KalviseithiDaily: cuet

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label cuet. Show all posts
Showing posts with label cuet. Show all posts

Thursday, August 4, 2022

CUET இளங்கலைத் தேர்வு ஒத்திவைப்பு - காரணம் என்ன?

August 04, 2022 0
நாடு முழுவதும் 2ஆவது கட்ட CUET இளங்கலைத் தேர்வு இன்று (ஆகஸ்ட் 4) தொடங்கியது. எனினும் கேரளாவில் கன மழை காரணமாகத் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக என்டிஏ அறிவித்துள்ளது

நாடு முழுவதும் 2ஆவது கட்ட CUET இளங்கலைத் தேர்வு இன்று (ஆகஸ்ட் 4) தொடங்கியது. எனினும் கேரளாவில் கன மழை காரணமாகத் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக என்டிஏ அறிவித்துள்ளது.

CUET இளங்கலைப் படிப்புகளுக்கான முதல்கட்டத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில், 2-ம் கட்டத் தேர்வு இன்று தொடங்கியுள்ளது. 5, 6 ஆகிய தேதிகளிலும் தேர்வு தொடர்ந்து நடைபெற உள்ளது. மொத்தம் 6.8 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும். ஜூலை மாதத்தில் தேர்வு

இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்த உள்ளது. ஜூலை மாதத்தில் இந்தத் தேர்வு நடைபெற்று வருகிறது.

குறிப்பாக 15.07.2022, 16.07.2022, 19.07.2022, 20.07.2022 மற்றும் 04.08.2022, 05.08.2022, 06.08.2022, 07.08.2022, 08.08.2022, 10.08.2022 ஆகிய தேதிகளில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு நடைபெற்றது.

2-ம் கட்டத் தேர்வு இன்று தொடங்கிய நிலையில், 5, 6 ஆகிய தேதிகளிலும் CUET இளங்கலைத் தேர்வு நடைபெற உள்ளது. எனினும் கேரள மாநிலத்தில் கன மழை காரணமாகத் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக என்டிஏ அறிவித்துள்ளது. 3 பிரிவுகளாகக் கேள்விகள்

பொது நுழைவுத் தேர்வு கேள்விகள் 3 பிரிவுகளாகக் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் இரண்டு பகுதிகள் இருக்கும். முதல் பகுதி கட்டாய மொழித் தேர்வாக இருக்கும். தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அசாமி, பெங்காலி, பஞ்சாபி, ஒடியா மற்றும் ஆங்கிலம் ஆகிய 13 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மொழி சார்ந்து வாசிப்புத் திறன், சொல்லகராதி சார்ந்த கேள்விகள், அருஞ்சொல், எதிர்ச்சொல்கள் உள்ளிட்டவை சோதிக்கப்படும்.

இரண்டாவது பகுதியில் கூடுதலாக விருப்ப மொழித் தேர்வையும் தேர்வர்கள் எழுதலாம். ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மனி, நேபாளி, பெர்ஷியன், இத்தாலியன், அரபி, சிந்தி, காஷ்மீரி, கொங்கணி, போடோ, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தலி, திபெத்தியன், ஜப்பான், ரஷ்யன், சீனம் ஆகிய 19 மொழிகளில் இந்தத் தேர்வை எழுதலாம்.

2ஆவது பிரிவில் தேர்வர்களின் துறை சார் அறிவு சோதிக்கப்படும். மொத்தமுள்ள 27 துறைகளில் இருந்து தேர்வர்கள் தங்களுக்குப் பிடித்தமான, தேவையான துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு தேர்வர் 6 துறைகள் வரை தேர்வு செய்ய முடியும். பல்கலைக்கழகங்களும் துறைசார் தேர்வுகளை நடத்த முடிவு செய்யலாம்.

3ஆவது பிரிவில், பொதுவான கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், மனத் திறன், கணக்குத் திறன், தர்க்க மற்றும் பகுத்தறியும் திறன் சார்ந்த கேள்விகள் இந்தப் பிரிவில் கேட்கப்படும்.
Read More

Friday, July 22, 2022

Important instructions regarding Corrections for CUET (PG) 2022

July 22, 2022 0
Important instructions regarding Corrections for CUET (PG) 2022

Applications are requested to pay attention to following issues during correction window:

1. Please read the Information Bulletin and the corrigendums issued on 28 May 2022; 03 June 2022; 09 June 2022; 18 June 2022; 20 June 2022; 23 June 2022; 25 June 2022; 07 July 2022 and 16 July 2022.

2. Carefully check eligibility of the courses offered by the universities where the applicant is desirous of taking admission.

3. It will be the sole responsibility of the applicant to check the course, eligibility and university offering the course. 4. University of Hyderabad has withdrawn the course M.Sc. Ocean and Atmospheric Science (PGQP34) as informed vide Corrigendum II dated 3 June, 2022. Students who had already applied prior to the withdrawal are requested to make modifications.

5. JNU has withdrawn the course Development and Labour Studies from (PGQP20) and placed it under a new paper code (PGQP79) as mentioned in Corrigendum III dated 9 June, 2022.

6. BHU has withdrawn the courses Jyotish Phalit and Jyotish Ganit from (PGQP74) and placed it under new paper codes (PGQP80) and (PGQP81) as mentioned in Corrigendum IV.

7. University of Jharkhand has withdrawn course Sanskrit (PGQP14) and Psychology (PGQP46).

8. Delhi Technology University has withdrawn from CUET (PG) 2022 vide Corrigendum V dated 20 June, 2022.

9. Check the revised slotting issued vide Corrigendum V dated 20 June, 2022

CLICK HERE TO DOWNLOAD
Read More

Monday, July 18, 2022

Urgent announcement regarding CUET (UG)-2022 scheduled on 19 July 2022 - reg

July 18, 2022 0
Urgent announcement regarding CUET (UG)-2022 scheduled on 19 July 2022 - reg.

Several queries have been received from candidates regarding change of Centre for their examination scheduled on 19 July 2022.

Candidates are hereby informed that they should go to the Centre mentioned on their Admit Card downloaded from the website https://cuet.samarth.ac.in.

This is for your kind information and urgent attention.

All the best for your examination tomorrow

CLICK HERE TO DOWNLOAD
Read More

Tuesday, July 12, 2022

CUET-UG தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும்- யுஜிசி

July 12, 2022 0
CUET - UG தேர்வு முதற்கட்டமாக ஜூலை 15ம் தேதியிலும், 2ம் கட்டமாக ஆகஸ்ட் 4ம் தேதியிலும் தொடக்கம்;

முதற்கட்டத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படும், 2ம் கட்டத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜூலை 31ம் தேதி வெளியிடப்படும்

- யுஜிசி

CUET-UG க்கான நுழைவு தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என யுஜிசி தெரிவித்துள்ளது.

வரும் கல்வியாண்டில் ( 2022-23 ) இந்தியாவில் உள்ள 42 மத்திய பல்கலைக்கழகங்கள், இணைப்புக் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர CUET – UG நுழைவுத் தேர்வை UGC அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது தேர்வு நடக்கும் தேதியை யுஜிசி அறிவித்துள்ளது. இதையடுத்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், CUET – UG தேர்வு இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெறும். ஜூலை 15-ம் தேதி முதற்கட்ட தேர்வு தொடங்குகிறது. இரண்டாம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 4-ல் தொடங்குகிறது. ஜூலை 15-ம் தேதி தொடங்கும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 4-ல் தொடங்கும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரும் 31-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CUET – UG தேர்வுக்காக மொத்தம் 14.90 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். முதற்கட்டமாக ஜூலை 15-ல் தொடங்கும் தேர்வை 8.10 லட்சம் பேரும், ஆகஸ்ட் 4-ல் தொடங்கும் தேர்வை 6.80 லட்சம் பேரும் எழுதுகின்றனர். CBT முறையில் (ஆன்லைன் முறையில்) தேர்வு நடத்தப்படுவதால் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
Read More

CUET பொது நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

July 12, 2022 0

மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்காக நடத்தப்படும் கியூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.



ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் நிலையில், ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரையிலான தேர்வுகளுக்குரிய ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. 90 பல்கலைக்கழகங்களில் சேருவதற்காக இந்தியாவில் 500 இடங்களிலும், வெளிநாடுகளில் 10 இடங்களிலும் கியூட் தேர்வு நடத்தப்படுகிறது.



இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் நிலையில், இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களை தேர்வு செய்தோருக்கான கியூட் தேர்வு 2-ம் கட்டமாக நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Read More

Saturday, May 14, 2022

கியூட் (CUET) தேர்வால் சேர்க்கை நடைமுறையில் குழப்பம்

May 14, 2022 0
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கை பல்கலைக்கழக நுழைவு தேர்வு மூலம் வழக்கம்போல நடத்தப்படுமா அல்லது கியூட் தேர்வு மூலம் நடத்தப்படுமா என்பதை பல்கலைக்கழக நிர்வாகம் தெளிவுப்படுத்த வேண்டும்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்பு, முதுநிலை, பி.எச்.டி., என மொத்தம் 115க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன. அனைத்து படிப்புகளுக்கும் அகில இந்திய அளவில் பல்கலைக்கழகமே தனியாக நுழைவு தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது.

இந்தாண்டு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள 10 ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்பு களுக்கு மட்டும், மத்திய பல்கலைக்கழகங்களுக் கான கியூட் நுழைவு தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகி றது. வரும் 22ம் தேதிக்குள் https://cuet.samarth.ac.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 105 படிப்பு களுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகம் நுழைவு தேர்வு விரைவில் நடத்தும்; இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்து மாணவ மாணவிகள் நுழைவு தேர்விற்கு தயாராகி வருகின்றனர். இதற்கான பணிகளை முடுக்கிவிட்டு இருந்த பல்கலைக்கழகம் தற்போது மவுனம் காத்து வருகிறது.

இதன் காரணமாக, முதுநிலை படிப்புகளுக்கு நுழைவு தேர்வை புதுச்சேரி பல்கலைக்கழகம் நடத்துமா அல்லது கியூட் தேர்வு நடத்தப்பட்டு சேர்க்கை மேற்கொள்ளப்படுமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.அடுத்தவாரம், 43 மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள முதுநிலை படிப்புகளுக்கான கியூட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. இதில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை படிப்புகளும் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, பல்கலைக்கழகத்தில் 105 முதுநிலை படிப்புகளுக்கு சேர்க்கை எப்படி நடத்தப்படும் என்பதை மாணவர்களின் நலன் கருதி பல்கலைக்கழக நிர்வாகம் முன்கூட்டியே தெளிவுப்படுத்த வேண்டும். இட ஒதுக்கீடு

புதுச்சேரி கல்லுாரிகளில் இல்லாத படிப்புகளில் 25 சதவீத இடங்களை உள்ளூர் மாணவர்களுக்கு வழங்க ஒப்புக் கொண்டு, 1997ம் ஆண்டு முதல் பல்கலைக்கழகம் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த இட ஒதுக்கீடு 22 பாடப்பிரிவுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், 10 ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் கியூட் தேர்வுக்கு சென்று விட்டது. இதில், 3 பாட பிரிவுகளில் புதுச்சேரி மாணவர் களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. கியூட் தேர்வுக்கு சென்றதால், 3 படிப்புகளில் இட ஒதுக்கீடு பறிபோய்விட்டது.

இந்த சூழ்நிலையில், பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை படிப்புகள் கியூட் தேர்வு மூலமாக நிரப்பப்படும் பட்சத்தில், புதுச்சேரி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடருமா என்பதையும் பல்கலைக்கழகம் நிர்வாகம் தெளிவுப்படுத்த வேண்டும்.
Read More

Wednesday, May 11, 2022

CUET தேர்வுக்கு இதுவரை விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

May 11, 2022 0
9,81,406 people have applied for the CUET exam so far!

7,39,027 people have paid the fee.

You can apply till the 15th day of the exam.

- National Examination Agency Notice.

CUET தேர்வுக்கு இதுவரை 9,81,406 பேர் விண்ணப்பம்!

7,39,027 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.

தேர்வுக்கு வரும் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.
Read More

Post Top Ad

Your Ad Spot