KalviseithiDaily: Loan

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Loan. Show all posts
Showing posts with label Loan. Show all posts

Wednesday, October 19, 2022

கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை உயர்த்த பொதுத்துறை வங்கிகள் முடிவு

October 19, 2022 0
கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை உயர்த்த பொதுத்துறை வங்கிகள் திட்டம்!

கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை ரூ.7.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

-கல்விக் கடன்களுக்கான உத்திரவாத வரம்பை 33 சதவீதம் உயர்த்துவது குறித்து கல்வி அமைச்சகத்துடன் நிதி அமைச்சகத்தில் உள்ள நிதிச் சேவைகள் துறை ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளதாகவும், அத்தகைய நடவடிக்கையானது, தில்லி மற்றும் மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்களில், மொத்த உத்தரவாதத்தை ரூ. 10 லட்சமாக அதிகரிக்க கூடுதல் காப்பீட்டை வழங்கும் மாநில அரசின் திட்டங்களின் வரம்பை ஒட்டுமொத்த காப்பீட்டிற்கு இணையாகக் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

"நிதிச் சேவைகள் துறையானது, கல்விக் கடனுக்கான பிணையமில்லா வரம்பை அதிகரிப்பதற்கு ஆதரவாக உள்ளது, மேலும், கல்விக் கடனுக்கான கட்டணத்தை உயர்த்துவதற்கு கல்வி அமைச்சகத்துடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, இது ரூ. 10 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம்" என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்த மதிப்புள்ள கல்விக் கடன்களை வழங்குவதில் பொதுத்துறை வங்கிககள் எச்சரிக்கையாக இருப்பதால், கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதை காரணம் காட்டி, கல்விக் கடன்களுக்கு தடைகள் மற்றும் கடன்களை தர மறுப்பது போன்ற பல புகார்களை சுட்டிக்காட்டி, கல்விக் கடன்கள் வழங்குவதை விரைவுபடுத்துமாறு பொதுத்துறை வங்கிகளை அரசாங்கம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையடுத்து குறைந்த மதிப்புள்ள கல்விக் கடன்கள் செயல்படாத சொத்துக்களாக மாறி வருவதால், வங்கிகள் கடன் வழங்குவதில் எந்தத் தயக்கத்தையும் சமாளிக்க உத்தரவாத வரம்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போதைய நடைமுறைப்படி, பிணையமில்லாக் கடன் பெறுபவர்கள் தற்போது ரூ. 7.5 லட்சம் வரை கடனுக்கான காப்பீட்டிற்கு பெயரளவிலான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கடன் வரம்பை அதிகரிப்பதற்கு இந்த கட்டணம் சிறிதளவு அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Read More

Tuesday, July 5, 2022

வீட்டுக் கடன் உடனே கிடைக்க செய்ய வேண்டிய விஷயங்கள்!

July 05, 2022 0
நடுத்தர மக்களின் வீடு வாங்கும் கனவு வங்கிக் கடன் மூலமாக தான் பெரும்பாலும் முழுமை பெறுகிறது. ஆனால் அதனை பெறுவதற்கு மாதக் கணக்கில் செருப்புகள் தேய வங்கிப் படிகட்டுகளில் ஏறி இறங்க வேண்டியுள்ளது. இதற்காகவே கூடுதல் வட்டி கட்டினாலும் பரவாயில்லை என பிற இடங்களில் மக்கள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். உங்களது வங்கிக் கடன் விண்ணப்பத்திற்கு உடனே ஒப்புதல் கிடைக்க என்னென்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம். சிபில் ஸ்கோர்

நல்ல சிபில் ஸ்கோர் அல்லது கிரெடிட் ஸ்கோர் வீட்டுக் கடனை விரைவாகப் பெறுவதற்கு முக்கியம். சிபில் என்பது ஆர்பிஐ.,யால் அங்கீகரிக்கப்பட்ட நான்கு கடன் அமைப்புகளில் ஒன்று. இது இந்தியர்கள் அனைவரின் கடன் தரவுகளையும் வைத்திருக்கும். சிபில் ஸ்கோரை அதிகரிக்க கிரெடிட் கார்டு பில்கள் போன்ற உங்கள் தவனைகளை சரியான நேரத்திற்குள் செலுத்துங்கள்.

கிரெடிட் கார்டில் அனுமதிக்கப்பட்ட கடன் அளவை விட குறைவாகவே பயன்படுத்துங்கள். உதாரணத்திற்கு மாதம் ரூ.50 ஆயிரம் செலவிட முடியும் எனில் ரூ.30 ஆயிரத்துக்கு மட்டும் கிரெடிட் கார்டை பயன்படுத்துங்கள். கடன் பாக்கி இருந்தால் விரைவில் செலுத்த முயற்சிக்கவும். கடன் அறிக்கையை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளுங்கள். பிழைகள் ஏதேனும் இருந்தால் மாற்றக் கோருங்கள்.

சரியான நிறுவனத்தை கண்டறியவும்

சில வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றவர்களை விட வேகமாக உங்கள் வீட்டுக் கடனை அங்கீகரிக்கக் கூடும். சந்தையில் ஏராளமான வாய்ப்புகள் தற்போது உள்ளன. ஒவ்வொரு நிறுவனத்தின் கடனுக்கான ஒப்புதல் நேரத்தை தெரிந்துகொள்ளுங்கள். நமது சிபில் ஸ்கோர், வருமானம் மற்றும் பிற காரணிகளை அளித்து வீட்டுக் கடனுக்கான முன் ஒப்புதலைப் பெற முனையுங்கள். இதன் மூலம் நீங்கள் கடன் வழங்க ஏற்ற நபர் என முடிவெடுப்பர். இது கடனுக்கு விண்ணப்பிக்கும் போது செயல்முறையை எளிதாக்கும். அதிக முன்பணம்

வீட்டுக் கடனுக்கான ஒப்புதலை விரைவாகப் பெற செய்ய வேண்டிய விஷயங்களில் ஒன்று டவுன் பேமென்ட் எனும் முன்பணத்தை அதிகம் வழங்குவதாகும். கடன் நிறுவனங்கள், வங்கிகள் பொதுவாக வீட்டு மதிப்பில் 20 சதவீதம் முன்பணத்தை எதிர்பார்ப்பார்கள். அதற்கேற்ப நாம் 20 சதவீதத்திற்கு மேல் வழங்கினால் நமது கடனை அங்கீகரிக்கும் வாய்ப்பு அதிகமாக்கும். மேலும் நமது வட்டி வீதமும் குறையும். 20 சதவீதத்திற்கு மேல் முன்பணம் செலுத்த முடியாத நிலை எனில் வேலைக்குச் செல்லும் மனைவி அல்லது சகோதரருடன் இணைந்து விண்ணப்பிக்கலாம்.

எல்லா தகவல்களையும் திரட்டிக்கொள்ளுங்கள்

வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் உங்கள் நிதி சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் திரட்டிக்கொள்ள வேண்டும். சிபில் ஸ்கோரை முன்னர் இருந்தே ஒழுங்காக பராமரிப்பது, உங்கள் வருமானம், கடன்கள் மற்றும் சொத்துக்கள் பற்றிய தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் தகவல்களையும் கையில் வைத்திருக்க வேண்டும்.
Read More

Tuesday, June 28, 2022

பெர்சனல் லோன் வாங்க போறீங்களா..? ஒரு நிமிஷம் இதை பாருங்க..!

June 28, 2022 0
தனிநபர் கடன் என்பது நாளைய வருமானத்தை இன்றே பயன்படுத்துவதாகும். வீட்டுக்கடன், கல்விக்கடன் போன்றவற்றை விட தனிநபர் கடன் பெறுவது எளிமையானது. நீங்கள் ஏற்கனவே ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் எனில், தனிநபர் கடன் பெறுவதற்காக வாய்ப்புகள் ஏராளமாக உண்டு.

எளிதாக கடன் பெற முடிந்தாலும், நீங்கள் மற்ற கடன்களை காட்டிலும் இதற்கு அதிகமாக வட்டி செலுத்த போகிறீர்கள் என்பதை பார்ப்பது நல்லது. ஏனெனில் தனிநபர் கடன் என்பது பாதுகாப்பற்ற கடன்கள் என்பதால் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். ஏனெனில், நீங்கள் நகைகள் அல்லது வீட்டை அடமானமாக வைத்து கடன்கள் பெறுவதில்லை.

தனிநபர் கடன் பெற மாத சம்பளதாரர், ஓய்வூதியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் வட்டி விகிதமானது, கடன் தொகை, சிபில் ஸ்கோர், தவணை காலம் பொறுத்து மாறுபடும்.

ஜூன் 23ம் தேதி நிலவரப்படி, தனிநபர் கடனாக ரூ.1 லட்சம் பெற, பல்வேறு வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதம் குறித்து வங்கிகளின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை பார்ப்போம். இதனுடன் ஒவ்வொரு வங்கிக்கும், செயலாக்க கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு வேறுபடும். 1. பேங்க் ஆப் பரோடா - 9.20 - 16.55 சதவீதம்

2. யூனியன் பேங்க் ஆப் இந்தியா - 9.30 - 13.40 சதவீதம்

3. இந்தியன் வங்கி - 9.40 - 9.90 சதவீதம்

4. ஐ.டி.பி.ஐ வங்கி லிமிடெட் - 9.50 - 14 சதவீதம்

5. பஞ்சாப் நேஷனல் வங்கி - 9.80 - 14.65 சதவீதம்

6. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா - 9.80 - 12.30 சதவீதம்

7. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா - 9.85 - 10.05 சதவீதம்

8. பேங்க் ஆப் மஹாராஷ்டிரா - 10.35 - 13.70 சதவீதம்

9. பஞ்சாப் & சிந்த் பேங்க் - 10.40 - 12.40 சதவீதம்

10. ஆக்ஸிஸ் வங்கி - 10.49 - 24 சதவீதம்

11. ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க் - 10.49 - 24 சதவீதம்

12. பந்தன் பேங்க் லிமிடெட் - 10.50 -18 சதவீதம்

13. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லிமிடெட் - 10.50 - 19 சதவீதம்

14. யூகோ வங்கி - 10.65 - 10.90 சதவீதம்

15. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 10.90 - 11.90 சதவீதம்
Read More

Wednesday, June 22, 2022

வீட்டுக்கடனுக்கான EMI சுமையை குறைக்கும் வழிகள்

June 22, 2022 0
சராசரி இந்தியர்களின் கனவு, குறைந்தபட்சம் சொந்த வீடு வாங்க அல்லது கட்ட வேண்டும் என்பது தான். இன்றைய காலத்தில், அதனை அடைய ஏராளமான வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது. தகுதியுடைய நபர்களுக்கு வங்கிகள், நிதிநிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு கடன் தர தயாராக இருக்கின்றன. அதேநேரம், வீட்டுக்கடனுக்கான வட்டி உயர்வு என்பது நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. இருந்தாலும், சில வழிகள் மூலம் வீட்டுக்கடனை கட்டுக்குள் வைக்க இயலும். அவை என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.
1. ப்ளோட்டிங் வட்டி விகிதத்துக்கு மாறுங்கள் :

நீங்கள் புதிதாக வீட்டுக்கடன் பெற்றவர் எனில், சில காலம் எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனில் வங்கி அல்லது நிதிநிறுவனங்கள், குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு நிரந்தர வட்டி விகிதத்தில் இருக்கும். அதற்கு பிறகு ப்ளோட்டிங் ( Floating) வட்டி விகிதத்திற்கு மாறும். இதனை மதிப்பீடு செய்யுங்கள். இது போன்ற வீட்டு கடன்களில், சில நேரங்களில் நிரந்தர வட்டி விகிதத்தை விட, ப்ளோட்டிங் வட்டி விகிதம் குறைவாக இருக்க கூடுமென்பதை மறக்க வேண்டாம்.

2. ஈ.பி.ஆரை தேர்ந்தெடுங்கள் :

அனைத்து புதிய கடன்களும் அக்டோபர் 2019க்கு பிறகு வெளிப்புற அளவுகோல் விகிதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பழைய கடன்கள், புதிய விகிதத்திற்கு மாற்றும்படி விண்ணப்பிக்கும் வரை, பழைய அளவிலேயே தொடரும். எனவே வீட்டுக்கடன் பழைய கடன் எனில் பழைய விகிதத்தையும், வங்கிக்கு செலுத்தும் வட்டி விகிதத்தையும் சரிபார்க்க வேண்டும். குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி, ஈபிஆர் (EBR) வெளிப்புற அளவுகோல் அடிப்படையில் புதிய விகிதத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும் 3. குறைந்த வட்டி விகிதத்துக்கு மாறுதல் :

உங்கள் வீட்டுக்கடன் வங்கி வட்டி விகிதத்தோடு, பிற வங்கி அளிக்கும் வட்டி விகிதத்தை ஒப்பீடு செய்து பாருங்கள். நீங்கள் செலுத்தும் வட்டியை விட, வேறு வங்கியில் குறைந்த வட்டி எனில், வங்கி கடனை அங்கு மாற்றி கொள்ளுங்கள். வங்கி வட்டி விகிதம் 0.5 சதவீதம் அல்லது அதற்கு மேல் வித்தியாசம் இருப்பின், மாற்றி கொள்வது உங்களுக்கு நலம் பயக்கும்.

4. கடன் ஸ்கோர் மூலம் பேரம் :

வருமானம் அல்லது தொழிலில் முன்னேற்றம், நல்ல கிரெடிட் ஸ்கோர் இருக்கும்பட்சத்தில், ஏற்கனவே வீட்டுக்கடன் அளித்த வங்கி அல்லது நிதிநிறுவனத்திடம் பேரம் பேசி வட்டி விகிதத்தை குறைக்கலாம். இதன் மூலம் குறிப்பிட்ட வட்டி விகிதத்தை சேமிக்க முடியும்.

5. தவணை காலத்தை நீட்டித்தல் :

மாதாந்திர தவணை காலத்தை அதிகரித்து கொள்ளுங்கள். ஓய்வு பெறும் வயதான 60 முதல் 65 வயது வரை நீட்டித்து கொள்ளலாம். உதாரணமாக, நீங்கள் 35 வயது நபர் எனில், 20 ஆண்டுகள் செலுத்தும் வகையில் கடன் வாங்கலாம். அதாவது ஓய்வு பெறும் வயது, 60 என கணக்கிட்டால், கடனை திருப்பி செலுத்தும் காலத்தை, 25 ஆண்டுகள் வரை நீட்டித்து கொள்ளலாம். 6. ஹோம் சேவர் கணக்கை தேர்ந்தெடுத்தல் :

ஹோம் சேவர் கடனை தேர்ந்தெடுப்பதால், வங்கி கடன் கணக்கில் நீங்கள் உங்களது தனிப்பட்ட கூடுதல் சேமிப்புகளை செலுத்தலாம். இதனால் மாதம் கட்டாயம், குறைந்தபட்ச தொகை செலுத்துவதில் இருந்து விடுபடலாம். ஆனால் பொதுவாக இந்த கடனுக்கான வட்டி, வழக்கமான வட்டி விகிதத்தை விட 1 முதல் 1.5 சதவீதம் அதிகமாக இருக்கும்.

7. குறிப்பிட்ட தொகை முன்பணமாக செலுத்துதல்:

வீட்டுக்கடன் திருப்பி செலுத்தும் காலம், ஏற்கனவே ஓய்வு வயது வரை உள்ள நிலையில், தவணை காலத்தை நீட்டிப்பது கடினமான ஒன்று. எனவே இ.எம்.ஐ சுமையை குறைக்க உங்களுக்கு முன் இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு. வீட்டுக்கடன் கணக்கில், பகுதியாக குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே செலுத்துவது தான். சில்லறை வீட்டுக்கடன்கள் பெரும்பாலும் ப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் தான் இருக்கும். எனவே முன்கூட்டி பணம் செலுத்துவதற்கு அபராதம் எதுவும் விதிக்கப்படாது.
Read More

Wednesday, June 1, 2022

வீட்டில் இருந்தபடியே கடன் பெறும் முறை:விவசாயிகளுக்கான புதிய செயலி

June 01, 2022 0
வீட்டில் இருந்தபடியே கடன்

வீட்டில் இருந்தபடியே விவசாயிகளுக்கு கடன் பெற்றுத்தர 'அக்ரி பை' எனப்படும் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் நல்ல விளைச்சலை பெற உரிய நேரத்தில் விதை, உரம் போன்றவை எவ்வளவு முக்கியமோ அதே அளவு பணமும் தேவை. ஆனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு வங்கியில் கடன் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது.

கூட்டுறவு வங்களில் கிடைக்கும் கடன் தொகை அவர்களுக்கு போதமானதாக இல்லை.தேசிய வங்கிகள், பெரிய விவசாயிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது. இதனால் 80 சததவீதம் விவசாயிகள் வெளியிடத்தில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய விவசாயிகளுக்கு சுலபமாக, தேவையான நேரத்தில் கடன் வழங்கும் நோக்கில் 'அக்ரி பை' எனப்படும் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, தங்களது தாலுகா, கிராமம், நிலத்தின் சர்வே நம்பர் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும்; அதன்பிறகு உங்களுக்கு ஒரு முகவரி தயாராகும்;

பின் 'அக்ரி பை' ஊழியர்கள் விவசாயிகளின் விபரங்களை வங்கிகளுக்கு அனுப்புவர். விவசயாகளுக்கு கடன் கிடைக்கும் வரை உதவுவர்.இந்த செயலி மூலம் விவசாயிகள், விவசாய வேலைகளை விட்டு வங்கிகளுக்கு அலைவது தவிர்க்கப்படும். விவசாயிகளுக்கான புதிய செயலி

வீட்டில் இருந்தபடியே கடன் கிடைக்கும். பொதுவாக விவசாயிகள் வங்கிக்கு கடன் கேட்டு செல்லும் போது அதிகாரிகள் தயக்கம் காட்டுவது வழக்கம். உரிய நேரத்தில் பணம் வசூல் செய்ய முடியாது என கருதுவர்.

அத்தகைய வங்கிகளின் மனதை மாற்றும் முயற்சியை இவர்கள் மேற்கொள்வர். செயலியில் விவசாயியின் நிலம் எவ்வளவு; அதில் என்ன விளைவிப்பர்; எவ்வளவு லாபம் வரும் போன்ற தகவல்களை பதிவிட்டு வங்கிகளுக்கு புரிய வைப்பர்.

இதன் மூலம் விவசாயிகளுக்கு எளிதில் கடன் கிடைக்கும் என 'அக்ரி பை' நிறுவாக இயக்குனர் அபிலாஷ் திருப்பதி தெரிவித்துள்ளார்.மேலும் நிலத்தில் என்ன விளைவிக்கலாம்; எந்த மாதிரியான மருந்து தெளிக்கலாம்; எந்த உரம் போடலாம்; நோய் தாக்கினால் தீர்வு; வானிலை நிலவரம்; பயிர்களுக்கு மார்க்கெட்டில் தற்போது எவ்வளவு கிடைக்கும்; நான்கு மாதம் கழித்து எவ்வளவு விலை கிடைக்கும் போன்ற விபரங்களும் இடம் பெற்றிருக்கும்.
Read More

Sunday, December 26, 2021

கல்வி உதவித்தொகை வருமான வரம்பு உயர்வு

December 26, 2021 0
கல்லுாரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தில், பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற, பெற்றோரின் ஆண்டு வருமான உச்சவரம்பு, ௨ லட்சம் ரூபாயாக இருந்தது. இதை நடப்பாண்டு முதல், 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மூன்றாண்டு இளங்கலை மாணவர்களுக்கு, எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை பட்டப்படிப்பு, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு, கால்நடை மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், வேளாண்மை, பொறியியல், சட்டம் படிக்கும் மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமான உச்சவரம்பு, 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot