KalviseithiDaily: Competition

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Competition. Show all posts
Showing posts with label Competition. Show all posts

Saturday, January 21, 2023

நாசா காலண்டரில் பழனி மாணவியின் ஓவியம்: போட்டியில் வெற்றி பெற்றது எப்படி?

January 21, 2023 0
நாசா காலண்டரில் பழனி மாணவியின் ஓவியம்: போட்டியில் வெற்றி பெற்றது எப்படி? Palani student's painting in NASA calendar: How did it win the competition?

நாசாவின் உலக அளவிலான ஓவியப் போட்டிகளில் இரண்டாம் பிடித்த பழனி மாணவி தித்திகா ஓவியம் நாசா காலண்டரில் இடம் பெற்றுள்ளதற்கு பலரும் மாணவிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ஆண்டுதோறும் உலக அளவிலான ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டியில் தேர்வாகும் ஓவியங்கள் நாசா வெளியிடும் காலண்டரில் அச்சிடப்படும். இந்த ஆண்டுக்கான ஓவியப்போட்டி சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் உள்ள மாணவ, மாணவிகள் 25 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

இந்தியாவிலிருந்து 9 மாணவர்களின் ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் 10 முதல் 12 வயது பிரிவில் பழனி புஷ்பத்தூர் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி தித்திகா வரைந்த ஓவியம் இரண்டாம் இடம் பெற்றது. விண்வெளி வீரர் ஒருவர் கூடைப்பந்து விளையாடுவது போன்று அவரது வரைந்து அனுப்பிய ஓவியம் தேர்வு செய்யப்பட்டது. இந்த ஓவியம் நாசா காலண்டரில் இடம் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவி தித்திகாவுக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர். வெற்றி பெற்றது எப்படி? மாணவி தித்திகாவிடம் இந்த வெற்றி குறித்து பேசியபோது, “நான் 7 வயதில் இருந்தே வரையத் தொடங்கினேன். அப்பா அருண்குமாரும், அம்மா உமாதேவியும் என்னை ஊக்கப்படுத்தினார்கள். எனக்கு விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட கடவுள்களின் படங்களை வரைவது பிடிக்கும். அது தவிர இயற்கைக் காட்சிகள், கார்ட்டூன்கள் விரும்பி வரைவேன்.

மேலும், ஆயில் பெயின்டிங், பென்சில் கலை கற்றிருக்கிறேன். ஆனால், எனக்கு வாட்டர் கலர் பெயின்ட் வரைவதில்தான் ஆர்வம் அதிகம். வீட்டில் இருக்கும் போது படிக்கும் நேரம் போக மீதமுள்ள நேரங்களில் வரைந்து கொண்டே இருப்பேன். தற்போது நாசா காலண்டரில் எனது ஓவியம் இடம் பெற்றுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,'' என்றார்.

2018 ல் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் விண்வெளிக்கு செல்லும் போது என்னென்ன உணவுகள் தேவை என்ற தலைப்பில் போட்டி நடத்தப்பட்டது.

மதுரை மாணவியின் புதிய சாதனை: 

உலக அளவிலான இந்த ஓவியப் போட்டியில் மாணவியின் பெண்ணின் அர்ப்பணிப்பைச் சொல்லும் 12 மணி நேர காபி ஒவியம்... என புதிய சாதனை படைத்த பழனியைச் சேர்ந்த காவியா, செல்வஸ்ரீதத் ஆகியோரது ஓவியங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாசா உலக அளவிலான ஓவியப் போட்டிகளில் தொடர்ச்சியாக பழனி மாணவர்களின் ஓவியங்கள் நாசா காலண்டரில் இடம்பெற்று வருவதால் ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமில்லாது பலரும் மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
Read More

Monday, December 26, 2022

மார்கழி மாத வண்ணக் கோலப்போட்டி: ஜன.5-க்குள் அனுப்பி பரிசுகளை வெல்ல வாய்ப்பு

December 26, 2022 0
மார்கழி மாத வண்ணக் கோலப்போட்டி: ஜன.5-க்குள் அனுப்பி பரிசுகளை வெல்ல வாய்ப்பு

அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் - காஞ்சிபுரம், திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மார்கழி மாத வண்ணக் கோலப்போட்டியை நடத்துகிறது. போட்டிக்கான படங்களை வரும் ஜனவரி 5-ம் தேதிக்குள் (வியாழன்) அனுப்பிவைக்க வேண்டும்.

மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில்அழகான வண்ணக் கோலங்கள் போடுவது வழக்கம். அதில் சிறந்தமுறையில் போடப்படும் கோலங்களுக்கு பரிசு வழங்கும் வகையில் இப்போட்டி நடத்தப்படுகிறது.

தங்கள் வீட்டில் போட்ட வண்ணக் கோலத்தையும், வீட்டையும் ஒரு படமாகவும், வண்ணக் கோலத்தை மட்டும் ஒரு படமாகவும் எடுத்து, 2 படங்களாக அனுப்பிவைக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் வாசகரின் வீட்டுக்கு வந்து, மீண்டும்ஒருமுறை கோலத்தை போட்டுக்காட்டச் சொல்வார்கள். சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், கோவை, சேலம், திருநெல்வேலி, புதுச்சேரி என 8 மண்டலங்களாக பிரித்து கோலங்கள் தேர்வு செய்யப்படும். சிறந்த கோலத்துக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.

கோலங்களை அனுப்பும்போது, தங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றையும் சேர்த்து தவறாமல் அனுப்ப வேண்டும்.

தனிநபர் வரைந்த கோலங்கள் மட்டுமே ஏற்கப்படும். குழுவாக சேர்ந்து போடும் கோலங்கள் ஏற்கப்படாது. கோலங்களை kolampotti@hindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, https://www.htamil.org/kolampotti என்ற லிங்க் மூலமாகவோ அனுப்ப வேண்டும். 9940699401 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு ‘Hi’ என்று அனுப்பி, இந்தபோட்டி பற்றிய கூடுதல் விவரங்களை பெறலாம்.
Read More

Monday, October 3, 2022

மாவட்ட இளையோா் திருவிழா போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

October 03, 2022 0
மாவட்ட இளையோா் திருவிழா போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் - Apply for district youth festival competition

மன்னாா்குடியில் இந்திய சுதந்திர அமுதப் பெருவிழாவையொட்டி அக்டோபா் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான இளையோா் திருவிழா போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நேரு யுவ கேந்திரா இளைஞா் நல அலுவலா் நீலகண்டன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:

மாவட்ட நேரு யுவ கேந்திரா சாா்பில் மாவட்ட அளவிலான இளையோா் திருவிழா மற்றும் கலந்துரையாடல் மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்துடன் இணைந்து அக்டோபா் 12-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், வளா்ந்த இந்தியாவின் இலக்கு என்கிற மையக் கருத்தை வலியுறுத்தி இளம் எழுத்தாளா் மற்றும் கலைஞா்களுக்கான கவிதை, ஓவியம், பேச்சு, பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் கைப்பேசி புகைப்படப் போட்டியும், இளையோா் சொற்பொழிவு மற்றும் கலந்துரையாடலும் நடைபெற உள்ளன.

இப்போட்டிகளில், திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்த 15 முதல் 29 வயதுக்குள்பட்ட இளைஞா்கள், இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம். ஓவியம், கவிதை மற்றும் கைப்பேசி புகைப்பட பிரிவில் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு முறையே ரூ.1000, ரூ. 750, ரூ. 500-ம், பேச்சுப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு முறையே ரூ. 5000, ரூ. 2000, ரூ.1000-மும், கலைவிழா போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறும் குழுவினருக்கு முறையே ரூ.5000, ரூ. 2500, ரூ.1250-ம், இளையோா் சொற்பொழிவு நிகழ்வில் முதல் நான்கு இடங்களை பெறுபவா்களுக்கு தலா ரூ.1500 மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.

இப்போட்டிகளில் பங்கேற்க அக்டோபா் 7-ஆம் தேதிக்குள் மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலகம், அறை எண் 312, 3-ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்பு கட்டடம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருவாரூா்-610004 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு நேரு யுவ கேந்திர அலுவலகத்தை 04366-226900 என்ற எண்ணிலும், நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞா் அலுவலரை 9443661915 மற்றும் 9842682327 ஆகிய எண்களிலும் தொடா்புகொள்ளலாம்.
Read More

Saturday, July 9, 2022

கடிதம் எழுதும் போட்டி; அஞ்சல் துறை அறிவிப்பு

July 09, 2022 0
மதுரைக்கோட்டம் அஞ்சல்துறை சார்பில் கடிதம் எழுதும் பழக்கத்தை புதுப்பிக்கும் வகையில், மத்திய அரசின் 'தாய் அகார்' என்ற கடிதம் எழுதும் போட்டி நடக்கவுள்ளது.பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் கையால் மட்டுமே எழுத வேண்டும்.

அக்டோபருக்குள் 'முதன்மை அஞ்சல் துறைத் தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை 600 002' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.இதற்கான தலைப்பு, '2047ல் இந்தியா ஒரு பார்வை' என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.

தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும். வயது சான்றிதழ் இணைக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 97886 85703 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கல்யாணவரதராஜன் தெரிவித்துள்ளார்.
Read More

Wednesday, April 6, 2022

பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி - தமிழ்வளர்ச்சி துறை

April 06, 2022 0
Speech competition is conducted on behalf of the Department of Tamil Development for school and college students in Coimbatore district.

In this regard, the Department of Tamil Development has issued a statement: On behalf of the Department of Tamil Development, on the occasion of the birthdays of Gandhi, Jawaharlal Nehru, Ambedkar, Periyar, Annathurai and Karunanidhi, a grant competition and a certificate of appreciation and appreciation will be given to college and school students at the district level on their birthdays for the year 2021-22. , Notice has been issued.

Accordingly, on the eve of Ambedkar's birthday, a separate speech contest will be held on the 19th for school and college students in all districts. Following this, separate speech competitions for school and college students will be held on the 19th at the meeting hall of Rajaveedi, Textile Merchants Association Government Girls' High School in Coimbatore district. The winning school students at the district level will be given first prize, 5 thousand rupees, second prize, 3 thousand rupees, third prize, 2 thousand rupees. Three prize money will be given to the college students. Out of the students participating in the speech competition for school students, two government school students will be selected individually and each will be given a special prize of Rs 2,000, the statement said.

கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, தமிழ்வளர்ச்சி துறை சார்பில் பேச்சு போட்டி நடத்தப்படுகிறது.

இதுகுறித்து, தமிழ் வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்வளர்ச்சி துறை சார்பில், 2021-22ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையில், காந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று, மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு, பேச்சு போட்டி நடத்தி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்க, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, வரும், 19ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, தனித்தனியே பேச்சு போட்டி நடத்தப்படுகிறது. இதன்தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில், 19ம் தேதி ராஜவீதி, துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் கூட்ட அரங்கில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு, 5 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு, 3 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசு, 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. கல்லுாரி மாணவர்களுக்கும் மூன்று பரிசு தொகைகள் வழங்கப்படுகின்றன.பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில், பங்கேற்கும் மாணவர்களில், அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேரை தனியாக தேர்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக, 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Read More

Saturday, December 25, 2021

கிறிஸ்துமஸ் குடில் அமைத்திருக்கிறீர்களா: உங்களுக்கு பரிசு வெல்ல நல்ல வாய்ப்பு

December 25, 2021 0
கிறிஸ்துமஸ் குடில் போட்டி; 25 பரிசுகள்

கிறிஸ்துமஸ் முன்னிட்டு வீடுகளில் அழகிய குடில் அமைத்து தேவகுமாரன் பிறப்பை கொண்டாடுவது கிறிஸ்தவர்களின் வழக்கம். இந்த கொண்டாட்டத்தை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு போட்டி. உங்கள் வீட்டு கிறிஸ்துமஸ் குடிலை ஒரு நிமிடம் வீடியோ எடுத்து டெலிகிராமில் எங்களுக்கு அனுப்பி வையுங்கள். மிகச்சிறந்த 25 குடில் வீடியோக்களுக்கு ஆச்சர்யமூட்டும் பரிசுகள் காத்திருக்கின்றன.வீடியோக்களை அனுப்ப வேண்டிய டெலிகிராம் எண்:93602 75216அனுப்ப வேண்டிய நாள்: இன்று (டிச.,25ம் தேதி - சனிக்கிழமை)

நேரம்: மாலை 6.00 - 7.00 மணிக்குள் வரும் வீடியோக்கள் மட்டுமே போட்டிக்கு தகுதி பெறும்.கிறிஸ்துமஸ் குடிலின் சிறந்த வடிவமைப்பு அலங்காரம்குடில் குறித்த விளக்கம் பின்னணி இசை வீடியோ தரம் எடிட்டிங் ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Read More

Thursday, November 11, 2021

குழந்தைகள் தினத்தையொட்டி ‘ஜூம்பா பூட்கேம்ப்’ டெமோ இலவச வகுப்பு: நவ.14-ம் தேதி ஆன்லைன் நடைபெறுகிறது - கட்டணம் கிடையாது

November 11, 2021 0
குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவ-மாணவிகள் ஆன்லைனில் பங்கேற்று பயன்பெறும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ஃபிட்னெஸ் @ சாடீஸ் உடன் இணைந்து நடத்தும் ‘ஜூம்பா பூட்கேம்ப்’ ஆன்லைன் டெமோ வகுப்பு வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ளது.

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயனளிக்கும் விதமாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைனில் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, குழந்தைகள் தினத்தையொட்டி ‘ஜூம்பா பூட்கேம்’ எனும் ஆன்லைன்டெமோ பயிற்சி வகுப்பை வரும்14-ம் தேதி காலை 9 முதல் 10 மணி வரை நடத்த உள்ளது. இந்த பூட்கேம்பில் 11 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் பங்கேற்கலாம்.

இந்த பயிற்சி வகுப்பை நடத்தும்சத்யா, பல ஆண்டுகளாக இத்தகைய வகுப்புகளை திறம்படநடத்தி வருபவர். இதுவரை 200-க்கும் மேற்பட்ட ஆன்லைன் வகுப்புகளை பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் நடத்தியுள்ளார்.

இந்த ஜூம்பா பூட்கேம்பில் பங்கேற்பதால் குழந்தைகளின் மனஅழுத்தம் குறைவதோடு, தன்னம்பிக்கை, ஞாபக சக்தி அதிகரிக்கும். மேலும், குழந்தைகளின் உடலிலுள்ள கொழுப்பை கட்டுப்படுத்துவதோடு, அவர்களது உடல் பருமன் குறைந்து, நீரிழிவு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

கட்டணம் கிடையாது

பயிற்சி வகுப்பின்போது பங்கேற்பாளர்கள் விளையாட்டு காலணிகளை அணிய வேண்டும். நிகழ்வின்போது ஆடியோ, வீடியோஇணைப்புகளில் இருக்க வேண்டும். இதில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை. பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/00108 என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 8248751369 என்ற செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ஃபிட்னெஸ் @ சாடீஸ் உடன் இணைந்து நடத்துகிறது.
Read More

Thursday, September 9, 2021

இந்து தமிழ் திசை - "மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான கவிதைப்போட்டி - செப்.20-ஆம் தேதி கடைசி நாள்

September 09, 2021 0
இந்து தமிழ் திசை

"மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான கவிதைப்போட்டி.

மகாகவி பாரதியின் கனவை நிறைவேற்றும் வகையில், இந்திய தேசத்தை உலக அரங்கில் மேலும் முன்னேற்ற, நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை 20 வரிகளுக்கு மிகாமல், செப்.10 (வெள்ளிக்கிழமை) அன்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியாகும் நுழைவுப் படிவத்தில் எழுதி, அதனை தபாலாகவோ அல்லது ஸ்கேன் செய்து hindutamilthisaievents@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ வரும் செப்.20-ஆம் தேதிக்குள் அனுப்பி வையுங்கள்.
Read More

Wednesday, September 8, 2021

11, 12ம்தேதி பாரதியார் நினைவு நூற்றாண்டு கவிதை போட்டி - பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கலாம்.

September 08, 2021 0
நெல்லை அருங்காட்சியகத்தில் பாரதியார் நினைவு நூற்றாண்டு கவிதைப் போட்டி வருகிற 11, 12ம்தேதி ஆகிய 2நாட் கள் நடைபெற உள்ளதாக மாவட்ட காப்பாட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில், நெல்லை அரசுஅருங் காட்சியகத்தில், மகாகவி பாரதியார் நினைவு நூற் றாண்டு நிகழ்ச்சி "பாரதிநினைவுகள்-100" எனும் தலைப்பில் செப்.11, 12 ஆகிய 2நாட்களில் அரசு அருங்காட்சியகம் மற்றும் பொதிகைத் தமிழ்ச்சங் கம் சார்பில் நடைபெற உள்ளது.

முதல் நிகழ்ச்சியாக 11ம்தேதி மாலை 5 மணிக்கு அரசு அருங் காட்சியக திறந்தவெளி கலையரங்கில் நடைபெ றும் கவிதைப் போட்டி யில் “நூற்றாண்டு கடந் தும் பாவாண்டு நிற்கும்
இந்த போட்டி யில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு கவிதை வாசிக்கலாம். சிறப்பான கவிதை வாசிப்போருக்கு 12ம்தேதி காலையில் நடக் கும் நிகழ்ச்சியில் “பாரதி பைந்தமிழ்ச் சுடர்” என்ற பெயரில் விருதுகள் வழங் கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Read More

Post Top Ad

Your Ad Spot