KalviseithiDaily: Colleges

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Colleges. Show all posts
Showing posts with label Colleges. Show all posts

Tuesday, November 22, 2022

கல்லூரிகளில் புதிதாக பயிற்சி பேராசிரியர் பணி: யுஜிசி அனுமதி

November 22, 2022 0
கல்லூரிகளில் புதிதாக பயிற்சி பேராசிரியர் பணி: யுஜிசி அனுமதி

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிற்சி பேராசிரியர் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

உயர்கல்வி நிறுவனங்களில் கல்விசார் துறைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்த நிபுணர்களை பயிற்றுநர்களாக நியமிக்க வசதியாக ‘பயிற்சி பேராசிரியர்’ (Professor of Practice) என்ற புதிய பணியிடம் உருவாக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி பேராசிரியர்களை நியமிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி பயிற்சி பேராசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு பல்துறை கல்வியை கற்று தரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More

Wednesday, November 16, 2022

பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

November 16, 2022 0
பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

திண்டுக்கல் மாவட்டம் பழநி திருக்கோயிலுக்குச் சொந்தமான பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 2 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக இன்று (நவ.16) தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.16) முகாம் அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 2 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை மூலம் திருக்கோயில்களின் மேம்பாட்டிற்காக 250-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், திருக்கோயில்களில் திருப்பணிகள், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகள் பக்தர்களின் பயன்பாட்டிற்காக ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2022-23 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், "திண்டுக்கல் மாவட்டம், பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கட்டணமில்லா காலை சிற்றுண்டி வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அருள்மிகு பழநியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தொடக்கப்பள்ளி ஆகிய 2 பள்ளிகள் மற்றும் பழநி, அருள்மிகு பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, அருள்மிகு பழநியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, சின்னக்கலையம்புத்தூர், அருள்மிகு பழநியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, ஒட்டன்சத்திரம், அருள்மிகு பழநியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் பயிலும் 4000 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

இப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தொலைவில் இருந்து கல்வி பயில வருகை தருவதாலும், அவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் காலை சிற்றுண்டியாக ஒவ்வொரு நாளும் வெண்பொங்கல் மற்றும் இட்லி (அல்லது) ரவா உப்புமா மற்றும் இட்லி (அல்லது) கிச்சடி மற்றும் இட்லி ஆகியவற்றுடன் சட்னி, சாம்பார் சுழற்சி முறையில் வழங்கப்படும். இதற்கான செலவினம் திருக்கோயிலின் நிதியிலிந்து செலவிடப்படும்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி. சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் இரா.கண்ணன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Monday, September 26, 2022

பி.எட்., கல்லுாரிகளில் 2,040 இடங்களில் சேர்க்கை - Admission to 2,040 seats in B.Ed., colleges

September 26, 2022 0
பி.எட்., கல்லுாரிகளில் 2,040 இடங்களில் சேர்க்கை - Admission to 2,040 seats in B.Ed., colleges

The Higher Education Department has sanctioned 2,040 seats in government and government-aided Ph.D. colleges.

In Tamil Nadu seven government colleges and 14 government aided colleges, B.Ed., admission counseling application registration started yesterday. It has been notified that the graduates have to upload the details online at tnga saedu.in/. In this case, the higher education department has given permission to conduct Ph.D. Also, permission has been given to start admissions in private colleges.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட்., கல்லுாரிகளில், 2,040 இடங்களில் மாணவர்களை சேர்க்க, உயர் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும் 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், பி.எட்., சேர்க்கைக்கான கவுன்சிலிங்குக்கான விண்ணப்ப பதிவு, நேற்று முன்தினம் துவங்கியது. பட்டதாரிகள், tnga saedu.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விபரங்களை பதிவேற்ற வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு கல்லுாரிகளில், 900 இடங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 1,140 இடங்களில், பி.எட்., சேர்க்கை நடத்த, உயர் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. மேலும், தனியார் கல்லுாரிகளிலும் சேர்க்கையை துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Read More

Wednesday, September 21, 2022

B.E - Deadline to join colleges by 22nd Sep - பி.இ. சோ்க்கை கலந்தாய்வு - செப்.22-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர அவகாசம்

September 21, 2022 0
பி.இ. சோ்க்கை கலந்தாய்வின் முதல் சுற்றில் இடங்களைத் தோ்வு செய்த மாணவா்கள் செப்.22-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 10-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடந்து முடிந்தது.

14,524 போ் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு கொடுக்கப்பட்டது.

முதலில் விருப்ப இடங்களுக்கான கல்லூரிகள் தோ்வும், அதனைத் தொடா்ந்து உத்தேச ஒதுக்கீட்டு இடங்கள் உறுதி செய்யப்பட்டு உத்தேச ஒதுக்கீடும் வழங்கப்பட்டன. 15-ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீட்டு கடிதம் மாணவா்களுக்கு இணையவழியில் வழங்கப்பட்டது.

கல்லூரிகளை இறுதி செய்து வழங்கப்பட்ட இந்த கடிதத்தை 7 வேலை நாள்களுக்குள் கல்லூரிக்கு கொண்டு சென்று வழங்கி சேர வேண்டும் என்ற புதிய நடைமுறை நிகழ் கல்வியாண்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

கலந்தாய்வில் உறுதி செய்யப்பட்ட இடங்களில் மாணவா்கள் கடைசி வரை சேராமல் போவதால் அண்ணா பல்கலை. வளாக கல்லூரிகள் உள்பட பல கல்லூரிகளில் இடங்கள் காலியாகக் கிடந்தன.

இதனால், அந்த இடங்களில் மற்ற மாணவா்கள் சேர முடியாமல் போனது.

இதனைத் தவிா்க்க கல்லூரிகளை தெரிவு செய்து இறுதி ஒதுக்கீடு கடிதம் பெற்ற பிறகு 7 நாள்களுக்குள் தாங்கள் விரும்பிய கல்லூரிகளில் பணம் செலுத்தி சோ்ந்து விட வேண்டும்.

அதன் பிறகு சேருவதற்கு வாய்ப்பு இல்லை. அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு அடுத்து வருகின்ற கலந்தாய்வில் சோ்க்கப்படும்.

அந்த வகையில் முதல் சுற்றில் இடம் பெற்ற மாணவா்கள் 22-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேருவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
Read More

Friday, July 8, 2022

481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

July 08, 2022 0
481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் உள்ள 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழம் வெளியிட்டுள்ளது.

இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாக பொறியியல், குரோம்பேட்டை பொறியியல் கல்லூரிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பக் கூடிய கல்லூரிகள் என்ற அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை பார்த்து கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Read More

Thursday, June 30, 2022

அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை இதுவரை 2,33,345 பேர் விண்ணப்பம் - கல்லூரிக் கல்வி இயக்ககம்

June 30, 2022 0
அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை இதுவரை 2,33,345 பேர் விண்ணப்பம் - கல்லூரிக் கல்வி இயக்ககம்

அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை - மாணவர்கள் ஆர்வம்
தமிழ்நாட்டில் உள்ள 163 அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளில் இதுவரை 2,33,345 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்துள்ளனர்;

2,04,761 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர்

- கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு
Read More

Saturday, June 25, 2022

கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: அரசுக்கு மாா்க்சிஸ்ட் கோரிக்கை

June 25, 2022 0
கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கை காலம் மாறுபாடு இல்லாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவியா் பள்ளிக்கல்வி முடித்து உயா்கல்விக்காக கல்லூரிகளில் சோ்ந்திட விண்ணப்பித்து வருகின்றனா். மத்திய பள்ளிக் கல்வித்துறை வாரியத்தின் பிளஸ் 2 வகுப்பு தோ்வு முடிவுகள் ஜூலை 4 அல்லது 5 ஆம் தேதிகளில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. உயா்கல்வித்துறை அமைச்சா் பொன்முடி, சிபிஎஸ்இ பிளஸ் 2 வகுப்பு தோ்வு முடிவுகள் வந்த பின்னா் 5 நாள்கள் கழித்தே அனைத்து கல்லூரிகளும் தங்கள் மாணவா் சோ்க்கையை முடிக்க வேண்டும் என கூறியதை கவனத்தில் கொள்ளாமல் சில கல்லூரிகள் மாணவா் சோ்க்கையை தொடா்வதும், சில கல்லூரிகள் மாணவா் சோ்க்கை முடிந்துவிட்டது என அறிவிப்பதும் ஏற்கதக்கதல்ல. சிபிஎஸ்இ மாணவா்களும், அவா்தம் பெற்றோா்களும் மிகவும் பதற்றத்திலும், அச்சத்திலும் இருக்கிறாா்கள். மேலும், தோ்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை முடிந்துவிட்டால், தங்களது எதிா்காலம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் சிபிஎஸ்இ மாணவா்கள் உள்ளனா். எனவே, தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளும் மாணவா்களின் எதிா்கால நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ மாணவா்கள், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வாரிய மாணவா்கள், மறு மதிப்பீடு செய்ய கோரும் மாணவா்கள், மறு தோ்வு எழுதி தோ்வு முடிவுகள் வரப்பெற்ற மாணவா்கள் ஆகியோரது விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் அல்லது விண்ணப்பப் படிவம் மூலம் வரப்பெற்ற பின்னரே, தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி கல்லூரிகள் மாணவா் சோ்க்கையை நடத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கூறியுள்ளாா் கே.பாலகிருஷ்ணன்.
Read More

Monday, May 23, 2022

12ம் வகுப்புத் தேர்வு முடிவதற்குள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகள் தீவிரம்

May 23, 2022 0
12ம் வகுப்புத் தேர்வு முடிவதற்குள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. பல முன்னணி கலை அறிவியல் கல்லூரிகள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம் என அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்குனரகம் அட்டவணையை வெளியிடும் முன்பே தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
Read More

Sunday, May 22, 2022

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு - புதிய கட்டண விகிதம் வெளியீடு

May 22, 2022 0
AICTE announces new fee hike for engineering courses Fees for B.E, B.Tech and B.Arch courses at technical institutes across the country have been increased. The minimum fee for a semester is fixed at Rs.79,600. The maximum is set at Rs 1,89,800.

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்தப்பட்டுள்ளது புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE. நாடு முழுவது உள்ள தொழிநுட்ப கல்வி நிறுவனங்களில் B.E, B.Tech, B.Arch படிப்புகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.1,89,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech., B.Arch. ஆகிய படிப்புகளுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில்யில்; B.E., B.Tech., B.Arch., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சரமாக ரூ.1,89,800 ஆக நிர்ணயம் டிப்ளமோ படிப்புகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு ரூ.67,900, அதிகபட்சமாக ரூ.1,40,900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. M.E., M.Tech., M.Arch., படிக்க ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.1,41,200, அதிகபட்சமாக ரூ.3,04,000 என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

3 ஆண்டு MCA படிப்புக்கு குறைந்தபட்சமாக ₨88,500, அதிகபட்சமாக ₨1,94,100ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டு MBA படிப்புக்கு குறைந்தபட்சமாக ₨85,000, அதிகபட்சமாக ₨1,95,200ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர்களுக்கு மாதம் ரூ.1,37,189, பேராசிரியர்களுக்கு ரூ.2,60,379 என ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதை காரணம் காட்டி கட்டணத்தை குறைக்க கூடாது எனவும், மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பின், கல்வித் தரத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும் என்றும் ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.
Read More

Wednesday, April 27, 2022

பெண் புள்ளிங்கோ..... மாணவிகள் 10 பேர், 10 நாள் சஸ்பெண்ட்: முதல்வர் நடவடிக்கை

April 27, 2022 0
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வடசென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள அரசு கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரி அமைந்துள்ளது. அந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள், கல்லூரி முடித்துவிட்டு பேருந்து நிலையத்துக்கு சென்றுள்ளனர்.

அப்போது இரு தரப்பு மாணவிகளுக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டு குடுமிச்சண்டையாக மாறியது. சண்டையில் ஈடுபட்ட மாணவிகளை சுற்றி இருந்த சக கல்லூரி மாணவ, மாணவிகள் விலக்கி விட்டுள்ளனர். இந்த சண்டை கல்லூரி வளாகத்தினுள் ஏற்பட்ட வாய்தகராறு என விசாரணையில் தெரிவிவந்துள்ளது. மேலும் வாய்தகராறு பேருந்து நிறுத்தத்தில் குடுமி சண்டையாக மாறியதும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்த்துறையினர், மாணவிகளின் எதிர்காலம் குறித்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இதனால் புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிது.

இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய பி.ஏ. முதலாமாண்டு மாணவிகள் 10 பேரை, 10 நாள் சஸ்பெண்ட் செய்து அரசு கல்லூரி முதல்வர் சுடர்கொடி உத்தரவிட்டார்.
Read More

அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி

April 27, 2022 0
அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய கல்லூரிகள், பாடப்பிரிவுகளை தோற்றுவிக்க கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தல்: அமைச்சர் பொன்முடி தகவல்

Minister of Higher Education Ponmudi, in reply to a question raised by the legislators during Questions and Answers in the Legislative Assembly, said: “Lack of funds is a major problem in improving infrastructure facilities in government colleges across the state and creating new colleges and new courses.

However, the Chief Minister has started many new colleges and new courses in the current academic year and the coming academic year. A request has been made to the Finance Ministry and the Chief Minister to allocate additional funds for infrastructure facilities, new colleges and courses in the coming years. Surely all the demands of the legislators will be met gradually. A letter has been written to the UGC to approve distance education courses offered by Annamalai University. ” கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தல்

சட்டப்பேரவையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது: மாநிலம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், புதிய கல்லூரிகள், புதிய பாடப்பிரிவுகளை உருவாக்குவதற்கும் நிதிப்பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக இருக்கிறது.

அமைச்சர் பொன்முடி தகவல்

இருப்பினும் நடப்பு கல்வியாண்டிலும், வரும் கல்வியாண்டிலும் பல புதிய கல்லூரிகளையும், புதிய படிப்புகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார். வரும் ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகள், புதிய கல்லூரிகள், பாடப்பிரிவுகளுக்கு கூடுதலாக நிதியை ஒதுக்கித்தர வேண்டி நிதியமைச்சகத்திடமும், முதலமைச்சரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூரக் கல்வி படிப்புகளை அங்கீகரிக்குமாறு யூஜிசிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது” என்றார்.
Read More

அரசு சட்டக்கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு

April 27, 2022 0
Law Minister Raghupathi has said that postgraduate studies will be started in government law colleges. He said a new law center would be set up at the Tamil Nadu National Law University in Trichy. District and Sessions Court will be set up in Kallakurichi. Udagai noted that a primary criminal arbitration court would be set up alone.

அரசு சட்டக்கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு தொடங்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், திருச்சியில் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் புதிய சட்ட மையம் நிறுவப்படும். கள்ளக்குறிச்சியில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் அமைக்கப்படும். உதகையில் தனியாக ஒரு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
Read More

Monday, April 11, 2022

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணாக்கர் சேர்க்கை (Lateral Entry admission in Anna University Department Colleges)

April 11, 2022 0
அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணாக்கர் சேர்க்கை
[Lateral Entry admission in Anna University Department Colleges) பட்டயப்படிப்பு (Diploma) முடித்த மாணாக்கர்கள் நேரடியாக பொறியியல் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டில் சேர்க்கை பெறுகிறார்கள். இந்த கல்வியாண்டு முதல், அண்ணா பல்கலைக்கழக CEG, Guindy. MIT. Chromepet மற்றும் ACTech, Guindy கல்லூரிகளிலும் பொறியியல் நேரடி இரண்டாமாண்டு மாணாக்கர் சேர்க்கை அறிமுகப்படுத்தப்படும்.
Read More

Saturday, April 9, 2022

சட்டசபை கூட்டத் தொடரால் கல்லுாரிகளுக்கு விடுப்பு இல்லை

April 09, 2022 0
சட்டசபை கூட்டத் தொடர் முடியும் வரை அரசு மற்றும் உதவி பெறும் கல்லுாரிகள், அலுவலகங்கள் செயல்பட கல்லுாரி கல்வி இயக்குனர் பூரணசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபை கூட்டத் தொடர் ஏப்., 6 முதல் மே 10 வரை துறைகள் வாரியாக நடக்கிறது. அனைத்து மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் அலுவலகங்கள், அரசு, உதவிபெறும் கல்லுாரி முதல்வர்கள், ஆசிரியர், அலுவல பணியாளர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும்.

இன்று (ஏப்.,9) வழக்கம் போல் அலுவலகங்கள் செயல்படும். ஏப்., 11ல் உயர்கல்வி துறை மீதான விவாதம் நடக்கிறது.

தேவைப்படும் தகவல்களை தாமதமின்றி அனுப்பி வைக்க மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Read More

கல்லூரி இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை!

April 09, 2022 0
''கல்லுாரி இல்லாத தொகுதிகளில், கல்லுாரி துவக்க முன்னுரிமை அளிக்கப்படும்,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க., - கிருஷ்ணசாமி: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதியில், அரசு கலைக் கல்லுாரி எதுவும் இல்லை. ஆலந்துாரில் இருந்து காஞ்சிபுரம் வரை, எந்த கலைக் கல்லுாரியும் இல்லை. எனவே, பூந்தமல்லியில் ஒரு கலைக் கல்லுாரி அமைக்க வேண்டும்.

அமைச்சர் பொன்முடி:

பூந்தமல்லி தொகுதி அமைந்துள்ள, திருவள்ளூர் மாவட்டத்தில், மூன்று அரசு கலை அறிவியல் கல்லுாரி, ஒரு அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லுாரி, 33 சுயநிதி கலை அறிவியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன.

புதிய கல்லுாரி துவங்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு கல்லுாரி கூட இல்லாத தொகுதிகள் நிறைய உள்ளன. ஏராளமானோர் கல்லுாரி கேட்டுள்ளனர். சபாநாயகரும் கேட்டுள்ளார். கல்லுாரி இல்லாத தொகுதிகளில், கல்லுாரி துவக்க முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
Read More

Thursday, March 24, 2022

காமராஜர் பெயரில் ரூ.1000 கோடி செலவில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்

March 24, 2022 0
காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் கூட்டதொடர் வரும் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதையடுத்து சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி இன்று இறுதி நாளாக நடைபெற்றது. இந்நிலையில் சட்டபேரவையில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மே மாதத்திற்குள் அறிக்கையை எதிர்பார்க்கிறோம். சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் கல்லூரி கட்டிடங்கள் கட்டப்படும். கோவை மெட்ரோ ரயிலுக்கு விரிவான திட்ட அறிக்கை முடிவாகிவிட்டது. பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் நிதி பெறுவதற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 2022 -23 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 3050 கோடி ரூபாய் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Read More

Monday, January 10, 2022

தமிழ்நாட்டில்11 மருத்துவக் கல்லூரிகள், 12ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!!

January 10, 2022 0
தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 12 அன்று பிற்பகல் 4 மணிக்குத் தொடங்கிவைக்கவுள்ளார். தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் ரூ.4,000 கோடி மதிப்பீட்டு செலவில் கட்டப்பட்டுள்ளன. இதில் ரூ.2,145 கோடி மத்திய அரசாலும் எஞ்சியத் தொகை தமிழ்நாடு அரசாலும் வழங்கப்பட்டது.

விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மருத்துவக் கல்வியைக் கட்டுப்படியானதாக அதிகரித்தல், சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் பிரதமரின் தொடர்ச்சியான முயற்சி அடிப்படையில் இந்த மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 1,450 இடங்களைக் கொண்ட புதிய மருத்துவக் கல்லூரிகள், ‘தற்போதுள்ள மாவட்ட / அவசர முதலுதவி மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கும்’ மத்திய அரசு ஆதரவிலான திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன. அரசு அல்லது தனியார் மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன.

இந்தியப் பாரம்பரியம், செம்மொழிகள் ஆகியவற்றை மேம்படுத்தி பாதுகாக்கும் பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில் சென்னையில், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முழுமையான நிதியுதவியைக் கொண்ட புதிய வளாகம் ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதுவரை வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம், தற்போது மூன்று தளங்களைக் கொண்ட புதிய வளாகத்தில் செயல்படும். விசாலமான நூலகம், மின்னணு நூலகம், கருத்தரங்கக் கூடங்கள், பலவகை ஊடக அரங்கு, போன்றவற்றை புதிய வளாகம் கொண்டுள்ளது. மத்திய கல்வித்துறையின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம், ஆராய்ச்சி செயல்பாடுகள் மூலம், செம்மொழித் தமிழ் மேம்பாட்டிற்குப் பங்களிப்பு செய்கிறது. இதன் மூலம் தமிழ் மொழியின் தொன்மையும், தனித்துவமும் நிறுவப்படுகிறது. இதன் நூலகத்தில் 45,000-க்கும் கூடுதலாக தொன்மையான தமிழ்நூல்கள், சேகரிக்கப்பட்டுள்ளன. செம்மொழித் தமிழை மேம்படுத்தவும், அதன் மாணவர்களுக்கு உதவவும் இந்த நிறுவனம் கருத்தரங்குகள் நடத்துதல், பயிற்சித் திட்டங்கள், படிப்பு உதவித்தொகை வழங்குதல் போன்ற கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. ‘திருக்குறளை’ பல்வேறு இந்திய மொழிகளிலும், 100 வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. செம்மொழித் தமிழை உலகம் முழுவதும் பரப்புவதற்கு உகந்த வகையில், பணியாற்றும் சூழலைக் கொண்டதாக இந்தப் புதிய வளாகம் இருக்கும்.
Read More

Wednesday, December 22, 2021

தமிழகத்தில் 2 தனியார் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி

December 22, 2021 0
தமிழகத்தில் திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாமக்கல் என மொத்த 11 இடங்களில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து ஜனவரியில் பிரதமர் மோடி அதனை திறப்பதற்காக தமிழகம் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் புதியதாக இரண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதில் திருவண்ணாமலையில் அருணை மருத்துவ கல்லூரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் விவேகானந்தா மருத்துவக் கல்லூரி ஆகியவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடத்தவும் தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகிறது. மேலும் 18 தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த புதிய உத்தரவின் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கை 20 ஆகவும், மொத்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 57 ஆகவும் அதிகரித்துள்ளது.
Read More

Wednesday, December 15, 2021

உயர் கல்வி நிறுவனங்களில் ஆப்லைன், ஆன்லைன் மற்றும் கலப்பு முறையில் தேர்வு நடத்தலாம் - UGC

December 15, 2021 0
கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக குறையாத நிலையில், கல்வி நிறுவனங்களில் சில வழிகாட்டு நெறிமு றைகளுடன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின் றன. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பல்கலைக்கழக மானியக் குழு ஆப்லைன் முறை யில் மட்டுமே தேர்வை நடத்த வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்ட தாக தகவல்கள் வந்தன.

ஆனால், அது பல்க லைக்கழக மானியக்கு முவால் வெளியிடப்பட வில்லை என்று அது திட்டவட்டமாக தெரி வித்து இருக்கிறது. மேலும் தொடர்ந்து வகுப்புகள், தேர்வுகளை எவ்வாறு நடத்தலாம் என்பது பற் றிய வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானி யக்குழு அறிவித்து இருக் கிறது. அதில் கூறியிருப்பதா வது:

கொரோனாதொற்று உருவானதில் இருந்து உயர்கல்வி நிறுவனங்க ளின் கல்வி செயல்பா டுகளை பல்கலைக்கழக மேலும் சுகாதாரம் மற் றும் குடும்ப நல அமைச்ச கம்,பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்க ளில் கொரோனா வழி காட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத் துவதை உறுதி செய்ய கோரப்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு, வளாகங்களை திறப்பது பற்றி உயர்கல்வி நிறுவனங்கள் தகுந்த முடிவை எடுக்கலாம். மேலும் பல்கலைக்க ழக மானியக்குழு வழி காட்டுதல்களின் படி, ஆப்லைன், ஆன்லைன், கலப்பு முறையில் வகுப்பு கள் மற்றும் தேர்வுகளை நடத்தலாம். இதுதவிர கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு மத் திய, மாநில அரசுகளால் அவ்வப்போது வழங் கப்படும் நெறிமுறைகள். வழிகாட்டுதல்கள் வழிமு றைகளை மற்றும் ஆலோச னைகளையும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
Read More

பள்ளி, கல்லூரி விழாக்களில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள்: தமிழக அரசு உத்தரவு

December 15, 2021 0
'பள்ளி, கல்லுாரி விழாக் களில், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்' என, அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக, கலை பண்பாட்டு இயக்ககம் கூடுதல் பொறுப்பு ஆணையர் சந்தீப் நந்துாரி, செய்தித் துறை இயக்குனருக்கு அனுப்பி உள்ள கடிதம்: தமிழகத்தில் உள்ள நாட்டுப்புறக் கலை களை இனம் கண்டு, அவற்றை அழியாமல் பாதுகாத்து, நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வை செம்மைப்படுத்தவேண்டும். நாட்டுப்புறக் கலைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல, தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

இதற்கான நடவடிக்கையை, தொழில் மற்றும் வணிகத் துறை ஆணையரகமும், 'எல்காட்' நிறுவனமும் எடுக்க வேண்டும். இது குறித்து தொழில் துறையும், தொழில்நுட்பத் துறையும், உரிய ஆணைகளை வெளியிடவேண்டும். பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலை விழாக்களிலும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, சட்டத் துறை உரிய ஆணைகளை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot