KalviseithiDaily: Court Order

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Court Order. Show all posts
Showing posts with label Court Order. Show all posts

Wednesday, December 28, 2022

கரோனா காலத்தில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு உயர் கல்வியில் சேர சான்றிதழ் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

December 28, 2022 0
கரோனா காலத்தில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு உயர் கல்வியில் சேர சான்றிதழ் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படித்தவர்கள் கரோனா காலத்தில் பணிபுரிந்ததால் அவர்கள் உயர் கல்வியில் சேர கல்விச் சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை, கோவை, சென்னை, சேலம் உள்பட பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் பயின்றவர்கள், உயர் மருத்துவக் கல்வியில் சேர எம்பிபிஎஸ் கல்வி சான்றிதழ்களை வழங்க மருத்துவக் கல்வி இயக்குநருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: ''மனுதாரர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் போது முதுநிலை படிப்பில் சேரும் போது அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தப்படி 2 ஆண்டுகள் பணிபுரிய விரும்பாவிட்டால் மனுதாரர்கள் அரசுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதார்கள் தரப்பில், மருத்துவ படிப்பு காலத்தை முழுமையாக நிறைவேற்றியுள்ளோம். கரோனா காலத்தில் பணிபுரிந்துள்ளோம். இதனால் மேலும் பணிபுரிய வேண்டியதில்லை. கல்வி சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் கரோனா காலத்தில் 2 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளனர். இதனால் மனுதாரர்கள் உயர் மருத்துவ கல்வியில் சேர மருத்துவ சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும்'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Read More

Tuesday, December 27, 2022

பணியாளர் ஒதுக்கீட்டில் முதுகலை படித்தவர் அரசு பணியை தொடராததால் வட்டி செலுத்த உத்தரவு

December 27, 2022 0
பணியாளர் ஒதுக்கீட்டில் முதுகலை மருத்துவம் படித்தவர் அரசு பணியை தொடராததால் வட்டி செலுத்த உத்தரவு

பணியாளர் ஒதுக்கீட்டில் முதுகலை மருத்துவம் படித்தவர் அரசு பணியை தொடராததால், ரூ.10 லட்சத்துக்கு வட்டியை செலுத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனியைச் சேர்ந்த டாக்டர் ஹேமா துரைச்சாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மருத்துவக்கல்லூரியில் பணியாளர் ஒதுக்கீட்டில் எம்எஸ் (கண் மருத்துவம்) படித்தேன். படித்து முடித்ததும் மீண்டும் பணியில் சேர்வதாக ஒப்பந்தம் ெசய்திருந்தேன். முதுகலை படிப்பை முடித்ததும், 2 ஆண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பை முடிப்பதற்காக விடுப்பு எடுத்தேன். படித்து முடித்தபின் மீண்டும் அரசு பணிக்கு திரும்ப விருப்பமில்லை. ஒப்பந்தத்தை மீறியதாக கூறி ரூ.10 லட்சத்தை உரிய வட்டியுடன், மீதமுள்ள பணிக்காலம் வரை கணக்கிட்டு, மொத்தமாக செலுத்த கடந்த ஜூன் 2ல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி டீன் உத்தரவிட்டுள்ளார். ரூ.10 லட்சத்தை செலுத்த தயாராக உள்ளேன். ஆனால், பணிக்காலம் வரைக்கும் வட்டியை செலுத்த வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. அதை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், ‘‘ரூ.10 லட்சத்திற்கு வட்டி கணக்கிடப்படும் என்றுதான் ஒப்பந்தத்தில் உள்ளது. பணிக்காலம் வரை என்று இல்லை. எனவே, ரூ.10 லட்சத்தை உரிய வட்டியுடன் தற்போதுள்ள காலம் வரை கணக்கிட்டு மனுதாரர் செலுத்த வேண்டும். ஏற்கனவே ரூ.10 லட்சத்தை செலுத்தியுள்ளதால், 17.3.2021 முதல் 22.09.2021 வரை வட்டியை செலுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.
Read More

Friday, December 23, 2022

பொறியியல் பட்டம் பெற்று பி.எட். படித்ததுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவரை பட்டதாரி ஆசிரியராக நியமிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்!

December 23, 2022 0


பொறியியல் பட்டம் பெற்று பி.எட். படித்ததுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவரை பட்டதாரி ஆசிரியராக நியமிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்!

தமிழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று பி.எட். படித்ததுடன், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவரை பட்டதாரி ஆசிரியராக நியமிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொறியியல் முடித்து பி.எட் படித்தவர்களை கணக்கிற் கொள்ளாமல் பிற இளநிலை கலை, அறிவியல் பாடங்களில் பி.எட் முடித்தவர்களையே பட்டதாரி ஆசிரியர்களாக நியமித்துள்ளதாகக் கூறி ஏ.ராக சைனி பிரியா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் பிஎட் படிப்பை முடித்து, ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளதால் அவரை 4 வாரங்களில் ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டார்
Read More

Tuesday, December 13, 2022

வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு திருமணம் புரிந்தோருக்கு முன்னுரிமை: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

December 13, 2022 0
வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு திருமணம் புரிந்தோருக்கு முன்னுரிமை: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு திருமணம் புரிந்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பணி நியமங்களிலும் கலப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என டாக்டர் அம்பேத்கார் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கெளதம சித்தார்தனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த மார்ச் மாதம் 7,382 பணியிடங்களுக்கான குரூப் 4 விண்ணப்பங்கள் வரவேற்றபோது கலப்பு திருமணங்கள் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமங்களுக்கு மட்டுமே கலப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட முகாமைகள் மூலமாக மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் கலப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்ற அரசின் நிலைப்பாட்டை விளக்கமகா பதிவு செய்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுதாரர் கலப்பு திருமணம் புரிந்தவர் இல்லை, இதனால் இந்த வேலை வாய்ப்பு நடைமுறையில் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டுவதாக எந்த தகவலும் இல்லை. அடிப்படையில், இந்த வழக்கை தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்ல என கூறி, பணி நியமனம் சம்பந்தமாக பொதுநல வழக்கும் தாக்கல் செய்யமுடியாது என்றும் தெரிவித்து கெளதம சித்தார்தனன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Read More

Sunday, December 11, 2022

"மகப்பேறு விடுப்பு" கோரி அரசுப்பள்ளி ஆசிரியர் வழக்கும் - கோர்ட்டின் உத்தரவும்

December 11, 2022 0


"மகப்பேறு விடுப்பு" கோரி அரசுப்பள்ளி ஆசிரியர் வழக்கும் - கோர்ட்டின் உத்தரவும்!!!

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான கதிஜா உமாமா தனது மூன்றாவது பிரசவத்திற்கு ஓராண்டு காலத்திற்கு விடுப்பு கோரி விண்ணப்பித்தார். விண்ணப்பம் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே விடுப்பு வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பணியில் சேர்வதற்கு முன்பாகவே இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டது. பணியில் சேர்ந்த பின்னரே மூன்றாவது குழந்தைக்கு கருவுற்றதால் விடுப்பு பெற உரிமை உள்ளது.

விடுப்பு கோரி மனுதாரர் கடந்த ஜூன் 27ம் தேதி ஈரோடு மாவட்ட கல்வி அதிகாரியிடம் மனு கொடுத்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அவரது விண்ணப்பத்தை பரிசீலித்து ஜூலை 7ம் தேதி முதல் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்து 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்
Read More

Wednesday, November 30, 2022

9- பிளஸ் 2 வகுப்பு வரைடிச.5 முதல் நேரடி வகுப்புகள்: உயா் நீதிமன்றம் அனுமதி

November 30, 2022 0
மாணவி மரணத்தைத் தொடா்ந்து, கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி அருகேயுள்ள தனியாா் பள்ளியில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் டிச.5 முதல் சோதனை அடிப்படையில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதியளித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 மாணவி இறந்தாா். கடந்த ஜூலை 17-ஆம் தேதி அந்தப் பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரா்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடி, தீயிட்டு எரித்தனா். இந்தக் கலவரத்தை தொடா்ந்து பள்ளி மூடப்பட்டது.

இந்நிலையில், பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த குழுவும் ஆய்வு செய்துவிட்டதால், பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்தப் பள்ளியை நிா்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மாணவி இறப்பு குறித்த புலன் விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. எனவே சம்பந்தப்பட்ட பள்ளியின் ‘ஏ’ பிளாக் கட்டடம் விசாரணைக்கு தேவைப்படலாம் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் சிபிசிஐடி-யை தாமாக முன் வந்து எதிா் மனுதாரராக சோ்த்த நீதிபதி, குறிப்பிட்ட அந்த கட்டடம் புலன் விசாரணைக்கு தேவைப்படுகிா என்பது குறித்தும், எப்போது புலன் விசாரணையை முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தாா். இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமாா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில், ‘விசாரணை முடியும் நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 3 மாதங்கள் தேவைப்படும். பள்ளியை திறக்க ஆட்சேபம் இல்லை. மூன்றாவது, நான்காவது தளத்தை மட்டும் பயன்படுத்தக்கூடாது’ என்றும் தெரிவிக்கப்பட்டது.

மாணவா்கள் எண்ணிக்கை சரிவு: லதா கல்வி அறக்கட்டளை தரப்பில், ‘பள்ளி மூடப்பட்டதால் மாணவா்களின் எண்ணிக்கை 3500-ல் இருந்து 1,500 ஆக குறைந்துள்ளது. 15 நாள்களில் அரையாண்டு தோ்வு நடக்க உள்ளது. 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதிக்க வேண்டும்’ என்றும் வாதிடப்பட்டது.

இறந்த மாணவியின் பெற்றோா் தரப்பில், ‘அனுமதி பெறாமல் விடுதியை இயக்கிய பள்ளியை திறக்க அனுமதிக்கக் கூடாது’ என எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. வழக்குரைஞா் எம்.எம்.ரவி என்பவா் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பள்ளி, காவல் துறை, மாவட்ட நிா்வாகம் தரப்பில் பள்ளியை திறக்க ஒப்புதல் அளித்தாலும், மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு, பொதுத் தோ்வை எதிா்நோக்கியுள்ள 9 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு டிசம்பா் 5-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகளை நடத்த, சோதனை அடிப்படையில் ஒரு மாத காலத்துக்கு அனுமதியளித்து உத்தரவிட்டாா்.

3-ஆவது மாடியை... பள்ளியில் உள்ள ‘ஏ’ மற்றும் ‘பி’ பிளாக்குகளை பயன்படுத்தலாம். ஆனால், ‘ஏ’ பிளாக்கில் விடுதி இயங்கி வந்த 3-ஆவது மாடியை பயன்படுத்தக் கூடாது. விடுதி அமைந்துள்ள தளத்தை மாவட்ட நிா்வாகம் சீல் வைக்க வேண்டும். அனுமதி அளிப்பது குறித்தும் உரிய முடிவெடுக்க வேண்டும்.

கூடுதல் பாதுகாப்பு வழங்குவது குறித்து பள்ளியுடன் ஆலோசித்து, அதற்கான தொகையை பெற்று காவல்துறை பாதுகாப்பு வழங்கலாம். தனியாா் பாதுகாப்பு நிறுவனத்தை வளாக பாதுகாப்பில் ஈடுபடுத்துவது குறித்து பள்ளி நிா்வாகம் முடிவெடுக்கலாம். தீவைப்பில் மிகுந்த சேதமடைந்த ‘சி’ மற்றும் ‘டி’ பிளாக்குகளை பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிற வகுப்புகளுக்கு எப்போது? ஒரு மாதத்துக்குப் பின், நீதிமன்றம் மீண்டும் அப்போதைய நிலையை ஆராயும் எனக் கூறி விசாரணையை ஜன.2-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா். எல்கேஜி முதல் 8- ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்து பின்னா் முடிவெடுக்கப்படும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.
Read More

Wednesday, November 23, 2022

வழக்கின் இறுதி உத்தரவை பொறுத்து கல்லூரி உதவி பேராசிரியர் நியமனம் - ஐகோர்ட் கிளை உத்தரவு

November 23, 2022 0
வழக்கின் இறுதி உத்தரவை பொறுத்து கல்லூரி உதவி பேராசிரியர் நியமனம் - ஐகோர்ட் கிளை உத்தரவு

கல்லூரி உதவி பேராசிரியர் நியமனங்கள் வழக்கின் இறுதி உத்தரவை பொறுத்து அமையும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், கறம்பையைச் சேர்ந்த முருகானந்தம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எம்எஸ்சி, எம்பில், பிஎச்டி முடித்துள்ளேன். அரசு கல்லூரிகளில் காலியாகவுள்ள 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு டிஆர்பி சார்பில் வெளியானது. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என கூறப்பட்டிருந்தது. நான் விண்ணப்பித்தேன். ஆனால், நியமன நடைமுறைகள் தொடரவில்லை. தற்போது உயர்கல்வித்துறை முதன்மை ெசயலர் தரப்பில் 3 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், கடந்த 2019ல் அறிவிக்கப்பட்ட உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாகவும், அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும் என்றும், தேர்வின் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலியிடத்துடன், கூடுதலாக சேர்க்கப்பட்டதும் சேர்த்து 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர் என அரசாணைகளில் கூறப்பட்டுள்ளது. 40 முதல் 50 வயது வரையுள்ள பலர் தனியார் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றுகிறோம்.

ஆனால், எங்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படவில்லை. இதனால் எங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இத்தோடு தேர்வு மூலம் தேர்வு செய்வது எங்களை பாதிக்கும். எனவே, உதவிப் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான அரசாணைகளுக்கு தடை விதிக்க வேண்டும். சட்டவிரோதம் என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும். 2019 அறிவிப்பின்படி சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறைகள் மூலம் பணி நியமனம் மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அரசுத் தரப்பில் பதிலளிக்கவும், இந்த விவகாரம் வழக்கின் இறுதி உத்தரவை பொறுத்தே அமையும் எனக் கூறி விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தார்.

Read More

Friday, October 28, 2022

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் : உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

October 28, 2022 0
தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் இருக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் இருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. பள்ளி வாகனங்களுக்கு பல விதிகள் இருக்கும் போது ஆட்டோ ரிக்சாகளுக்கு என்ன விதிகள் இருக்கிறது என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் முறையாக பின்பற்றவும் உயர்நிதிமன்ற நீதிபதிகள் உத்தரவு அளித்துள்ளனர்.

குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோ, ரிக்சாக்களில் பெற்றோர்கள் எப்படி அனுப்புக்கின்றனர் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்து பள்ளிகளும் வாகன விதிகளை முறையாக பின்பற்ற பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளார். உடனடியாக அனைத்து பள்ளி கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்ற தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். நாகர்கோவிலை சேர்ந்த சுயம்புலிங்கம் தாக்கல் செய்த பொதுநல வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
Read More

Friday, September 30, 2022

பல்கலை. பேராசிரியை நியமனத்துக்கு தடை நீட்டிப்பு - ஐகோர்ட்டு - University. Extension of ban on appointment of Professor - ICourt

September 30, 2022 0
கண்ணூர் பல்கலை. பேராசிரியையாக பிரியா வர்கீசின் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு - கேரள ஐகோர்ட்டு- University. Extension of ban on appointment of Professor - ICourt

பெரும்பாவூர்,

கண்ணூர் பல்கலைக்கழகத்தின் மலையாளத்துறையில் அசோசியேட் பேராசிரியையாக பிரியா வர்கீஸ் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனின் கூடுதல் செயலர் கே.கே.ராகேஷ் என்பவரின் மனைவி ஆவார்.

கண்ணூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பதவிக்கு பிரியா வர்கீஸ் உட்பட 6 பேர் பரிசீலிக்கப்பட்டுள்ளது. இதில் பரிசீலிக்கப்பட்ட 6 பேரில் ஆய்வு தேர்வில் மிகவும் குறைந்த மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்த பிரியா வர்கீஸ் நேர்முகத் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பெற்றார். முதலில் ஆய்வு தேர்வில் 651 மதிப்பெண் பெற்ற ஜோசப் ஸ்கரியா நேர்முகத் தேர்வில் 30 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தைப் பிடித்தார்.

இந்த நிலையில் நேர்முகத் தேர்வில் பிரியா வர்கிசுக்கு கூடுதல் மதிப்பெண் தரப்பட்டதாகக்கூறி, வேண்டுமென்றே தன்னை புறக்கணித்ததாக கூறி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ந் தேதி விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த கேரள ஐகோர்ட்டு தனி அமர்வு நீதிபதி சியாஉல் ரஹ்மான், பிரியா வர்கீசின் நியமன உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக நியமிக்கப்பட்ட பிரியா வர்கீசுக்கு, பதவிக்கு தேவையான கற்பித்தல் அனுபவம் இல்லை எனவும் அவரது ஆராய்ச்சி காலத்தை கற்பித்தல் காலமாக கருத முடியாது என யு.ஜி.சி சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, பிரியா வர்கீசின் நியமன உத்தரவிற்கு விதித்த தடையை அக்டோபர் 20-ம் தேதி வரை நீட்டித்து கேரள ஐகோர்ட்டு நீதிபதி தேவன் ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.
Read More

Saturday, September 17, 2022

NEET answer sheet - நீட் தேர்வு விடைத்தாளை பார்க்க மாணவிக்கு அனுமதி

September 17, 2022 0

நீட் தேர்வு எழுதி குறைவான மதிப்பெண் கிடைத்த மாணவி விடைத்தாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உயர் நீதிமன்றக் கிளை அனுமதி அளித்துள்ளது.



மதுரையைச் சேர்ந்த மாணவி ஜெயசித்ரா நீட் தேர்வின் ஓஎம்ஆர் சீட்டை நேரில் ஆய்வு செய்ய அனுமதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நீட் தேர்வில் 200 கேள்விகளுக்கு 141 கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதி இருப்பதாக மாணவி ஜெயசித்ரா தெரிவித்தார்.



தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த ஓஎம்ஆர் சீட்டில் எனக்கு 720-க்கு 564 மதிப்பெண் என இருந்தது. ஆனால் நீட் தேர்வு முடிவுகளில் எனக்கு 114 மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதாகக் கூறி மாணவி ஜெயசித்ரா வழக்கு தொடர்ந்தார்.



மனுவை விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன் நீட் விடைத்தாளை நேரில் பார்க்க மாணவிக்கு அனுமதியளித்து உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Read More

Wednesday, July 13, 2022

இணைய குறைபாட்டால் பதிவு செய்ய இல்லாமல் மருத்துவ இடம் கிடைக்கப்பெறாத மாணவருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

July 13, 2022 0
இணைய குறைபாட்டால் பதிவு செய்ய இல்லாமல் மருத்துவ இடம் கிடைக்கப்பெறாத மாணவருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இணைய குறைபாட்டால் பதிவு செய்ய இல்லாமல் மருத்துவ இடம் கிடைக்கப்பெறாத மாணவருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க மருத்துவக் கல்வி இயக்குநர், தேர்வுக்குழுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

இணைய குறைபாட்டால் மாணவர் உரிமை பறிக்கப்பட்டால் அதன் இழப்பீட்டை வழங்க அரசு கடமைப்பட்டுள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர். இணைய குறைபாட்டால் பதிவு செய்ய இல்லாமல் மருத்துவ இடம் கிடைக்கப்பெறாத மாணவருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க மருத்துவக் கல்வி இயக்குநர், தேர்வுக்குழுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது
Read More

Tuesday, July 5, 2022

மருத்துவ மேற்படிப்பு நிர்வாக ஒதுக்கீட்டில் முறைகேடு - 6 மாதங்களுக்குள் முடிக்க ஐகோர்ட் உத்தரவு

July 05, 2022 0
மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தேர்வுக்குழுவின் முன்னாள் செயலாளர் மீதான துறை ரீதியான நடவடிக்கையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்பில் கடந்த 2020-21ம் கல்வியாண்டுக்கு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் 113 காலியிடங்களில் கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறி மருத்துவர்கள் சந்தோஷ்குமார், கீதாஞ்சலி ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தேர்வுக்குழுவின் அப்போதைய செயலாளர் செல்வராஜன் தான் இதற்கு காரணம் என சிபிசிஐடி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர் உள்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து செல்வராஜன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செல்வராஜன் மற்றும் அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் கல்லூரிகள்தான் அதிக கட்டணம் வசூலித்தன. ஆனால், தேர்வுக்குழு செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். அதில், கலந்தாய்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரிதான். முன்னாள் செயலாளர் செல்வராஜன் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீதான துறைரீதியான நடவடிக்கையை அரசு 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அவருக்கு சேரவேண்டிய ஓய்வூதிய பலன்களை நிறுத்திவைக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
Read More

Sunday, July 3, 2022

மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

July 03, 2022 0
Read More

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறைகேடு - உயர்நீதிமன்ற உத்தரவு

July 03, 2022 0
The High Court has ordered that the CBCID inquiry into the medical student admissions malpractice case will go ahead. The former Secretary of the Selection Board appealed and the Madras High Court closed the case. In the ongoing case, it has been ordered that the students were admitted without proper consultation in 2020-21. The Chief Justice of the High Court has ordered the departmental inquiry to be completed within 6 months.

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது செல்லும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வுக்குழு முன்னாள் செயலாளர் மேல்முறையிட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்ததுள்ளது. 2020-21ல் முறையாக கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்தியதாக தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. துறை ரீதியான விசாரணையை 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளார்.
Read More

Thursday, June 30, 2022

தற்காலிக ஆசிரியர் நியமனம் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு

June 30, 2022 0
தமிழக அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பிற்கு இடைக்கால தடை

*உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

*ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா தாக்கல் செய்த மனு

Read More

Wednesday, June 29, 2022

மூன்றாம் பாலினத்தவர் எம்பிசி வகுப்பில் வருவதால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறப்பு ஒதுக்கீடு கோர முடியாது: ஐகோர்ட் உத்தரவு

June 29, 2022 0
மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சிறப்பு ஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் 3ம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மூன்றாம் பாலினத்தவர் அமைப்பைச் சேர்ந்த பி.சுதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், 3ம் பாலினத்தவர்களுக்கு உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கிய போதும், அவர்களுக்கு இதுவரை எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ரேஷன்கார்டு மற்றும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டது போல் 3ம் பாலினத்தவர்களுக்கும் சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட 3ம் பாலினத்தவர் பட்டியலின மற்றும் பழங்குடியினராக இருந்தால் அந்த பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்கப்படும். பெண்ணாக கூறி சான்றிதழ் அளித்தால் பெண்களுக்கான 30% இட ஒதுக்கீட்டில் இடம் வழங்கப்படும் என்று தெரிவித்து அது தொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணையை தாக்கல் செய்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Read More

Monday, June 13, 2022

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

June 13, 2022 0
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.



புழல் சிறையில் உதவி சிறை அதிகாரியாக பணிபுரிந்து வரும் ஷாலினி என்பவர் தொடர்ந்துள்ள் வழக்கில், தான் நீலகிரி மாவட்டம் கேரள எல்லையில் உள்ள சேரம்பாடி ஊரைச் சேர்ந்தவர் என்றும், அங்கு 10ம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் படித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் 11 மற்றும் 12ம் வகுப்பு தன் ஊரில் இல்லாததால் அருகிலுள்ள கேரளாவில் உள்ள பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் படித்ததாக குறிப்பிட்டுள்ளார். பின்னர் குரூப்-2 தேர்வு எழுதி, தமிழ் வழியில் படித்ததிற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில், சென்னை புழல் சிறையில் உதவி சிறைத் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு குரூப் -1 தேர்வு எழுதியதாகவும், அப்போது தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க, தமிழக அரசின் புதிய சட்டதிருத்ததத்தின் அடிப்படையில் அனைத்து வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் .

அரசின் இந்த சட்டத்திருத்தம் தனது அடிப்படை உரிமையை பாதிப்பதாக குறிபிட்டுள்ள ஷாலினி, புதிய சட்டத் திருத்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும், அந்த சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் டி ராஜா மற்றும் கே. குமரேஷ்பாபு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, பணிக்கு தகுதி உடைய படிப்பு படிக்கும் வரை, அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் தான் படித்திருக்க வேண்டும், அப்போதுதான் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று தெரிவித்தார்.

மேலும், ஏற்கனவே இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்துள்ளதாக சுட்டிக்காட்டினார். இதையடுத்து சட்டத்திருத்திற்கு எதிராக ஷாலினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Read More

Thursday, June 9, 2022

மலை சுழற்சி ஆசிரியர்கள் தொடர்பான நீதிமன்ற தீர்பாணை

Saturday, May 28, 2022

முன்னாள் ராணுவத்தினர் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு: அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

May 28, 2022 0
மருத்துவ படிப்பு:

தமிழக மருத்துவக் கல்லுாரிகளில் காலியாக உள்ள இடங்களில் ஒரு இடத்தை முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு அல்லது பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் அனுமதிக்க தாக்கலான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை ஆத்திகுளம் பிரகாசம் தாக்கல் செய்த மனு:

என் தந்தை இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தார். என் மகள் பாரதி. நீட் தேர்வில் 720 க்கு 324 மதிப்பெண் பெற்றார். நாங்கள் பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர்கள். அதற்குரிய ஜாதிச்சான்றை இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கவில்லை. விசாரணை நிலுவையில் உள்ளது.

மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைக்க வாய்ப்பிருந்தும் ஜாதிச் சான்று வழங்குவதில் தாமதத்தால் என் மகளின் கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கும் சூழல் உள்ளது. முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான சலுகையை எங்கள் குடும்பத்தில் யாரும் அனுபவிக்கவில்லை. அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

என் மகளை விட நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சிலருக்கு பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப்படிப்பில் கல்லுாரிகளில் இடம் கிடைத்துள்ளது. தமிழக மருத்துவக் கல்லுாரிகளில் 24 இடங்கள் காலியாக உள்ளன. அதில் ஒரு இடத்தை என் மகளுக்கு (எம்.பி.பி.எஸ்.,/பி.டி.எஸ்.,) முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு அல்லது பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.

நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தமிழக சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி 4 வாரங்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.
Read More

Post Top Ad

Your Ad Spot