KalviseithiDaily: RTE

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label RTE. Show all posts
Showing posts with label RTE. Show all posts

Monday, June 27, 2022

RTE - தமிழ்நாட்டில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 31% கூடுதல் மாணவர் சேர்க்கை: கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

June 27, 2022 0


தமிழ்நாட்டில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 31 சதவீதம் அதிகரித்திருக்கிறது. பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் எந்தவித கட்டணமுமின்றி தனியார் பள்ளிகளில் படிக்க கட்டாய கல்வி உரிமை சட்டம் வழிவகை செய்கிறது. ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் 25 சதவிகித இடங்கள், ஏழை குழந்தைகளுக்காக வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடப்பாண்டில் தனியார் பள்ளிகளில் சேர்ந்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 31 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு எல்.கே.ஜி. மற்றும் ஒன்றாம் வகுப்பில் 56,687 பேர் சேர்ந்தனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 74,383 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு 8,234 தனியார் பள்ளிகளில் 94,000 இடங்கள் ஏழை குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக 1.42 லட்சம் பேரிடம் இருந்து 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை கல்வித்துறை பெற்றிருக்கிறது.

அவற்றில் 2.60 லட்சம் விண்ணப்பங்கள் தகுதி உள்ளவை என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. அதிக விண்ணப்பங்கள் போடப்பட்டிருப்பதால் கடந்த மே மாதம் குலுக்கல் முறையில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆர்.டி.இ. எனப்படும் கட்டாய கல்வி உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் சேர்க்கையும் அதிகரித்திருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Read More

Tuesday, May 17, 2022

தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு மேலும் கால அவகாசம் நீடிப்பு

May 17, 2022 0
Private schools can apply for a 25% admission under the RTE Act until May 25. The Directorate of Matriculation Schools said the deadline has been extended to tomorrow.

தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் 25% சேர்க்கைக்கு மே 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நாளையுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்தது.
Read More

Friday, May 13, 2022

RTE - தனியார் மெட்ரிக் பள்ளிகளில் தகுதியானோர் பட்டியல் 21-ம் தேதி வெளியாகிறது.

May 13, 2022 0
RTE சட்டத்தின் கீழ் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் உள்ள 25% இடங்களில் சேர விண்ணப்பித்துள்ள 1 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் உண்மையிலேயே தகுதியானதா? என்று ஆய்வு செய்யும் பணியில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம்

21-ம் தேதி தகுதியானோர் பட்டியல் வெளியாகிறது.
Read More

Thursday, April 21, 2022

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: முதல் நாளில் 7 ஆயிரம் போ் விண்ணப்பம்

April 21, 2022 0
தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: முதல் நாளில் 7 ஆயிரம் போ் விண்ணப்பம்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற புதன்கிழமை விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே 7 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி சிறுபான்மை அல்லாத தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழைக் குழந்தைகள் சோ்க்கப்படுவா். எல்கேஜி அல்லது 1-ஆம் வகுப்பில் இலவசமாகச் சேரும் மாணவா்கள், 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியாா் பள்ளிகளில் சுமாா் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன.

இந்த நிலையில், நிகழாண்டு சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு புதன்கிழமை தொடங்கியது. இதையடுத்து குழந்தைகளின் பெற்றோா் பள்ளிக் கல்வியின் இணையதளத்தில் (rte.tnschools.gov.in) விண்ணப்பித்து வருகின்றனா். முதல் நாளான புதன்கிழமை இரவு வரை 7 ஆயிரம் போ் இலவச சோ்க்கைக்கு விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடைசி தேதி மே 18.
Read More

Monday, April 18, 2022

RTE 2022 2023 Admission - Dir Circular - தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல்20 முதல் மே18 வரை விண்ணப்பிக்கலாம்.

April 18, 2022 0


2022-2023 கல்வியாண்டில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி (RTE) அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு- அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து RTE மாநில முதன்மை தொடர்பு அலுவலர் & மெட்ரிக் பள்ளி இயக்குனரின் செயல்முறைகள்!

RTE 2022_2023 Admission Circular Download here
Read More

Post Top Ad

Your Ad Spot