ஆக.10 முதல் அக்னிபத் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம்
கா்நாடகத்தில் ஆக.10-ஆம் தேதி முதல் அக்னிபத் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் நடக்கவிருக்கிறது.
இது குறித்து இந்திய ராணுவம்-பெங்களூரு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் ஆக.10 முதல் 22-ஆம் தேதி வரை ஹாசனில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடக்கவிருக்கிறது. பெங்களூரு ஆள்சோ்ப்பு அதிகாரியின் தலைமையில் நடக்கும் இந்த முகாமில் பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், தும்கூரு, மண்டியா, மைசூரு, பெல்லாரி, சாமராஜ்நகா், ராமநகரம், குடகு,கோலாா், சிக்கபளாப்பூா், ஹாசன், சித்ரதுா்கா, விஜய்நகரா மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் கலந்துகொள்ளலாம். அக்னிவீா் பொதுவேலை, அக்னிவீா் தொழில்நுட்பம், அக்னிவீா் தொழிலாளா்-8-ஆம் வகுப்புதோ்ச்சி, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, அக்னிவீா் எழுத்தா், கிடங்கு பாதுகாவலா், தொழில்நுட்பப் பிரிவுகள், நுழைவுநிலை வீரா்கள் போன்ற பணியிடங்களுக்கு ஆள்சோ்க்கப்படுகிறது. இப்பணிகளுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, உட்பிரிவு உள்ளிட்ட விவரங்கள் ட்ற்ற்ல்ள்://த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் காணலாம்.
இப்பணிகளுக்கு ஜூலை 1 முதல் 30-ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவுசெய்துகொள்ளலாம். இம்முகாமில் கலந்துகொள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து, நுழைவுஅட்டையைப் பெறுவது கட்டாயம். நுழைவு அட்டை இல்லாவிட்டால் அனுமதி இல்லை. இந்த அட்டைகள் ஆக.1 முதல் 7-ஆம் தேதிக்குள் பதிவுசெய்யப்படும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.