு மட்டும் 12 ஆம் வகுப்பில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் சுமார் 5 ஆயிரத்திற்கு மேலும் தனியார் பள்ளியில் படித்தவர்கள் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். இதனால் செங்கம் தொகுதிக்கு அரசு கல்லூரி வேண்டும் என்றார்.

இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்தார்.

அப்போது, பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் தொகுதிக்கு அரசு கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு கலைக் கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் நிதிநிலைக்கேற்ப ஆய்வு செய்து அரசு கலைக் கல்லூரிகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். திமுக அரசு அமைந்த பிறகு தமிழ்நாட்டில் இதுவரை 31 அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை 8 தொகுகளில் உள்ளன. அங்கு மட்டும் 3 கலைக்கல்லூரிகள் உள்ளன. மாணவர் சேர்க்கை குறைவாகத்தான் உள்ளது. பேரவைத் தலைவர் கூட ஒரு கல்லூரி கேட்டுள்ளார்.

எந்தக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு வாய்ப்பில்லாமல் உள்ளதோ, அங்கு கல்லூரிகளை தொடங்குவதற்கு அரசு நவடிக்கை எடுக்கப்படும்.

சுயநிதி கல்லூரிகளை விட அரசு கலைக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கே மாணவர்கள் அதிகயளவில் விருப்பம் காட்டி வருவதாக அமைச்சர் பொன்முடி கூறினார்.
Read More

Tuesday, November 1, 2022

விதிகளை மீறும் உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் திரும்ப பெறப்படும்: யுஜிசி கடும் எச்சரிக்கை

November 01, 2022 0
விதிகளை மீறும் உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் திரும்ப பெறப்படும்: யுஜிசி கடும் எச்சரிக்கை

கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் விலகினால் கட்டணம் மற்றும் சான்றிதழ்களை அவர்களுக்கு வழங்க வேண்டும்: யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. விதிகளை மீறும் உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் திரும்ப பெறப்படும், உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதி பெரும் அந்தஸ்த்தை இழக்க நேரிடும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Read More

Wednesday, August 3, 2022

அரசு கல்லூரிகளில் தரவரிசை பட்டியல் வெளியீடு

August 03, 2022 0
அரசு கல்லூரிகளில் தரவரிசை பட்டியல் வெளியீடு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக உயர்கல்வி துறை உத்தரவுப்படி, பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், தங்களின் இணையதளத்தில், தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளன. இணையதள வசதியில்லாத கல்லுாரிகள், தங்கள் அறிவிப்பு பலகையில், தரவரிசை பட்டியலை ஒட்டியுள்ளன.சென்னை மாநில கல்லுாரி, பாரதி மகளிர் கல்லுாரி உட்பட, சில அரசு கலைக் கல்லுாரிகள் நேற்று வரை தரவரிசை பட்டியலை, இணையதளத்தில் வெளியிடவில்லை. சென்னையில் உள்ள ராணிமேரி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில், 24 வகையான இளநிலை படிப்புகளுக்கு, 2,000 இடங்கள் உள்ளன.

ஆனால், தரவரிசை பட்டியலில் 46 ஆயிரம் பேர் இடம் பிடித்துஉள்ளனர்.பி.ஏ., தமிழில் சேர, 3,121 பேர்; ஆங்கிலத்துக்கு, 2,649 பேர்; மேம்பட்ட தமிழுக்கு 36 பேர்; மேம்பட்ட ஆங்கிலத்துக்கு நான்கு பேர் மட்டும் விண்ணப்பித்துள்ளனர்.கார்பரேட் செக்ரட்ரிஷிப் சேர, 3,175 பேர்; கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லாத மற்ற கணினிசார் பாடப் பிரிவுகளில் சேர, 6,571 பேர் விண்ணப்பித்துள்ளனர். வேதியியல் படிக்க, 2,516 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இட ஒதுக்கீடு

அனைத்து கல்லுாரிகளிலும் விண்ணப்பித்த மாணவ - மாணவியருக்கு, அவர்களின் பிளஸ் 2 மதிப்பெண்ணில், 'கட் ஆப்' மற்றும் தரவரிசையின்படி, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. இதில், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும் என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.
Read More

Wednesday, July 6, 2022

தமிழ்நாட்டில் 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்

July 06, 2022 0
தமிழகத்தில் 20 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை காணொலியில் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழகத்தில் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தவாறு 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

கல்லூரிகள், பல்கலை.களில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகளை முதல்வர் திறந்து வைத்தார்.

ஆய்வகங்கள், தொழில் முனைவோர் மையங்கள், விடுதிகளை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ரூ.152 கோடியே 1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்களும் திறக்கப்பட்டது.
Read More

Post Top Ad

Your Ad Spot