KalviseithiDaily: Aadhaar

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Aadhaar. Show all posts
Showing posts with label Aadhaar. Show all posts

Tuesday, December 27, 2022

ஆதார் எண் போல் தமிழகத்தில் 10 முதல் 12 இலக்கத்தில் மக்கள் ஐடி எண் - தமிழக அரசு திட்டம்

December 27, 2022 1
ஆதார் எண் போல் தமிழகத்தில் 10 முதல் 12 இலக்கத்தில் மக்கள் ஐடி எண் - தமிழக அரசு திட்டம்

மத்திய அரசு ஆதார் எண் வழங்கியிருப்பது போலத் தமிழக அரசு மக்கள் ஐடி என்ற எண்ணை வழங்கத் திட்டமிட்டுள்ளது. மாநில அரசின் மூலம் அறிவிக்கப்படும் பல்வேறு திட்டங்களை இந்த ஐடி எண் மூலம் ஒருங்கிணைக்கவும் செயல்படுத்தவும் அரசு திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் மத்திய அரசு ஆதார் எண் வழங்கியுள்ளது, அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றும் ஆதார் எண்ணை மையமாக வைத்துச் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல நம் மாநில அரசு தமிழக மக்களுக்கு எனத் தனியாக மக்கள் ஐடி என்ற 10 முதல் 12 இலக்க எண்களை அறிவிக்க உள்ளது. ஆதார் போலத் தமிழக மக்களுக்குத் தனி ஐடி உருவாக்கத் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையைக் கணக்கெடுத்து மாநில குடும்ப தரவுத் தளம் உருவாக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மாநில அரசினால் தனி எண் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வசிக்கும் மக்களை வயது பாலினம் சமூக அடிப்படையில் கணக்கிட்டு 10 முதல் 12 இலக்க ஐடி எண்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது மக்கள் ஐடி என அழைக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் இதற்கான பணியைத் தொடங்கி உள்ளது. தரவுகளைச் சேகரித்து இதற்கான தளத்தை நிர்வகிக்கத் திறமையும் அனுபவமும் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு டெண்டர் அறிவித்துள்ளது. மக்கள் ஐடி மூலம் தமிழ்நாட்டில் மக்கள் தொகையைத் துல்லியமாகக் கணக்கிடவும், அரசின் திட்டங்களை இந்த ஐ டி எண்ணைப் படியாக வைத்துச் செயல்படுத்தவும் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
Read More

Friday, September 9, 2022

வாக்காளர் அட்டையுடன், 'ஆதார்' எண் சேர்ப்புக்கான பணிகளை மேற்கொள்ள, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு

September 09, 2022 0
Government school teachers have been directed to carry out the work of adding 'Aadhaar' number along with voter card. In Tamil Nadu, the government and government-aided teachers working in the school education sector are not only given teaching work, but also various government sector jobs. In this line, the school education department has ordered to carry out the work of linking the Aadhaar number with the new voter ID card.

District Principal Education Officers have sent a circular to the schools to go for these tasks as per the orders of the respective District Collectors. The teachers have been instructed to carry out these tasks on all working days from 3:00 PM onwards.



வாக்காளர் அட்டையுடன், 'ஆதார்' எண் சேர்ப்புக்கான பணிகளை மேற்கொள்ள, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு, கற்பித்தல் பணி மட்டுமின்றி, பல்வேறு விதமான அரசு துறை பணிகளும் வழங்கப்படுகின்றன.இந்த வரிசையில், புதிதாக வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளையும் மேற்கொள்ள, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் உத்தரவுப்படி, இந்த பணிகளுக்கு செல்லுமாறு, பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.இந்த பணிகளை அனைத்து வேலை நாட்களிலும், பிற்பகல் 3:00 மணி முதல் கூடுதல்பணியாக மேற்கொள்ளவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot