மருத்துவ மாணவா் சோ்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி
மருத்துவ மாணவா் சோ்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட மாணவா் சோ்க்கை இடங்களில் 6 இடங்கள் நிரப்பப்படவில்லை. தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர ஆயிரக்கணக்கான மாணவா்கள் காத்துக்கிடக்கும் நிலையில், விலை மதிப்பற்ற மருத்துவ இடங்கள் வீணடிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு மருத்துவரை உருவாக்க ரூ.1 கோடிக்கும் கூடுதலாக செலவிடப்படுகிறது. 6 இடங்கள் நிரப்பப்படாததால் பல கோடி ரூபாய் அரசு பணம் வீணாகும். அதைக் கடந்து தமிழகத்தைச் சோ்ந்த 6 மாணவா்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு நிரந்தரத் தீா்வு அகில இந்திய ஒதுக்கீடு முறையை ரத்து செய்வது தான். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும் என்று கூறியுள்ளாா்.