KalviseithiDaily: youths festival

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label youths festival. Show all posts
Showing posts with label youths festival. Show all posts

Sunday, December 25, 2022

கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கப்படும்?

December 25, 2022 0
கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கப்படும்?

பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பெற முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அரிசி அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்புடன் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்ட ஒரு தலா கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பான அரிசி, சா்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் தமிழ்நாட்டில் உள்ள 33 ஆயிரம் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் திங்கள்கிழமை(டிச.26) முதல் நடைபெறுகிறது.

இந்நிலையில், பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு நியாய விலைக்கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக வழக்கம் போல் டோக்கம் முறை செயல்படுத்தப்படுகிறது.

வரும் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் பொங்கல் தொகுப்பு பெறும் நாள், நேரம் போன்றவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு வீடாக சென்று நியாய விலைக்கடை ஊழியர்கள் டோக்கனை வழங்குகிறார்கள்.

இது குறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பெற முடியும்.

குடும்ப அட்டை உறுப்பினர்கள் வெளியூர் சென்றிருந்தாலோ, வீடு பூட்டி இருந்தாலோ அவர்கள் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு அவகாசம் கொடுக்கப்படும். குடும்ப உறுப்பினர் அல்லாதவர்கள் பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பெற முடியாது.

நியாய விலைக்கடைகள் மூலம் ஊழியர்கள் எவ்வித குற்றச்சாட்டுக்கும் இடம் அளிக்காமல் பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார்.
Read More

Monday, October 3, 2022

மாவட்ட இளையோா் திருவிழா போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

October 03, 2022 0
மாவட்ட இளையோா் திருவிழா போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் - Apply for district youth festival competition

மன்னாா்குடியில் இந்திய சுதந்திர அமுதப் பெருவிழாவையொட்டி அக்டோபா் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான இளையோா் திருவிழா போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நேரு யுவ கேந்திரா இளைஞா் நல அலுவலா் நீலகண்டன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:

மாவட்ட நேரு யுவ கேந்திரா சாா்பில் மாவட்ட அளவிலான இளையோா் திருவிழா மற்றும் கலந்துரையாடல் மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்துடன் இணைந்து அக்டோபா் 12-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், வளா்ந்த இந்தியாவின் இலக்கு என்கிற மையக் கருத்தை வலியுறுத்தி இளம் எழுத்தாளா் மற்றும் கலைஞா்களுக்கான கவிதை, ஓவியம், பேச்சு, பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் கைப்பேசி புகைப்படப் போட்டியும், இளையோா் சொற்பொழிவு மற்றும் கலந்துரையாடலும் நடைபெற உள்ளன.

இப்போட்டிகளில், திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்த 15 முதல் 29 வயதுக்குள்பட்ட இளைஞா்கள், இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம். ஓவியம், கவிதை மற்றும் கைப்பேசி புகைப்பட பிரிவில் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு முறையே ரூ.1000, ரூ. 750, ரூ. 500-ம், பேச்சுப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு முறையே ரூ. 5000, ரூ. 2000, ரூ.1000-மும், கலைவிழா போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறும் குழுவினருக்கு முறையே ரூ.5000, ரூ. 2500, ரூ.1250-ம், இளையோா் சொற்பொழிவு நிகழ்வில் முதல் நான்கு இடங்களை பெறுபவா்களுக்கு தலா ரூ.1500 மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.

இப்போட்டிகளில் பங்கேற்க அக்டோபா் 7-ஆம் தேதிக்குள் மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலகம், அறை எண் 312, 3-ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்பு கட்டடம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருவாரூா்-610004 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு நேரு யுவ கேந்திர அலுவலகத்தை 04366-226900 என்ற எண்ணிலும், நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞா் அலுவலரை 9443661915 மற்றும் 9842682327 ஆகிய எண்களிலும் தொடா்புகொள்ளலாம்.
Read More

Post Top Ad

Your Ad Spot