பணி செய்ய மறுத்த மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் பணியில் சேர கெடு: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Monday, February 6, 2023

பணி செய்ய மறுத்த மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் பணியில் சேர கெடு: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பணி செய்ய மறுத்த மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் பணியில் சேர கெடு: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு Refusal to join post-graduate medical students: HC orders action

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி செய்ய மறுத்த மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் பிப்.10க்குள் பணியில் சேர கெடு: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மருத்துவ மேற்படிப்பு முடித்த மாணவர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்ய முடியாது என்று மறுக்க முடியாது. அந்த 19 மாணவர்களும், பிப்ரவரி 10ம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடத்தில் சேர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்கள், 2 ஆண்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். அதனடிப்படையில் தங்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்பட்ட பணி நியமனத்தை எதிர்த்து ஸ்ரீஹரி விக்னேஷ், ஸ்ருதி உள்ளிட்ட 19 மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தாங்கள் பெற்ற நிபுணத்துவத்திற்கு ஏற்ப மாவட்ட தலைமை மருத்துவமனைகளில்தான், எங்களுக்கு பணி வழங்க வேண்டும். அடிப்படை வசதி இல்லாத ஆரம்ப சுகாதார மையங்களில் நியமிக்கக் கூடாது என்று வாதிட்டார். தமிழ்நாடு அரசு தரப்பில், 19 மனுதாரர்களில் 8 பேர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மீதமுள்ளவர்கள் கூடுதல் ஆரம்ப சுகாதார மையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மேற்படிப்பு படிக்கும் மருத்துவர்களுக்காக மாநில அரசு அதிக செலவு செய்கிறது. அதற்கு பிரதிபலனாக சமுதாயத்துக்கு இந்த மருத்துவர்கள் சேவையாற்ற வேண்டும். இந்த சேவையை இலவசமாக செய்யப்போவதில்லை. ஊதியத்தை பெற்றுக்கொண்டுதான் செய்யப்போகிறார்கள்.

ஏழை மக்களுக்காக, ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவரும் சூழலில், தங்கள் படிப்பிற்கு இணையான வசதிகள் இல்லை எனக் கூறி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற முடியாது என்று மருத்துவர்கள் மறுக்க முடியாது. கிராமப்புற பகுதிகளில் உள்ள ஏழை மக்களும் சிறப்பு நிபுணத்துவ சிகிச்சை பெற வேண்டும். மருத்துவர்களை நோயாளிகள் கடவுளுக்கு நிகராக மதிக்கக் கூடிய சூழலில், அந்த கடவுள்கள் தங்கள் நேரத்தை வழக்குகளில் செலவழிக்க வேண்டாம். நியமன உத்தரவில் தலையிட எவ்வித காரணமும் இல்லை. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. பிப்ரவரி 10ம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மனுதாரர்கள் பணியில் சேர வேண்டும் என்று உத்தரவிட்டார்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot