பிளஸ் 2 படித்தோருக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை 'ரெடி'

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 39 ஜூனியர் ஆபரேட்டர் பணியிடங்களுக்கு, தகுதியான நபர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் விமானப்போக்குவரத்து பிரிவில், 39 ஜூனியர் ஆபரேட்டர் இடங்கள் காலியாக உள்ளன. மாநிலங்கள் முறையே தமிழகம், புதுச்சேரியில் 28 இடங்களும், கர்நாடகாவில் 6 இடங்களும், தெலுங்கானாவில் 5 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஆர்வமுள்ள, தகுதியான விண்ணப்பதாரர்கள், ஜூலை 29, இரவு 10 மணிக்கு முன்னதாக விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

பொது, பொருளாதார ரீதியான பின்தங்கியோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனில், பிளஸ் 2 வகுப்பில் குறைந்தபட்சம் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினர், குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இதனுடன் கனரக வாகனங்களை இயக்குவதற்கு உரிய செல்லுபடியாகும், ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் ஓட்டுநர் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 100 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறும். திறனறிவு, அடிப்படை ஆங்கிலம் உள்ளிட்டவை தொடர்பாக கேள்விகள் இடம்பெறும்.

விண்ணப்பிப்பது எப்படி :

விண்ணப்பதாரர்கள் iocl.com என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில், ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை, இணையதள முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம்.
Post a Comment (0)
Previous Post Next Post