KalviseithiDaily: UGC

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label UGC. Show all posts
Showing posts with label UGC. Show all posts

Wednesday, January 25, 2023

UGC - பல்கலைக்கழக மானிய குழு மறுசீரமைப்பு Reorganization of University Grants Commission

January 25, 2023 0
பல்கலைக்கழக மானிய குழு மறுசீரமைப்பு Reorganization of University Grants Commission

கோவை அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 34வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் உட்பட 2704 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் தர்மேந்திரபிரதான், வணக்கம் கோயம்புத்தூர், எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள் என தமிழில் நலம் விசாரித்து தனது உரையை தொடங்கினார். அவர் பேசியதாவது: இந்தியாவின் மற்ற கலாச்சாரங்களை விட பழமையான பண்பாட்டை தமிழகம் கொண்டுள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழர்களின் கலாச்சாரம் பனாரஸில் கொண்டாடப்பட்டது. பிரதமர் அங்கு திருக்குறளையும் திருவள்ளுவரின் பெருமையும் எடுத்துரைத்தார். திருக்குறளை நாம் படித்தாலே நமது அறிவு மற்றும் வாழ்க்கைக்கு தேவையான நல்லொழுக்கங்கள் தெரிந்துவிடும். திருவள்ளுவர் இருள் சூழ்ந்த சமுதாயத்திற்கு ஒளி கொடுத்தவர்.

ஜனநாயகத்துக்கு இந்தியா முன்னோடியாக இருக்கிறது. பெண் கல்வி பெண் ஆளுமை உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருக்கிறது. நாட்டின் அனைத்து மொழிகளும் முக்கியம். ஒரு மொழியை விட இன்னொரு மொழி சிறந்தது என்று இல்லை, எல்லா மொழிகளும் தேசிய மொழிதான். இவ்வாறு தர்மேந்திர பிரதான் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ”நடப்பு நிதி ஆண்டின் பட்ஜெட் அறிவிப்பி ன்போது பிரதமர் மோடி தேசிய கல்விக் கொள்கை தொடர்பான பல்வேறு திட்டங்களையும் அதற்கான நிதி உதவிகளையும் அறிவிக்க உள்ளதாகவும், தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிட்டார். பல்வேறு புதிய கல்வி நிறுவனங்கள் வருவது கல்வியின் தரத்தை பாதிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வி நிறுவனங்களுக்கும் தரத்துக்கும் சம்பந்தம் இல்லை எனவும், புது கல்வி நிறுவனங்கள் அதிகரித்து வருவதன் காரணமாக புதுப்புது திறமைகள் வெளியாகி கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், நாம் பல்வேறு தொழில்நுட்பங்களுக்காக வெளிநாடுகளையே நம்பியிருந்த சூழ்நிலையில் தற்போது இந்தியா சுயமாக தொழில்நுட்பங்களை உருவாக்கி வளர்ச்சி அடைந்து வருகிறது எனவும் குறிப்பாக மொபைல் தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு என பாரத் ஆப்ரேட்டிங் சிஸ்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல்வேறு துறைகளிலும் தொழில்நுட்ப ரீதியாக நமது நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது என தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானிய குழுவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக புகார்கள் வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பல்கலைகழக மானிய குழு மறுசீரமைப்பு செய்யப்படும் என தெரிவித்தார்
Read More

Friday, December 30, 2022

Implementation of Guidelines on "Fostering Social Responsibility & Community Engagement in Higher Education Institutions in India 2.0

December 30, 2022 0


UGC letter regarding: Implementation of Guidelines on "Fostering Social Responsibility & Community Engagement in Higher Education Institutions in India 2.0

Higher Educational Institutions (HEIs) can play an important role to achieve the objectives of socioeconomic development of New India through their active community engagement.

This approach will also contribute to improve the quality of both teaching and research in HEIs as they will develop a better understanding of issues in the society. Therefore, it would in the fitness of things, if HEIs bring in social responsibility and community in their vision and mission itself. It is also important that institutional mechanisms are developed to adopt a holistic and functional approach to community engagement, encompassing all three functions of HEIs—teaching, research and service. UGC’s ambitious Quality Mandate launched in 2018 has focused on improving societal linkages of HEIs and enabling students to become socially productive.

UGC set up a Subject Expert Group on Educational Institutions’ Social Responsibility in 2018 under Unnat Bharat Abhiyan (UBA), a flagship programme of the Government of India, which worked to develop a report on “Fostering Social Responsibility and Community Engagement in Higher Education Institutions (HEIs) in India”. The report has emphasised the importance of socially relevant courses that will make all students understand India’s rural society, Government’s rural development schemes and contribute to the betterment of the same.

Since the Government of India announced the National Education Policy (NEP) on 29th July 2020, this document has been revised to include key recommendations of NEP, as well as the deliberations of the Review Committee, Expert Group and feedback received from the stakeholders. I am happy to present a revised “Guidelines for Fostering Social Responsibility and Community Engagement in Higher Education Institutions (HEIs) in India” to the Vice-Chancellors, Directors, Principals, faculty members and students of the HEIs.

I would like to acknowledge the valuable contribution of the Chairperson of the Subject Expert Group (SEG), Dr. K. K. Aggarwal, Chairman, National Board of Accreditation (NBA) and all the SEG members in developing this document. I would also like to acknowledge the necessary support and relevant inputs provided by Prof. Rajnish Jain, Secretary, UGC and other UGC officials and Experts in formulating the revised guidelines. This document will give a fillip to UGC’s long-standing commitment to strengthen social responsibility and community engagement of Universities/Colleges in India.

CLICK HERE TO DOWNLOAD
Read More

Tuesday, November 22, 2022

கல்லூரிகளில் புதிதாக பயிற்சி பேராசிரியர் பணி: யுஜிசி அனுமதி

November 22, 2022 0
கல்லூரிகளில் புதிதாக பயிற்சி பேராசிரியர் பணி: யுஜிசி அனுமதி

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிற்சி பேராசிரியர் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

உயர்கல்வி நிறுவனங்களில் கல்விசார் துறைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்த நிபுணர்களை பயிற்றுநர்களாக நியமிக்க வசதியாக ‘பயிற்சி பேராசிரியர்’ (Professor of Practice) என்ற புதிய பணியிடம் உருவாக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி பேராசிரியர்களை நியமிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி பயிற்சி பேராசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு பல்துறை கல்வியை கற்று தரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More

Tuesday, November 1, 2022

விதிகளை மீறும் உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் திரும்ப பெறப்படும்: யுஜிசி கடும் எச்சரிக்கை

November 01, 2022 0
விதிகளை மீறும் உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் திரும்ப பெறப்படும்: யுஜிசி கடும் எச்சரிக்கை

கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் விலகினால் கட்டணம் மற்றும் சான்றிதழ்களை அவர்களுக்கு வழங்க வேண்டும்: யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. விதிகளை மீறும் உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் திரும்ப பெறப்படும், உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதி பெரும் அந்தஸ்த்தை இழக்க நேரிடும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Read More

Friday, September 9, 2022

தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் படிப்புகள் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் படிப்புகளுக்கு இணையானவை - யுஜிசி

September 09, 2022 0
தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் படிப்புகள் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் படிப்புகளுக்கு இணையானவை - யுஜிசி

2035ல் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்த புதிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது

2014 பாடநெறிகள் அங்கீகரித்தல் தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறைக்கு உட்பட்டு வழங்கப்படும் திறந்தவெளி, தொலைதூரக் கல்வி (ODL) மற்றும் இணைய வழிப்படிப்புகள் பொதுவான உள்வகுப்புத் திட்டங்களுக்கு சமமாக கருத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

2035ல் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் 50 சதவீதமாக உயர்த்துவும், உயர் கல்வி நிறுவனங்களில் 3.5 கோடி புதிய இடங்களை சேர்க்கவும் புதிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது.

இதன் அடிப்படையில், மாணவர்களுக்கு உகந்த கற்றல் சூழல்களை உருவாக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாடத்திட்டம், கற்பிக்கும் முறை, பல் நுழைவு வெளியேறுதல் (Multiple Entry and Exit), விருப்பதெரிவு அடிப்படையிலான தரமதிப்பீடு அமைப்பு முறை (Choice based Credit System) போன்ற முன்னெடுப்புகளும் இதில் அடங்கும்.

உயர்கல்வியின் ஒட்டுமொத்த தரத்தினை அதிகரிக்கும் மிக முக்கிய கருவியாக திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி (Open and Distance Learning), இணைய வழிக் கல்வி (Online learning) செயல்படும் என்று புதிய தேசியக் கல்விக் கொள்கை அடையாளம் கண்டுள்ளது. எனவே, தொலைதூரக் கல்வி, இணைய வழிக் கல்வி வழங்கும் நிகழ்ச்சித் திட்டங்கள், உயர்தர உள்வகுப்பு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு சமமாக இருப்பதை நோக்கமாக கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில், இந்த பரிந்துரையை செயல்படுத்தும் விதமாக, பல்கலைக்கழக மானியக் குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், " 2014 பாடநெறிகள் அங்கீகரித்தல் (UGC Notification on Specification of Degree,2014) தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறைக்கு உட்பட்டு வழங்கப்படும் திறந்தவெளி, தொலைதூரக் கல்வி (ODL) மற்றும் இணைய வழிப்படிப்புகள் பொதுவான உள்வகுப்புத் திட்டங்களுக்கு சமமாக கருத்தப்படும் என்றும், முதுநிலை படிப்புகளை பொறுத்த வரையைல் மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட முதுநிலை படிப்புகள் சமமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளது.
Read More

Tuesday, July 12, 2022

CUET-UG தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும்- யுஜிசி

July 12, 2022 0
CUET - UG தேர்வு முதற்கட்டமாக ஜூலை 15ம் தேதியிலும், 2ம் கட்டமாக ஆகஸ்ட் 4ம் தேதியிலும் தொடக்கம்;

முதற்கட்டத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படும், 2ம் கட்டத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜூலை 31ம் தேதி வெளியிடப்படும்

- யுஜிசி

CUET-UG க்கான நுழைவு தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என யுஜிசி தெரிவித்துள்ளது.

வரும் கல்வியாண்டில் ( 2022-23 ) இந்தியாவில் உள்ள 42 மத்திய பல்கலைக்கழகங்கள், இணைப்புக் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர CUET – UG நுழைவுத் தேர்வை UGC அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது தேர்வு நடக்கும் தேதியை யுஜிசி அறிவித்துள்ளது. இதையடுத்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், CUET – UG தேர்வு இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெறும். ஜூலை 15-ம் தேதி முதற்கட்ட தேர்வு தொடங்குகிறது. இரண்டாம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 4-ல் தொடங்குகிறது. ஜூலை 15-ம் தேதி தொடங்கும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 4-ல் தொடங்கும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரும் 31-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CUET – UG தேர்வுக்காக மொத்தம் 14.90 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். முதற்கட்டமாக ஜூலை 15-ல் தொடங்கும் தேர்வை 8.10 லட்சம் பேரும், ஆகஸ்ட் 4-ல் தொடங்கும் தேர்வை 6.80 லட்சம் பேரும் எழுதுகின்றனர். CBT முறையில் (ஆன்லைன் முறையில்) தேர்வு நடத்தப்படுவதால் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
Read More

Monday, May 30, 2022

UGC Public Notice regarding: Violations by Periyar University, Tamil Nadu in running distance education programmes as per UGC (Open and Distance Learning Programmes and Online Programmes) Regulations, 2O2O

May 30, 2022 0
Vlolatlons by Pertyar Ualverslty, Tamll l{adu la runnhg dletance educetlon progranmes aa per UGC (Opea aad Dlstance Learalng Progranmea and Onllne Programmesl Regulatloas ' 2O2O Periyar University was recognised by erstwhile DEC for period from 2OO7 -O8 to 2Ol4-15 and by UGC-DEB for 2Ol9-2O (Academic Session Jan 2O2O only) for o{fering programmes through ODL mode.

It has come to the notice of the Commission through various communications received in UGC ollice that Periyar University, Tamil Nadu is functioning without a full time Director, inadequate full time faculty, inadequate non-teaching stalf, not yet established centre ald running ODL programmes without prior approval of UGC in gross violation of conditions laid down under UGC (Open and Distance Learning Regulations, 2077 , UGC (Open and Distance l,earning Programmes and Online Programmes) Regulations,2O2O and its amendments from time to time.

Accordingly, based on the provisions of the UGC (Open and Distance Learning Prograrnmes and Online Programmes) Regulations, 2O2O, the recommendations of the Complaint Redessal Committee (CRC), DEB 12th Working Group, the Commission in its meeting held on 12th February, 2022 has decided the following: 1. No application of the HEI shall be considered for the year 2O22-23 to 2023-24.

2. The application submitted by the HEI for the year 2O2l-22 for offering ODL progr.rmmes is also not be processed.

3. The complaints received/violations noticed details sha-ll be forwarded to Honourable Govemor and the Secretary (HE), State Government for factfinding and needful actions in the matter. (RaJntsh Jain)

Therefore, the general public, students and other stakeholders are cautioned through this public notice not to take admission in any programme offered by Periyar University, Tamil Nadu through ODL mode. Taking admission in such programmes may jeopardise the career of the students, in view of the absence of recogrrition of the programmes by the UGC.

CLICK HERE TO DOWNLOAD FULL UGC DETAILS
Read More

Wednesday, April 27, 2022

AICTE's Training and Learning (ATAL)

Saturday, April 23, 2022

Online Lecture Series on Best Practices in Higher Education

Wednesday, March 30, 2022

மாநில அரசு கல்லூரிகளுக்கும் பொது நுழைவுத்தேர்வு கல்வி அமைச்சர்களுக்கு யுஜிசி தலைவர் கடிதம்

March 30, 2022 0
மாநில அரசு கல்லூரிகளுக்கும் பொது நுழைவுத்தேர்வு கல்வி அமைச்சர்களுக்கு யுஜிசி தலைவர் கடிதம்

மாநில அரசின் கல்லூரிகளிலும் பொது நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்திட வலியுறுத்தி அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கும் கடிதம் எழுத இருப்பதாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் கூறி உள்ளார். நாட்டில் உள்ள 45 ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்பில் சேர, ‘கியூட்’ எனப்படும், பல்கலை பொது நுழைவுத் தேர்வு, நடப்பு கல்வியாண்டில் இருந்து நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்வு விண்ணப்பம் அடுத்த மாதம் 2ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளது.

இந்த பொது நுழைவுத்தேர்வை மாநில அரசின் நிதியுதவியில் செயல்படும் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களிலும் அமல்படுத்தலாம் என யுஜிசி தெரிவித்துள்ளது. அதே சமயம், பொது நுழைவுத்தேர்வு திட்டத்தில் இணையுமாறு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் சமீபத்தில் கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து, மாநில கல்வி அமைச்சர்களுக்கும் அவர் கடிதம் எழுத இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பல்கலைக்கழக மானிய குழுவின் (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார் கூறுகையில், ‘‘ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், கியூட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. பல தனியார் பல்கலைகளும், கியூட் தேர்வு மதிப்பெண்களை தங்கள் மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ள முன் வந்துள்ளன. இது தொடர்பாக அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்களுக்கு கடிதம் எழுத உள்ளேன்.

அதிக அளவில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாநில அரசின் நிதியுதவியில் செயல்படும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களையும் சந்தித்து பேசுவேன். முதல் கட்டமாக குஜராத் மாநிலத்தின் 25 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தினேன். கியூட் தேர்வுக்கு குஜராத் பல்கலைக்கழகங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதே போல் அசாம், கர்நாடகாவை சேர்ந்த துணைவேந்தர்களையும் விரைவில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன்’’ என்றார்.
Read More

Wednesday, December 15, 2021

உயர் கல்வி நிறுவனங்களில் ஆப்லைன், ஆன்லைன் மற்றும் கலப்பு முறையில் தேர்வு நடத்தலாம் - UGC

December 15, 2021 0
கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக குறையாத நிலையில், கல்வி நிறுவனங்களில் சில வழிகாட்டு நெறிமு றைகளுடன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின் றன. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பல்கலைக்கழக மானியக் குழு ஆப்லைன் முறை யில் மட்டுமே தேர்வை நடத்த வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்ட தாக தகவல்கள் வந்தன.

ஆனால், அது பல்க லைக்கழக மானியக்கு முவால் வெளியிடப்பட வில்லை என்று அது திட்டவட்டமாக தெரி வித்து இருக்கிறது. மேலும் தொடர்ந்து வகுப்புகள், தேர்வுகளை எவ்வாறு நடத்தலாம் என்பது பற் றிய வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானி யக்குழு அறிவித்து இருக் கிறது. அதில் கூறியிருப்பதா வது:

கொரோனாதொற்று உருவானதில் இருந்து உயர்கல்வி நிறுவனங்க ளின் கல்வி செயல்பா டுகளை பல்கலைக்கழக மேலும் சுகாதாரம் மற் றும் குடும்ப நல அமைச்ச கம்,பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்க ளில் கொரோனா வழி காட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத் துவதை உறுதி செய்ய கோரப்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு, வளாகங்களை திறப்பது பற்றி உயர்கல்வி நிறுவனங்கள் தகுந்த முடிவை எடுக்கலாம். மேலும் பல்கலைக்க ழக மானியக்குழு வழி காட்டுதல்களின் படி, ஆப்லைன், ஆன்லைன், கலப்பு முறையில் வகுப்பு கள் மற்றும் தேர்வுகளை நடத்தலாம். இதுதவிர கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு மத் திய, மாநில அரசுகளால் அவ்வப்போது வழங் கப்படும் நெறிமுறைகள். வழிகாட்டுதல்கள் வழிமு றைகளை மற்றும் ஆலோச னைகளையும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
Read More

Saturday, November 13, 2021

UGC NET EXAM DATE ANNOUNCED.

November 13, 2021 0
Date and Subject wise Schedule for UGC - NET December 2020 and June 2021 cycles

The National Testing Agency ( NTA ) will be conducting the UGC - National Eligibility Test ( NET ) December 2020 and June 2021 cycles for Junior Research Fellowship and eligibility for Assistant Professor between 20 , 21 , 22 , 24 , 25 , 26 , 29 , 30 November and 01 , 03 , 04 & 05 December 2021 in Computer Based Test ( CBT ) mode . The schedule of UGC - NET December 2020 and June 2021 cycles ( Date , Subject and Shift wise ) is as follows :

UGC NET EXAM DATE NOTIFICATION - Download here
Read More

Thursday, September 16, 2021

கல்லூரிகளில் சாதி பாகுபாடு புகார்கள் மீது கடும் நடவடிக்கை: பல்கலை.க்கு யுஜிசி அறிவுறுத்தல்

September 16, 2021 0
பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களில் பட்டியலினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராகசெயல்படக் கூடாது. வளாகங்களில் எக்காரணம் கொண்டும் சாதிரீதியாக பாகுபாடு காட்டாமல் இருப்பதை கல்வி நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும்.


இதுதவிர சாதி பாகுபாட்டால் பாதிக்கப்படும் மாணவர்கள் புகார் தெரிவிக்க, கல்லூரிகளின் இணையதளத்தில் வசதி ஏற்படுத்தவேண்டும். அவ்வாறு பெறப்படும் புகார்களை விசாரிக்க தனி குழுவைஅமைத்து, அவற்றின் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விவரத்தை யுஜிசிக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும்.


அதேபோல், சாதிரீதியான பாகுபாடு விவகாரங்களை கவனமுடன் கையாள்வதற்கு பேராசிரியர்கள், அலுவலர்களிடம் அறிவுறுத்த வேண்டும். இதுதொடர்பாக கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட பணி விவரங்களை யுஜிசி இணையதளத்தில் உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Read More

Post Top Ad

Your Ad Spot