CLICK HERE TO DOWNLOAD
Post Top Ad
Your Ad Spot
Showing posts with label Agriculture. Show all posts

Monday, August 1, 2022
சிவகங்கை ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் ஆகியவற்றை கொப்பரை கொள்முதல் நிலையங்களாக நியமித்து - ஆணை - வெளியிடப்படுகிறது.
வேளாண்மை – உழவர் நலன் – 2022-ஆம் ஆண்டிற்கான குறைந்தபட்ச ஆதாரவிலைத் திட்டத்தின்கீழ் கோயம்புத்தூர் விற்பனைக் குழுவில் கூடுதலாக ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் மற்றும் சிவகங்கை ஒழுங்கு முறை விற்பனைக் குழுவில் கூடுதலாக சிவகங்கை ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் ஆகியவற்றை கொப்பரை கொள்முதல் நிலையங்களாக நியமித்து - ஆணை - வெளியிடப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
Thursday, December 9, 2021
வேளாண் பல்கலை. தேர்வு முடிவுகளில் குழப்பங்கள்!
வேளாண் பல்கலை. தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு அரசு தீர்வு காண வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட மறுதேர்வு முடிவுகளில் 90 விழுக்காடு மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், 2018, 2019, 2020 ஆகிய கல்வி ஆண்டுகளில் பயின்ற மாணவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இணையவழி மறுதேர்வில், முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி பெரும்பாலான மாணவர்களைத் தோல்வி அடைந்ததாக அறிவித்துள்ள பல்கலைக்கழகத்தின் செயல் கொடுங்கோன்மையானது. ஏற்கனவே மூன்று ஆண்டுகள் தாமதமாகத் தேர்வுகள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது தேர்வுத்தாள்களைத் திருத்தாமலே மீண்டும் மாணவர்கள் தோல்வி என அறிவித்திருப்பது மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
எவ்வித முறையான வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லாமல் இணைய வழியில் பாடங்களை நடத்திவிட்டு, தேர்வுகளை நடத்துவதற்கு மட்டும் ஏராளமான கட்டுப்பாடுகளை விதிப்பதும் அவற்றில் ஏதேனும் சிறு பிழை நேர்ந்தாலே கடும் தண்டனைக்கு உள்ளாக்குவதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. மேலும் பல்கலைக்கழகத்தால் இணையவழி தேர்வுக்காக உருவாக்கப்பட்ட தேர்வுச்செயலியில் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படுவதாக மாணவர்கள் பலமுறை புகாரளித்தும் அதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், தேர்வுகளின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களுக்கு மாணவர்களைப் பலிகடாவாக்குவதும் பல்கலைக்கழகத்தின் அலட்சியப்போக்கையே வெளிக்காட்டுகிறது. உண்மையிலேயே தேர்வில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் பல்கலைக்கழகம் கருதினால் நடைபெற்ற தேர்வினை முழுமையாக இரத்து செய்துவிட்டு மீண்டும் புதிதாக தேர்வு நடத்தியிருக்கலாம். அதைவிடுத்துத் தேர்வு எழுதிய 90 விழுக்காடு மாணவர்களைச் செய்முறைத் தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாதவர்கள் என அறிவிப்பது மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் கொடுஞ்செயலாகும்.
ஆகவே வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மறுதேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு கண்டு மாணவர் நலன் காக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:
Agriculture,
Corruption,
Politicians,
Results,
University
Saturday, November 13, 2021
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீடு திட்டத்தில் பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீடு திட்டத்தில் பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்!
வேளாண்மைத் துறை
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் - இரபி 2021-2022 பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
நாமக்கல் மாவட்டத்தில், 2021-22b ஆண்டு இரபி பருவத்தில் மக்காச்சோளம், சோளம், நெல்-111(நவரை), பச்சைபயறு. ஊளுந்து, எள. கரும்பு, நிலக்கடலை, பருத்தி. வாழை, சிறிய வெங்கயாம். மரவள்ளி மற்றும் தக்காளி பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு 'நாமக்கல் மாவட்ட விவசாயிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.
அதன் படி, பிரிமியத் தொகையாக சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.123.75/ ம் 30.11.2021-க்குள் செலுத்த வேண்டும். மக்காச்சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.410.89/-ம் 30.11.2021-க்குள் செலுத்த வேண்டும். நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.296.40/-ம் 31.12.2021-க்குள் செலுத்த வேண்டும். பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.544.58/-ம் 15.03.2022-க்குள் செலுத்த வேண்டும். பச்சைபயறு மற்றும் ஊளுந்து பயிருக்கு ஏக்கருக்கு தலா ரூ.196.59/-ம் 15.11.2021-க்குள் செலுத்த வேண்டும். நெல்-III(தவரை) பயிருக்கு 512.77/-ம் 31.01.2022-க்குள் செலுத்த வேண்டும். எள் பயிருக்கு ரூ.122.27/-ம் 15.02.2022-க்குள் செலுத்த வேண்டும். கரும்பு பயிருக்கு ரூ.2840.50/-ம் 31.08.2022-க்குள் செலுத்த வேண்டும்.
மேலும் தோட்டக்கலை பயிர்களான வாழை பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1716.66/-ம் 15.02.2022-க்குள் செலுத்த வேண்டும். தக்காளி பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.941.08/-ம் 15.02.2022-க்குள் செலுத்த வேண்டும். சிறிய வெங்காயம் பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1896.96/-ம் 31.01.2022-க்குள் செலுத்த வேண்டும். மரவள்ளி பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1468.42/-ம்28.02.2022-க்குள் செலுத்த வேண்டும்.
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் உறுதிமொழி கடிதம் அளித்து பயிர் காப்பீடு செய்துகொள்ளாம் அல்லது விலக்கு அளிக்க கோரலாம்.
மேலும் பயிர் காப்பீடு திட்டத்திலிருந்து விலக்கு கோரி கடிதம் அளித்த நிலையில் அவர் எந்த பயிருக்கு கடன் பெற்றாரோ அப்பயிருக்கான காப்பீட்டு காலம் முடிவதற்கு 7 தினங்களுக்கு முன்னர் ஏற்கனவே கடன் பெற்ற சங்கம் அல்லது வங்கியில் உரிய பிரிமீயத் தொகை மற்றும் பயிர் காப்பீடு செய்வதற்குறிய ஆவணங்களை அளித்து கடன் பெற்ற பயிருக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
கடன் பெறாத விவசாயிகள், பொதுச் சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் காப்பீடு செய்யும் முனி, முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல், வங்கி கணக்கு நடைமுறையில் உள்ள கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் (கணக்கு எண் மற்றும் IFSC Code எண்ணுடன்) ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரிமீயம் செலுத்தி விருப்பத்தின்பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆகியோரை அணுகி தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பிற்கான விண்ணப்பங்கள்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் 2005-ம் ஆண்டு முதல் தரம் வாய்ந்த பல்வேறு சான்றிதழ், முதுநிலைப் பட்டம் மற்றும் முதுநிலைப் பட்டயப் படிப்புகளை உயர்தொழில் நுட்பத்துடன், செயல்முறை விளக்கங்களுடன் பல்கலைக்கழகத்தின் அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளைக் கொண்டு நடத்தப்பட்டு வருகின்றன். சுய தொழில் வாய்ப்பு பெறும் வகையில் ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பினை (Diploma in Agri Inputs) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்கத்தின் மூலம் நடைபெற்று வருகிறது. இது உலக அளவிலேயே முதல் முறையாக இடுபொருள் விற்பனையாளர்களுக்கென்று வழங்கப்படும் ஒரு முன்னோடித் திட்டமாகும். வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த உபதொழில்களில் ஈடுபட்டுள்ள உழவர் பெருமக்கள் மற்றும் சுயதொழில் தொடங்க முயல்பவர்கள் தாங்கள் சுயதொழில் தொடங்கும் வகையிலும் மற்றும் அனைத்து நவீன வேளாண் தொழில்நுட்பங்களையும் தெரிந்து கொள்ளும்படி இப்புதிய தொழில்நுட்பப் பட்டயப்படிப்பு வழங்கப்படுகிறது.
ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்துார் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் கல்லுாரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண்மை அறிவியல் நிலையங்கள் மற்றும் தோட்டக்கலை மையம், சென்னை ஆகிய இடங்களில் நேரடி பயிற்சிகள் மூலம் நடத்தப்படவுள்ளது. இந்த 2021-22 ஆம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வழங்கப்படுகிது. விண்ணப்ப கட்டணம் ரூ.100. இப்பட்டயப்படிப்பில் சேருவதற்கான தகுதியானது 18 வயது நிரம்பிய 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். இது ஒரு வருட படிப்பாகும் இரண்டு பருவங்களை கொண்டது, பயிற்சி கட்டணம் ரூ.25000 ஆகும். ஏனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த சுயதொழில் தொடங்கும் ஆர்வம் உள்ளவர்கள் இம்மாத நவம்பர் 15. ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு
திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம்
பாப்பாரப்பட்டி - 636 809 தருமபுரி மாவட்டம்
தொலைபேசி 04342 245860
இத்தகவலை முனைவர் ம.விஜயகுமார். இணை பேராசிரியர் மற்றும் தலைவர் மற்றும் முனைவர் மா.அ.வெண்ணிலா உதவி பேராசிரியர் மற்றும் பாட ஒருங்கிணைப்பாளர் (ODL ) வேளாண்மை அறிவியல் நிலையம், பாப்பாரப்பட்டி ஆகியோர் தெரிவித்தனர்.

Monday, September 6, 2021
வேளாண்மைப் பல்கலை. மாணவர் சேர்க்கை: செப். 8 முதல் விண்ணப்பிக்கலாம்
"தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 8 ஆம் தேதி (புதன்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் மூலமாக 11 இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.
தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, இந்த கல்வியாண்டு முதல் வேளாண்மை, தோட்டக்கலை பட்டப் படிப்புகள் தமிழ் வழியிலும் பயிற்றுவிக்கப்பட உள்ளன. கோவை வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம், கோவை தோட்டக்கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் இந்த தமிழ் வழி படிப்புகள் நடத்தப்பட உள்ளன.
மேலும் நடப்பு கல்வியாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தோட்டக்கலைக் கல்லூரி, கரூர், நாகை மாவட்டம் கீழ்வேளூர், சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டுள்ள 3 வேளாண்மைக் கல்லூரிகளும் மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதாக மாணவர் சேர்க்கைப் பிரிவு தலைவர் மா.கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்."

Saturday, September 4, 2021
தமிழ் வழியில் வேளாண் பட்டப்படிப்பு - அரசாணை வெளியீடு
விவசாயம் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளும், அதன் முடிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்படுகின்றன. இவற்றை தமிழில்மொழி பெயர்த்து தமிழக விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை பல ஆண்டுகளாக செய்து வருகிறது.
நடப்பு கல்வியாண்டிலிருந்து, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் படிப்புகளை தமிழ் வழியில்கற்றுத் தருவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, வேளாண் பட்டப்படிப்பில் 40 இடங்களும், தோட்டக்கலைப் பட்டப்படிப்பில் 40 இடங்களும் தமிழ்வழியில் சேர்வதற்கு அரசு அனுமதித்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு வேளாண் பல்கலை அறிவித்துள்ளது. தமிழகத்தில், வேளாண் பல்கலை, அதன் உறுப்புக் கல்லுாரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மூலமாகவும் நடத்தப்படும் வேளாண்மை இளநிலைப்பட்டப்படிப்பை முடித்து, ஆண்டுதோறும் 4000 வேளாண் பட்டதாரிகள் வெளிவருகின்றனர்.
இருப்பினும் இவர்களுக்கான அரசு வேலை வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. வேலைவாய்ப்புத்துறை மூலமாக ஆண்டுக்கு 100 வேளாண் அலுவலர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இதைத் தவிர்த்து, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் ஆண்டுக்கு 200 பேர் வரை வேலை வாய்ப்புப் பெறுகின்றனர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆண்டுக்கு 50 பேர் வரை, உதவிப் பேராசிரியர் பணிக்கு நியமனம் செய்யப்படுகின்றனர். மிகக்குறைவாக ஆண்டுக்கு 25 பேர் வரை, மத்திய அரசின் இடைநிலைப் பணிகளில் தேர்வெழுதி பணி வாய்ப்புப் பெறுகின்றனர். எளிதில் வேலைவாய்ப்புதங்களுடைய தனித்திறன் மற்றும் முயற்சியால் ஆண்டுக்கு 10 வேளாண் பட்டதாரிகள், ஐ.ஏ.எஸ்., போன்ற குடிமைப்பணிகளிலும், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் குழுமத்தில் உயர் பணிகளிலும் தேர்ச்சி பெறுகின்றனர்.
தமிழ்வழியில் வேளாண் படிப்புப் படிக்கும் மாணவர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அனைத்துத் தேர்வுகளிலும், 20 சதவீத இட ஒதுக்கீட்டில் பணி நியமனம் பெறத்தகுதி பெறுவர். வேளாண் அலுவலர், குரூப் 1,2 3 மற்றும் 4 என அனைத்து நிலை அரசுப் பணிகளிலும் சேர்வதற்கான வாய்ப்பும் இவர்களுக்குக் கிடைக்கும்.
ஆண்டுக்கு 100 வேளாண் அலுவலர்கள் பணி அமர்த்தப்படுவதால், அவற்றில் 20 சதவீதம் தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு பணி ஒதுக்கப்படும். இதனால், ஆண்டுக்கு 40 மாணவர்கள் பட்டம் பெற்றால், அவர்களில் 20 பேர் வேளாண் அலுவலராகப் பணியில் சேர முடியும். இதில் கிராமப்புற மாணவர்கள் மற்றும் பள்ளிகளில் தமிழ்வழியில் கற்றோர்க்கு வேலைவாய்ப்பு எளிதில் கிடைக்கும்.
Tags:
Agriculture,
Announcements,
Education,
G.O,
TamilNadu,
University
Post Top Ad
Your Ad Spot
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.