KalviseithiDaily: Teachers

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Teachers. Show all posts
Showing posts with label Teachers. Show all posts

Tuesday, September 27, 2022

இளிச்சவாயனாக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் - Facilitated Intermediate Teachers

September 27, 2022 0
இளிச்சவாயனாக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் - Facilitated Intermediate Teachers

எப்படியும் பல்வேறு குழுக்களில் இது பகிரப்பட்டு உங்களிடம் வந்தடையும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறோம்:

உங்களிடம் கேட்பதற்கு நிறைய இருந்தாலும் தற்போது வெறும் 5 கேள்விகள் மட்டுமே உள்ளன.

1. கோடை விடுமுறையில் பயிற்சிக்கு சென்றவர்கள் யார்? இடைநிலை ஆசிரியர்களா? பட்டதாரி ஆசிரியர்களா? நடுநிலை & தொடக்கநிலை தலைமையாசிரியர்களா? உங்கள் பதில் "இடைநிலை ஆசிரியர்களில் 1 முதல் 3 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் மட்டும்தான்" என்பதாக இருக்குமேயானால் அவர்களுக்கு மட்டும் தானே ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்பட வேண்டும்???

2. பட்டதாரி ஆசிரியர்களுக்கோ, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கோ, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கோ 9ஆம் தேதி வரை விடுமுறை விடக்கூடாது என்று நாங்கள் சொல்வதாக நீங்கள் வழக்கம்போல் திரிக்கக் கூடாது.. நாங்கள் கேட்பது பிறரின் உரிமையைப் பறிப்பதற்காக அல்ல ...எங்கள் உரிமையை கேட்பதற்காக... அவர்களுக்கு 9ஆம் தேதி வரை விடுமுறை விடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.. ஆனால் எங்களுக்கு அதேபோல் 9-ஆம் தேதி வரை விடப்படும் விடுமுறைக்கு மட்டும் ஏன் ஈடுசெய்விடுப்பு என்ற பெயரை கொடுக்கிறீர்கள்??? எங்களுக்கு அது ஈடுசெய் விடுப்பு என்றால் அவர்களுக்கு அந்த நாட்களில் (06.10.2022 முதல் 08.10.22) விடப்படும் விடுப்பிற்கு என்ன பெயர்??

3. விடுமுறை நாளில் நாங்கள் பயிற்சி சென்றதால் எங்களுக்கு ஈடுசெய்விடுப்பு என்றால்,விடுமுறை நாளில் விடுமுறையிலேயே இருந்த பிறருக்கு எப்படி ஈடுசெய் விடுப்பு பொருந்தும்???

4. மீண்டும் சொல்கிறோம் "அவர்களுக்கு 6ஆம் தேதி பள்ளி திறங்கள்" என்று நாங்கள் சொல்லவில்லை... 9ஆம் தேதியே திறக்கட்டும்... உங்கள் செயல்முறையிலுள்ள அந்த ஈடுசெய் விடுப்பு என்பதை மட்டும் எடுத்துவிடுங்கள்.. (06.10.22 முதல் 09.10.22 வரை உள்ள மூன்று நாட்களைத் தவிர்த்து) வேறு ஏதேனும் மூன்று நாட்களுக்கு ஈடுசெய்விடுப்பு அளித்தால் இதற்கு உண்மையான தீர்வாக இருக்கும்.. இதை செய்வீர்களா??

5. அது ஏன் சார் இடைநிலை ஆசிரியர்களை மட்டும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறீர்கள்?? உங்கள் அளவிற்கு அறிவோ, திறமையோ இல்லாத எங்களுக்கே இந்த கடிதத்தை படித்தவுடன் இவ்வளவு லாஜிக் குறைவு தெரிகிறது என்றால், உங்களுக்குத் தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை ... இருந்தும் அந்தக் கடிதத்தை வெளியிடுகிறீர்கள் என்றால் இடைநிலை ஆசிரியர்கள் தானே என்ற இளக்காரம் தவிர வேறென்ன இருக்க முடியும்???

ஊதியத்திலும் பாதி ஊதியம்...

பயிற்சியிலும் பலிகடா...

இப்போது விடுமுறையிலும் இளிச்சவாயன்...

நன்றி

இவற்றிக்கு காலம் விரைவில் பதில் சொல்லும்...

இவண்,

எல்லாவற்றிற்கும் இளிச்சாவாயனாகும் இடைநிலை ஆசிரியன்...
Read More

Saturday, September 24, 2022

BE ALERT - ஆசிரிர்களுக்கான வேண்டுகோள்!

September 24, 2022 0
------------------------------

*ஆசிரியப் பெருமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்*

உங்கள் மாணவர்கள் தேர்வில் தோல்வி என்றால் உங்களுக்கு எந்தப் பலனும் குறையப் போவதில்லை.

மாறாக, அவர்களைத் திருத்தவேண்டும், தேர்வில் தேர்ச்சி பெற வைக்கவேண்டும், சமுதாயத்தில் நல்ல குடிமகனாக்கவேண்டும் என்று நினைத்து கண்டித்தீர்கள் அல்லது தண்டித்தீர்கள் என்றால்...

1. மாணவர்கள் நேரடியாக உங்களைத் தாக்குவார்கள்

2. உங்களைப் பழிவாங்குவதாக நினைத்து எலிப்பசையை அவர்களது நாக்கில் தடவிக்கொள்வார்கள். நீங்கள் விசாரணைக்குட்படுத்தப்படுவீர்கள்... ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக்கப்படுவீர்கள்... அதுவரையிலும் நீங்கள் அறிந்திராத பல துறைகளுக்கு விசாரணைகளுக்கு அலைக்கழிக்கப்படுவீர்கள். உங்கள் இணையரும் குழந்தைகளும் இச்சமூகத்தில் செய்யக்கூடாத பெரிய பஞ்சமா பாகத்தைப் செய்தவருடைய உறவென்று இகழப்படுவார்கள்.

3. இப்படிப்பட்ட மாணவர்களுக்கு இப்படிப்பட்ட செயலைச் செய்வதற்கு அசிங்கமோ அவமானமோ காரணமில்லை. தான் ஒரு டான்... ஆசிரியரை அசிங்கப்படுத்தி விட்டேன் என்று கூவுவதற்குத்தான்.

சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அவர்களின் கல்வித் தகுதிக்கு மீறி வாங்குகின்ற சம்பளத்தையும் ‌பென்ஷனையும் பார்க்க வக்கற்ற சமுதாயம்... ஆசிரியர்கள் அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள் என்று பொறாமைப்படும் சமுதாயம்... உங்களைக் காயப்படுத்த எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

நீங்கள் கண்ணியில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

கற்பித்தலே நமது பணி. ஒழுக்கத்தினை ஏன் கற்றுக் கொடுக்கவில்லை என்று யாரும் நம்மிடம் கேட்பதில்லை. கற்பித்தலில் மட்டுமே அக்கறை காட்டுங்கள்.

விசாரணை செய்யும் நியாயவான்கள்கூட ஒழுக்கமாக இருக்கத் தானே கண்டித்தார் என்ற நிலையில்கூட பேசமாட்டார்கள்.

*நீங்கள் உடற்பயிற்சி ஆசிரியராக இருந்தாலுங்கூட பிரம்பைத் தொடாதீர்கள்.*

*BE ALERT* - WhatsApp பகிர்வு
Read More

Tuesday, September 6, 2022

ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் உறுதி

September 06, 2022 1
ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் உறுதி

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை அமைச்சர்கள் சேகர்பாபு, மகேஷ் பொய்யாமொழி வழங்கினர். அருகில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, மேலாண்மை இயக்குனர் கஜலட்சுமி, பள்ளி கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர்.
ஆசிரி யர்களின் கோரிக்கைகளை படிப்படியாகதீர்த்து வைப் பது எங்கள் கடமை. ஆசி ரியர்கள் தங்கள் பணியை சிறப்பாக தொடர்ந்து செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல் வித்துறை அமைச்சர் மகேஷ் பொய் யாமொழி தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்து றையின் கீழ் உள்ள பள் ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர் கள் 393 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கள் வழங்கப்பட்டன.இதற் கான விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங் கில் நேற்று நடந்தது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய் யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன். இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் பங்கேற்று, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 342பேருக்கு டாக்டர்ராதா கிருஷ்ணன் விருதுகள், மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆசிரியர்கள் 34, ஆங்கிலோ இந்தியப் பள்ளி ஆசிரியர் கள் 5. தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தத்துறை பள்ளிகள் 1, மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரி கள் 10 என மொத்தம் 393 பேருக்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய் யாமொழி,சேகர்பாபு ஆகி யோர் வழங்கினர்.

அப்போது அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி. நல்லாசிரியர் விருது என்பதை டாக்டர் ராதா உறவு வேறுபட்டது. கிருஷ்ணன் விருது என்று மாற்றி அமைத்தவர் முன் னாள் முதல்வர் கலைஞர் தான். ஆசிரியர்கள் ஏங் கினால், வகுப்பறைகள் தூங்கும் என்று அண்ணா சொன்னார். ஆசிரியர் களை பொறுத்தவரை யில் அவர்களுக்கு தேவை

பள்ளிக் கல்வி துறைக்கு இயக்குநர் தேவை

தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, டிபிஐ வளாகத்துக்கு வரும் பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அதிக அளவில் என்னைத்தான் வந்து சந்திக்கின்றனர். அப்போது. ஆணையரை பார்க்க முடியவில்லை என்று கவலை தெரிவித்தனர்.

எனவே பள்ளிக் கல்வித்துறையில் முன்பு இருந் தது போல, பள்ளிக் கல்வி இயக்குநரை நியமிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை தெரிவித்தனர். அடுத்தபடியாக, ஆசிரியர்களுக்கு அதிக அளவில் எழுத்து வேலை, புள்ளி விவரம் எடுக்கும் பணிதான் கொடுக்கப்படுகிறது. அதனால் அதைதவிர்த்து கற்றல் பணிக்கு நேரம் ஒதுக்கவும் கோரிக்கையாக வைத்து இந்த 2 கோரிக்கைகளையும் நீங்கள் தான் அமைச்சருக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதனால் பள்ளிக் கல்வி அமைச்சர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்,
Read More

Monday, September 5, 2022

ஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்

September 05, 2022 0
ஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்

1. எனக்குரிய இடம் எங்கே? – பேரா.ச.மாடசாமி.
2. கனவு ஆசிரியர் – க.துளசிதாசன்.
3. ஆயிஷா – இரா.நடராசன்.
4. போயிட்டு வாங்க சார் – பேரா.ச.மாடசாமி.
5. டோட்டோசான் – ஜன்னலில் ஒரு சிறுமி – தமிழில். சு.வள்ளிநாயகம்& சொ.பிரபாகரன்.
6. ஆசிரிய முகமூடி அகற்றி – பேரா.ச.மாடசாமி
7. இது யாருடைய வகுப்பறை – இரா.நடராசன்.
8. குழந்தையும் கல்வியும் – பேரா.இரா.காமராசு
9. அமிர்தா பள்ளிக்குப் போகனுமா?. – விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.
10. கற்க கசடற – பாரதி தம்பி
11. முதல் ஆசிரியர் – தமிழில் பூ.சோமசுந்தரம்.
12. ஆளுக்கொரு கிணறு – பேரா.ச.மாடசாமி.
13. குழந்தைகளின் நூறு மொழிகள் – பேரா.ச.மாடசாமி.
14. கதை சொல்லும் கலை – ச.முருகபூபதி
15. வாழ்க்கையை புரிய வைப்பதுதான் கல்வி – முனைவர். ச.சீ.ராசகோபாலன்.
16. கல்விக் குழப்பங்கள் – மு.சிவகுருநாதன்.
17. சுகந்தி டீச்சர் – பாபு எழில்தாசன்.
18. கரும்பலகையில் எழுதாதவை – பழ. புகழேந்தி.
19. வகுப்பறையின் கடைசி நாற்காலி – ம.நவீன்
20. பகல்கனவு – டாக்டர்.சங்கரராஜுலு.
21. பள்ளிக்கூடம் – பா.ஜெயப்பிரகாசம்.
22. கல்வி சமூக மாற்றத்துக்கான கருவி – தமிழில் மூ.அப்பணசாமி
23. எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க – தமிழில் ஜே.ஷாஜகான்
24. காலந்தோறும் கல்வி – முனைவர். என்.மாதவன்
25. என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா – பேரா.ச.மாடசாமி
26. சொர்க்கத்தின் குழந்தைகள் – தி.குலசேகர்
27. ஆயுதம் செய்வோம் – முனைவர். என்.மாதவன்
28. குழந்தைகளைக் கொண்டாடுவோம் – பேரா.இரா.காமராசு
29. தோட்டியின் மகன் – தமிழில். சுந்தர ராமசாமி
30. முரண்பாடுகளிலிருந்து கற்றல் – தமிழில். ஜே.ஷாஜகான்
31. உலகமயமாக்கலும் பெண் கல்வியும் – முனைவர்.சா.சுபா
32. தமிழக பள்ளிக் கல்வி – ச.சீ.ராசகோபாலன்.
33. இது எங்கள் வகுப்பறை – வே.சசிகலா உதயகுமார்.
34. கதைகதையாம் காரணமாம் – விஷ்ணுபுரம் சரவணன்.
35. கசக்கும் கல்வியும் கற்கண்டாகும் – பிரியசகி, ஜோசப் ஜெயராஜ்
36. சூப்பர் 30 ஆனந்தகுமார் – தமிழில் D I. ரவீந்திரன்.
37. ரோஸ் – இரா.நடராசன்.
38. வன்முறையில்லா வகுப்பறை – இரா.நடராசன்
39. தெருவிளக்கும் மரத்தடியும் – பேரா.ச.மாடசாமி
40. உனக்குப் படிக்கத் தெரியாது – தமிழில்.கமலாலயன்.
41. குழந்தைமையைக் கொண்டாடுவோம் – முனைவர்.என்.மாதவன்.
42. இவைகளா… கனவுப்பள்ளிகள்? பேரா.பொ.ராஜமாணிக்கம்
43. மீண்டெழும் அரசுப்பள்ளிகள் – பேரா.நா.மணி
44. கண்டேன் புதையலை – பிரியசகி
45. பாகுபடுத்தும் கல்வி -பேரா.வசந்திதேவி, பேரா.அனில் சத்கோபால்
46. கனவுப்பட்டறை – மதி
47. கல்வியில் வேண்டும் புரட்சி – தமிழில் அருணாசலம்.
48. கியூபா: கல்விக்கு ஒரு.கலங்கரை விளக்கம் – தியாகு.
49. ஓய்ந்திருக்கலாகாது – அரசி, ஆதி வள்ளியப்பன்.
50. பள்ளிக்கல்வி – புத்தகம் பேசுது கட்டுரைகள்
51. கரும்பலகைக்கு அப்பால் – கலகலவகுப்பறை சிவா
52. 13 லிருந்து 19வரை – முனைவர்.என்.மாதவன்

இந்தப் புத்தகங்களை எழுதிய கல்வியின்பாலும் குழந்தைகள் மேலும் பிரியம் கொண்ட நூலாசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான வணக்கங்களும், நன்றிகளும்...

ஆசிரியர்களுக்கான புத்தகங்கள் மட்டுமல்ல இவைகள்…. பள்ளிக்கல்வியை நேசிக்கும் எல்லோருக்குமான புத்தகங்கள்.
சுவாசிப்பு உயிர் பிழைக்க….. வாசிப்பு உயிர் தழைக்க….
வாசிப்பை நேசிப்போம்…. வாசிப்பை சுவாசிப்போம்…

நன்றி!
Read More

Monday, May 30, 2022

அரசு பள்ளிக்கு அடிப்படை வசதி செய்து தர மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை

May 30, 2022 0
அரசு பள்ளிக்கு அடிப்படை வசதி செய்து தரவேண்டும்: மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை

வேடசந்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1955ம் ஆண்டு சுமார் 11 ஏக்கர் பரப்பளவில் அமையப்பெற்றது. இந்த பள்ளியில் தமிழ்வழிக் கல்வி மற்றும் ஆங்கில வழிக்கல்வி என இருவழிக் கல்வி கற்பிக்கப்படுகிறது. இங்கு படித்த மாணவர்கள் அரசு துறையில் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருந்து வருகிறார்கள். 1200 மாணவர்களும், 55 ஆசிரியர்களும் இப்பள்ளியில் உள்ளனர். இந்த பள்ளிக்கு அடிப்படைத் தேவைகள் போதுமானதாக இல்லை. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் சிரமப்படுகின்றனர். பள்ளிக்கு போதிய நிதி உதவியும், மாணவர்கள் அமர்வதற்கு இருக்கைகளும் ஏற்படுத்தி தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்தப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து உதவிகள் செய்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக முன்னாள் மாணவர்களுடைய உதவி தடைபட்டுள்ளது. இதனை மீண்டும் தொடர பெற்றோர் சங்கத்தினர், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்களோடு இணைந்து பள்ளியின் வளர்ச்சிக்கும், மாணவர்களுடைய கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் உதவி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More

Thursday, May 19, 2022

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் சம்பளம் பெறும் வகையில் புதிய அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!!

May 19, 2022 0
அரசு பள்ளிகளில் 2 மாதமாக சம்பளமின்றி தவிக்கும், 3,000 ஆசிரியர்கள் சம்பளம் பெறும் வகையில், புதிய அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!!

The government has announced a one year extension for 3,000 teachers in Tamil Nadu. Internet counseling for teachers working in government schools in Tamil Nadu, on behalf of the Department of School Education, optional relocation, work schedule, was conducted three months ago. For some district schools, more teachers were relocated than permitted, as per the order of School Education Commissioner Nandakumar. Accordingly, 3,000 teachers were recruited in additional places.

But their salaries were suspended for two months last March and May. The finance ministry said it would not be able to pay salaries for new posts without the government. The order was issued by the Principal Secretary, School Education, Gokarla Usha yesterday. In addition, the Department of Education has ordered the payment of salaries and other allowances to teachers.
சம்பளமின்றி தவிக்கும், 3,000 ஆசிரியர்கள்

தமிழகத்தில் 3,000 ஆசிரியர்களுக்கு மேலும் ஓர் ஆண்டு பணி நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி துறை சார்பில், விருப்ப இடமாறுதல், பணி நிரவலுக்கான இணைய கவுன்சிலிங், மூன்று மாதங்களுக்கு முன் நடத்தப்பட்டது. சில மாவட்ட பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை கமிஷனர் நந்தகுமார் உத்தரவுப்படி, அனுமதிக்கப்பட்ட இடங்களை விட, கூடுதல் ஆசிரியர்கள் இடம் மாற்றப்பட்டனர். இதன்படி, 3,000 ஆசிரியர்கள் கூடுதல் இடங்களில் பதவியேற்றனர்.

புதிய அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!

ஆனால் இவர்களுக்கு கடந்த மார்ச், மே என இரண்டு மாதங்களாக சம்பளம் நிறுத்தப்பட்டது. அரசாணை இல்லாமல், புதிய இடங்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என்று நிதித்துறை தெரிவித்திருந்தது.இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் 3000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பிற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை பள்ளிக்கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா நேற்று பிறப்பித்துள்ளார். மேலும், ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் இதர படிகளை வழங்கிடவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Read More

Saturday, May 14, 2022

TET - தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாத ஆசிரியர்கள் பதவி உயர்விற்கு எதிராக வழக்கு

May 14, 2022 1
தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாத ஆசிரியர்கள் பதவி உயர்விற்கு எதிராக வழக்கு

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தடை கோரிய வழக்கில், எந்த ஒரு பதவி உயர்வும் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால உத்தரவிட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் தலைவர் ஷீலா பிரேம்குமாரி தாக்கல் செய்த மனு:

இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோருக்கு குறைந்தபட்ச தகுதியை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் நிர்ணயித்து 2010 ல் அறிவிப்பு வெளிட்டது.

அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழக அரசு தகுதித் தேர்வை நடத்தும் ஏஜன்சியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தை (டி.ஆர்.பி.,) நியமித்தது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்பதை அந்த அரசாணை தெளிவுபடுத்துகிறது.

தகுதித் தேர்வு தேர்ச்சி இன்றி, தனியார் உதவி பெறும் பள்ளிகளில் செய்யப்படும் எந்தவொரு நியமனங்களுக்கும் அரசு அனுமதி வழங்குவதில்லை.

பட்டதாரி ஆசிரியரை நேரடியாக அல்லது இடமாற்றம் அல்லது பதவி உயர்வு மூலம் நியமிக்கலாம். பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பான பிரச்னை தற்போது உள்ளது. துவக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்க தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு பட்டப்படிப்பு, பி.எட்.,மற்றும் தகுதித் தேர்வு தேர்ச்சி தகுதிகளாகும். இது தமிழக அரசு 2020 ஜன.,20 ல் வெளியிட்ட துவக்க கல்வி சார்நிலை பணிக்கான சிறப்பு விதிகளில் உள்ளது. பட்டதாரி ஆசிரியருக்கான தகுதிகளைப் பொறுத்தவரை நேரடி நியமனத்திற்கு மட்டுமே தகுதித் தேர்வில் தேர்ச்சி தேவை என உள்ளது. இது பட்டதாரி ஆசிரியராக ஒருவர் பதவி உயர்வு பெறுவதற்கு தகுதித் தேர்வு தேர்ச்சியை தகுதியாக வைத்திருக்க வேண்டியதில்லை என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது.

இது இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்ட விதிகளுக்கு எதிரானது. அதை ரத்து செய்ய வேண்டும். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு ஷீலா பிரேம்குமாரி மனு செய்தார்.

நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு:

எந்த ஒரு பதவி உயர்வும் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என இடைக்கால உத்தரவிட்டது. மத்திய கல்வித்துறை செயலாளர், மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
Read More

Saturday, April 23, 2022

மாணவர்களை சமாளிப்பது ஆசிரியர்களுக்கு சவாலாக இருக்கிறதா? தீர்வுதான் என்ன?

April 23, 2022 0
கொரோனோவிற்குப் பிறகு மாணவர்களை சமாளிப்பது ஆசிரியர்களுக்கு சவாலாக இருக்கிறதா? தீர்வுதான் என்ன?

ஆசிரியர்களை மிரட்டும் மாணவர்கள்

கொரோனோ பெருந்தொற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகள் பள்ளிகள் மூடப்பட்டதால் திரும்பவும் பள்ளிகள் திறக்கப்படும் போது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பது முன்னமே அறிந்த ஒன்று தான்.ஆனால் கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பரவி வரும் மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டுவது,தகாத வார்த்தைகளால் திட்டுவது,மது அருந்துவது, ஆசிரியர் வகுப்பில் இருக்கும்போது மதிக்கமால் ஆட்டம் போடுவது, பேருந்துகளில் படியில் தொங்கி பயணிப்பது போன்ற வீடியோக்களை நாம் அவ்வளவு எளிதாக கடந்து போக முடியாது..இந்த நிலை நீடித்தால் அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் சமூகத்தின் நிலை அச்சம் தருவதாக அமையும் என்பதில் ஐயப்பாடு எதுவும் இல்லை. .இதற்கு சம்பந்தப்பட்ட மாணவர்களை மன்னிப்பதோ அல்லது சஸ்பெண்ட் செய்வதோ தற்காலிக தீர்வு தானே ஒழிய நிரந்தர தீர்வு அல்ல கொரோனோவிற்கு முன்;கொரோனாவிற்கு பின்

இது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று பெரும்பாலானவர்கள் கருதினாலும், உண்மையில் அவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள், திருத்தப்பட வேண்டியவர்கள்.அது மட்டும் அல்ல இது போன்ற வீடியோக்களை குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுடைய வீடியோக்கள் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் பகிரப்படுகிறது.ஏதோ ஒரு அரசுப்பள்ளி மாணவன் என்ற எண்ணத்தை விட்டு நம் வீட்டு பிள்ளைகளாக யோசிக்கும் பட்சத்தில் இது போன்ற வைரல் வீடியோக்கள் குறைய வாய்ப்புள்ளது.இது போல தங்களைப் பற்றி வீடியோக்கள் பொதுவெளியில் பகிரப்படும் போது இரண்டு விதமான தாக்கங்கள் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும். ஒன்று சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்களை சினிமா கதா நாயகர்களைப் போல கருதி அதே நிலை தொடர்வது அல்லது தன்னைப் பற்றி உறவினர்கள் மத்தியில் ஒரு அவப்பெயர் என்று கருதி மனரீதியான உளைச்சல் ஏற்பட்டு மேற்கொண்டு படிப்பது தடைபடுவது.மாணவர்களை கொரோனோவிற்கு முன் கொரோனாவிற்கு பின் என்றே பிரிக்கலாம்.அவ்வளவு மாற்றங்கள்.

இதற்கு முந்தைய நாட்களில் மாணவர்கள் செய்யும் தவறுகள் அவன் வயதுக்கு ஏற்ற தவறுகள் தான் "அந்த வயதில் அப்படித்தான் இருப்பாங்க" என்று ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்து நல்வழிப்படுத்திகொண்டு தான் இருந்தார்கள் அப்போது அது சிக்கலாகத் தோன்றவில்லை.இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய நிலையிலையே மாணவர்களை அணுகும் போது அது மேலும் சிக்கலாகிறது.. இப்போது மாணவர்கள் நடத்தை அவர்கள் வயதுக்கு மீறியதாக, பெரும் அச்சம் தரக்கூடியதாக உள்ளது.காரணம் இந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர்களில் சிலர் தேவையில்லாத பழக்கங்களை கற்றுககொண்டனர்.சிலர் அப்படியே தேங்கிவிட்டனர்.பலர் பின்தங்கிவிட்டனர்.ஒரு மணி நேரம் கூட ஒரு இடத்தில் அமர்வதற்கே சிரமப்படுகிறார்கள், பிறகெப்படி கவனிப்பது..மொத்தத்தில் சிதிலமடைந்த கலைக்கூடம் போல தான் நிலை.அதை திரும்ப கட்டவும் முன்பை விட புதுமையாக கட்டமைக்கவும் ஆசிரியர்களால் முடியும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.

ஆனால் ஆசிரியர்களுக்கே அச்சுறுத்தலாக மாணவர்கள் அமையும் போது என்ன செய்ய முடியும்.சமீபத்தில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆசிரியர்கள் முறையிட்டதைக் பத்திரிகை செயதிகளில் பார்த்தோம்.ஆசிரியர்களுக்கும் சரி மாணவர்களுக்கும் சரி வீட்டிற்க்கு அடுத்து பள்ளியே பாதுகாப்பான இடம்.அங்கு பாதுகாப்பு இல்லை என்று ஆசிரியர்கள் முறையிடுவது ஒரு சமூகத்தின் அவலம்.அது மட்டுமல்ல ஒரு மாணவனை சஸ்பெண்ட் செய்வது என்பது அது ஆசிரியர்களுக்கான தோல்வி.இதற்கு என்ன தான் தீர்வு? ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு

ஒரு திரைப்படத்தில் வரும் நகைச்சுவை போல "அடிச்சா திருப்பி அடிக்காத அந்த மூன்று பேர் ல ஸ்கூல் வாத்தியார்'என்பது போல ஆசிரியர்களுக்கோ பரிதாபமான கையறு நிலைதான்.(ஆசிரியர்கள் பாவம் என்றால் உடனே அவர்களுக்கு தான் சம்பளம் அதிகம் என்று தோள்களை உயர்த்திக்கொண்டு வரவேண்டாம்)

மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்,பாடம் கற்பிக்க வேண்டும் என்பதையும் தாண்டி தங்களது பணியை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றொரு நிலை ஆசிரியர்களுக்கு மாணவர்களும் கவனமாகக் கையாளப்பட வேண்டியவர்கள்.மாணவனின் எதிர்காலம் பள்ளிகளில் தான் அடங்கி இருக்கிறது.அவர்கள் அங்கு தான் கற்றுத்தரப்படுகிறார்கள், கற்றுக் கொள்கிறார்கள்,உருவாக்கப்படுகிறார்கள்.அப்படிப்பட்ட பள்ளிகளிலே மாணவர்களின் எதிர்காலம் முடிந்துபோய்விடக்கூடாது.நல்லதொரு சமுதாயம் உருவாக மாணவர்களை அல்லனவற்றிலிருந்து நல்லனவற்றிறக்கு வழிநடத்த பள்ளிக்கல்வித்துறை இது சார்ந்து நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் .பிரச்சனைக்குரிய மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க பள்ளி அளவிலான குழுக்களை நியமிக்கவேண்டும்.பதின்பருவ வயதுகளில் ஏற்படும் மனவெழுச்சி சார்ந்த பிரச்சினைகளில் இருந்து அவர்களை மாற்ற விளையாட்டு, வாசிப்பு,மற்றும் துறைசார் வல்லுனர்களின் ஆலோசனைகளை வழங்கலாம்.

பள்ளிக்கல்வித்துறையோடு மக்கள் நல்வாழ்வு துறை, காவல்துறை ஆசிரியர்கள் சேர்ந்து இதற்கான மாற்றுவழிகளை முன்னெடுக்க வேண்டும்.. இல்லையென்றால் வாரம் ஒருமுறை வீடியோக்கள் வெளிரும் இப்போது நமக்கு ஏற்படும் அதிர்ச்சி மெல்ல பிறகு பழகிவிடும்! மாணவர்கள், ஆசிரியர்கள் நிலை என்னவாகும்.?

தே.சரவணக்குமார்

பட்டதாரி ஆசிரியர்
Read More

Monday, April 18, 2022

மாணவனை அடித்த 3 ஆசிரியைகளிடம் விசாரணை

April 18, 2022 0
An investigation is underway against 3 teachers who beat a UKG student at a private school in Peravallur, Chennai. The education officer is investigating the abortion with 3 teachers. Three teachers were arrested yesterday and released on bail following a complaint lodged by the student's parents.

ஆசிரியைகளிடம் விசாரணை

சென்னை பெரவள்ளூரில் தனியார் பள்ளியில் யுகேஜி மாணவனை அடித்த 3 ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 3 ஆசிரியைகளிடம் கல்வி அலுவலர் கற்பகம் விசாரணை நடத்தி வருகிறார். மாணவனின் பெற்றோர் அளித்த புகாரில் நேற்று 3 ஆசிரியைகள் கைதாகி பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

3 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

சரியாக படிக்கவில்லை என யுகேஜி மாணவனை அடித்த 3 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி டெய்சி ராணி. இவர்களது 6 வயது மகன், பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறான். கடந்த 9ம் தேதி இந்த சிறுவன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளான். இந்நிலையில், காலை 11 மணிக்கு சிறுவனின் தாயாரை செல்போனில் தொடர்புகொண்ட பள்ளி ஆசிரியர், உங்கள் மகன் மயங்கி விழுந்துவிட்டான். எனவே, உடனடியாக பள்ளிக்கு வர வேண்டும், என தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவமனையில் அனுமதி

அதன்பேரில், சிறுவனின் தாயார் பள்ளிக்கு சென்றபோது, சிறுவன் மூச்சுத்திணறலால் அவதிப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி ஆசிரியர்களிடம் கேட்டபோது, சிறுவன் ஏபிசிடி சரியாக எழுதவில்லை என்று பள்ளி ஆசிரியர் அடித்தது தெரியவந்தது. உடனே சிறுவனை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து சிறுவனின் தாயார் திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, மாணவனை அடித்ததாக பள்ளி ஆசிரியர்கள் பிரின்ஸி (26), இன்டியனாவான் (60), மோனா பெராரா (47) ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், 3 ஆசிரியர்களும் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேலும், இதுதொடர்பாக குழந்தைகள் நல வாரிய அலுவலர் சசிகலா விசாரணை நடத்தி வருகிறார்.
Read More

Tuesday, April 12, 2022

பள்ளி ஆசிரியா் கைது

April 12, 2022 0
மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய பள்ளி ஆசிரியா் கைது

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே பள்ளி மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே சோழபுரத்தில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சோழபுரம், முறம்பு உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்த பள்ளியில் புனல்வேலி பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (35) தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவா், 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு வாட்ஸப் மூலம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இது தெரியவந்ததும் ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியா் ராமசுப்பிரமணியன் புகாா் அளித்தாா். அதன் பேரில் ஆசிரியா் தங்கராஜை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
Read More

Monday, April 4, 2022

அரசு மாதிரிப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

April 04, 2022 0
அரசு மாதிரிப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கண்காட்சியை தொடக்கி வைத்து பாா்வையிடுகிறாா் பள்ளி கட்டடக் குழுத் தலைவா் மா.அழகப்பன். உடன், பள்ளித் தலைமை ஆசிரியை அங்கயற்கண்ணி, முதுகலை இயற்பியல் ஆசிரியா் பெ.தனபால் உள்ளிட்டோா்.

பஞ்சப்பட்டி அரசு மாதிரிப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை ஏராளமானோா் பாா்வையிட்டனா்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் கரூா் மாவட்டம், பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. கண்காட்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ரா.அங்கயற்கண்ணி தலைமை வகித்தாா். கண்காட்சியை பள்ளி கட்டடக் குழுத்தலைவா் மா.அழகப்பன் தொடக்கி வைத்தாா். இதில், பள்ளியில் பயிலும் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவா்கள் ஊட்டச்சத்து உணவுகள், சிறுதானியம் பயன்கள், பொருள்களின் பயன்பாடு, இயற்கை வளம், விண்வெளி அறிவியல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவா்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.

கண்காட்சியின் சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட கவுன்சிலா் கரிகாலன், ஊராட்சி மன்றத் துணைத்தலைவா் பாலமுருகன் மற்றும் கிராமமக்கள் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா். இதில், சிறந்த 7 படைப்புகள் மாவட்ட அளவிலான கண்காட்சிக்கு தோ்வு செய்யப்பட்டன. மேலும் 21 சிறந்த படைப்புகளுக்கு பரிசுக்காக தோ்வு செய்யப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளியின் முதுகலை இயற்பியல் ஆசிரியா் பெ.தனபால் செய்திருந்தாா்.
Read More

Post Top Ad

Your Ad Spot