KalviseithiDaily: Government schools

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Government schools. Show all posts
Showing posts with label Government schools. Show all posts

Saturday, January 14, 2023

நடுநிலைப் பள்ளியை பராமரிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு

January 14, 2023 0
நடுநிலைப் பள்ளியை பராமரிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு

வடமாலை நகராட்சி பள்ளியில், பராமரிப்பு பணிகள் செய்ய, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், வடமாலை நகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி பழமையானது என்பதால், பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் என, தலைமையாசிரியர், நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தார்.

இந்த மனுவை பெற்ற நகராட்சி நிர்வாகம், பள்ளியில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் செய்ய, 11.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்துள்ளது. நகராட்சி கல்வி நிதி 2022 - 23ம் நிதியாண்டில், இப்பணிகள் மேற்கொள்ள, நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Read More

Thursday, December 29, 2022

அரசுப் பள்ளிக்கு முன்னாள் மாணவர் செய்த உதவி - இன்ப அதிர்ச்சியில் ஆசிரியர்கள்!!

December 29, 2022 0
சிங்கம்புணரி அரசுப் பள்ளிக்கு முன்னாள் மாணவர் செய்த உதவி

இன்ப அதிர்ச்சியில் ஆசிரியர்கள்

சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவர் ஒருவர் செய்த உதவியால் ஆசிரியர்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப் போகினர்.

இந்த பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் பலர் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பள்ளிக்கு வருகை புரிந்த ஒருவர், தன்னை பள்ளியின் முன்னாள் மாணவர் என்று அறிமுகம் செய்து கொண்டு, பள்ளிக்கு ஏதாவது உதவி செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். அவர் கூறியதை தொடர்ந்து ஆசிரியர்கள் சில பொருட்கள் தேவைப்படுவதாக கூறினர். உடனே என்னென்ன பொருட்கள் தேவை என்று ஒரு பட்டியலை வாங்கிய அந்த நபர் கூடுதலாக பீரோல், புத்தகங்கள், விளையாட்டு உபகர ணங்கள் என 1,00,000 ரூபாய்க்கு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். அவர் கூட நின்று ஆசிரியர்கள் சிலர் போட்டோ எடுக்க முயன்ற போது அந்த நபர் அதற்கு மறுத்துவிட்டதுடன், எக்காரணத்தை கொண்டும் தனது பெயரையோ, போட்டோவையோ விளம்பரப்படுத்தக் கூடாது என்று கறாராக கூறிவிட்டு சென்றுள்ளார்.

விளம்பரம் தேட விரும்பாமல் பள்ளிக்கு ஒரு லட்ச ரூபாயை அள்ளிக் கொடுத்து விட்டு சென்ற அந்த மாமனிதரின் செய்கையால் ஆசிரியர்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கி போகினர்.

Read More

Tuesday, December 13, 2022

மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம்: சென்னை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

December 13, 2022 0
மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம்: சென்னை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை மேயர் பிரியா நேற்று தொடங்கி வைத்தார்.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி கல்வித் துறையின்கீழ் மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நிர்பயா நிதி மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ரூ.4.67 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 6-ம் வகுப்புமுதல் 12-ம் வகுப்பு வரை பயிலும்மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, மொத்தம் 25 ஆயிரத்து 474 மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட உள்ளன.

பள்ளி மாணவிகளுக்கு ஒருமாதத்துக்கு 10 சானிட்டரி நாப்கின்கள் என்ற வகையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை 20 சானிட்டரிநாப்கின்கள் வழங்கப்படும். அதேபோல் பள்ளிகளில், மாணவிகளின்அவசரத் தேவைக்கு கூடுதலாக 2 மாதங்களுக்கு ஒருமுறை 100 சானிட்டரி நாப்கின்கள் தனி அலமாரிகளில் வைக்கப்படும்.

அந்த வகையில் ஒரு வருடத்துக்கு 26.59 லட்சம் சானிட்டரின் நாப்கின்கள் சென்னைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டமானது வரும் 3 ஆண்டுகளுக்கு தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிகநகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் செயல்படுத்தப்படும்.

மாநகராட்சி ரிப்பன் கட்டிட கூட்ட அரங்கில் மேயர் பிரியா இத்திட்டத்தை தொடங்கி வைத்து, நாப்கின்அலமாரிகளை பள்ளி தலைமைஆசிரியர்களிடமும், சானிட்டரி நாப்கின்களை மாணவிகளிடமும் வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சுகாதார நிலைக்குழுத் தலைவர் சாந்தகுமாரி, கல்வி துணைஆணையர் டி.சினேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Read More

Monday, October 31, 2022

HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி: பிளஸ் 2 முடித்த அரசு பள்ளி மாணவர்கள் சேரலாம்

October 31, 2022 1
ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி: பிளஸ் 2 முடித்த அரசு பள்ளி மாணவர்கள் சேரலாம்

ஹெச்சிஎல் நிறுவனத்தின் வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி திட்டத்தில் பிளஸ் 2 முடித்த அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஹெச்சிஎல் நிறுவனம் வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

60 சதவீத மதிப்பெண்

அதன்படி 2021-22-ம் கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம். தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், அரசுப் பள்ளி மாணவர்கள் 2,000 பேருக்கு இந்த திட்டத்துக்கான பயிற்சி கட்டணம் முழுவதையும் வழங்குகிறது.

இந்த பயிற்சியின்போது 7-வது மாதம் முதல் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

ஐடி துறையில் வேலைவாய்ப்பு

பணியில் சேர்ந்தவுடனே தொடக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூ.1.70 லட்சம் முதல் 2.20 லட்சம் வரை (பணிநிலைக்கு ஏற்ப) தரப்படும். இதுதவிர ஹெச்சிஎல் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே உயர்கல்வியையும் தொடர முடியும். அதற்கான கல்விக் கட்டணத்தின் ஒரு பகுதியை ஹெச்சிஎல் நிறுவனம் வழங்கும். இந்த திட்டத்தின் தேர்வு முகாம் இன்று (அக்.30) சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சிமற்றும் ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படுகிறது.

முன்பதிவு செய்ய வேண்டும்

இதையடுத்து விருப்பமுள்ள வர்கள் https://bit.ly/HCLTB-Tamilnadu என்ற வலைதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களை சென்னை - 88079 40948, மதுரை - 9788156509, திருநெல்வேலி- 98941 52160, திருச்சி - 94441 51303, கோவை, ஈரோடு, திருப்பூர் - 89032 45731, 98655 35909. ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்
Read More

Saturday, October 29, 2022

அரசுப் பள்ளிகளில் மழைக்கால பாதுகாப்புப் பணிகள்: அன்புமணி வலியுறுத்தல்

October 29, 2022 0
அரசுப் பள்ளிகளில் மழைக்கால பாதுகாப்புப் பணிகள்: அன்புமணி வலியுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் மழைக் கால பாதுகாப்புப் பணிகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

வடகிழக்குப் பருவமழை சனிக்கிழமை தொடங்கும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், அரசுப் பள்ளிகளில் மழைக்கால விபத்துகள், பாதிப்புகளைத் தடுக்கும் வகையிலான முன்னெச்சரிக்கை பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும்படி பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், அதற்கான நிதி வழங்கப்படவில்லை. மழைக்கால பாதுகாப்புப் பணிகள், பிற பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்படி ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் வழங்கப்பட வேண்டிய இந்த நிதி, நடப்பாண்டில் இதுவரை வழங்கப்படவில்லை.

மாணவச் செல்வங்களின் பாதுகாப்பு சாா்ந்த விஷயங்களில் பள்ளிக்கல்வித்துறை அலட்சியம் காட்டக் கூடாது. தேவையான நிதியை பள்ளிக் கல்வித்துறை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.
Read More

Friday, October 28, 2022

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் : உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

October 28, 2022 0
தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் இருக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் இருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. பள்ளி வாகனங்களுக்கு பல விதிகள் இருக்கும் போது ஆட்டோ ரிக்சாகளுக்கு என்ன விதிகள் இருக்கிறது என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் முறையாக பின்பற்றவும் உயர்நிதிமன்ற நீதிபதிகள் உத்தரவு அளித்துள்ளனர்.

குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோ, ரிக்சாக்களில் பெற்றோர்கள் எப்படி அனுப்புக்கின்றனர் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்து பள்ளிகளும் வாகன விதிகளை முறையாக பின்பற்ற பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளார். உடனடியாக அனைத்து பள்ளி கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்ற தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். நாகர்கோவிலை சேர்ந்த சுயம்புலிங்கம் தாக்கல் செய்த பொதுநல வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
Read More

Tuesday, October 18, 2022

மாநகராட்சிப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கிய முன்னாள் மாணவா்கள்

October 18, 2022 0
மாநகராட்சிப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கிய முன்னாள் மாணவா்கள்

சென்னை ராணிமேரி கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் மாநகராட்சிப் பள்ளிகளுக்கு பொது அறிவு புத்தகங்களை இலவசமாக வழங்கினா்.

சென்னை ராணிமேரி கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் அமைப்பு சாா்பில், மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு பயனுள்ள பொது அறிவு வழங்கும் புத்தகங்களை இலவசமாக வழங்கினா்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்ட அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த அந்தக்கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் குழுவினா், மாநகராட்சி மேயா் ஆா்.பிரியாவை சந்தித்து, மாநகராட்சிப் பள்ளிக்கு இலவச புத்தகங்களை வழங்கினா்.

அப்போது, அறிவியல், தகவல் தொழில் நுட்பம், கணினி அறிவியல், தமிழ் உள்ளிட்ட பொது அறிவு தகவல்கள் அடங்கிய தலா 23 புத்தகங்கள் கொண்ட 25 தொகுப்பு புத்தகங்களை அவா்கள் வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் ஆணையா் ககன்தீப்சிங்பேடி, துணை மேயா் மு.மகேஷ்குமாா், கல்விக்குழுத்தலைவா் த.விஸ்வநாதன், துணை ஆணையா்(கல்வி) டி.சினேகா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Read More

Friday, September 30, 2022

பள்ளி படிப்பை கைவிடுவோர் அதிகரிப்பு! கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி - Increase in school dropouts! Shock in academic research

September 30, 2022 0
பள்ளி படிப்பை கைவிடுவோர் அதிகரிப்பு! கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி - Increase in school dropouts! Shock in academic research

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில், எட்டாம் வகுப்புடன் படிப்பை கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பள்ளிக் கல்வி துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதி தேர்வு முடிந்ததும், தேர்ச்சி பெறும் மாணவர்களில், உயர் வகுப்பில் சேர்ந்தோர் எண்ணிக்கை பற்றி ஆய்வு செய்யப்படும்.அதன்படி, கடந்த கல்வி ஆண்டில் பள்ளி படிப்பை முடித்தவர்கள், நடப்பு கல்வி ஆண்டில் படிப்பை தொடர்கின்றனரா என ஆய்வு செய்யப்பட்டது.

இதில், தென்காசி, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், ஐந்தாம் வகுப்புடன் படிப்பை முடிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது, ஆறாம் வகுப்பில் சேராமல், படிப்பை பாதியில் விட்டுள்ளனர்.

சென்னை, திண்டுக்கல் மற்றும் கடலுார் மாவட்டங்களில், எட்டாம் வகுப்புடன் படிப்பை கைவிடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது, 10ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாமல், பல மாணவர்கள் இடைநிற்றல் ஆவதாக தெரிய வந்துள்ளது. இதேபோல், தென்காசி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், எட்டாம் வகுப்புடன், படிப்பை கைவிடுவதும் தெரியவந்துள்ளது.

திண்டுக்கல், வேலுார், கரூர் மாவட்டங்களில், 10ம் வகுப்பு முடித்து, பிளஸ் 1 சேராமல் படிப்பை கைவிடுவோர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.சென்னை, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர் எண்ணிக்கையும், முந்தைய ஆண்டுகளை விட குறைந்திருக்கிறது.

திருப்பத்துார், பெரம்பலுார், நாகப்பட்டினம் மாவட்டங்களில், பல பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையே நடக்கவில்லை. அதனால், பல அரசு பள்ளிகளில், சில வகுப்புகள் மாணவர்கள் இன்றி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு தகவல்கள் அனைத்தும், பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் உத்தரவுப்படி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.
Read More

Monday, September 19, 2022

கோவை அரசுப்பள்ளிகளுக்கு...என்னதான் ஆச்சு?

September 19, 2022 0

What are the problems in government schools?
Which school is better in Coimbatore?
Which is the No 1 school in Tamilnadu?
How many government schools are there in Coimbatore?
கோவை அரசுப்பள்ளிகளுக்கு...என்னதான் ஆச்சு? - What's wrong with Coimbatore government schools?

அதிக கல்வி நிறுவனங்கள் கொண்ட, கோவை மாவட்டத்தில், அரசுப்பள்ளிகளில் இருந்து, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், 50 சதவீதம் பேர் மட்டுமே, தேர்வு எழுதியுள்ளனர். மாணவர்களின் மத்தியில் உள்ள தயக்கத்தை போக்கி, வரும் ஆண்டுகளிலாவது அதிக மாணவர்களை பங்கேற்கச் செய்ய, பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்வர வேண்டும்.'நீட்' எனும் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வு, கடந்த ஜூலை, 17 ம் தேதி நடந்தது. தேர்வு ரிசல்ட், கடந்த 7 ம் தேதி வெளியான நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், கட்-ஆப் மதிப்பெண்கள் குறித்த, எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக, இத்தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள் குறித்த விபரம், இயக்குனரகத்தில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளது.

35 சதவீத தேர்ச்சி மட்டுமே

மொத்தம், 17 ஆயிரத்து 972 அரசுப்பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், இத்தேர்வை 12 ஆயிரத்து 840 பேர் எழுதினர். இதில், 4 ஆயிரத்து 447 பேர் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசுப்பள்ளிகள், 35 சதவீத தேர்ச்சி மட்டுமே பெற்றன.அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் இருந்து, ஆயிரத்து 912 பேர் விண்ணப்பித்தனர். இதற்கு அடுத்த நிலையில், திருவண்ணாமலை, திருவள்ளூர், தர்மபுரி மாவட்டங்களில் இருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இத்தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர்.ஆனால், கோவை மாவட்டத்தில், 116 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ள நிலையில், 166 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

இதில் தேர்வுக்கு, 50 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்' ஆன நிலையில், 82 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இதில் 74 பேர், தேர்ச்சி பெற்றுள்ளனர். 90 சதவீத தேர்ச்சி விழுக்காடு பெற்றிருப்பினும், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை சொற்பம் என்பது குறிப்பிடத்தக்கது.சென்னைக்கு அடுத்தபடியாக, அதிக கல்வி நிறுவனங்கள் கொண்ட, கோவை மாவட்டத்தில், அரசுப்பள்ளி மாணவர்கள் மத்தியில், போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாதது, இதற்கு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது தகைசால் மற்றும் மாடல் பள்ளி ஆகிய இரு திட்டங்களிலும், கோவை மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களிலாவது, நுழைவுத்தேர்வுகளில் பங்கேற்போரின் சதவீதத்தை அதிகரிக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்வர வேண்டுமென்ற, கருத்து எழுந்துள்ளது.

ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில ஆலோசகர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''போட்டியில் முதலிடம் பெறுவது என்பது, பங்கேற்பாளரின் எண்ணிக்கையை பொறுத்ததே. அதிக தேர்ச்சி சதவீதம் பெறுவதற்கு, முக்கியத்துவம் அளிக்காமல், அதிக மாணவர்களை இதுபோன்ற தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, ஊக்குவிக்க வேண்டும்.

இம்முயற்சி, பள்ளிகளின் முன்னெடுப்பில்தான் சாத்தியமாகும். தலைமையாசிரியர், பாட ஆசிரியர்கள், நுழைவுத்தேர்வு எழுதுவதன் அவசியத்தை, மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். தேர்ச்சி பெற்ற அனைவருக்கும், இடஒதுக்கீட்டில் சீட் கிடைக்க போவதில்லை. ஆனால், இதுபோன்ற முயற்சிகள், போட்டித்தேர்வுகளுக்கு கைகொடுக்கும். குறைந்தபட்சம் ஒரு பள்ளியில் இருந்து, 10 மாணவர்களையாவது நீட் தேர்வுக்கு அனுப்ப வேண்டியது அவசியம்,'' என்றார்.
Read More

Friday, September 16, 2022

Children go to school with gun protection in Kerala - கேரளாவில் துப்பாக்கி பாதுகாப்புடன் பள்ளி செல்லும் குழந்தைகள்

September 16, 2022 0
கேரளாவில் துப்பாக்கி பாதுகாப்புடன் பள்ளி செல்லும் குழந்தைகள் - Children go to school with gun protection in Kerala

கேரளாவில் தெருநாய்களின் தொந்தரவு குறித்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில், அங்கு ஒருவர், பள்ளி மாணவியரை துப்பாக்கி ஏந்தியபடி அழைத்துச் செல்லும் 'வீடியோ' சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில், சமீபகாலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. நடந்து செல்பவர்கள் மட்டுமின்றி வாகனங்களில் செல்வோரையும் விரட்டி கடிகின்றன.இதுதொடர்பாக, வழக்கறிஞர் வி.கே.பிஜூ என்பவர், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தெருநாய்களை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவும், 'ரேபிஸ் வைரஸ்' தொற்றுள்ள நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் உத்தரவிட்டனர்.

மேலும், தெருநாய்களுக்கு உணவு கொடுப்பவரே, அதனால் கடிபடும் நபருக்கான மருத்துவச் செலவை ஏற்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.இந்நிலையில், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பேக்கல் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் பள்ளி குழந்தைகளை துப்பாக்கி ஏந்தியபடி அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, ''குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் பள்ளிக்கு செல்லவே குழந்தைகள் பயப்படுகின்றனர். ''அதனால்தான், இந்த 'ஏர் கன்' துப்பாக்கியை ஏந்தியபடி மாணவியரை அழைத்துச் செல்கிறேன். இதைவைத்து சுட்டால் நாய்களின் உயிருக்கு பாதிப்பு இல்லை. அதனால் என் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாது,''என்றார்.
Read More

Tuesday, July 19, 2022

அரசின் கட்டுப்பாட்டிலிருந்து பள்ளிகள் கைநழுவுகின்றதோ? - கமல் ஹாசன் கேள்வி

July 19, 2022 0
கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை அவசியம் என்று மக்கள் நீதி மய்யம் வலியறுத்தியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்த மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோரும், உறவினர்களும் புகார் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, ஏற்கெனவே இதுபோன்ற சம்பவங்கள் நடந்து, மூடி மறைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. துரித நடவடிக்கை எடுக்க காவல் துறை தவறியதால், பெரும் கலவரம் வெடித்துள்ளது. கல் வீச்சில் காவல் துறையினர் காயமடைந்ததுடன், பள்ளியும் சூறையாடப்பட்டுள்ளது. பள்ளி வளாகமும், வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 3.89 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

எனவே, மாணவி உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருந்தால், அது தொடர்பாகவும் உரிய விசாரணை மேற்கொண்டு, தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதே மக்களை அமைதிப்படுத்தும்.போராட்டம் என்ற பெயரில் பெரும் வன்முறை நடந்துள்ளதை ஏற்க முடியாது. மாணவியின் பெற்றோர் கூறிய குற்றச்சாட்டுகளை அலட்சியப்படுத்தியிருக்கக் கூடாது. கலவரத்துக்குப் பின்னர் மேற்கொண்ட கைது நடவடிக்கைகளை முன்னரே எடுத்திருந்தால், பெரும் சேதத்தை தவிர்த்திருக்கலாம். இந்த விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே சரியான முறையில் விசாரணை நடைபெறவில்லை; தவறான பாதையில் பயணிக்கிறது என்பதே மக்களின் கோபத்துக்குக் காரணம். சமீபகாலமாகவே பள்ளிகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் கவலையளிப்பதாகவே உள்ளன. சிறு பிரச்சினைக்குக்கூட தற்கொலை செய்துகொள்வதும்,சக மாணவியையே பாலியல் பலாத்காரம் செய்வது, ஆசிரியர்களைத் தாக்குவது போன்ற செயல்களும் வேதனையளிக்கின்றன. அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளிகளோ, அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கைநழுவுகின்றனவோ? பிரச்சினைகள் ஏற்படும் ஒவ்வொரு முறையும், இனியும் இதுபோன்று நிகழாமல் பார்த்துக் கொள்வோம் என்று கூறுவதும், மீண்டும் மீண்டும் சிக்கல்கள் ஏற்படுவதும் தொடர்கதையாகிவிட்டது.

இதையும் படிக்க | கள்ளக்குறிச்சி பள்ளி டிஎன்பிஎஸ்சி தேர்வு மையம் மாற்றம்

புத்தகக் கல்வியுடன், தன்னம்பிக்கை, தைரியம் வளர்க்கும் கருத்துகளையும், நெறிமுறைகளையும் கற்றுத்தர வேண்டும். மாணவ, மாணவிகளின் பிரச்சினைகள், நெருக்கடிகளைத் தெரிந்துகொள்ளவும், அவர்களுக்குக் கவுன்சிலிங் அளிக்கவும் பிரத்யேகக் குழுவை அமைக்க வேண்டும். அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அரசின் விதிமுறைகள், நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாண தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Read More

Wednesday, July 6, 2022

காய்ச்சலால் உங்க பிள்ளைங்க பள்ளிக்குப் போகலையா? இதுதான் காரணமாம்!

July 06, 2022 0
காய்ச்சலால் உங்க பிள்ளைங்க பள்ளிக்குப் போகலையா? இதுதான் காரணமாம்!

தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம், கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகும் நிலையில், ஒரு வகுப்புக்கு 3 - 4 பிள்ளைகளுக்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெற்றோருக்கு கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.

பள்ளிகள் திறக்கப்பட்டு சில குழந்தை ஒரு வாரம் தான் சென்றிருப்பார்கள். அதற்குள் வயிற்று வலி அல்லது காய்ச்சல் அல்லது சளித் தொல்லை. இதனால் அச்சமுற்ற பெற்றோர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துக் கொள்கிறார்கள். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய சோதனையில், ஒவ்வொரு வகுப்பறையிலும் 3 முதல் நான்கு பிள்ளைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக துவக்கப்பள்ளி வகுப்புகளில்தான் இது அதிகமாக இருக்கிறது.

பள்ளிகளில் குழந்தைகள் முழு நேரமும் முகக்கவசம் அணிந்திருக்கும்படி வலியுறுத்த முடியவில்லை, பாடங்களைப் படிக்கும் போது அது அவர்களுக்கு அசௌகரியமாக இருக்கலாம். பள்ளிகளில் வகுப்புகளை சிறியவை. அதனையால் சமூக இடைவெளியையும் பின்பற்றுவது சிரமம் என்பது பள்ளி நிர்வாகங்கள் கூற்றாக உள்ளது.

ஒரு பக்கம் கரோனா அதிகரித்துக் கொண்டே வருகிறது என்ற தகவல் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறது. இது குறித்து சுகாதாரத் துறையினர் கூறுகையில், பொதுவாக இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. வழக்கமாக மழைக்கால தொடங்கும் போது வரும் காய்ச்சலாகத்தான் இருக்கும். ஆனால், பள்ளிகளில் காய்ச்சல் அதிகரிப்பதால், பள்ளி வளாகங்களிலேயே காய்ச்சல் சிறப்பு முகாம்களை சுகாதாரத் துறை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல குடியிருப்புப் பகுதிகளிலும் அதனை நடத்தலாம் என்கிறார் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலாளர் பி. பாட்ரிக் ரெய்மண்ட்.

சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறுகையில், வழக்கமாக குழந்தைகள் வெளியே வரும் போது, பல்வேறு சூழல்கள் மற்றும் சக பிள்ளைகள் மூலமாக ஏராளமான வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் தொற்று ஏற்பட்டு, அதற்கு எதிராக உடல் போராடும் போது இயற்கையாகவே நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பிள்ளைகள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்துவிட்டதால், அவர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பாற்றால் குறைந்துவிட்டது என்ற அதிர்ச்சித் தகவலையும் தெரிவிக்கிறார்.
Read More

Monday, July 4, 2022

அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தாவிட்டால் போராட்டம்

July 04, 2022 0
அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தாவிட்டால் போராட்டம்: எச்.டி.குமாரசாமி அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை ஒரு மாதத்தில் மேம்படுத்த தவறினால், மாநிலம் தழுவிய போராட்டத்தில் மஜத ஈடுபடும் என்று கா்நாடக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

இது குறித்து தனது ட்விட்டா் பக்ககத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

கா்நாடகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்தப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை இன்னும் ஒரு மாதத்தில் சீா்செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தில் மஜத ஈடுபடும். அரசுப் பள்ளிகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தால் இந்தியா உலகத் தலைவராவது எப்படி?

எனவே, மாநில அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும். அதிகாரிகளை உடனடியாக அரசுப்பள்ளிகளுக்கு அனுப்பி, பாழடைந்துள்ள கட்டடங்களை புதுப்பிக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் உத்தரவிட வேண்டும். ஒரு குழந்தைக்கு ஏதோவொரு ஆபத்து நோ்ந்தாலும் அதை பாா்த்துக்கொண்டு அமைதியாக இருந்துவிடமுடியாது. ஒரு மாதத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாவிட்டால், கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் போராட்டத்தை எதிா்நோக்க வேண்டியிருக்கும். அரசுப் பள்ளிகளின் கட்டடங்களில் காணப்படும் நீா்க்கசிவு தொடா்பான விவகாரத்தை மூடிமறைக்க மாநில அரசு முயற்சிக்கிறது. மாநிலத்தில் 75,675 பள்ளிகளின் கட்டடங்கள் சிதிலமடைந்து, மோசமான நிலையில் உள்ளன. இதனால் கா்நாடகத்தின் நற்பெயா்தான் கெட்டுள்ளது. உயிரை பணயம் வைத்து மாணவா்கள் பள்ளிகளுக்கு சென்று கொண்டிருக்கிறாா்கள்.

இது அம்மாணவா்களுக்கு தண்டனையாக மாறியுள்ளது. பள்ளிகளின் மோசமான நிலைக்கு கல்வித்துறை அமைச்சரும், அதிகாரிகளும்தான் நேரடி பொறுப்பு. தனியாா் பள்ளிகளின் உயா் கட்டணங்களை செலுத்த முடியாத மாணவா்கள்தான் அரசுப்பள்ளிகளுக்கு செல்கிறாா்கள். இம்மாணவா்களின் உயிா்களுக்கு மதிப்பில்லையா? இதை கல்வித்துறை அமைச்சா் விளக்க வேண்டும் என்று குமாரசாமி தெரிவித்துள்ளாா்.
Read More

Saturday, June 18, 2022

பொறுப்பு உணர்ந்து செயல்படுங்கள்: பள்ளிகளுக்கு அறிவுரை

June 18, 2022 0
"We need to think now about future strategies to reduce the learning gap that has been widening over the past two years. We need to start where we left off two years ago and strategize accordingly.

Do not rush to finish the course. The focus of schools should be on developing ideological understanding, ”Delhi Deputy Chief Minister Manish Sisodia advised schools.

"கடந்த இரண்டு ஆண்டுகளில் தொற்றுநோயால் விரிவடைந்த கற்றல் இடைவெளியைக் குறைக்க எதிர்கால உத்திகளைப் பற்றி இப்போது சிந்திக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாம் விட்ட இடத்தில் இருந்து தொடங்கி, அதற்கேற்ப வியூகம் வகுக்க வேண்டும்.

பாடத்திட்டத்தை முடிப்பதில் அவசரம் வேண்டாம். பள்ளிகளின் கவனம் கருத்தியல் புரிதலை வளர்ப்பதில் இருக்க வேண்டும்" என்று டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
Read More

Thursday, June 16, 2022

அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ISO தரச்சான்று

June 16, 2022 0
விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக பட்டம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் அருகே பட்டம்புதூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை 200 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 15 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஸ்மார்ட் கிளாஸ், தூய்மையான வளாகம், கல்வித் தரம், சுகாதாரம் போன்ற பல்வேறு அம்சங்களுடன் சிறந்து விளங்கும் இப்பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற முதல் மற்றும் ஒரே அரசு பள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ப.திருசெல்வராஜா கூறியதாவது:

6 முதல் 10 வரை அனைத்து வகுப்பறைகளும் கணினிமயமாக்கப்பட்டு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன.அகன்ற திரைகளில் புரொஜெக்டர் மூலம் கற்பிக்கிறோம்.

பள்ளி மைதானத்தையும், வளாகத் தையும் தூய்மையாகவும், சுத்த மாகவும் பராமரித்து வருகிறோம். பள்ளி வளாகத்தில் மரங் களை வளர்த்துள்ளோம்.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனியார் நிதி உதவியோடு குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைத்து மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குகிறோம். மாணவர் களுக்கான 5 கழிப்பறைகளையும், மாணவிகளுக்கான 5 கழிப்பறை களையும் சுத்தமாக பராமரித்துவருகிறோம்.தனியார் பங்களிப்போடு சைக்கிள் நிறுத்துமிடத்தில்தரைத்தளத்தோடு ஷெட் அமைத்துள்ளோம். 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவிகளுக்காக உணவுக் கூடம் அமைத்துள்ளோம்.
அங்கு போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்களை வைத்துள்ளோம். ஆசிரியர் வகுப்புக்கு வராத நேரத்திலும், உணவு இடைவேளை நேரத்திலும் மாணவிகள் போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம்.

பள்ளியில் புத்தக வங்கி தொடங்கியுள்ளோம். இதன் மூலம் 6 முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளிடம் இறுதித் தேர்வு முடிந்த பின்பு அவர்களது புத்தகங்களை பள்ளியில் வாங்கி சேமித்து வைப்போம். கிராமத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களிடம் "தங்களுக்கு பாடப் புத்தகம் வேண்டும், தேர்வு முடிந்ததும் தருகிறேன்" என ஒரு கடிதம் எழுதி பெற்றுக்கொண்டு புத்தகங்களை அவர்களுக்கு வழங்கி வருகிறோம்.

மாணவ, மாணவிகளுக்கு தரமான மற்றும் சத்தான உணவு வழங்க வேண்டும் என்பதற்காக பள்ளி வளாகத்தில் காய்கறித் தோட்டம் அமைத்துள்ளோம். என்எல்சி நிதி உதவியோடு மினி அறிவியல் ஆய்வகமும் அமைத்துள்ளோம். பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளோம்.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பள்ளியிலிருந்து தேசிய நெடுஞ்சாலை வரை சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு அணுகு சாலை அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்
Read More

Post Top Ad

Your Ad Spot