KalviseithiDaily: government students

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label government students. Show all posts
Showing posts with label government students. Show all posts

Saturday, November 19, 2022

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய H.M

November 19, 2022 0
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய ஹெச்.எம்

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பஞ்சாயத்து மேலக்கடலாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 128 மாணவர்கள் படித்து வருகின்றனர். 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தலைமையாசிரியையான சற்பிரசாதமேரி தனது சொந்த பணத்திலிருந்து ஒன்றாம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கினார். இந்த சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்வேல் முருகன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

தலைமையாசிரியை சற்பிரசாதமேரி பேசுகையில் ‘‘பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஒரு நாளில் இரண்டு முறை பராமரிக்கப்படும் கழிவறை, சத்துணவு மற்றும் அரசு வழங்கக்கூடிய திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடலாடி, மேலக்கடலாடி மற்றும் அருகிலுள்ள கே.கரிசல்குளம், இந்திரா நகர், தேவர் நகர் உள்ளிட்ட கிராம மக்கள், வரும் கல்வியாண்டில் எங்கள் பள்ளியில் அதிகளவு மாணவர்களை சேர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சைக்கிள் வழங்கப்பட்டது’’ என்றார். அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்திய தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
Read More

Monday, October 31, 2022

HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி: பிளஸ் 2 முடித்த அரசு பள்ளி மாணவர்கள் சேரலாம்

October 31, 2022 1
ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி: பிளஸ் 2 முடித்த அரசு பள்ளி மாணவர்கள் சேரலாம்

ஹெச்சிஎல் நிறுவனத்தின் வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி திட்டத்தில் பிளஸ் 2 முடித்த அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஹெச்சிஎல் நிறுவனம் வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

60 சதவீத மதிப்பெண்

அதன்படி 2021-22-ம் கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம். தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், அரசுப் பள்ளி மாணவர்கள் 2,000 பேருக்கு இந்த திட்டத்துக்கான பயிற்சி கட்டணம் முழுவதையும் வழங்குகிறது.

இந்த பயிற்சியின்போது 7-வது மாதம் முதல் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

ஐடி துறையில் வேலைவாய்ப்பு

பணியில் சேர்ந்தவுடனே தொடக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூ.1.70 லட்சம் முதல் 2.20 லட்சம் வரை (பணிநிலைக்கு ஏற்ப) தரப்படும். இதுதவிர ஹெச்சிஎல் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே உயர்கல்வியையும் தொடர முடியும். அதற்கான கல்விக் கட்டணத்தின் ஒரு பகுதியை ஹெச்சிஎல் நிறுவனம் வழங்கும். இந்த திட்டத்தின் தேர்வு முகாம் இன்று (அக்.30) சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சிமற்றும் ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படுகிறது.

முன்பதிவு செய்ய வேண்டும்

இதையடுத்து விருப்பமுள்ள வர்கள் https://bit.ly/HCLTB-Tamilnadu என்ற வலைதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களை சென்னை - 88079 40948, மதுரை - 9788156509, திருநெல்வேலி- 98941 52160, திருச்சி - 94441 51303, கோவை, ஈரோடு, திருப்பூர் - 89032 45731, 98655 35909. ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்
Read More

Post Top Ad

Your Ad Spot