பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் முறைகேடு: பல்கலைக்கழக துணை பதிவாளர் பணிநீக்கம்
அதிமுக ஆட்சியில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளர் ராமன் என்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் கடந்த 2013-ம் ஆண்டு பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. உரிய அங்கீகாரம் இல்லாத தொழிநுட்பப் படிப்புகள் நடத்தியது, கல்வித் தகுதி இல்லாத வெளிமாநில மாணவர்களை தொலைதூரக் கல்வியில் சேர்த்தது. படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் வழங்கியது உள்ளிட்டவை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பெரியார் பல்கலைக்கழகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தொலைத்தூர கல்வி இயக்ககம் மீதான புகாரில் முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இது குறித்து துறைரீதியான நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாஸ்கரன் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியினர் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் அப்போதைய இயக்குனர் குணசேகரன், உதவி பதிவாளாராக இருந்த ராமன் மற்றும் தொகுப்பூதிய பணியாளர் அன்பரசி ஆகியோரிடம் விசாரணை நடத்தி, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கடந்த ஆண்டு அறிக்கை ஒப்படைத்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் அறிக்கையில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புதல் பெறப்பட்டது. அதன்படி தற்போது பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளராக உள்ள ராமன் இரு வாரங்களுக்கு முன்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், நேற்று பணி நீக்கம் செய்யப்பட்டார். இம்மாத இறுதியில் அவர் ஓய்வு பெற இருந்த நிலையில் அவரது ஓய்வூதிய பலன்கள் அனைத்தையும் நிறுத்தி வைக்க பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல தொகுப்பூதிய பணியாளரான அன்பரசியும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.