KalviseithiDaily: VAO

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label VAO. Show all posts
Showing posts with label VAO. Show all posts

Thursday, December 29, 2022

7 கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 650 பேர் விண்ணப்பம்!

December 29, 2022 0
7 கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 650 பேர் விண்ணப்பம்!

சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற நேர்முக தேர்வில் மிதிவண்டிகளை ஓட்டி காண்பிக்கும் பெண்கள்.

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட ஏழு கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வில் பங்கேற்ற 650 பேர்களுக்கான நேர்முகத் தேர்வு சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட செல்லப்பம்பட்டி, கனகிரி, ஊத்துப்பாளையம், ஆவரங்கம்பாளையம், மஞ்சக்கல்பட்டி, அ.தாழையூர், இருகாலூர் உள்ளிட்ட ஏழு கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அண்மையில் எழுத்துதேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் ஏழு காலிபணியிடங்களுக்கு 650 பேர் தேர்வு எழுதினர்.

தேர்வு எழுதியவர்களுக்கு சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சங்ககிரி வட்டாட்சியர் எஸ்.பானுமதி தலைமையில், சமூகநலத்துறை வட்டாட்சியர் ராஜேந்திரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மகேந்திரன் ஆகியோர் நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.

கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற நேர்முக தேர்வில் மிதிவண்டி ஓட்டி காண்பிக்கும் பெண் நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களின் சான்றிதழ்களை மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், தேர்தல் துணை வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, வருவாய் ஆய்வாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இத்தேர்வில் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் இல்லாதவர்கள் மிதிவண்டியை ஓட்டி காண்பித்தனர்.

சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட ஏழு கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணிக்கு 650 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு எழுதியவர்களுக்கு டிசம்பர் 28 ஆம் தேதி முதல் ஜனவரி 10 ஆம் தேதி வரை நேர்முகத் தேர்விவு நடைபெற உள்ளது.

இப்பணிக்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பி.இ., பி.டெக், எம்பிஏ., எம்.பில்., உள்ளிட்ட உயர்நிலை கல்வித் தகுதி பெற்றவர்கள் நேர்காணலில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More

Wednesday, June 15, 2022

கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு அமர்வுப்படி உயர்த்தி அரசாணை வெளியீடு

June 15, 2022 0


கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அமர்வுப்படி உயர்த்தி அரசாணை வெளியீடு

மாவட்ட ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்படித் தொகையை பத்து மடங்கு உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி நாள் கொண்டாடப்படும் என்றும்ஸ, மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு அமர்வுப் படித் தொகை பத்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார்.

அதன்படி, கூட்டங்களில் பங்கேற்கும் மாவட்ட ஊராட்சி பிரதிநிதிகளுக்கான அமர்வுப்படித் தொகை ரூ.100 இல் இருந்து ரூ.1000 என பத்து மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோன்று கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான அமர்வுப்படித் தொகை ஐந்து மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot