KalviseithiDaily: 12th

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label 12th. Show all posts
Showing posts with label 12th. Show all posts

Friday, January 6, 2023

பிளஸ் 2 மாணவா்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

January 06, 2023 0
பிளஸ் 2 மாணவா்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் மின்னஞ்சல் முகவரி கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநா் க.இளம் பகவத், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் தங்கள் உயா்கல்வியை தொடா்வதற்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

அதற்கேற்ப பிளஸ் 2 மாணவா்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருக்க வேண்டியது கட்டாயமாகும். இதற்காக மாணவா்கள் தங்கள் வகுப்பாசிரியா்கள் உதவியோடு மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும். மாணவா்களுக்கு மின்னஞ்சலை பயன்படுத்துவது குறித்து ஆசிரியா்கள் கற்றுத்தர வேண்டும்.

பிளஸ் 2 மாணவா்கள் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, அதிலிருந்து முகவரிக்கு ‘நான் மின்னஞ்சல் முகவரியை பெற்றேன்’எனவும், ‘உயா்கல்வியில் மாணவா்களின் இலக்கு என்ன’ என்ற விவரத்தையும் அனுப்ப வேண்டும்.

இந்தப் பணிகளை ஜன.9 முதல் 13-ஆம் தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Monday, September 12, 2022

Ennum Ezhuthum 12th Unit picture collections - PDF

Tuesday, August 2, 2022

68 வயதிலும் படிப்பில் தீரா ஆர்வம்.. பேரன் உதவியுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று கல்லூரிக்கு தயாராகும் பாட்டி

August 02, 2022 0
தன் விடாமுயற்சியால் ஆர்வத்துடன் பிளஸ் 2 தேர்வு எழுதி அதில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சியும் பெற்றுள்ளார் விஜயகுமாரி.

கேரளா மாநிலத்தில் 68 வயதான மூதாட்டி ஒருவர் பட்டம் பெற வேண்டும் ஆர்வத்தில் இளங்கலை பட்டப்படிப்பு பயின்று வருகிறார். கேரளா மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த 68 வயது பெண்மணி விஜயகுமாரி. அங்குள்ள ஆலப்புழா மாவட்டம் முதுகுளம் பகுதியில் வசித்து வந்த இவர் தற்போது பத்தனம்திட்டாவிற்கு குடிபெயர்ந்துள்ளார். இவரின் பெற்றோரான வாசு தேவன் பிள்ளை, பார்கவி அம்மா ஆகியோரின் ஏழாவது குழந்தையான விஜயகுமாரி இளம் வயதில் 10ஆம் வகுப்பு முடித்த நிலையில், பின்னர் திருமணம் காரணமாக 11, 12ஆம் வகுப்பு படிக்க முடியாமல் போயிற்று. இவரது கணவர் முதுகுளத்தில் ட்ரைவிங் ஸ்கூல் நடத்தி வந்துள்ளார். காலங்கள் ஓடி விஜயகுமாரிக்கு குழந்தை பிறந்த பின்னர் அவர்களுக்கும் திருமணம் ஆகி அவர்களும் பிள்ளை பெற்று விட்டனர். தனது பேரப்பிள்ளைகளுடன் விஜயகுமாரி பொழுதை கழித்து வந்தாலும், அவர் மனதில் நம்மால் படிப்பை தொடர முடியவில்லையே என்ற கவலை ஓரமாக இருந்து வந்துள்ளது.

இதை ஒரு நாள் தனது பேரன் விவேக் பிரகாஷ் இடம் விஜயகுமாரி தெரிவித்துள்ளார். பாட்டியின் மன உணர்வை புரிந்து கொண்ட பேரன், வயதானவர்களும் பிளஸ் 2 படிக்கும் வசதி அங்குள்ள செங்கன்னுர் பப்ளிக் கல்வி நிறுவனத்தில் உள்ளது, அங்கு சேர்ந்து கொண்டு பிளஸ் 2 படித்து முடிக்கலாம் பாட்டி என யோசனை தெரிவித்துள்ளார். அத்தோடு நிற்காமல் பாட்டியின் சேர்க்கைக்கு அவரே நேரில் அலைந்து திரிந்து உதவியுள்ளார். அத்தோடு நிற்காமல் பாட்டி படிப்பதற்கு தேவையான உதவிகளை தொடர்ந்து புரிந்து வந்துள்ளார். பிளஸ் 2 தேர்வுக்காக ஐந்து பாடங்களை படித்து தேர்ச்சி பெற ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்ட விஜயகுமாரி, சில நேரங்களில் தேவைப்பட்டால் நள்ளிரவு முதல் விடியற்காலை 4 மணி வரை எல்லாம் படிப்பேன் என்கிறார். தனது விடாமுயற்சியால் ஆர்வத்துடன் பிளஸ் 2 தேர்வு எழுதி அதில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சியும் பெற்றுள்ளார் விஜயகுமாரி.

68 வயதான விஜய குமாரிக்கு பிளஸ் 2 படித்து முடித்தவுடன் நிறைவு வந்துவிடவில்லை. எப்படியாவது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்று விட வேண்டும் என அவா அவருக்கு உள்ளது. எனவே, அடுத்து ஹியூமானிடீஸ் படிப்பில் இளங்கலை பட்டம் பெற தன்னை தயார்ப்படுத்தி வருகிறார் விஜயகுமாரி.
Read More

Sunday, July 17, 2022

பிளஸ் 2 மறுகூட்டல்:மாணவா்கள் புகாா்

July 17, 2022 0
பிளஸ் 2 மறுகூட்டல்:மாணவா்கள் புகாா்

பிளஸ் 2 தோ்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த பலருக்கு, தவறாக கணக்கிட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவு கடந்த ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்வு முடிவுகளில் திருப்தியில்லாதவா்கள், விடைத்தாள் நகல் பெற்று மறுகூட்டல், மறுமதிப்பீடு மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது.

அதன்படி, மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த கணிசமான மாணவா்களின் விடைத்தாள் மதிப்பீட்டில் தவறுகள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மாணவா்கள் சிலா் கூறியதாவது: விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியா்கள் சிலா் தவறாகக் கணக்கிட்டு மதிப்பெண் வழங்கியுள்ளனா். அதாவது வேதியியல் பாடத்தில் ஒரு மாணவருக்கு செய்முறை தோ்வு தவிா்த்து 57 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மறுகூட்டலில் 67 மதிப்பெண் வருகிறது. இதேபோன்று, இயற்பியல் பாடத்தில் ஒரு மாணவருக்கு 82-க்கு பதிலாக 72 மதிப்பெண்ணும், கணினி அறிவியலில் ஒரு மாணவருக்கு 95-க்கு பதில் 85 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டுள்ளது. பாட ஆசிரியா் திருத்தியபின், முதல்நிலை, இரண்டாம் நிலை, முதன்மை மதிப்பீட்டாளா்கள் மூலம் அந்த விடைத்தாள் சரிபாா்க்கப்படும். அனைவரையும் கடந்து தவறுகள் நடந்துள்ளது ஏற்புடையதல்ல. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் கூறினா்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தோ்வுத் துறை அதிகாரிகள், ‘பொதுத் தோ்வு பணியில் தவறிழைத்த ஆசிரியா்கள், கண்காணிப்பு அலுவலா்களிடம் உரிய விளக்கம் கேட்டு துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன’ என்றனா்.
Read More

Sunday, July 10, 2022

பிளஸ் 2 படித்தோருக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை 'ரெடி'

July 10, 2022 0
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 39 ஜூனியர் ஆபரேட்டர் பணியிடங்களுக்கு, தகுதியான நபர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் விமானப்போக்குவரத்து பிரிவில், 39 ஜூனியர் ஆபரேட்டர் இடங்கள் காலியாக உள்ளன. மாநிலங்கள் முறையே தமிழகம், புதுச்சேரியில் 28 இடங்களும், கர்நாடகாவில் 6 இடங்களும், தெலுங்கானாவில் 5 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஆர்வமுள்ள, தகுதியான விண்ணப்பதாரர்கள், ஜூலை 29, இரவு 10 மணிக்கு முன்னதாக விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

பொது, பொருளாதார ரீதியான பின்தங்கியோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனில், பிளஸ் 2 வகுப்பில் குறைந்தபட்சம் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினர், குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இதனுடன் கனரக வாகனங்களை இயக்குவதற்கு உரிய செல்லுபடியாகும், ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் ஓட்டுநர் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 100 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறும். திறனறிவு, அடிப்படை ஆங்கிலம் உள்ளிட்டவை தொடர்பாக கேள்விகள் இடம்பெறும்.

விண்ணப்பிப்பது எப்படி :

விண்ணப்பதாரர்கள் iocl.com என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில், ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை, இணையதள முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம்.
Read More

Monday, July 4, 2022

தஞ்சை தமிழ் பல்கலையில் ஒருங்கிணைந்த எம்.ஏ., படிப்பு - பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர் சேரலாம்.

July 04, 2022 0
தஞ்சை தமிழ் பல்கலையில், ஐந்தாண்டு கால ஒருங்கிணைந்த தமிழ் எம்.ஏ., படிப்புகளுக்கு, விண்ணப்ப வினியோகம் துவங்கியுள்ளது.இந்த படிப்பில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர் சேரலாம்.

இதில், இலக்கியம், கல்வெட்டியல், தொல்லியல், நாடகம் ஆகிய துறைகள் உள்ளன. அதேபோல, இரண்டாண்டு கால முது அறிவியல் டிப்ளமா படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.இந்த பிரிவில் இலக்கியம், சிற்பம், இசை, நாடகம், கடல்சார் வரலாறு, தொல்லியல், ஓலைச்சுவடி, அயல்நாட்டு தமிழ் கல்வி, மெய்யியல், மொழிபெயர்ப்பு, மூலிகை அறிவியல், பழங்குடி மக்கள் ஆய்வு உள்ளிட்ட துறை படிப்புகள் உள்ளன.

மேலும், முழுநேரம் மற்றும் பகுதி நேரமாக படிக்கும் வகையில், முதுநிலை டிப்ளமா படிப்புகளும் உள்ளன. இந்த படிப்புகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.இதற்கான விண்ணப்பங்களை, www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, 'பதிவாளர், தமிழ் பல்கலை கழகம், தஞ்சாவூர் -- 613 010' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்

மேலும் தகவல்களுக்கு, 04362 - 227 089, 226 720 என்ற தொலைபேசி எண்களிலும், tuadmissionsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
Read More

Sunday, June 26, 2022

+2 முடித்த உடன் ஆடிட்டர் படிப்பில் சேருவது எப்படி?

June 26, 2022 0
Read More

Monday, June 20, 2022

ப்ளஸ் -2 வகுப்பிற்கு பின் படிக்க இவ்வளவு வாய்ப்புகள் உள்ளதா???

June 20, 2022 1

  
ப்ளஸ் -2 வகுப்பிற்கு பின் படிக்க இவ்வளவு வாய்ப்புகள் உள்ளது 


என்ன படிக்கலாம் மாணவர்களின் பார்வைக்கு கொண்டுசெல்லுங்கள்  பயன் பெறுங்கள்...



Science Courses (3 Years)



Bsc Physics

Bsc Chemistry

Bsc Botany

Bsc Zoology

Bsc Computer science

Bsc Mathematics

Bsc PCM

Bsc CBZ

Bsc Forestry

Bsc Dietician & Nutritionist

Bsc Home Science

Bsc Agriculture Science

Bsc Horticulture

Bsc Sericulture

Bsc Oceanography

Bsc Melsorology

Bsc Arthopology

Bsc Forensic Science

Bsc Food technology

Bsc Diary Technology

Bsc Hotel Management

Bsc Fashion Design

Bsc Mass Communication

Bsc Electronic Media

Bsc Multimedia

Bsc 3D Animation



Commerce Courses 



CA Chatted Account

CMA Cost Management Account

 CS Company Secretary (Foundation)

B.Com Regular

B.Com Taxation &Tax Procedure

B.Com Travel & Tourism

B.Com Bank Management

B.Com Professional

BBA  /. BBM Regular

BFM Bachelor of Financial Management 

BMS

BAF



Humanities Courses



Advertising

BS General

Criminology

Economics

Fine Arts

Foreign languages

Home Science

Interior Design

Journalism

Library Science

Physical Education

Political Science

Psychology

Social Work

Sociology

Travel and Tourism



Management Courses



Business Management

Bank Management

Event Management

Hospital Management

Hotel Management

Human Resources Managemet

Logistics Management



Law Courses (3/5 Years) 



LLB,

BA+LLB

B.Com + LLB

BBM+LLB,

BBA. +LLB



MEDICAL COURSES 



MBBS 

BUMS Unani

BHMS Homeopathy

BAMS Ayurveda

BSMS Sidha

BNYS Naturopathy

BDS Dental

BVSc Veterinary.



PARAMEDICAL COURSES 



Nursing

Pharm D

B.Pharm

D.Pharm

M. Pharm

Anesthesia technical

Cardiac Care technical

Perfusion technology

Cathllab technology

Clinical Optometry

Dental Hygiene

Dental Mechanic

Dental Technician

Health Inspector

Medical imaging & Tech...

Medical Lab technician

Medical Records tech

Medical X Ray Technician

Nuclear Medicine Tech

Occupational Therapist

Operation theater Tech

Ophthalmic Assistant



PHYSIOTHERAPY



Radiographic Assistant

Radiotherapy Technician

Rehabilitation Therapy

Respiratory Therapy Tech.

Blood Transfusion Tech..

Bsc Renal Dialysis



B.Tech Engineering (4year)



Petro chemical Engineering

Petroleum Engineering

Civil Engineering

Mechanical Engineering

Aeronautical Engineering

Aerospace Engineering

Agricultural Engineering

Architecture Engineering

Automobile Engineering

Automation & Robotics Eng.

Avionics Engineering

Biomedical Engineering

Bio technological Eng..

Chemical Engineering

Ceramics Engineering

Computer Science Engi..

Electronics &Comm.Engi.

Electrical & Electronics Engi.

Environmental Science Engi.

Information Science Engi

Industrial Engineering

Industrial Production Engi..

Instrumental Technology

Marine Engineering

Medical Electronics Engi..

Mining Engineering

Manufacturing Science Engi.

Naval Architecture Engi....

Nanotechnology Engi..

Polymer Technology Engi..

Silk Polymar Engi...

Carpet Technology Engi...

Textile engineering

Robotics

Genetic



POLYTECHNIC (10 th class) 



Civil engineering

Mechanical engineering

Automobile engineering

Computer science engi.....

Electronics and communication Engineering

Electrical engineering

Petro chemical engineering



Management

(new job opportunity Courses 2/3/5Years Duration):



BBA /BBM

BBA Aviation

BBA Air Cargo Management

BBA Aeronautical

BBA Retail Marketing

BBA Customer Care Management

BBA Airline & Airport Management

BBA Cargo Management

BBA Office Management

BBA Store Management

BBA Mall Management

BBA Logistics

BCA SAP

BCA Cloud Computing 



MBA Logistics

         Aviation

         HR

         Management



Architecture (5 years +2)

B.Arch (NATAis Compulsory)

M.Arch .

 மாணவர் ,மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுடன் கலந்தாலோசித் து  நல்லதொரு 

பிரிவை தேர்ந்தெடுத்து பயில்வதற்கு நல்வாழ்த்துக்கள் .
Read More

Sunday, June 19, 2022

12ம் வகுப்பு - பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம்

June 19, 2022 0
பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம்

1. அறிவியல் பாடப் பிரிவுகள் 95.51%

2. வணிகவியல் பாடப் பிரிவுகள் 92.518

3. கலைப் பிரிவுகள் 85.13

4₁ தொழிற்பாடப் பிரிவுகள் 84.20%
Read More

Thursday, June 16, 2022

ஒரே நாளில் 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஜூன் 20க்கு மாற்றியமைப்பு

June 16, 2022 0
10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட்டு ஜூன் 20ம் தேதி ஒரே நாளில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி தேர்வு முடிவடைந்தது. இதே போல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ம் தேதி தொடங்கி மே 30ம் தேதி வரை நடைபெற்றது. இதில், 10ம் வகுப்புக்கு நாளையும் (ஜூன் 17), 12ம் வகுப்புக்கு ஜூன் 23ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில், தேர்வு முடிவுகளுக்கான தேதிகள் மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 20ம் தேதி ஒரே நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 20ம் தேதி காலை 9:30 மணிக்கு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், நண்பகல் 12 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகிறது.

அரசு தேர்வுத் துறையின், tnresults.nic.in, dge1.tn.nic.in மற்றும் dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளையும், மதிப்பெண் விபரத்தையும் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களின் மொபைல் போன் எண்களுக்கு, மதிப்பெண் விபரங்கள், குறுஞ்செய்தி யாகவும் அரசு தேர்வுத் துறையால் அனுப்பப்படும்.
Read More

Friday, June 3, 2022

வகுப்பு12|செயலாளர், கம்பெனி செயலரை நியமிக்கும் வழிமுறைகள்|பாடம்10|பகுதி2

June 03, 2022 0
கம்பெனி செயலரை நியமனம் செய்ய வேண்டிய வழிமுறைகள்,இயக்குனர் கூட்ட அறிக்கையின் சாராம்சத்தினை எவ்வாறு தெரியப்படுத்தவேண்டும் என்பது பற்றியும் ஒருமாதத்திற்குள் செயல்படுத்தும் விவரங்கள்பற்றியும் இப்பாடத்தில் ஆசிரியர் விளக்குகிறார்.
Read More

Thursday, June 2, 2022

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமை கூடாது: ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்

June 02, 2022 0
The Department of Education has advised the teachers involved in the task of editing the 10th, 11th and 12th class general examination answer sheets not to be strict in editing them. Students are also advised to give full marks if they give partial answers.

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமை கூடாது என விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Read More

Wednesday, June 1, 2022

10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்படும்; கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தகவல்

June 01, 2022 0
The results of Class 10, Plus 2 general examinations in Kerala will be released in advance, '' said Sivankutty, the state education minister. It has been decided to publish their results in advance.

Education Minister Sivankutty said the Class 10 results would be released on June 10 and the Plus 2 results on June 12. Entrance ceremonies are held in 12,986 schools. More than four lakh students are expected to attend the first class. Masks are mandatory in schools. Corona prevention measures should be adhered to by all. Police are on security duty in front of schools. He said he had also been ordered to inspect nearby shops.

கேரளாவில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்படவுள்ளது,'' என, அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.

கேரளாவில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 15, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் 20 ல் வெளியிடப்படும் என முன் அறிவிக்கப்பட்டிருந்தது. அவற்றின் முடிவுகளை முன் கூட்டியே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் 12 ல் வெளியிடப்பட உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

மாநிலத்தில் நுழைவு விழாவுடன் பள்ளிகள் நாளை (இன்று) திறக்கப்படுகிறது. 12,986 பள்ளிகளில் நுழைவு விழா நடக்கிறது. ஒன்றாம் வகுப்பில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் வருகை தர வாய்ப்புள்ளது.

பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். பள்ளிகளின் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அருகில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
Read More

Monday, May 30, 2022

class12|வகுப்பு 12|நுண்ணுயிரியல்|பாடம் 9||மருத்துவ மைக்காலஜி |பகுதி 1

May 30, 2022 0
பூஞ்சைகளின் தன்மைகள்,வகைகள்,பூஞ்சைகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள்,மேலும் மருத்துவ துறையில் பயன்படும் பூஞ்சைகள் மற்றும் அதன் பண்புகள் பற்றியும் இப்பாடத்தில் ஆசிரியர் விளக்குகிறார் .
Read More

Class 12|அறிவியலும் இந்திய பண்பாடும் |சமூக- சமய சீர்திருத்த இயக்கங்கள் |அலகு 7|பகுதி 2

May 30, 2022 0
பிரம்மஞான சபையின் தோற்ற்றம் , அதன் நோக்கங்கள் , தொண்டுகள் , ராமலிங்க அடிகளாரின் சமூக நெறிகள் மற்றும் ஜோதிபாபூலே அவர்கள் மேற்கொண்ட சீர்திருத்த இயக்கங்கள் பற்றி ஆசிரியர் இந்த காணொளியில் விவரிக்கிறார்
Read More

Saturday, May 28, 2022

மேல்நிலைத் தேர்வு முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மைய மதிப்பீட்டுப் பணிகளுக்கான கையேடு மே 2022

May 28, 2022 0
மேல்நிலைத் தேர்வு முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மைய மதிப்பீட்டுப் பணிகளுக்கான கையேடு மே 2022 script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-7862145743793340" crossorigin="anonymous"> Paper Valuation Camp Guide May 2022 Pdf - Download here
Read More

Wednesday, May 25, 2022

Class 12| Communicative English | English for the work place | Chapter 2

May 25, 2022 0
Read More

Tuesday, May 24, 2022

Class 12 |English |Grammar |Modal Auxiliaries |Unit 1

May 24, 2022 0
Read More

வகுப்பு 12 | கட்டட பொறியியல் |பாடம் 2தனிச்சிறப்பு வாய்ந்த கட்டடப் பொருட்கள் |அலகு 2

May 24, 2022 0
தனிச் சிறப்பு வாய்ந்த கட்டிடப்பொருட்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது இதன் தன்மைகள்,பயன்கள், இவற்றில் கண்ணாடி, ரப்பர், அலுமினிய பொருட்கள் கட்டிடப்பணியில் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது என்பது பற்றி ஆசிரியர் இப்பாடத்தில் விவரிக்கிறார்.
Read More

Monday, May 23, 2022

12ம் வகுப்புத் தேர்வு முடிவதற்குள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகள் தீவிரம்

May 23, 2022 0
12ம் வகுப்புத் தேர்வு முடிவதற்குள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. பல முன்னணி கலை அறிவியல் கல்லூரிகள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம் என அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்குனரகம் அட்டவணையை வெளியிடும் முன்பே தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot