பெர்சனல் லோன் வாங்க போறீங்களா..? ஒரு நிமிஷம் இதை பாருங்க..!

தனிநபர் கடன் என்பது நாளைய வருமானத்தை இன்றே பயன்படுத்துவதாகும். வீட்டுக்கடன், கல்விக்கடன் போன்றவற்றை விட தனிநபர் கடன் பெறுவது எளிமையானது. நீங்கள் ஏற்கனவே ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் எனில், தனிநபர் கடன் பெறுவதற்காக வாய்ப்புகள் ஏராளமாக உண்டு.

எளிதாக கடன் பெற முடிந்தாலும், நீங்கள் மற்ற கடன்களை காட்டிலும் இதற்கு அதிகமாக வட்டி செலுத்த போகிறீர்கள் என்பதை பார்ப்பது நல்லது. ஏனெனில் தனிநபர் கடன் என்பது பாதுகாப்பற்ற கடன்கள் என்பதால் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். ஏனெனில், நீங்கள் நகைகள் அல்லது வீட்டை அடமானமாக வைத்து கடன்கள் பெறுவதில்லை.

தனிநபர் கடன் பெற மாத சம்பளதாரர், ஓய்வூதியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் வட்டி விகிதமானது, கடன் தொகை, சிபில் ஸ்கோர், தவணை காலம் பொறுத்து மாறுபடும்.

ஜூன் 23ம் தேதி நிலவரப்படி, தனிநபர் கடனாக ரூ.1 லட்சம் பெற, பல்வேறு வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதம் குறித்து வங்கிகளின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை பார்ப்போம். இதனுடன் ஒவ்வொரு வங்கிக்கும், செயலாக்க கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு வேறுபடும். 1. பேங்க் ஆப் பரோடா - 9.20 - 16.55 சதவீதம்

2. யூனியன் பேங்க் ஆப் இந்தியா - 9.30 - 13.40 சதவீதம்

3. இந்தியன் வங்கி - 9.40 - 9.90 சதவீதம்

4. ஐ.டி.பி.ஐ வங்கி லிமிடெட் - 9.50 - 14 சதவீதம்

5. பஞ்சாப் நேஷனல் வங்கி - 9.80 - 14.65 சதவீதம்

6. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா - 9.80 - 12.30 சதவீதம்

7. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா - 9.85 - 10.05 சதவீதம்

8. பேங்க் ஆப் மஹாராஷ்டிரா - 10.35 - 13.70 சதவீதம்

9. பஞ்சாப் & சிந்த் பேங்க் - 10.40 - 12.40 சதவீதம்

10. ஆக்ஸிஸ் வங்கி - 10.49 - 24 சதவீதம்

11. ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க் - 10.49 - 24 சதவீதம்

12. பந்தன் பேங்க் லிமிடெட் - 10.50 -18 சதவீதம்

13. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லிமிடெட் - 10.50 - 19 சதவீதம்

14. யூகோ வங்கி - 10.65 - 10.90 சதவீதம்

15. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 10.90 - 11.90 சதவீதம்
Post a Comment (0)
Previous Post Next Post