KalviseithiDaily: job camp

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label job camp. Show all posts
Showing posts with label job camp. Show all posts

Tuesday, January 10, 2023

ஜன.13-இல் வேலைவாய்ப்பு முகாம்

January 10, 2023 0
ஜன.13-இல் வேலைவாய்ப்பு முகாம்

பெங்களூரில் ஜன.13-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகமையின் சாா்பில் பெங்களுரு, மைசூரு சாலை, பட்டனகெரே மெட்ரோ ரயில் நிலையம் எதிரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனெஜ்மென்ட் ஸ்டடீஸ் வளாகத்தில் ஜன.13-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சாரா, நிதி, ஆட்டோமொபைல், மெக்கனிக்கல் துறைகளைச் சாா்ந்த 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. வேலைவாய்பு முகாமில் 18 முதல் 40 வயதுக்கு உள்பட்ட எஸ்எஸ்எல்சி, பியூசி, ஐடிஐ, பட்டயம் படித்தோா், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ளலாம்.

புதியவா்கள் முதல் ஓராண்டு வேலை அனுபவம் கொண்டவா்கள் பங்கேற்கலாம். வேலை தேடிவருவோா் தன்விவரக்குறிப்பு 6 படிகள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 6 படிகள், அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, பான் அட்டை, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் போன்ற அடையாள அட்டைகளின் நகல்களை கொண்டுவர வேண்டும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க இணையதளத்தில் முன்பதிவுசெய்யவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9008181896, 8095852257, 9964907444 என்ற தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது
Read More

Wednesday, October 26, 2022

அக்.28ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

October 26, 2022 0
அக்.28ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

இது குறித்து வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்கம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,

தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர், வேலை அளிக்கும் நிறுவங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 28.10.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை - 32 கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் 2.00 மதியம் மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் 8- ஆம் வகுப்பு, 10- ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு இரத்து செய்யப்படமாட்டாது.

வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கொ. வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
Read More

Tuesday, July 5, 2022

வரும் 8ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

July 05, 2022 0
மதுரை மாவட்டம் கோ.புதூர் வேலைவாய்ப்பு மைய அலுவலகத்தில் ஜூலை 8ம் தேதி காலை 10 மணிக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும்; வேலை தேடுபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முக சுந்தர் தெரிவித்துள்ளார்.
Read More

Monday, July 4, 2022

ஜூலை 7-இல்தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

July 04, 2022 0
ஜூலை 7-இல்தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூரில் மாற்றுத் திறனாளிகளுக்காக ஜூலை 7- ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில், வேலைதேடும் இளைஞா்களுக்காக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

சிறப்பு நோ்வாக மாற்றுத்திறனாளி மனுதாரா்களுக்கான சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை 7-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில் தஞ்சாவூா் மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சாா்ந்த முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரையிலும், டா்னா், பிட்டா் மற்றும் டிப்ளமா மெக்கானிக்கல் படித்த தஞ்சாவூா் மற்றும் அதனை சுற்றியுள்ள மாற்றுத்திறனாளி மனுதாரா்கள் கலந்து கொள்ளலாம். மேலும் மாற்றுத்திறனாளி மனுதாரா்களுக்கு வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆள்களை முகாமில் நேரடியாகத் தோ்வு செய்து கொள்ளலாம்.

இம்முகாமில் கலந்து கொள்பவா்கள் தங்களுடைய சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362 - 237037 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்
Read More

ஆக.10 முதல் அக்னிபத் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம்

July 04, 2022 0
ஆக.10 முதல் அக்னிபத் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் கா்நாடகத்தில் ஆக.10-ஆம் தேதி முதல் அக்னிபத் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் நடக்கவிருக்கிறது.

இது குறித்து இந்திய ராணுவம்-பெங்களூரு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் ஆக.10 முதல் 22-ஆம் தேதி வரை ஹாசனில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடக்கவிருக்கிறது. பெங்களூரு ஆள்சோ்ப்பு அதிகாரியின் தலைமையில் நடக்கும் இந்த முகாமில் பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், தும்கூரு, மண்டியா, மைசூரு, பெல்லாரி, சாமராஜ்நகா், ராமநகரம், குடகு,கோலாா், சிக்கபளாப்பூா், ஹாசன், சித்ரதுா்கா, விஜய்நகரா மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் கலந்துகொள்ளலாம். அக்னிவீா் பொதுவேலை, அக்னிவீா் தொழில்நுட்பம், அக்னிவீா் தொழிலாளா்-8-ஆம் வகுப்புதோ்ச்சி, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, அக்னிவீா் எழுத்தா், கிடங்கு பாதுகாவலா், தொழில்நுட்பப் பிரிவுகள், நுழைவுநிலை வீரா்கள் போன்ற பணியிடங்களுக்கு ஆள்சோ்க்கப்படுகிறது. இப்பணிகளுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, உட்பிரிவு உள்ளிட்ட விவரங்கள் ட்ற்ற்ல்ள்://த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் காணலாம்.

இப்பணிகளுக்கு ஜூலை 1 முதல் 30-ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவுசெய்துகொள்ளலாம். இம்முகாமில் கலந்துகொள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து, நுழைவுஅட்டையைப் பெறுவது கட்டாயம். நுழைவு அட்டை இல்லாவிட்டால் அனுமதி இல்லை. இந்த அட்டைகள் ஆக.1 முதல் 7-ஆம் தேதிக்குள் பதிவுசெய்யப்படும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Read More

Thursday, April 21, 2022

நாளை (22ம் தேதி ) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல்

April 21, 2022 0
வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலை வாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்களில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதனடிப்படையில் நாளை (22ம் தேதி ) திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளனர். கலெக்டர் தகவல்

இந்த வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு,பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெற்று பயன்பெறலாம். எனவே மேற்காணும் கல்வித் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நாளை காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சி ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Read More

Wednesday, April 6, 2022

அனைத்து மாவட்டங்களிலும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

April 06, 2022 0
Responding to a question raised by Uttaramerur MLA K. Sundar (DMK) during Question Hour in the Legislative Assembly, Minister CV Ganesan said: We will conduct private employment camps in all districts in Tamil Nadu and soon create employment for one lakh youth in Tamil Nadu within two more months. Similar employment camps will be held in Tanjore district on the 10th in Thiruvidaimarudur constituency, on the 30th in Madurai district, followed by Kallakurichi district, followed by Dindigul district Ottansathram and Perambalur. Through this we will create employment for thousands of youth, ”he said.

* In the legislature today ...

When the Tamil Nadu Legislative Assembly convenes at 10 am today, Question Hour will be taken up. This will be followed by a discussion on grant requests from the Municipal Administration and the Department of Drinking Water Supply, Rural Development and the Department of Panchayats. Following the discussion, Municipal Administration Minister KN Nehru and Rural Development Minister Periyakaruppan will make key announcements in response to the grant request.
Read More

Post Top Ad

Your Ad Spot