KalviseithiDaily: suspended

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label suspended. Show all posts
Showing posts with label suspended. Show all posts

Saturday, November 19, 2022

தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் முறைகேடு: பல்கலைக்கழக துணை பதிவாளர் பணிநீக்கம்

November 19, 2022 0
பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் முறைகேடு: பல்கலைக்கழக துணை பதிவாளர் பணிநீக்கம்

அதிமுக ஆட்சியில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளர் ராமன் என்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் கடந்த 2013-ம் ஆண்டு பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. உரிய அங்கீகாரம் இல்லாத தொழிநுட்பப் படிப்புகள் நடத்தியது, கல்வித் தகுதி இல்லாத வெளிமாநில மாணவர்களை தொலைதூரக் கல்வியில் சேர்த்தது. படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் வழங்கியது உள்ளிட்டவை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பெரியார் பல்கலைக்கழகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தொலைத்தூர கல்வி இயக்ககம் மீதான புகாரில் முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இது குறித்து துறைரீதியான நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாஸ்கரன் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியினர் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் அப்போதைய இயக்குனர் குணசேகரன், உதவி பதிவாளாராக இருந்த ராமன் மற்றும் தொகுப்பூதிய பணியாளர் அன்பரசி ஆகியோரிடம் விசாரணை நடத்தி, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கடந்த ஆண்டு அறிக்கை ஒப்படைத்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் அறிக்கையில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புதல் பெறப்பட்டது. அதன்படி தற்போது பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளராக உள்ள ராமன் இரு வாரங்களுக்கு முன்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், நேற்று பணி நீக்கம் செய்யப்பட்டார். இம்மாத இறுதியில் அவர் ஓய்வு பெற இருந்த நிலையில் அவரது ஓய்வூதிய பலன்கள் அனைத்தையும் நிறுத்தி வைக்க பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல தொகுப்பூதிய பணியாளரான அன்பரசியும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Read More

Monday, July 25, 2022

பள்ளி ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தகவல்

July 25, 2022 0
சாத்தூர் பாலியல் விவகாரத்தில் சிக்கிய பள்ளி ஆசிரியர் தமோதரன் தற்காலிக பணியிடை நீக்கம் - விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி தகவல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே புதுச்சூரங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவிகளுக்கு கணித ஆசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக கூறி பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளி முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தால் பரபரப்பு. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம்.

Read More

Wednesday, July 13, 2022

பள்ளியில் கோஷ்டி தகராறு - 12 மாணவர்கள் தற்காலிக நீக்கம் - ஒரு மாணவன் டிஸ்மிஸ்

July 13, 2022 0
கன்னியாகுமரி மாவட் டம் ஆரல்வாய்மொழிபள் ளியில் ஏற்பட்ட கோஷ்டி தகராறில் 12 மாணவர்கள் தற்காலிக நீக்கம் செய் யப்பட்டு உள்ளனர். ஒரு மாணவன், டிஸ்மிஸ் செய் யப்பட்டு மாற்று சான்றி தழ் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட் டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் அவ் வப்போது 2 கோஷ்டியாக பிரிந்து மோதிக்கொள்வது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த மோதலில் காயம டைந்த மாணவர் ஒருவர் தனது சகோதரரிடம் தெரி வித்து உள்ளார்.
Read More

Sunday, July 10, 2022

தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

July 10, 2022 0
உத்தரப் பிரதேசத்தில் அரசுப் பள்ளி மாணவர் வகுப்பறையில் வைத்து பூட்டப்பட்டதையடுத்து அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பள்ளியைச் சேர்ந்த 5 ஆசிரியர்கள் மீதும் கல்வித் துறை அதிகாரிகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

ஆதித்யா (5 வயது) மாணவன் நேற்று முன்தினம் (ஜூலை 7) பள்ளி வகுப்பறையிலேயே வைத்து பூட்டப்பட்டுள்ளார். பின்னர், அந்த மாணவர் அவரின் பெற்றோரின் உதவியால் வகுப்பறை கதவை உடைத்து மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான விடியோ இணையத்தில் வைரலானதால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஊர்மிளா தேவி தனது கடமையை சரிவர செய்யாமல் அலட்சியமாக நடந்து கொண்டதாகக் கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தினால் அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அஃப்ராஸ் அரா, பிரியங்கா யாதவ்,சாந்தி, மீரா தேவி, மற்றும் சுரேந்திர நாத் ஆகிய 5 பேரின் ஊதிய உயர்வும் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் ஆதித்யா வகுப்பறையில் தூங்கிக் கொண்டிருந்ததை கவனிக்காமல் வகுப்பறையை பூட்டிச் சென்றுவிட்டதாக விசாரணையில் தெரியவந்தது
Read More

Wednesday, April 27, 2022

பெண் புள்ளிங்கோ..... மாணவிகள் 10 பேர், 10 நாள் சஸ்பெண்ட்: முதல்வர் நடவடிக்கை

April 27, 2022 0
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வடசென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள அரசு கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரி அமைந்துள்ளது. அந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள், கல்லூரி முடித்துவிட்டு பேருந்து நிலையத்துக்கு சென்றுள்ளனர்.

அப்போது இரு தரப்பு மாணவிகளுக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டு குடுமிச்சண்டையாக மாறியது. சண்டையில் ஈடுபட்ட மாணவிகளை சுற்றி இருந்த சக கல்லூரி மாணவ, மாணவிகள் விலக்கி விட்டுள்ளனர். இந்த சண்டை கல்லூரி வளாகத்தினுள் ஏற்பட்ட வாய்தகராறு என விசாரணையில் தெரிவிவந்துள்ளது. மேலும் வாய்தகராறு பேருந்து நிறுத்தத்தில் குடுமி சண்டையாக மாறியதும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்த்துறையினர், மாணவிகளின் எதிர்காலம் குறித்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இதனால் புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிது.

இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய பி.ஏ. முதலாமாண்டு மாணவிகள் 10 பேரை, 10 நாள் சஸ்பெண்ட் செய்து அரசு கல்லூரி முதல்வர் சுடர்கொடி உத்தரவிட்டார்.
Read More

Monday, April 18, 2022

பள்ளியின் முதல்வர் உள்பட 3 பேர் பணிநீக்கம்!

April 18, 2022 0
Three people, including the principal of a private school in Chennai, have been sacked in connection with the death of a student in a van collision. The school administration dismissed all three on the recommendation of the Department of Education. School principal Dhanalakshmi, 2 members of the transport committee were sacked. Deekshit, a student, was killed in a van collision at a school in Alwarkurichi in Valasaravakkam last month.
முதன்மை கல்வி அதிகாரி டிஸ்மிஸ்

வேன் மோதி மாணவர் இறந்த விவகாரத்தில் சென்னை தனியார் பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கல்வித்துறை பரிந்துரையின் பேரில் பள்ளி நிர்வாகம் 3 பேரையும் முதன்மை கல்வி அதிகாரி டிஸ்மிஸ் செய்தது.

பள்ளி முதல்வர் தனலட்சுமி, போக்குவரத்துக்கு குழுவில் இருந்த 2 உறுப்பினர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் வளசரவாக்கத்தில் ஆழ்வார்திருநகரில் உள்ள பள்ளியில் வேன் மோதி மாணவர் தீக்க்ஷித் உயிரிழந்தார்.

சென்னை வளசரவாக்கத்தில் பள்ளி வேன் மோதி மாணவர் இறந்த விவகாரத்தில் சென்னை தனியார் பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணி நீக்கம் செய்து நடவடிக்கை

கல்வித்துறை பரிந்துரையின் பேரில் பள்ளி நிர்வாகம் 3 பேரையும் முதன்மை கல்வி அதிகாரி பணிநீக்கம் செய்ததுள்ளார். பள்ளி முதல்வர் தனலட்சுமி, போக்குவரத்துக்கு குழுவில் இருந்த 2 உறுப்பினர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கடந்த மாதம் வளசரவாக்கத்தில் ஆழ்வார்திருநகரில் உள்ள பள்ளியில் வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவன் தீக்க்ஷித் உயிரிழந்தார். தனியார் பள்ளிக்கு நேரில் வந்த மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ், அம்பத்தூர் வருவாய்த் துறை அதிகாரி இளங்கோ, காவல் துணை ஆணையர் மீனா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்த காவல்துறையினர் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, மாணவர்களை வேனிலிருந்து இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியின் முதல்வர் உள்பட 3 பேரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Read More

Thursday, December 23, 2021

தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

December 23, 2021 0
வேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார் அருகே மேல்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ரேவதி, 50. பள்ளிக்கு தாமதமாக வரும் மற்றும் சரியாக படிக்காத மாணவியரை இவர் ஆபாசமாக திட்டி வருவதாக புகார் வந்தது.கல்வித் துறை அதிகாரிகள் விசாரணையில், ஆபாசமாக திட்டுவது உறுதியானது. இதனால் ரேவதியை 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் நேற்று உத்தரவிட்டார்.
Read More

Sunday, November 21, 2021

கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம்

November 21, 2021 0
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ரகுநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் பணவிக்கு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதால் பேராசிரியர் ரகுநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Read More

Post Top Ad

Your Ad Spot