KalviseithiDaily: TN CM

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label TN CM. Show all posts
Showing posts with label TN CM. Show all posts

Monday, July 25, 2022

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்... "முதல்வரின் புகைபடம் இல்லை..அதற்கு பதிலாக.."

July 25, 2022 0


தமிழ்நாட்டில் அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் இத்திட்டத்தைத் துவக்கி வைத்த நிலையில், இன்று முதல் மாநிலம் முழுவதும் உள்ள பிற பள்ளிகளிலும், ஏற்கனவே தயார் நிலையில் உள்ள மிதிவண்டிகள், மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக 12ம் வகுப்பு பயிலும் ஆறரை லட்சம் மாணவர்களுக்கு, 323 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மிதிவண்டிகள் ஒப்பந்தம் கோரப்பட்டு வரவழைக்கபட்டுள்ளன.

இதையும் படிக்க | Important instructions regarding Corrections for CUET (PG) 2022 இந்த ஆண்டு அடர் நீல வண்ணத்தில் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. அதேபோல், சைக்கிள்களில் முதல்வர் படத்திற்கு பதிலாக தமிழக அரசின் சின்னம் மற்றும் அதனுடன் மிதிவண்டி இயக்குவதால் ஏற்படும் பயன்கள் குறித்தான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இதனிடையே அடுத்த ஒரு மாத காலத்துக்குள் 11ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கும் மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Read More

Thursday, July 7, 2022

முதல்வர் நிகழ்ச்சிக்கு ஆள் சேர்க்க பள்ளி வாகனம் - தனியார் பள்ளி சங்கங்கள் குற்றச்சாட்டு!

July 07, 2022 0
தனியார் பள்ளி வாகனங்களில், செஸ் விளையாட்டு போட்டிக்கான 'ஸ்டிக்கர்' ஒட்ட, அரசு கட்டாயப்படுத்துவதாக, தனியார் பள்ளி சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

இதுகுறித்து, நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:

செஸ் விளையாட்டு போட்டிக்காக, 'மெகா சைஸில்' தமிழக அரசு உருவாக்கியுள்ள 'லோகோ'வுக்கான 'ஸ்டிக்கர்'களை, பள்ளி பஸ்களின் மூன்று புறமும் ஒட்ட வேண்டும் என, போக்குவரத்து அதிகாரிகள் கட்டாயப் படுத்துகின்றனர். இது, பள்ளி வாகன விதிகளுக்கு முற்றிலும் முரணானது. அதேபோல், கரூரில் முதல்வர் பங்கேற்ற அரசு விழாவுக்கு, ஆட்களை அழைத்து வர, தனியார் பள்ளிகளின் வாகனங்கள், பள்ளிகளின் செலவில் கட்டாயப்படுத்தி இயக்கப்பட்டன.ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க, முதல்வர் கோவைக்கு வரவுள்ளதாகவும், அதற்கும் எரிபொருள் நிரப்பி, பள்ளி வாகனங்களை அனுப்ப வேண்டும் என்றும், போக்குவரத்து அதிகாரிகள் கட்டாயப் படுத்துகின்றனர்.

இதுபோன்று, பொது நிகழ்ச்சிகளுக்கு பள்ளி வாகனங்களை பயன்படுத்துவதால், அதில் மாணவர் அல்லாதவர்கள் எந்த கட்டுப்பாடும் இன்றி பயன்படுத்துவர். அதனால், மாணவர்களுக்கு ஏற்ற வகையில், வாகனங்களை பராமரிக்க முடியாத நிலை ஏற்படும்.எனவே, முதல்வர் தலையிட்டு, பள்ளி வாகனங்களை வேறு பயன்பாட்டுக்கு எடுத்துச் செல்வதை தவிர்க்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். விதிகளை மீறி பள்ளி வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More

Sunday, April 3, 2022

அரசு பள்ளியை முதல்வர் ஸ்டாலின் 9ம் தேதி பார்வையிடுகிறார்

April 03, 2022 0
Read More

Sunday, March 20, 2022

அனைவருக்கும் உயர்கல்வி வழங்க வேண்டும் என்பதே இந்த அரசின் லட்சியம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

March 20, 2022 0
அனைவருக்கும் உயர்கல்வி வழங்க வேண்டும் என்பதே இந்த அரசின் லட்சியம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கையில் பட்டத்தத்துடனும் எதிர்காலம் குறித்த ஏக்கத்ததுடனும் இருப்பவர்களின் ஏக்கங்கள் தீரும், வேலைவாய்ப்பை உருவாக்குவது, அதற்கான தகுதியான நபர்களை உருவாக்குவது என அரசு செயல்பட்டுவருகிறது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Read More

Monday, December 20, 2021

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

December 20, 2021 0
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் அகவிலைப்படி 31 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வரும் ஜனவரியிலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கர்நாடகம், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் உள்பட பல்வேறு மாநில அரசுகள் தங்களது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு எப்போது கிடைக்கும் என தமிழக அரசு ஊழியர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில், ஜனவரி முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14ஆவது மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அரசு ஊழியர்களுக்கு ஏராளமான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளோம். அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தியதும், பதவி உயர்வு பாதிக்கப்பட்டிருந்தால் சரிசெய்யப்படும் எனவும் அறிவித்தது திமுக ஆட்சிக்காலத்தில்தான்.

அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். அதில் நான் உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளேன். அரசுக்கு கடும் நிதி நெருக்கடி இருப்பினும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் என அறிவித்தோம். அதன்படி, 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Read More

Thursday, November 25, 2021

நவம்பர் 26 - இந்திய அரசமைப்புச் சட்ட நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி

November 25, 2021 0
நவம்பர் 26 - இந்திய அரசமைப்புச் சட்ட நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி!
Read More

Saturday, November 13, 2021

முதல்வரின் முகவரி' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை - துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம்

November 13, 2021 0
முதல்வரின் முகவரி' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

பணியாமைப்பு - உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதிர்ப்பு மேலாண்மை அமைப்பு (PGCMS) மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியவற்றை ஒருங்கிவைாக்கப்பட்டு ஓர் துறையாக செயல்படுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

பொது (சிறப்பு:அத்துறை

அ அரணை (நிலக) எண். 944

நாள்: 3.11.2021 ஐப்பசி- 17.

திருவள்ளுவர் ஆண்டு-2052. படிக்கப்பட்டது.

1. அரசாணை (நிலை) எண். 2894, பொறு (பணிகள்-அந்த் துறை. நாள் 05.009.1974.

2. அரசாணை (நிலை) எர்: 27. தகவல் தொழில்நுட்ப (இ1) துறை. நாள் 2209.2020

3. அரசானை (நிலை) எண். 209, பொது (சிறப்பு-அ)த் துறை, நாள் 07.05.2021. 4. அரசாணை (மாலாயம்) எtake. 2014, பொறு (சிறப்பு-)த் துறை, நாள் 12.05.2021.

5. அரசாணை (வாயாயம்) எண். 2152. பொது (சிறப்பு-அ)த் துறை, நாள் 20.05.2021

ஆணை:

பாரிவை 1, 2 மற்றும் 3-ல் கண்ட அரசாணைகளில் உருவாக்கப்பட்ட முதலமைச்சரின் தனிப்பிரிவு முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேகாண்மை அமைப்பு (Integrated and Inclusive Public Grievance CM Helpline Managemt System), and தொகுதியில் முறவமைச்சர் துறை ஆகிய அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு "முதல்வரின் முககக்ஷி' என்ற புதிய துறை உருவாக்கப்படுகிறது.

2 முதலமைச்சர் தனிப்பிரிவின் மாவட்ட வருவாய் நிலையிலுள்ள சிறப்பு அலுவசர் மற்றும் தனிப்பிரியின் கீழ் தற்போதுள்ள பல்வேறு அலுவலக பிரிவு அலுவர்கள் முதல்வரின் முகவரி துறையின் கீழ் செயல்படுவர்.

3. தகலல் தொழில் நுட்பவியல் துறையின் கீழ் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கட்டுபட்டிங் இயங்கி வரும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீசிப்பு மேலாண்மை அமைப்பின் (IPOCMS) ஒரு முதன்மை பொறுக்குறை தீர்வு அலுவலர் Chief Public Grievance Redressal Officer) பதவி 'முதல்வரின் முக" துறை சிறப்பு அலுவலர் பதவியுடன் இணைக்கப்படுகிறது மற்றும் ஆறு பொதுக்குறை தீர்வு மேற்பார்வை அலு (Bupervisory Pubtio Grievance Retresnal Office) இனி "முதல்கரின் முகவி் துறை சிறப்பு அலுவலரின் கட்டுப்பட்டில் செயல்படுவார்கள்.

ஒரு பொதுக்குறை தீர்வு மேற்பார்வை அலுவலர் (SPGRO) பதவி மட்டும் மேம்படுத்தப்பட்டு ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் இயக்குனர் நிலையில் ஓர் அலுவலர் நியமிக்கப்படுவார். அவருடைய நிலைக்கு ஏற்ப அனைத்து சலுகைகள் வழங்கப்படும்.

5. ஆறு பொதுக்குறை தீர்வு மேற்பார்வை அலுவகர் பணியிடங்களுக்கு தேவைப்படும் ஊதியம், அகவிலைப்படி வீட்டு வாடகைப்படி (HRA), மாநகர ஈட்டுப்படி (CCA), இதர படிகள் அனைத்தும் நடைமுறையிலுள்ள ஆணைகளுக்கிணக்கு வழங்கப்படும். இச்ரெலடி பொதுத் துறை வாயிலா சம்பந்தப்பட்ட கணக்குத் தலைப்பு மூலம் மேற்கொள்ளப்படும்.

6. பொதுக்குறை தீர்வு மேற்பாரியை அலுவபர்களுக்கு தேவைப்படும் அனைத்து கட்டமைப்பு வசதிகள். தளவாடங்கள் மற்றும் பிற வாதிகள் தமிழ்நாடு மின் ஆருமை முகமையால் தொடர்ந்து வழங்கப்படும்.

7. நலைமைச் செயலகத்தில், "முதல்வரின் முகவரி* துறைக்கு தேவைப்படும் அனைத்து உதவிகள் வழங்கும் ஒருங்கிலைாப்புத் துறையாக பொது (நிர்வாகம்-4)த் துறை செயல்படும். முதல்கரின் முககரி துறையின் மனுக்களுக்கு தீர்வு காண IPGCMS heipline மாநிலம் முழுவதும் ஒற்றை இணையதளமுகப்பாக (sige portitl} ,

பயன்படுத்தப்படும். இது முதல்வரின் முகவரி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

9. 'IPGCMS helpthe, தகவல் அழைப்பு மையம், 1100 என்ற தொலைபேசி எண், மனுக்கள் தொடர்பாக விசாரிப்பதற்காகவும் தகவங்கள் பெறுவதற்காகவும். மனுக்களை பதிவு செய்வதற்காகவும் மற்றும் இதர பணிகளுக்காகவும், இனி முதல்வரின் முகவரி துறையின் கீழ் இயங்கும். இந்த இணையதளம் தொடர்பான அன்றாட செயய்பாடுகள் குறித்து முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலர் பொதுத் துறை செயலாளருடன் கலந்தாலோசித்து முடிவு செய்வார்.

10. IPGCMS இணையதளமுகப்பு cmhelpline பராமரிப்பு தகவல் அழைப்பு மையம், 1100 என்ற தொலைபேசி, மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து செலவுகளும் பொதுத் துறையால் மேற்கொள்ளப்படும்.

11. பாரிவை 3 மற்றும் 5-ல் படிக்கப்பட்ட ஆணையினைத் தொடர்ந்து உங்கள் தொகுதியில் முறவமைச்சர் துறையின் சிறப்பு அலுவகர். திருமதி ஷில்பா பிரபாகர் சதிம். 6.ஆ.ப. அவர்கள் 'முதல்வரின் முகவரி" துறையின் சிறப்பு:

அலுவலராக நியமிக்கப்படுகிறார்.

(ஆளுநரின் ஆணைப்படி}

வெ. இறையன்பு அரசு தலைமைச் செயலனளர்
Read More

முதல்வரின் குறைதீா்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ’முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கம்

November 13, 2021 0
முதல்வரின் குறைதீா்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ’முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில், முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பு(IIPGCMS), உங்கள் தொகுதியில் முதல்வா் துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்படுகிறது.

முதல்வரின் முகவரி துறையின் மனுக்களுக்குத் தீா்வு காண முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பின் உதவி எண் மாநிலம் முழுவதும் ஒற்றை இணையதள முகப்பாகப் பயன்படுத்தப்படும்.

இது முதல்வரின் முகவரி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும். உங்கள் தொகுதியில் முதல்வா் துறையின் சிறப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதிஷ், முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க கோரி முதல்வருக்கு மனு

November 13, 2021 0
13:இடை நிலை ஆசிரியர்களை, பட்டதாரி ஆசிரியர்க ளாக பதவி உயர்வு வழங்க கோரி தமிழக முதல்வருக்கு, ஈரோடு கலெக்டர் வாயிலாக மனு அளித்தனர்.

இந்திய பள்ளி ஆசி ரியர் கூட்டமைப்பின் மாநில பொருளாளர் பிரகாசம், தமிழ்நாடு டைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமசாமி ஆகியோர் தலைமையில் ஆசிரியர்கள் ஈரோடு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி வாயிலாக தமி ழக முதல்வருக்கு மனு அளித்தனர். அந்த மனு வில் அவர்கள் தெரிவித் துள்ளதாவது: மத்திய அரசின் இடை நிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை, மாநில இடைநிலை ஆசிரி யர்களும் வழங்கிட நடவ டிக்கைஎடுக்கவேண்டும்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சிக ளில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்க ளையும், பட்டதாரி ஆசி ரியர்களாகபதவி உயர்வு வழங்கிட வேண்டும். தமிழக அரசு ஊழியர்க ளுக்கு அகவிலைப்படி உயர்வினை வழங்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை-2020ஐ தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண் டும். ஆசிரியர்களுக்கு உயர்கல்வி கற்றலுக்கான ஊக்கத்தொகையைமீண் டும் அமல்படுத்தி வழங் கிட வேண்டும்.

அரசு பள்ளி மாண வர்களுக்கு மருத்துவம், தொழில்நுட்ப கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5சதவீதம் இட ஒதுக் கீடு வழங்கியதை போல, அரசு உதவி பெறும் பள் ளிகளில் படிக்கும் ஏழை. எளிய கிராமப்பு மாண வர்களின் நலன் கருதி அவர்களுக்கென 2.5சத வீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

அரசு ஊழியர்க ளுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசே ஏற்று. நேரடியாக செயல்படுத் திடவேண்டும். புதிய ஓய் வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித் திருந்தனர்.
Read More

Wednesday, September 8, 2021

பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பைச் சரிசெய்ய புதிய இயக்கம் - முதல்வர் முக ஸ்டாலின் தகவல்!

September 08, 2021 0
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த கல்வியாண்டில் முழுவதுமாக பள்ளிகள் செயல்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு கற்றல் இழப்பீடுகள் ஏற்பட்டுள்ளது. இதற்காக தற்போது பள்ளிகள் முதல்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திறக்கப்பட்டுள்ள போதிலும், முதல் 45 நாட்களுக்கு மாணவர்களுக்கு பாடபுத்தகங்களை தவிர மற்ற இணைப்பு பயிற்சிக்கான வகுப்புகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் செப்டம்பர் 5ம் தேதி தமிழகத்தின் ஆசிரியர்களில் சிறந்தவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் இன்று கலந்துரையாடினார். அப்போது, சில நிகழ்ச்சிகள் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும். சில நிகழ்ச்சிகள் நெகிழ்ச்சிக்குரியதாக இருக்கும். இந்த நிகழ்ச்சி, மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த மரியாதைக்குரிய நிகழ்வாக அமைந்துள்ளது. 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு, மொத்தம் 389 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் ஆசிரியர்களுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளதை முதல்வர் நினைவு கூர்ந்தார். இவ்வுலகில், தன்னைவிட தன்னிடம் கற்றவர் பெற்ற வெற்றிக்கு மகிழ்ச்சி அடைகிற ஒரே இனம் ‘அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்’ இனம் மட்டுமே. அரசுப் பள்ளிகளில் படிப்பைத் தாண்டி, விளையாட்டு, கலை இலக்கியப் போட்டிகள், மொழித்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சிகள் – குறிப்பாக Spoken English வகுப்புகள் நடத்த வேண்டும். மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்தும்பொழுது அதில், மாணவரோடு பெற்றோரையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். 2021-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், பள்ளிக்கல்வித் துறைக்கென தமிழ்நாடு அரசு ரூ.32,599.54 கோடி ஒதுக்கியுள்ளது. தனி ஒரு துறைக்கு ஒதுக்கப்படும் அதிகபட்சத் தொகை இதுவாகும். கரோனா பெருந்தொற்று காலத்தில் உங்களைப் போன்ற நல்லாசிரியர்கள் பலர் ‘வீடுதேடிக் கல்வி வழங்குதல்’என்ற கொள்கையோடு மாணவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று கல்வி கற்பித்தீர்கள். இதுபோன்ற சிறப்பு முயற்சியை அனைத்து குக்கிராமங்களுக்கும் எடுத்துச்சென்று பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பைச் சரிசெய்ய அரசு ஒரு இயக்கத்தைத் தொடங்க இருக்கிறது. இந்த கலந்துரையாடலில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

Tuesday, September 7, 2021

சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வு வயது 60ஆக உயர்வு

September 07, 2021 0
சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வு வயது 60ஆக உயர்த்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வு வயது 58லிருந்து 60ஆக உயர்த்தப்படும் என அறிவித்தார். மேலும், அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.
Read More

Post Top Ad

Your Ad Spot