KalviseithiDaily: SMC

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label SMC. Show all posts
Showing posts with label SMC. Show all posts

Wednesday, October 26, 2022

SMC- (28.10.2020) கூட்ட நாளில் செய்ய வேண்டியவை

October 26, 2022 0
SMC- (28.10.2020) கூட்ட நாளில் செய்ய வேண்டியவை

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

நாள் - *வெள்ளிக்கிழமை* 
தேதி - *28/10/2022*
நேரம் - *பிற்பகல் 3.00 மணி முதல் 4.30* 
*பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள்*
*3.00-3.05 காணொலிகள்* -
 சிறப்பாக செயல்ப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு காணொலிகளை திரையிடுதல் 

 தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர் செயலியில் (TNSED Parent App) பதிவு செய்தல்

*3.20-3.25 வரவேற்பு*-தலைவர் அனைவரையும் வரவேற்று கூட்டத்தை தொடங்கி வைத்தல்

*3.25-3.40 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களின் பங்கேற்பு*- (மாணவர்களின் எண்ணிக்கை , செயல் திட்டம் குறித்து கலந்தாலோசித்தல்)

   *-உயர்கல்வி வழிகாட்டுதல்*- கடந்த மாத கூட்டத்தில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து கலந்தாலோசனை நடைபெற்றதன் பின்னூட்டமாக உயர்கல்வியில் சேர்ந்துள்ள/சேர விருப்பம் தெரிவித்துள்ள மற்றும் தெரிவிக்காத மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை.


**3.40-3.55 திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்* 

👇👇👇👇👇
-மதிப்பீடு       
-மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு 
-இடைநின்ற /பள்ளி செல்லா குழந்தைகள்   
- இல்லம் தேடிக் கல்வி
- மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி
-மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வி   
- பழுதடைந்த மற்றும் பராமரிப்பற்ற நிலையிலுள்ள பள்ளி கட்டிடங்களை
கண்டறிந்து, அவற்றை மறுசீரமைப்பு
- போக்குவரத்து / பாதுகாவலர் வசதி
                                                                                                                                                                              
*3.55-4.25*
 *கூட்டப் பொருள் மீதான விவாதம்*
-முன்பே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட, கூட்டப்பொருட்களை கலந்தாலோசித்து உரிய தீர்மானங்களை மேற்கொள்ளுதல்
- பொறுப்பாளர்கள், தொடர்புடையத் துறைகளின் ஒத்துழைப்பு கால அளவு ஆகியவற்றை நன்கு திட்டமிட்டு தீர்மானங்கள் நிறைவேற்றுதல்.
-தீர்மானங்களை பதிவேட்டில் பதிவுசெய்தல் (ம) கையொப்பம் பெறுதல்.


*4.25-4.30 - கூட்ட நிறைவு*
பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறுதல்.
   
Read More

Saturday, July 9, 2022

71 அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு தேர்தல்

July 09, 2022 0
மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்த பயிற்சி அளிக்க வேண்டும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

வேலூர்:

வேலூர் மாவட்டத்திலுள்ள 8 ஒன்றியங்களில் 13 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 71 அரசுமேல் நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பிற்கான தேர்தல் நடைப்பெற்றது.

மேலாண்மை குழுவானது மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காகவும் .

மாணவர்களின் ஒழுக்கத்தை சிறப்பான முறையில் கடைபிடிப்பதற்காகவும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேப்படுத்தவும் பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டது. ஆசிரியர்கள் . மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்த சிறப்பான முறையில் பயிற்சி அளிக்க வேண்டும் . மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் விளையாட்டு பயிற்சியும் அளிக்க வேண்டும். கழிவறை வசதி , காற்றோட்டமான வகுப்பறைகள் சுற்றுப்புறசு நூய்மை , மரம் வளர்ப்பது மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளை பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும் . பெற்றோர்கள் மாணவர்களினுடைய கல்வி நலனை கருத்தில் கொண்டு மாதம் ஒருமுறை அந்தந்த வகுப்பு ஆசிரியர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும்.

நமது வேலூரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறையை சிறப்பான தேர்ச்சி விகிதங்களை தந்து வேலூரி மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக கொண்டு வர வேண்டும் என்று பெற்றோராளையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டு பெற்றோர்களின் குறைகளை கேட்டறிந்து பெற்றோர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.

மேலும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் துணை தலைவரிகளுக்கான நியான உத்தரவுகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார். நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி. உதவி திட்ட அலுவலர் மகாலிங்கம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெற்றோர்கள் , ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Read More

Wednesday, July 6, 2022

ஆசிரியர்களே முந்துங்கள்... இன்று மாலை வரைதான் அவகாசம்

July 06, 2022 0
ஆசிரியர்களே முந்துங்கள்... இன்று மாலை வரைதான் அவகாசம்

தமிழகத்தில் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

அரசுப் பள்ளிகளில் 13 ஆயிரத்து 331 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை தற்காலிக ஆசிரியர் நியமனம் மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதன்படி, TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள் மற்றும் தகுதி வாய்ந்தவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகத்தில் கடந்த 4ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை இன்று இரவு 8 மணிக்குள் பள்ளிக்கல்வித் துறை ஆணையருக்கு அனுப்புமாறு மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More

Monday, July 4, 2022

தற்காலிக ஆசிரியா் நியமனத்தில் சா்ச்சைக்கு இடமில்லை: அமைச்சா் விளக்கம்

July 04, 2022 0
தற்காலிக ஆசிரியா் நியமனத்தில் சா்ச்சைக்கு இடமில்லை: அமைச்சா் விளக்கம்

தற்காலிக ஆசிரியா்கள் நியமனம் எவ்வித சா்ச்சைக்கும் இடமில்லாத வகையில் நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023-ஆம் கல்வி ஆண்டில் ஜூன் 1-ஆம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியா் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் விதிமுறைகளை மீறி நியமனம் செய்யப்படுவதாகவும், தகுதி இல்லாதவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் புகாா்கள் எழுந்தன. இந்த நிலையில் இது குறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தற்காலிக ஆசிரியா் நியமனத்தில் எவ்வித சா்ச்சையும் கிடையாது. முதல்வரின் அறிவுரைப்படியே தற்காலிக ஆசிரியா் நியமனம் நடைபெற்று வருகிறது. நிரந்தர ஆசிரியா்களை நியமிப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு விரைவில் ஆசிரியா்கள் நியமனம் செய்யப்படுவா். இது குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் ஜாதி, மத கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது என்றாா் அவா்.
Read More

Friday, July 1, 2022

தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை மறுநாள் முதல் ஜூலை 6 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்

July 01, 2022 1
தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை மறுநாள் முதல் ஜூலை 6 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்

13000 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக திருந்திய வழிகாட்டுதல் செயல்முறைகள் வெளியீடு.

CLICK HERE TO DOWNLOAD
Read More

SMC மறுகட்டமைப்பு தொடர்பான படிவங்கள் - PDF

Thursday, June 30, 2022

தற்காலிக ஆசிரியர் நியமனம் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு

June 30, 2022 0
தமிழக அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பிற்கு இடைக்கால தடை

*உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

*ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா தாக்கல் செய்த மனு

Read More

SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் பள்ளி மற்றும் பாடங்கள் வாரியாக வெளியீடு - PDF - ராணிப்பேட்டை மாவட்டம்

Monday, June 27, 2022

SMC மூலம் நிரப்பப்படும் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விவரம் எப்பொழுது வெளியிடப்படும்?

June 27, 2022 0
பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பப்படும் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விவரம் எப்பொழுது வெளியிடப்படும்?

பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பப்படும் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விவரம் எப்பொழுது வெளியிடப்படும்? (When will the details of teacher vacancies to be filled by SMC be released?)

Dear CEO's

The filling up of Secondary Grade Teachers / BT Teachers Vacancies on consolidated basis. It is instructed that the vacancy position have to be arrived only after completion of Inter district transfer on 7th and 8th July. After relieving these teachers only, the vacancies have to be arrived and displayed.

அன்புள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களே, இடைநிலை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்புதல். ஜூலை 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் மாவட்டங்களுக்கு இடையேயான பணியிடமாற்றம் கலந்தாய்வு முடிந்த பின்னர் இந்த ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்த பிறகே, காலிப் பணியிடங்கள் காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வித் துறையில் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடந்து முடிந்த பிறகு தான் தற்காலிக ஆசிரியர் நியமனம்...
Read More

Saturday, June 25, 2022

ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களை தற்காலிக ஆசிரியர்களாக பணியமர்த்தலாம்: பள்ளி கல்வித்துறை

June 25, 2022 0
காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிகமாக நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில் தொடக்கப் பள்ளிகள் தொடங்கி நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 4989, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 5154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 3188 , முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாதம் 12 ஆயிரம் வரை ஊதியம் வழங்க பள்ளி கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுக்கும், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் ,உதவி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் அடங்கிய குழுவினர் தகுதியான நபர்களை தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களாக தேர்வு செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Read More

Monday, April 25, 2022

பள்ளி மேலாண்மை குழுவில் 5.74 லட்சம் பெற்றோர் இணைகின்றனர்: பள்ளிக் கல்வித்துறை தகவல்

April 25, 2022 0
பள்ளி மேலாண்மை குழு

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களில் 5 லட்சத்து 74 ஆயிரம் பெற்றோர் சேர்க்கப்பட உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இயங்கி வரும் பள்ளிகளில் ஏற்கெனவே செயல்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு மறு சீரமைப்பு செய்யப்பட்டு மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய தலா 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக 37,557 பள்ளிகளிலும் புதியதாக மேலாண்மைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறு கட்டமைப்பு செய்வதற்கான தொடக்க விழா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வெலிங்டன் சீமாட்டி பெண்கள் பள்ளியில் கடந்த வாரம் நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த கல்வியாண்டில் பள்ளிக் கல்விக்காக இந்தநிதி நிலை அறிக்கையில் ரூ.36 ஆயிரம் கோடி பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகள் அனைத்தும் தன்னிறைவு பெற வேண்டும். தரமான, சமமான கல்வி குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதால் தான் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இக்குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவது இதன் நோக்கமாக உள்ளது. அத்துடன் நம் பள்ளி, நம் பெருமை என்ற திட்டத்தின் கீழ் மேலாண்மைக் குழுக்கள் இணைக்கப்பட்டு மறு கட்டமைப்பு செய்வதற்கான அனைத்து பணிகளும் தொடங்கியுள்ளன. இதன்படி அரசு நடுநிலைப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவ மாணவியரின் பெற்றோரை இந்த மேலாண்மைக் குழுக்களில் உறுப்பினர்களாக சேர்க்க முடிவு செய்யப்பட்டு, 6 ஆயிரத்து 849 நடுநிலைப் பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவியரின் பெற்றோர் சுமார் 5 லட்சத்து 75 ஆயிரம் பேர் இந்த குழுக்களில் சேர்க்கும் பணியை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது. பள்ளிக் கல்வித்துறை தகவல்

இதன் மூலம் பள்ளிக் கல்வியில் தரமான சமூக பங்கையும் பள்ளிகளில் இணைக்க உள்ளது. இந்த பள்ளி மேலாண்மைக் குழுக்களில் தலா 20 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். அவர்களில் 15 பேர் மாணவ மாணவியரின் பெற்றோராக இருப்பர். மொத்த குழு உறுப்பினர்களை பொறுத்தவரையில் 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த குழுவில் ஒரு ஆசிரியர் பிரதிநிதியாக சேர்க்கப்படுவார். ஒரு தன்னார்வலரும் சேர்க்கப்படுவார். இதையடுத்து, இந்த மேலாண்மைக் குழுவுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. ஆர்வமுடன் பெற்றோர் இந்த குழுவில் சேர்ந்து வருகின்றனர்.

இந்த குழுவில் சேரும் பெற்றோர் பள்ளி வளர்ச்சிக்கான திட்டங்களையும் தீட்டுவதுடன் அதற்கான திட்டத்தையும் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. வளர்ச்சி திட்டம் என்பது அந்தந்த பள்ளிகள் இயங்கும் வட்டாரத்தில் உள்ள மாணவர்கள் அதிக அளவில் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள், பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கட்டமைப்பது, கற்றல் மற்றும் மேம்பாட்டுக்கும் உதவியாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளபடி விரைவில் 5 லட்சத்து 74 ஆயிரம் பேர் மேலாண்மைக் குழுவில் சேர்க்கப்படுவார்கள்.
Read More

Monday, April 18, 2022

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் தொடக்க விழா

April 18, 2022 0
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் தொடக்க விழா - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு
Read More

Post Top Ad

Your Ad Spot