பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவர்களுக்கு வாந்தி, குமட்டல்

கன்னியாகுமரி: ஒன்றிய அரசின் புனித் சாகர் அபியான் திட்டத்தின் கீழ் கடற்கரை சுத்தம் செய்யும் பணி நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. அதன்படி குமரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி திரிவேணி சங்கம கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த என்.சி.சி. மாணவ, மாணவிகள் சுமார் 150 ஈடுபட்டனர். தூய்மை பணி நிறைவடைந்ததும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு பார்சல் செய்து வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 43 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து மாவட்ட கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி., எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று மாணவர்களின் நலம் விசாரித்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவர்களுக்கு வாந்தி, குமட்டல்

சாங்லி: மஹாராஷ்டிராவில் உள்ள சாங்லியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவ, மாணவியர்கள் வாந்தி எடுத்ததால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி அடுத்த வான்லெஸ்வாடி உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு சுயஉதவிக் குழுவினால் தயாரிக்கப்பட்ட மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட மாணவ, மாணவிகளில் 36 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

அதையடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கல்வி அதிகாரி கெய்க்வாட் கூறுகையில்:

மதிய உணவு சாப்பிட்ட பின்னர் 36 மாணவ, மாணவியருக்கு வயிற்று வலி மற்றும் குமட்டல் ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் வாந்தி எடுத்தனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலமாக உள்ளனர். பள்ளியின் சமையலறையில் இருந்து உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த விஷயம் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மதிய உணவு திட்ட அதிகாரியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது’ என்றார்.
Post a Comment (0)
Previous Post Next Post