KalviseithiDaily: Omicron Virus

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Omicron Virus. Show all posts
Showing posts with label Omicron Virus. Show all posts

Wednesday, January 25, 2023

பள்ளி மாணவர்கள் 62 பேருக்கு நோரா வைரஸ் பாதிப்பு 62 school students infected with Nora virus

January 25, 2023 0
பள்ளி மாணவர்கள் 62 பேருக்கு நோரா வைரஸ் பாதிப்பு 62 school students infected with Nora virus

கேரள: நோரா வைரஸ் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு மூலமே பரவுகிறது என்று டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர். கேரள மாநிலம் கொச்சி காக்கநாட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறையினர் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். இதில் சில மாணவர்களின் பெற்றோருக்கு நோரா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் மூலம் மாணவர்களுக்கும் நோரா வைரஸ் பரவி இருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து பள்ளியில் நோய் அறிகுறியுடன் காணப்பட்ட 62 மாணவர்களின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்தனர். அவை பொது சுகாதார ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 2 மாணவர்களுக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த மாணவர்களின் பெற்றோரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே நோரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் கொச்சி பகுதியில் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். நோரா வைரஸ் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு மூலமே பரவுகிறது என்று டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.

இதனால் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். வீடுகளில் குளோரின் கலந்த குடிநீரையே பயன்படுத்தவேண்டும், பழங்கள், காய்கறிகளை பயன்படுத்தும் முன்பு நன்கு கழுவி பயன்படுத்த வேண்டும், விலங்குகளுடன் பழகும்போது கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
Read More

Monday, January 10, 2022

‛ஒமைக்ரானை தொடர்கிறது புதிய வகை கோவிட் ‛டெல்டாக்ரான்

January 10, 2022 0
உலகில் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ள ஓமைக்ரானைத் தொடர்ந்து டெல்டாக்ரான் என்ற புதிய வகை கோவிட் சைப்ரஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு பரவத் துவங்கிய கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் உலகில் பல நாடுகளிலும் பரவியது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து 2021ல் கோவிட்டின் இரண்டாவது அலை ஏற்பட்டது. அதில் கோவிட் 19, டெல்டா என்று உருமாற்றம் அடைந்தது

இதனால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மிகவும் பாதிப்பு அடைந்தன. தற்போது 2022ல் கோவிட் வைரஸின் மூன்றாவது அலையில் ‛ஒமைக்ரான்' என்ற புதிய வகை கோவிட் பரவி வருகிறது. இதன் பரவல் டெல்டா வகை கோவிட்டை காட்டிலும் வேகமாக இருந்தாலும் இதுவரை பாதிப்பு குறைந்த அளவே உள்ளது. இந்நிலையில் சைப்ரஸ் நாட்டில் 'டெல்டாக்ரான்' என்ற புதிய வகை உருமாற்றம் அடைந்த கோவிட்டினை கண்டு பிடித்துள்ளனர். இது டெல்டா மரபு பின்னணியையும் ஒமைக்ரான் வகை கோவிட்டின் குணங்களை கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இருப்பினும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். டெல்டாக்ரானால் சைப்ரஸ் நாட்டில் இது வரை 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
Read More

Wednesday, January 5, 2022

பிரான்சில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு; 12 பேர் பாதிப்பு

January 05, 2022 0
பிரான்சில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது 46 உருமாற்றங்களை கொண்டுள்ளதாகவும், 12 பேர் இதுவரை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், பல நாடுகளில் அடுத்த கொரோனா அலையின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று, டெல்டா வைரசை விட அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் உருமாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய ஆப்ரிக்க நாடான கேமிரோனில் இருந்து வந்த பயணிக்கு முதன்முறையாக இந்த உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 12 பேருக்கு இந்த வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது ஒமைக்ரானை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

இது 46 உருமாற்றங்களை கொண்டுள்ளதாக கூறும் ஆராய்ச்சியாளர்கள், ஐஎச்யு பி.1.640.2 என இக்கொரோனாவுக்கு பெயரிட்டுள்ளனர். ஆனால், பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய வகை கொரோனா பிற நாடுகளில் இந்த வகை கொரோனா இன்னும் கண்டறியப்படவில்லை. இது குறித்து உலக சுகாதார அமைப்பும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

Tuesday, January 4, 2022

Omicron தொற்றினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் விவரம்! (04.01.2022)

January 04, 2022 0
Read More

Saturday, January 1, 2022

ஓமிக்ரான், டெல்மிக்ரானைத் தொடர்ந்து ஃப்ளோரொனா.. இஸ்ரேலில் கர்ப்பிணி பெண்ணுக்கு முதன்முறையாக கண்டுபிடிப்பு!!

January 01, 2022 0
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸின் அடுத்தடுத்த உருமாற்றங்கள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் முதல் அலையை ஏற்படுத்தியது என்றால் அதன் பிறகு ஆல்பா, டெல்டா அடுத்தடுத்து அலைகளை ஏற்படுத்தின. இதனால் தான் கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்ட போது, அதைக் கண்டு உலக நாடுகள் அஞ்சின.ஓமிக்ரான் அச்சமே இன்னும் முடியாத நிலையில், டெல்மிக்ரான் (Delmicron) என்ற புதிய உருமாறிய கொரோனா குறித்து அண்மையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், இன்புளுயன்சா எனப்படும் குளிர் காய்ச்சலுடன் கொரோனா பாதிப்பும் சேர்ந்த ஃப்ளோரொனா என்னும் நோய் இஸ்ரேலில் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. டெல் அவிவ் நகரில் உள்ள மருத்துவனை ஒன்றில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண்ணுக்கு இரட்டை பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இஸ்ரேலில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 3வது டோஸ் எனப்படும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டவர்கள். 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் 2 டோஸ் செலுத்தியுள்ளனர். அங்கேயே இம்மாதிரியான புதுவிதமான தொற்றுகள் ஏற்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More

Wednesday, December 22, 2021

Thursday, December 16, 2021

குழந்தைகளை ஒமிக்ரான் தொற்று தாக்குமா?: ICMR நிறுவனர் விளக்கம்..!!

December 16, 2021 0
குழந்தைகளை ஒமிக்ரான் தொற்று தாக்குமா? என்பது குறித்து டாக்டர் மோகன் குப்தே விளக்கம் அளித்துள்ளார். அதிகரிக்கும் ஒமிக்ரான் தொற்றினை கவனத்தில் கொண்டு ஒன்றிய அரசு தீவிர முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் ICMR தொற்று நோய் பிரிவின் ஓய்வுபெற்ற இயக்குனர் டாக்டர் மோகன் குப்தே தெரிவித்துள்ளார். செய்தி ஒன்றிற்கு காணொலி வாயிலாக பேட்டியளித்த டாக்டர் மோகன் குப்தே, தென்னாபிரிக்காவில் ஒமிக்ரான் வேகமாக பரவினாலும் ஆரம்ப நிலையில் அது மிதமான பாதிப்பையே ஏற்படுத்தி இருப்பதாக கூறி இருக்கிறார். இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்தால் அதை சமாளிக்கக்கூடிய அளவுக்கு மருத்துவத்துறையில் உள் கட்டமைப்புகளை ஒன்றிய, மாநில அரசுகள் முன்கூட்டியே தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு செய்து வருவதாகவும் மோகன் குறிப்பிட்டார். தற்போதைய நிலையில் குழந்தைகளுக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டாலும் கூட அச்சமடைய தேவையில்லை என்றும் டாக்டர் மோகன் கூறியிருக்கிறார். பாதிப்புக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு நோயின் தாக்கம் மிக குறைவாகவே இருக்கும் என்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் அளவுக்கு மோசமான பாதிப்பு ஏற்படாது என்றும் டாக்டர் மோகன் குப்தே தெரிவித்துள்ளார்.
Read More

Tuesday, November 30, 2021

புதிய ஒமிக்ரான் கொரோனா வைரசால் அச்சுறுத்தல் குணமானவர்களுக்குதான் அதிக ஆபத்து: கடும் கட்டுப்பாடுகளையும் மீறி 15 நாடுகளில் பரவியது

November 30, 2021 0
ஒமிக்ரான் வைரஸ் ஏற்கனவே கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை அதிகளவில் தாக்கும் அபாயம் இருப்பதாக முதற்கட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் எனும் புதிய வகை கொரோனா வைரஸ் மிக ஆபத்தானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் பயண தடைகளை விதித்துள்ளன. ஆனாலும், அதற்குள் பல்வேறு நாடுகளில் இந்த புதிய வகை வைரஸ் பரவி விட்டது. ஜப்பான், பிரான்சிலும் நேற்று ஒமிக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் சுமார் 15 நாடுகளில் ஒமிக்ரான் பரவி உள்ளது. ஆனால், இந்த வைரஸ் இதுவரை எந்த உயிர் பலியையும் ஏற்படுத்தவில்லை. இதன் பாதிப்புகள், முந்தைய டெல்டா வைரஸ் பாதிப்புகளை விட குறைவாகவே உள்ளது. சாதாரண காய்ச்சல், உடல் வலி, தொண்டை கரகரப்பு போன்றவை ஒமிக்ரான் வைரசின் அறிகுறிகளாக டாக்டர்கள் கூறி உள்ளனர்.

எனவே, இந்த வைரஸ் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிய ஓரிரு வாரங்களாகும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதே சமயம், முதற்கட்ட ஆய்வுகளின்படி, 50 பிறழ்வுகளை கொண்டிருக்கும் இந்த வைரஸ் மிக வேகமாக பரவுக்கூடியது மட்டுமின்றி, ஏற்கனவே கொரோனா பாதித்து குணமடைந்தவர்களை எளிதில் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் குறைபாட்டுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை ஒமிக்ரான் தாக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மற்றும் தொற்று மூலம் இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்களுக்கு பெரிய அளவுக்கு பாதிப்புகள் இருக்காது என கூறப்படுகிறது. ஆரம்ப கட்ட நிலையில் ஒமிக்ரான் வைரஸ் குறித்து எதையும் உறுதியாக கூற முடியாது என்கின்றனர் ஆய்வாளர்கள். தென் ஆப்ரிக்காவில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. எனவே, அங்கு ஒமிக்ரான் வைரசால் பலர் பாதிக்கப்படுவதை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது. அதிகளவில் தடுப்பூசி செலுத்திய நாடுகளில் இந்த வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் போவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கான அறிகுறிகள் மிக பொதுவானதாக இருப்பதால் வைரஸ் தொற்று உள்ளவர்கள் அதை வேகமாக பிறருக்கு பரப்பும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி நிலவரங்கள் பற்றி ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: * சர்வதேச விமானங்களுக்கு தடை விதிக்காதது ஏன்?

ஒமிக்ரான் வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உடனேயே, சர்வதேச பயண தடை விதிக்கக் கோரி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கும் அவர் கடிதம் எழுதி உள்ளார். மேலும், நேற்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விமான சேவையை நிறைய நாடுகள் நிறுத்தி உள்ளன. ஆனால், இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு தாமதிப்பது ஏன்? சர்வதேச விமானங்களை நிறுத்தாததால்தான் கொரோனா முதல் அலையை நாம் எதிர்கொண்டோம். ஏராளமான விமானங்கள் டெல்லிக்கு தான் வருகின்றன. எனவே, டெல்லிக்குதான் அதிக பாதிப்பு இருக்கிறது. உடனடியாக விமானங்களை நிறுத்துங்கள்,’ என ஒன்றிய அரசை மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

* வீட்டிற்கே சென்று தடுப்பூசி; டிச.31ம் தேதி வரை நீட்டிப்பு

ஒமிக்ரான் வைரசை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, ஒன்றிய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தலைமையில் மாநில சுகாதார அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், டிசம்பர் 31ம் தேதிக்குள் நாடு முழுவதும் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தவும், 2வது டோஸ் தடுப்பூசி பணியை வேகப்படுத்தவும், டிசம்பர் 31ம் தேதி வரை வீட்டுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை தொடரவும் முடிவு செய்யப்பட்டது. கடந்த மாதம் 3ம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட இத்திட்டம் நவம்பர் 30ம் வரை இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதே போல், புதிய வகை வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் நாடு முழுவதும் உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அறிவித்துள்ளார்.
Read More

Post Top Ad

Your Ad Spot