KalviseithiDaily: MBBS

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label MBBS. Show all posts
Showing posts with label MBBS. Show all posts

Tuesday, January 3, 2023

மருத்துவ மாணவா் சோ்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வலியுறுத்தல்

January 03, 2023 0
மருத்துவ மாணவா் சோ்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி

மருத்துவ மாணவா் சோ்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட மாணவா் சோ்க்கை இடங்களில் 6 இடங்கள் நிரப்பப்படவில்லை. தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர ஆயிரக்கணக்கான மாணவா்கள் காத்துக்கிடக்கும் நிலையில், விலை மதிப்பற்ற மருத்துவ இடங்கள் வீணடிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு மருத்துவரை உருவாக்க ரூ.1 கோடிக்கும் கூடுதலாக செலவிடப்படுகிறது. 6 இடங்கள் நிரப்பப்படாததால் பல கோடி ரூபாய் அரசு பணம் வீணாகும். அதைக் கடந்து தமிழகத்தைச் சோ்ந்த 6 மாணவா்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு நிரந்தரத் தீா்வு அகில இந்திய ஒதுக்கீடு முறையை ரத்து செய்வது தான். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும் என்று கூறியுள்ளாா்.
Read More

Wednesday, December 28, 2022

கரோனா காலத்தில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு உயர் கல்வியில் சேர சான்றிதழ் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

December 28, 2022 0
கரோனா காலத்தில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு உயர் கல்வியில் சேர சான்றிதழ் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படித்தவர்கள் கரோனா காலத்தில் பணிபுரிந்ததால் அவர்கள் உயர் கல்வியில் சேர கல்விச் சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை, கோவை, சென்னை, சேலம் உள்பட பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் பயின்றவர்கள், உயர் மருத்துவக் கல்வியில் சேர எம்பிபிஎஸ் கல்வி சான்றிதழ்களை வழங்க மருத்துவக் கல்வி இயக்குநருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: ''மனுதாரர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் போது முதுநிலை படிப்பில் சேரும் போது அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தப்படி 2 ஆண்டுகள் பணிபுரிய விரும்பாவிட்டால் மனுதாரர்கள் அரசுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதார்கள் தரப்பில், மருத்துவ படிப்பு காலத்தை முழுமையாக நிறைவேற்றியுள்ளோம். கரோனா காலத்தில் பணிபுரிந்துள்ளோம். இதனால் மேலும் பணிபுரிய வேண்டியதில்லை. கல்வி சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் கரோனா காலத்தில் 2 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளனர். இதனால் மனுதாரர்கள் உயர் மருத்துவ கல்வியில் சேர மருத்துவ சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும்'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Read More

Thursday, December 15, 2022

மருத்துவ இடங்களை அதிகரிக்க டிச.23 வரை விண்ணப்பிக்கலாம்: என்எம்சி

December 15, 2022 0
மருத்துவ இடங்களை அதிகரிக்க டிச.23 வரை விண்ணப்பிக்கலாம்: என்எம்சி

புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிப்பதற்கும் விண்ணப்பிப்பதற்கு வரும் 23-ஆம் தேதி வரை தேசிய மருத்துவ ஆணையம் அவகாசம் அளித்துள்ளது.

இதுகுறித்து அந்த ஆணையத்தின் மருத்துவ தர நிா்ணய வாரியத் தலைவா் கங்காதா் வெளியிட்ட அறிவிப்பு:

எதிா்வரும் 2023-24 கல்வியாண்டில் எம்பிபிஎஸ், முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களை அதிகரிப்பதற்கும், புதிய கல்லூரிகளைத் தொடங்குவதற்கும் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே நிறைவடைந்துவிட்டது.

இந்த முறை நிறைய விண்ணப்பங்கள் வந்தபோதிலும், பெரும்பாலான கல்லூரிகள் அந்த வாய்ப்பை தவறவிட்டது மருத்துவ ஆணையத்தின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து வியாழக்கிழமை (டிச.15) முதல் வரும் 23-ஆம் தேதி வரை மருத்துவக் கல்லூரிகள் அதற்கான விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, அத்தியாவசியச் சான்று, இணைப்புக் கல்லூரி ஒப்புகைச் சான்று, மருத்துவமனை விவரங்கள், கல்விக் கட்டண விவரங்களை இணைத்து விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம்.
Read More

Thursday, October 27, 2022

MBBS, BDS : பொதுப்பிரிவு கலந்தாய்வு நிறைவு: 29-இல் இட ஒதுக்கீடு பட்டியல்

October 27, 2022 0
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.: பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று நிறைவு: 29-இல் இட ஒதுக்கீடு பட்டியல்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு இணையவழியில் நடைபெறும் பொதுப்பிரிவு கலந்தாய்வு வியாழக்கிழமையுடன் (அக்.27) நிறைவடைகிறது. இடஒதுக்கீடு விவரங்கள் அக்.29-இல் இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,067 எம்.பி.பி.எஸ்., 1,380 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. பொதுப் பிரிவினருக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஆன்லைனில் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது.

அன்றைய தினமே மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நேரடியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது.

இதில், 65 இடங்கள் நிரம்பியுள்ளன. மறுநாள் 20-ஆம் தேதி நடைபெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு கலந்தாய்வில் 565 இடங்கள் நிரப்பப்பட்டன. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் கடந்த 25-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை வரை கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மருத்துவக் கல்வி தோ்வுக்குழுச் செயலாளா் ஆா்.முத்துச்செல்வன் கூறியதாவது: தீபாவளி பண்டிகை வந்ததால் மாணவா்கள் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாணவா்கள், அவா்களின் பெற்றோா் கேட்டுக் கொண்டதால் 27-ஆம் தேதி வரை கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது.

29-ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியல் இணையதளங்களில் வெளியிடப்படும். 28-ஆம் தேதியுடன் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நிறைவடைகிறது. அதற்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியல் வரும் 30-ஆம் தேதி இணையதளங்களில் வெளியிடப்படும் என்றாா் அவா்.
Read More

Tuesday, October 18, 2022

MBBS, BDS கலந்தாய்வு இன்று தொடக்கம்

October 18, 2022 0
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு இன்று தொடக்கம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமை (அக்.19) தொடங்குகிறது.

அதில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் நேரடியாகவும், பொதுக் கலந்தாய்வு இணையவழியாகவும் நடைபெற உள்ளது.

எம்.பி.பி.எஸ். மற்றும் பிடி..எஸ். இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) நடத்தி வருகிறது. நிகழாண்டு கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் கலந்தாய்வு புதன்கிழமை (அக்.19) தொடங்குகிறது. விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு முதல் நாளிலும், 20-ஆம் தேதி அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வும் சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் நேரடியாக நடைபெறும்.

பொதுக் கலந்தாய்வு புதன்கிழமை முதல் 25-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து 21 முதல் 27-ஆம் தேதி வரை நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும் இணையவழியே நடைபெறவுள்ளது
Read More

Tuesday, September 27, 2022

வெளிநாட்டு மருத்துவ மாணவா்கள் கல்லூரிகளில் பயிற்சி பெற கூடுதல் இடங்கள்

September 27, 2022 0
வெளிநாட்டு மருத்துவ மாணவா்கள் கல்லூரிகளில் பயிற்சி பெற கூடுதல் இடங்கள்

வெளிநாட்டு மருத்துவ மாணவா்கள், தமிழக கல்லூரிகளில் பயிற்சி பெற கூடுதல் இடங்களை அனுமதிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் மருத்துவம் படித்த மாணவா்கள் மத்திய அரசின் தேசிய தோ்வு வாரியம் நடத்தும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தோ்வில் வெற்றி பெற வேண்டும்.

இதற்கு அவா்கள் சென்னையில் உள்ள 4 மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட தோ்ந்தெடுக்கப் பட்ட சில மருத்துவமனைகளில் மட்டுமே பயிற்சி பெற முடியும். இந்த மருத்துவமனைகளில் வெளிநாட்டு மருத்துவ மாணவா்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டு விட்டது.

வெளிநாட்டு மருத்துவ மாணவா்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரு ஆண்டு பயிற்சி பெறுவதற்காக மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.2 லட்சமும், எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக் கழகத்துக்கு தடையின்மை சான்றிதழ் பெற ரூ.3.20 லட்சமும் செலுத்த வேண்டும்.

இது நியாயமற்றது என்பதை சுட்டிக்காட்டிய பிறகு மருத்துவக் கல்லூரிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்து விட்ட தமிழக அரசு, பல்கலைக்கழகத்துக்கு செலுத்த வேண்டிய தொகையையும் ரூ.30 ஆயிரமாகக் குறைத்து கடந்த ஜூலை 29-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், அந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கான அரசாணை இன்னும் பிறப்பிக்கப்படாததும் சிக்கலுக்கு காரணமாக உள்ளது.

இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு, வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவா்களுக்கு கூடுதல் பயிற்சி இடங்களை உருவாக்கவும், அறிவித்தபடி கட்டணத்தைக் குறைக்கவும் உரிய ஆணைகளை பிறப்பிக்க வேண்டும்.
Read More

Tuesday, September 13, 2022

தகுதிச் சான்று விண்ணப்பம் நிறுத்தம்: எம்ஜிஆா் மருத்துவ பல்கலை. விளக்கம்

September 13, 2022 0
தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தகுதிச் சான்றிதழ் விண்ணப்பங்களுக்கான பதிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்தப் பல்கலை. வெளியிட்ட அறிவிப்பு: தகுதிச் சான்றிதழுக்கான கட்டணங்களை ஒருமைப்படுத்துதல், மாணவா்கள் விண்ணப்பிக்கும் முறைகளை எளிமைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப மாற்றங்களை பல்கலை. செய்து வருகிறது. இதற்கான சீராய்வுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதால், தகுதி சான்றிதழுக்கான தொழில்நுட்ப நுழைவுகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.

தகுதிச் சான்றிதழ் தேவைப்படுகிற மாணவா்கள், சில நாள்கள் பொறுத்திருந்து பின் விண்ணப்பிக்கலாம். அதன்படி, 15-ஆம் தேதிக்கு பிறகு விண்ணப்பங்கள் ஏற்கப்படும். எல்லோருடைய விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும். இந்த நிறுத்தம் தற்காலிகமானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Wednesday, July 13, 2022

இணைய குறைபாட்டால் பதிவு செய்ய இல்லாமல் மருத்துவ இடம் கிடைக்கப்பெறாத மாணவருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

July 13, 2022 0
இணைய குறைபாட்டால் பதிவு செய்ய இல்லாமல் மருத்துவ இடம் கிடைக்கப்பெறாத மாணவருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இணைய குறைபாட்டால் பதிவு செய்ய இல்லாமல் மருத்துவ இடம் கிடைக்கப்பெறாத மாணவருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க மருத்துவக் கல்வி இயக்குநர், தேர்வுக்குழுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

இணைய குறைபாட்டால் மாணவர் உரிமை பறிக்கப்பட்டால் அதன் இழப்பீட்டை வழங்க அரசு கடமைப்பட்டுள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர். இணைய குறைபாட்டால் பதிவு செய்ய இல்லாமல் மருத்துவ இடம் கிடைக்கப்பெறாத மாணவருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க மருத்துவக் கல்வி இயக்குநர், தேர்வுக்குழுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது
Read More

Tuesday, July 5, 2022

மருத்துவ மேற்படிப்பு நிர்வாக ஒதுக்கீட்டில் முறைகேடு - 6 மாதங்களுக்குள் முடிக்க ஐகோர்ட் உத்தரவு

July 05, 2022 0
மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தேர்வுக்குழுவின் முன்னாள் செயலாளர் மீதான துறை ரீதியான நடவடிக்கையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்பில் கடந்த 2020-21ம் கல்வியாண்டுக்கு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் 113 காலியிடங்களில் கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறி மருத்துவர்கள் சந்தோஷ்குமார், கீதாஞ்சலி ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தேர்வுக்குழுவின் அப்போதைய செயலாளர் செல்வராஜன் தான் இதற்கு காரணம் என சிபிசிஐடி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர் உள்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து செல்வராஜன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செல்வராஜன் மற்றும் அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் கல்லூரிகள்தான் அதிக கட்டணம் வசூலித்தன. ஆனால், தேர்வுக்குழு செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். அதில், கலந்தாய்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரிதான். முன்னாள் செயலாளர் செல்வராஜன் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீதான துறைரீதியான நடவடிக்கையை அரசு 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அவருக்கு சேரவேண்டிய ஓய்வூதிய பலன்களை நிறுத்திவைக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
Read More

Sunday, July 3, 2022

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறைகேடு - உயர்நீதிமன்ற உத்தரவு

July 03, 2022 0
The High Court has ordered that the CBCID inquiry into the medical student admissions malpractice case will go ahead. The former Secretary of the Selection Board appealed and the Madras High Court closed the case. In the ongoing case, it has been ordered that the students were admitted without proper consultation in 2020-21. The Chief Justice of the High Court has ordered the departmental inquiry to be completed within 6 months.

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது செல்லும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வுக்குழு முன்னாள் செயலாளர் மேல்முறையிட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்ததுள்ளது. 2020-21ல் முறையாக கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்தியதாக தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. துறை ரீதியான விசாரணையை 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளார்.
Read More

Tuesday, June 28, 2022

புதுவையில் முதுநிலை மருத்துவபடிப்புகளுக்கு ஜூலை 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

June 28, 2022 0
புதுவையில் முதுநிலை மருத்துவபடிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்டாக் நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதுகுறித்து புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளா் பி.டி.ருத்ரகௌடு வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அரசு, அகில இந்திய ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியா் ஒதுக்கீட்டு இடங்களுக்கு இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

புதுவையில் உள்ள பல் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கு அரசு, அகில இந்திய ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியா் ஒதுக்கீட்டு இடங்களுக்கு இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை ஜூலை 11-ஆம் தேதி மாலை 6 மணி வரை இணையதளத்தில் சமா்ப்பிக்கலாம் என்றாா் அவா்.
Read More

Thursday, June 23, 2022

தமிழகம் ஒப்படைத்த மருத்துவ 'சீட்': உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

June 23, 2022 0
மருத்துவக் கல்வியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில், தமிழக அரசு ஒப்படைத்துள்ள, 92 இடங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக, 'நீட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்தது. இதில், தமிழகத்தில் அரசுப் பணியில் இருக்கும் டாக்டர்களுக்கு ஒதுக்கப்பட்ட 92 இடங்கள் காலியாக இருந்தன. இதையடுத்து, இந்த இடங்களை, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழக அரசு ஒப்படைத்தது. இந்நிலையில், 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புக்காக புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இடங்களில், இந்த 92 இடங்களையும் சேர்க்க வேண்டும். ஏற்கனவே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்' என, சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் சி.டி.ரவிக்குமார், சுதான்ஷு துலியா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளதாவது:

சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் நிரப்பப்படாத, 92 இடங்களை தமிழக அரசு, தேசிய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைத்து உள்ளது. இவ்வாறு காலியாக உள்ள இடங்களை நிரப்புவது தொடர்பாக உச்ச நீதிமன்றம், கடந்த மே 9ல் சில உத்தரவுகளை பிறப்பித்தது. இதன்படி, ஏற்கனவே படிப்பில் சேர்ந்தவர்களுக்கு கவுன்சிலிங்கில் வாய்ப்பு தரக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவும், அதுபோன்ற கோரிக்கையாக உள்ளதால், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது; மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
Read More

Tuesday, June 21, 2022

துணை மருத்துவ பயிற்சிகளுக்கான சேர்க்கை அறிவிப்பு 2022 - 23 - விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.08.2022

June 21, 2022 0
34
கீழ்காணும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள பயிற்சிகளுக்கான சேர்க்கை மற்றும் கல்லூரி விபரங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு : 30.07.2022 அன்று வயது 22 க்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். அரசு விதிகளின் படி தாழ்த்தப்பட்ட , மலைசாதியினர் , பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய வயது வரம்பு தளர்த்தப்படும்.

ஒன்றுக்கு மேற்பட்ட பாடப்பிரிவுகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானதாகும் . மேற்படிப்பிற்கான வழிகாட்டுதல் ஆலோசனை கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படும்.

கலந்துரை , ஆலோசனை மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு தகுந்த கல்லூரிகளில் நிபந்தனையுடன் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் tnedusupport.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் .

விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.08.2022

Read More

Thursday, May 26, 2022

உஷார்! MBBS சீட் வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி

May 26, 2022 0
MBBS சீட்

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீகாரை சேர்ந்த ஒரு கும்பல் நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு போன் செய்து எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருகிறேன் என்று கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறி உள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அந்த மாணவிக்கு போன் செய்த பீகாரை சேர்ந்த அசோக் என்பவர் உங்களுக்கு எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித்தருகிறேன். ரூ.10 லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளார்.

மாணவியின் குடும்பத்தினரும், அவரது பேச்சை நம்பி ஆன்லைன் மூலம் அசோக் கணக்கிற்கு ரூ.10 லட்சம் அனுப்பி வைத்தனர். பெங்களூரில் உள்ள கெம்பெகவுடா மெடிக்கல் சயின்சஸ் கல்லூரியில் சீட் நிச்சயம் கிடைத்துவிடும் என்று அசோக் அவர்களிடத்தில் உறுதி அளித்துள்ளார். ரூ.10 லட்சம் மோசடி

அதனை நம்பி சிறிது நாட்கள் மாணவியின் குடும்பத்தினர் காத்திருந்தனர். பின்னர் அசோக்கை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையிலே இருந்துள்ளது.

தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த மாணவியின் குடும்பத்தினர், ஐதராபாத் போலீசில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தனர். புகாரைப் பெற்று கொண்டு வழக்குப்பதிவு செய்த போலீசார் அசோக்கை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அவருடன் சேர்ந்து இந்த மோசடி கும்பலில் மேலும் 6 பேர் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்கள் அனைவரிடமும் இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளின் அடையாள அட்டைகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இங்கு மோசடி செய்த பின் நேபாள அடையாள அட்டையை பயன்படுத்தி அங்கு சென்று பதுங்கி கொள்வது வழக்கம். கும்பலைச் சேர்ந்த மேலும் 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்
Read More

Monday, April 18, 2022

முதுகலை நீட் தேர்வை ஒத்திவைக்காவிட்டால், மருத்துவ பட்டங்களை திருப்பி அளிப்போம் : குடியரசு தலைவருக்கு 2,000 மருத்துவர்கள் கடிதம்!

April 18, 2022 0
Thousands of physicians have written to the President of the Republic, urging them to return their medical degrees if the postgraduate NEET exam is not postponed. NEED's examination for postgraduate medical studies was postponed last year due to cases related to corona and reservation. The examination was held in September last year and is currently under discussion. The consultation for the All India quota is scheduled to end on May 3 and will be held in the states thereafter. But doctors say they are at risk as the 2022 postgraduate NEED exam is set to take place on May 21st.

Doctors, who say it takes at least 2 months to prepare for the exam, have insisted that the exam be postponed. In a letter to the president, more than 2,000 doctors said they would return their medical degrees if the exam was not postponed. Doctors preparing for the postgraduate NEED exam have said that the U.S. government does not see their demand to serve as frontline staff during the Corona era.

முதுகலை நீட் தேர்வு

முதுகலை நீட் தேர்வை ஒத்திவைக்காவிட்டால் தங்கள் மருத்துவ பட்டங்களை திருப்பி அனுப்ப உள்ளதாக ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் கூட்டாக குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். கொரோனா மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் காரணமாக கடந்த ஆண்டு முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தள்ளி போனது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் தேர்வு நடைபெற்று தற்போது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் மே 3ம் தேதி முடிந்து அதன் பின்பே மாநிலங்களில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆனால் மே 21ம் தேதியே 2022ம் ஆண்டிற்கான முதுகலை நீட் தேர்வு நடைபெற உள்ளதால் தாங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவ பட்டங்களை திருப்ப அளிக்க முடிவு

தேர்விற்கு தயாராக குறைந்தது 2 மாதங்களாக வேண்டும் என்று கூறும் மருத்துவர்கள், தேர்வை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக 2000த்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் குடியரசு தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தேர்வு ஒத்திவைக்கப்படாவிட்டால், தங்களது மருத்துவ பட்டங்களை திருப்ப அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றிய தங்களின் கோரிக்கையை ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் முதுகலை நீட் தேர்விற்கு தயாராகும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Read More

தமிழ்நாட்டில் விடுபட்ட MBBS படிப்பு இடங்களை நிரப்ப கலந்தாய்வு - மருத்துவ படிப்பு கலந்தாய்வு குழு

April 18, 2022 0
Missing MBBS in Tamil Nadu The Medical Study Consultative Committee conducts consultations to fill study spaces. AIIMS College, Madurai offers 15 MBBS in All India quota. Seats are empty. 2 seats in Chennai Medical College and 5 seats in Stanley are unfilled in the KILA quota.

விடுபட்ட MBBS படிப்பு

தமிழ்நாட்டில் விடுபட்ட எம்.பி.பி.எஸ். படிப்பு இடங்களை நிரப்ப மருத்துவ படிப்பு கலந்தாய்வு குழு, கலந்தாய்வு நடத்துகிறது. மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன. சென்னை மருத்துவக் கல்லூரியில் 2 இடங்கள், ஸ்டான்லியில் 5 இடங்கள் கில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ளன.
Read More

Wednesday, January 19, 2022

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியன்

January 19, 2022 0
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று ( 19.01.2022 ) முதுநிலை பட்ட மேற்படிப்பிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். அது தொடர்பான விவரங்கள் பின்வருமாறு , முதுநிலை பட்ட மேற்படிப்பிற்கான கலந்தாய்வு MD / MS மொத்த இடங்கள் - 2216 , அகில இந்திய ஒதுக்கீடு -1053 , மாநில ஒதுக்கீடு 1163 , மாநில ஒதுக்கீடுக்கான தரவரிசை பட்டியல் இன்று 19.01.2022 வெளியீடு . மாநில ஒதுக்கீடுக்கான ஆன்லைன்கலந்தாய்வு தொடங்கும் நாள் 20.01.2022

இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு 2021-2022 அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள மாநில ஒதுக்கீடு இடங்கள் 6999. தரவரிசை பட்டியல் வெளியீடு 24.01.2022 . மாற்று திறனாளிகள் , ராணுவவீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி கலந்தாய்வு 27.01.2022 7.5 சதவிதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு நேரடி கலந்தாய்வு 28.01.2022 மற்றும் 29.01.2022 . மற்றப்பிரிவினர்களுக்கு 30.01.2022 முதல் இணையதள வாயிலாக கலந்தாய்வு நடைபெறும். இதை பற்றிய தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் . www.tnmedicalselection.org , www.tnhealth.tn.gov.in
Read More

Monday, January 10, 2022

தமிழ்நாட்டில்11 மருத்துவக் கல்லூரிகள், 12ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!!

January 10, 2022 0
தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 12 அன்று பிற்பகல் 4 மணிக்குத் தொடங்கிவைக்கவுள்ளார். தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் ரூ.4,000 கோடி மதிப்பீட்டு செலவில் கட்டப்பட்டுள்ளன. இதில் ரூ.2,145 கோடி மத்திய அரசாலும் எஞ்சியத் தொகை தமிழ்நாடு அரசாலும் வழங்கப்பட்டது.

விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மருத்துவக் கல்வியைக் கட்டுப்படியானதாக அதிகரித்தல், சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் பிரதமரின் தொடர்ச்சியான முயற்சி அடிப்படையில் இந்த மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 1,450 இடங்களைக் கொண்ட புதிய மருத்துவக் கல்லூரிகள், ‘தற்போதுள்ள மாவட்ட / அவசர முதலுதவி மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கும்’ மத்திய அரசு ஆதரவிலான திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன. அரசு அல்லது தனியார் மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன.

இந்தியப் பாரம்பரியம், செம்மொழிகள் ஆகியவற்றை மேம்படுத்தி பாதுகாக்கும் பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில் சென்னையில், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முழுமையான நிதியுதவியைக் கொண்ட புதிய வளாகம் ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதுவரை வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம், தற்போது மூன்று தளங்களைக் கொண்ட புதிய வளாகத்தில் செயல்படும். விசாலமான நூலகம், மின்னணு நூலகம், கருத்தரங்கக் கூடங்கள், பலவகை ஊடக அரங்கு, போன்றவற்றை புதிய வளாகம் கொண்டுள்ளது. மத்திய கல்வித்துறையின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம், ஆராய்ச்சி செயல்பாடுகள் மூலம், செம்மொழித் தமிழ் மேம்பாட்டிற்குப் பங்களிப்பு செய்கிறது. இதன் மூலம் தமிழ் மொழியின் தொன்மையும், தனித்துவமும் நிறுவப்படுகிறது. இதன் நூலகத்தில் 45,000-க்கும் கூடுதலாக தொன்மையான தமிழ்நூல்கள், சேகரிக்கப்பட்டுள்ளன. செம்மொழித் தமிழை மேம்படுத்தவும், அதன் மாணவர்களுக்கு உதவவும் இந்த நிறுவனம் கருத்தரங்குகள் நடத்துதல், பயிற்சித் திட்டங்கள், படிப்பு உதவித்தொகை வழங்குதல் போன்ற கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. ‘திருக்குறளை’ பல்வேறு இந்திய மொழிகளிலும், 100 வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. செம்மொழித் தமிழை உலகம் முழுவதும் பரப்புவதற்கு உகந்த வகையில், பணியாற்றும் சூழலைக் கொண்டதாக இந்தப் புதிய வளாகம் இருக்கும்.
Read More

Sunday, January 9, 2022

முதுகலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

January 09, 2022 0
முதுகலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு வரும் 12-ம் தேதி தொடங்குகிறது - மத்திய அமைச்சர் மன்சூக் மாண்டவியா
முதுகலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் அறிவிப்பு
Read More

Friday, January 7, 2022

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு.

January 07, 2022 1
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு.

இதுவரை 50 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பம்.
Read More

Post Top Ad

Your Ad Spot