மார்கழி மாத வண்ணக் கோலப்போட்டி: ஜன.5-க்குள் அனுப்பி பரிசுகளை வெல்ல வாய்ப்பு
அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் - காஞ்சிபுரம், திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மார்கழி மாத வண்ணக் கோலப்போட்டியை நடத்துகிறது. போட்டிக்கான படங்களை வரும் ஜனவரி 5-ம் தேதிக்குள் (வியாழன்) அனுப்பிவைக்க வேண்டும்.
மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில்அழகான வண்ணக் கோலங்கள் போடுவது வழக்கம். அதில் சிறந்தமுறையில் போடப்படும் கோலங்களுக்கு பரிசு வழங்கும் வகையில் இப்போட்டி நடத்தப்படுகிறது.
தங்கள் வீட்டில் போட்ட வண்ணக் கோலத்தையும், வீட்டையும் ஒரு படமாகவும், வண்ணக் கோலத்தை மட்டும் ஒரு படமாகவும் எடுத்து, 2 படங்களாக அனுப்பிவைக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் வாசகரின் வீட்டுக்கு வந்து, மீண்டும்ஒருமுறை கோலத்தை போட்டுக்காட்டச் சொல்வார்கள். சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், கோவை, சேலம், திருநெல்வேலி, புதுச்சேரி என 8 மண்டலங்களாக பிரித்து கோலங்கள் தேர்வு செய்யப்படும். சிறந்த கோலத்துக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.
கோலங்களை அனுப்பும்போது, தங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றையும் சேர்த்து தவறாமல் அனுப்ப வேண்டும்.
தனிநபர் வரைந்த கோலங்கள் மட்டுமே ஏற்கப்படும். குழுவாக சேர்ந்து போடும் கோலங்கள் ஏற்கப்படாது. கோலங்களை kolampotti@hindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, https://www.htamil.org/kolampotti என்ற லிங்க் மூலமாகவோ அனுப்ப வேண்டும். 9940699401 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு ‘Hi’ என்று அனுப்பி, இந்தபோட்டி பற்றிய கூடுதல் விவரங்களை பெறலாம்.