அரசு கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் விரைவில் கல்லூரி: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

அரசு கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் விரைவில் கல்லூரி: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் விரைவில் கல்லூரிகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்க்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி கூறினாா். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் தொடங்கியதும், தங்கள் தொகுதிகளில் அரசு கல்லூரிகள் இல்லாதது குறித்து பேசினார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர் கிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று அரசு கலைக் கல்லூரி இருக்கிறது. கருணாநிதி பெயரில் ஒன்றும் அண்ணா பெயரில் ஒன்றும் வந்தவாசி பகுதியில் ஒரு கல்லூரியும் உள்ளது. செங்கம் தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லை.

செங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்டு கடந்த ஆண்டு மட்டும் 12 ஆம் வகுப்பில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் சுமார் 5 ஆயிரத்திற்கு மேலும் தனியார் பள்ளியில் படித்தவர்கள் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். இதனால் செங்கம் தொகுதிக்கு அரசு கல்லூரி வேண்டும் என்றார்.

இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்தார்.

அப்போது, பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் தொகுதிக்கு அரசு கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு கலைக் கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் நிதிநிலைக்கேற்ப ஆய்வு செய்து அரசு கலைக் கல்லூரிகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். திமுக அரசு அமைந்த பிறகு தமிழ்நாட்டில் இதுவரை 31 அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை 8 தொகுகளில் உள்ளன. அங்கு மட்டும் 3 கலைக்கல்லூரிகள் உள்ளன. மாணவர் சேர்க்கை குறைவாகத்தான் உள்ளது. பேரவைத் தலைவர் கூட ஒரு கல்லூரி கேட்டுள்ளார்.

எந்தக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு வாய்ப்பில்லாமல் உள்ளதோ, அங்கு கல்லூரிகளை தொடங்குவதற்கு அரசு நவடிக்கை எடுக்கப்படும்.

சுயநிதி கல்லூரிகளை விட அரசு கலைக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கே மாணவர்கள் அதிகயளவில் விருப்பம் காட்டி வருவதாக அமைச்சர் பொன்முடி கூறினார்.
Post a Comment (0)
Previous Post Next Post