KalviseithiDaily: WhatsApp

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label WhatsApp. Show all posts
Showing posts with label WhatsApp. Show all posts

Friday, December 30, 2022

WhatsAppல் வந்த புதிய அப்டேட்! - New update on WhatsApp!

December 30, 2022 0
வாட்ஸ்ஆப்பில் வந்த புதிய அப்டேட் - New update on WhatsApp!

வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களின் வசதிக்காக புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வாட்ஸ்ஆப் செயலி உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் உரையாடல் செயலியாக உள்ளது. இது பயனர்களின் அசெளகரியங்களை குறைக்கும் வகையில் அவ்வப்போது புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.



அந்த வகையில் வாட்ஸ்ஆப்பில் 5 உரையாடல்களை குறியிட்டு (பின்) வைத்துக்கொள்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 3 உரையாடல்களை மட்டுமே குறியிட்டு வைத்துக் கொள்ள முடிந்தது.

வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய வசதி மூலம் முக்கியமான உரையாடல்களை எளிதில் அணுக முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Tuesday, December 20, 2022

WhatsAppல் வந்தாச்சு undo வசதி - இனிமேல் அழித்த செய்தியை திரும்ப பெறலாம்!

December 20, 2022 0


வாட்ஸ் ஆப்பில் வந்தாச்சு undo வசதி - இனிமேல் அழித்த செய்தியை திரும்ப பெறலாம்!

வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது அழித்த செய்தியை மீண்டும் திரும்பபெரும் வகையில் 'undo'வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது

வாட்ஸ் அப் செல்போனில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும். 2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோரால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது.

இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து கையகப்படுத்தினர்.

உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2.20 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப் நிறுவனம் தங்களது பயனாளர்களை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

இந்நிலையில், வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது அழித்த செய்தியை மீண்டும் திரும்பபெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. தவறுதலாக அனுப்பப்பட்ட செய்தியை நீக்கும் அவசரத்தில், "delete for everyone"க்கு பதிலாக "delete for me"ஐ தற்செயலாக அழுத்திவிட்டால், அந்த செய்தியை நீங்கள் பார்க்கவோ அல்லது நீக்கவோ முடியாது, ஆனால் நீங்கள் அனுப்பிய செய்தி மற்றவர்களுக்கு அது தெரியும். இதுபோன்ற சூழ்நிலையை தவிர்க்க வாட்ஸ்அப் புதிய "undo" வசதியை வெளியிட்டுள்ளது.

"delete for me" கொடுத்து அழிக்கப்பட்ட பிறகு, ஐந்து நொடிகளில் 'undo' திரையில் தோன்றும் . 'undo' பொத்தானைக் கிளிக் செய்தால், நீங்கள் நீக்கிய செய்தி மீண்டும் தோன்றும், அந்த செய்தியை திரும்பபெற்ற பின் , "delete for everyone" விருப்பத்தை தேர்வு செய்யலாம். இந்த வசதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Read More

Tuesday, July 26, 2022

Whatsapp-ன் புதிய வசதி... பயனாளர்களின் பிரச்னைகளுக்கான மிகப் பெரிய தீர்வு

July 26, 2022 0
Whatsapp | அண்மையில் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய டிஸ்அப்பியரிங் ஆப்ஷன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அண்மையில் வாட்ஸ்அப் (whatsapp) அறிமுகப்படுத்திய மறைந்து போகும் மெசேஜ்கள் (disappearing messages) ஆப்ஷன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. காரணம் வேறு வழி இன்றி பல குழுக்களில் இணைந்திருப்பவர்கள் அந்த குழுவில் வரும் மெசேஜை அளிப்பதையே வாரத்தில் ஒரு நாள் வேலையாக வைத்திருந்தனர். தற்போது டிஸ்அப்பியரிங் செய்யும் மெசேஜ்களை சேமிக்கும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தப்போகிறது. இதுபோன்ற தேவையில்லாத வேலைகளுக்கு இந்த ஆப்ஷன் விடுதலை கொடுத்தது. ஃபோனில் ஸ்டோரேஜ் நிரம்புவதைக் குறைக்க இந்த வசதியை பெரும்பாலான வாட்சப் யூஸர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், நீங்கள் ஒரு முறை டிஸ்அப்பியரிங் மெசேஜஸ் ஆப்ஷனை ஆன் செய்து விட்டால் மறுபடியும் அதை ஆஃப் செய்யும் வரை குரூப்பிலோ அல்லது தனிப்பட்ட சேட்டிலோ(chat ) உங்களுக்கு வந்த மெசேஜை கண்டிப்பாகத் திரும்பவும் பார்க்க முடியாது. இதனால் அவதிப்பட்ட பலர் இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு தங்கள் கருத்துக்களை அனுப்பி வைத்தனர்.

இதன் விளைவாகவே வாட்ஸ்அப் புதிதாக ஒரு அம்சத்தை அறிமுகம் செய்யப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. யூஸர்கள் காலாவதியான, தங்கள் அரட்டைகளிலிருந்து மறைந்த பின்னரும் கூட, மெசேஜ்களை சேமித்து வைக்கும் புதிய வசதியைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக வாட்ஸ்அப் புதிய “கெப்ட் மெசேஜஸ்” பிரிவைக் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது, இது யூஸர் வைத்திருக்க விரும்பும் அனைத்து டிஸ்அப்பியரிங் மெசேஜ்களையும் சேமிக்கும். வாட்ஸ்அப் டிராக்கரான WABetaInfo இன் அறிக்கையின்படி, டிஸ்அப்பியரிங் மெசேஜ்கள், குரூப் சேட்டில் உள்ள அனைவரும் அணுகக்கூடிய வகையில் கேப்ட் மெசேஜ்ஜஸ் (Kept messages) என்ற புதிய பிரிவில் சேமிக்கப்படும்.

தற்போது, ​​ சாட் களில் மறைந்து வரும் செய்திகளைச் சேமிக்க வழி இல்லை, மேலும் யூஸர்கள் டிஸ்அப்பியரிங் சேட்டில் உள்ள மெசேஜ்களை starred option ஆக ( வாட்ஸ் அப் மேலே தெரியும் நட்சத்திரக்குறி) கூட சேமித்து வைக்க முடியாது. இருப்பினும், கேப்ட் மெசேஜ்ஜஸ் அம்சம் இதை மாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் யூஸர்கள் ஒரு மெசேஜை சேமித்து வைக்கலாம், இது அர்ச்சிவ்ஸ் (archives) அல்லது புக் மார்க் (bookmarks) போன்றகேப்ட் மெசேஜ்ஜஸ்க்கு செல்லும். கூடுதலாக குரூப் அட்மின்கள் இந்த அம்சத்தைக் குறிப்பிட்ட வரம்பிற்கு உட்பட்டே பயன்படுத்த வாட்ஸ் அப் அனுமதிக்கும், அதாவது குரூப் அட்மின்கள் டிஸ்அப்பியரிங் மெசேஜை தக்கவைக்கும் வசதியை (privacy setting) மாற்றுவதற்கு புதிய தனியுரிமை அமைப்பு இருக்கும்.

இந்த அம்சம் இன்னும் மேம்பாட்டில் உள்ளது என்றும் பீட்டா சோதனையாளர்கள் கூட இதுவரை அம்சத்தை அணுகவில்லை என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த அம்சம் உருவாக்கத்தில் உள்ளது, எனவே இது பீட்டா சோதனையாளர்களுக்கு எப்போது வெளியிடப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை
Read More

Sunday, July 3, 2022

WhatsApp மெசேஜ் - டெலிட் செய்யும் (Delete For Everyone) அவகாசம் அதிகரிப்பு!

July 03, 2022 0
வாட்ஸ் ஆப் மெசேஜ் - டெலிட் செய்யும் அவகாசம் அதிகரிப்பு.

வாட்ஸ் ஆப் பயனர்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.

அதன்படி, நாம் அனுப்பிய செய்தியில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை நிரந்தரமாக டெலிட் (Delete For Everyone) செய்யும் வசதியை வாட்ஸ் ஆப் வழங்கி வருகிறது.

டெலிட் பார் எவரிஒன் (Delete For Everyone) ஆப்ஷன் மூலம், செய்தியை அனுப்பிய, ஒரு மணி நேரம் 8 நிமிடம் 16 விநாடிகளுக்குள் மட்டுமே நிரந்தரமாக டெலிட் செய்ய முடியும். இந்த கால அவகாசத்தை நீட்டிக்க கோரி பயனர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து, டெலிட் பார் எவரிஒன் ஆப்ஷனுக்கான கால அவகாசம், 2 நாள் 12 மணி நேரமாக மாற்றப்பட உள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல், வாட்ஸ் ஆப் குழுவில் உள்ள உறுப்பினர்கள் பதிவிட்ட செய்திகளை, குழுவின் அட்மின் நிரந்தரமாக டெலிட் செய்வதற்கான வசதியும் கொண்டு வரப்பட உள்ளது.
Read More

Saturday, July 2, 2022

வாட்ஸ்அப் வீடியோ காலில் இனி முகத்தைக் காட்ட வேண்டியதில்லை; வருகிறது அனிமேட்டட் அவதார்!

July 02, 2022 0
வாட்ஸ்அப் வீடியோ காலில் இனி முகத்தைக் காட்ட வேண்டியதில்லை; வருகிறது அனிமேட்டட் அவதார்!

சமூக வலைத்தளங்களில் ஒரு முக்கிய தகவல் பரிமாற்றக் கருவியாக இருப்பது எமோஜிக்களும், ஸ்டிக்கர்களும்தான்.

வார்த்தைகள் எதுவும் பயன்படுத்த வேண்டாம். இந்த எமோஜிகளும், ஸ்டிக்கர்களுமே சில விஷயங்களைப் புரிய வைப்பது மட்டுமின்றி, சில நேரங்களில் மனிதர்களின் உணர்வுகளைச் சொற்களைப் பயன்படுத்தாமல் எளிமையாக உணர்த்திவிடுகிறது. இவை சமூக வலைதளத்தின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டன.

இந்த எமோஜி மற்றும் ஸ்டிக்கர் வரிசையில் தற்பொழுது பிரபலமடைந்து வருகிறது அவதார் (Avatar). அவதார் என்றால் ஒரு உருவத்தை வரைகலை அனிமேஷன் வடிவில் காண்பிப்பது. சமீபத்தில்தான் மார்க் சக்கர்பர்க்கின் மெட்டா, 'அவதார்' என்கிற புதிய அப்டேட்டை ஃபேஸ்புக் மெசன்ஜர் மற்றும் இன்ஸ்டிராகிராமில் அறிமுகப்படுத்தியிருந்தது. தற்பொழுது வாட்சப்பிலும் ஒரு புதிய அப்டேட்டைக் கொண்டுவரவுள்ளது மெட்டா. அந்த அப்டேட் என்னவென்றால் வீடியோ காலில் முகத்தைக் காட்ட விரும்பாதவர்கள் இந்த அவதார் ஆப்சனை பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் அவதார் ஆப்சனை இயக்கினால் போதும் உங்கள் செல்போன் கேமரா மூலம் உங்கள் முகத்தைக் கண்டறிந்து அதற்கேற்ற அவதார் எமோஜியை ரீப்ளேஸ் செய்துவிடும். இதுமட்டுமின்றி உங்கள் முக அசைவையும் அப்படியே பிரதிபலிக்கும் வகையிலும் இவை வடிவமைக்கப்பட இருக்கிறது.

இதன் மூலம் வீடியோ காலில் அவ்வப்போது புதிய அப்டேட்களைக் கொண்டு வரும் கூகுள், ஜூம் போன்ற செயலிகளுடன் போட்டியிட இருக்கிறது வாட்ஸ்அப். ஆப்பிள் செயலியில் மெமோஜி எப்படிச் செயல்படுகிறதோ அதே மாதிரி வாட்ஸ்அப்பிலும் இந்த அவதாரைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.

இதனை WAbetainfo என்ற குழு தெரிவித்துள்ளது. இது போன்ற சிறப்பம்சம் ஏற்கெனவே 'வாட்ஸ்அப் Beta' என்கிற ஆண்ட்ராய்டு வெர்சனில் உள்ளது. இன்னும் சில தினங்களில் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இந்தச் சிறப்பம்சம் கிடைக்கும் என்பதைத் தெரிவித்திருக்கிறது.

மேலும் வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து மற்றவர்களுக்குத் தெரியாமல் வெளியேறும் ஆப்ஷனையும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது மெட்டா. வாட்ஸ்அப் கொண்டுவரப் போகும் இந்தப் புதிய அப்டேட்டுகள் அனைவர் மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது
Read More

Tuesday, April 26, 2022

Whatsapp பயனாளர்களுக்கு எச்சரிக்கை!

April 26, 2022 0
Read More

Tuesday, March 29, 2022

WhatsAppல் புதிய வசதி - 2 GB வரையிலான கோப்புகளை இனி அனுப்பலாம்

March 29, 2022 0
வாட்ஸ் ஆப்பில் 2 ஜி.பி. அளவு வரையிலான கோப்புகளை இனி அனுப்பலாம்: வாட்ஸ் ஆப் நிறுவனம் தகவல்

வாட்ஸ் ஆப்பில் 2 ஜி.பி. அளவு வரையிலான கோப்புகளை இனி அனுப்பலாம் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. சோதனை முயற்சியாக முதலில் அர்ஜென்டினா நாட்டில் இதனை பரிசோதித்து பார்க்கவுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. வாட்ஸ் ஆப்பில் தற்போது 100 எம்.பி.வரை மட்டுமே கோப்புகளை அனுப்ப முடியும்
Read More

Sunday, January 2, 2022

17 லட்சம் கணக்குகளுக்கு தடை; WhatsApp நடவடிக்கை

January 02, 2022 0
புகார்களின் அடிப்படையில் கடந்த நவ., மாதத்தில் மட்டும் 17.53 லட்சம் கணக்குகளுக்கு தடை விதித்துள்ளதாக 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளம் தெரிவித்துள்ளது.

புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின்படி, பொய் செய்திகள், மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் தகவல்களை, சமூக வலைதளங்கள் நீக்க வேண்டும். இது தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி நவ., மாதத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வாட்ஸ் ஆப் சமூக வலைதளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பல காரணங்களுக்காக 17.53 லட்சம் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டன. இதில் 95 சதவீதம் வணிக ரீதியில் மொத்தமாக தகவல்களை பரிமாறுவதாகவே உள்ளன.

இதைத் தவிர பல புகார் அடிப்படையில் விசாரணை நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபரில் இவ்வாறு 20 லட்சம் கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன.பயனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot