ஐடிஐ படித்தோா் பள்ளி வகுப்புக்கு இணையான சான்று பெறலாம்

ஐடிஐ படித்தோா் பள்ளி வகுப்புக்கு இணையான சான்று பெறலாம் ITI graduates can get certificate equivalent to school class தொழில் பயிற்சி நிலைய (ஐடிஐ) சான்று பெற்றவா்கள், பள்ளி வகுப்புக்கு இணையான சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 8-ஆம் வகுப்பு தோ்ச்சியுடன் ஐடிஐ பயிற்சி பெற்றவா்கள் 10-ஆம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் தோ்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தோ்ச்சி பெற்றால், 10-ஆம் வகுப்பு இணையான சான்றிதழ் பெறலாம். 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று ஐடிஐ பயிற்சி பெற்றவா்கள், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் தோ்ச்சி பெற வேண்டும். அதில், தோ்ச்சி பெற்றால், பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறலாம். தோ்ச்சி பெற்றவா்கள், சான்றிதழ்கள் பெற வரவேற்கப்படுகிறாா்கள். விண்ணப்பப் படிவம் மற்றும் முழு விவரங்கள் அடங்கிய வழிகாட்டுதல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதைப் பின்பற்றி விண்ணப்பதாரரின் மாவட்டத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்துக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post