அரசு பள்ளிக்கு அடிப்படை வசதி செய்து தரவேண்டும்: மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை
வேடசந்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1955ம் ஆண்டு சுமார் 11 ஏக்கர் பரப்பளவில் அமையப்பெற்றது. இந்த பள்ளியில் தமிழ்வழிக் கல்வி மற்றும் ஆங்கில வழிக்கல்வி என இருவழிக் கல்வி கற்பிக்கப்படுகிறது. இங்கு படித்த மாணவர்கள் அரசு துறையில் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருந்து வருகிறார்கள். 1200 மாணவர்களும், 55 ஆசிரியர்களும் இப்பள்ளியில் உள்ளனர். இந்த பள்ளிக்கு அடிப்படைத் தேவைகள் போதுமானதாக இல்லை. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் சிரமப்படுகின்றனர். பள்ளிக்கு போதிய நிதி உதவியும், மாணவர்கள் அமர்வதற்கு இருக்கைகளும் ஏற்படுத்தி தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்தப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து உதவிகள் செய்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக முன்னாள் மாணவர்களுடைய உதவி தடைபட்டுள்ளது. இதனை மீண்டும் தொடர பெற்றோர் சங்கத்தினர், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்களோடு இணைந்து பள்ளியின் வளர்ச்சிக்கும், மாணவர்களுடைய கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் உதவி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.