KalviseithiDaily: CEO PROCEEDINGS

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label CEO PROCEEDINGS. Show all posts
Showing posts with label CEO PROCEEDINGS. Show all posts

Tuesday, July 5, 2022

CEO அலுவலக ஆய்வு உத்தரவு: தலைமையாசிரியர்கள் வரவேற்பு

July 05, 2022 0
முதன்மை கல்வி அலுவலகங்களில் (சி.இ.ஓ.,) நடக்கும் ஆண்டாய்வில் தலைமையாசிரியரின் 'கான்பிடன்ஷியல் ரிப்போர்ட்' (சி.ஆர்.,) பராமரிப்பை பார்வையிட உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து சி.இ.ஓ.,க் கள் அலுவலகங்களிலும் ஜூலை 31க்குள் ஆண்டாய்வு செய்ய கமிஷனர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். மதுரை, நாமக்கல்லில் இணை இயக்குனர் பி.குமார், திண்டுக்கல், துாத்துக்குடியில் இணை இயக்குனர் ஜெயக்குமார், தேனி, நீலகிரியில் இணை இயக்குனர் செல்வக்குமார், சிவகங்கை, திருப்பத்துாரில் இணை இயக்குனர் அமுதவல்லி, ராமநாதபுரத்தில் இணை இயக்குனர் சுகன்யா, விருதுநகர், தருமபுரியில் கோபிதாஸ் உட்பட கமிஷனர், இயக்குனர் என 40 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக 27 செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், 'டி.இ.ஓ.,க்கள் ஓய்வு அல்லது மாறுதல் பெற்று செல்லும்போது அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர், வட்டாரக் கல்வி அலுவலரின் சி.ஆர்., விவரம் பூர்த்தி செய்திருக்க வேண்டும்' என கமிஷனர் தெரிவித்துள்ளார்.இந்த சி.ஆர்., விவர பராமரிப்பை பெரும்பாலான டி.இ.ஓ.,க்கள் பின்பற்றுவதில்லை.

பதவி உயர்வு பேனல் தயாரிப்பின் போது தலைமையாசிரியர் அவர் பணியாற்றிய டி.இ.ஓ.,க்களை தேடி சென்று அறிக்கை பெற்று வரும் நடைமுறையே உள்ளது.தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'சி.ஆர்., பதிவு பராமரிப்பு அவசியம் என வலியுறுத்தினோம். பெரும்பாலும் பின்பற்றப்படவில்லை. தற்போது கமிஷனர் வலியுறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. இது தொடர வேண்டும்,' என்றனர்.
Read More

Sunday, April 3, 2022

திருச்சிராப்பள்ளி முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - 03.04.2022

April 03, 2022 0
Read More

Thursday, December 23, 2021

தொழிற்கல்வி ஆசிரியர் பட்டியல் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

December 23, 2021 0
மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தொழிற்கல்வி ஆசிரியர்களின் விபரங்களை சேகரிக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள்ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகள் உள்ளிட்டவை குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

ஜனவரியில் நடக்கும் இடமாறுதல் கவுன்சிலிங்கில் ஆசிரியர்களை உரிய இடங்களில் பணியமர்த்தும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதன்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தொழிற்கல்வி மாணவர்களின் எண்ணிக்கையும் அவற்றுக்கு ஏற்ப எத்தனை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்ற விபரங்களையும் பிழையின்றி பட்டியல் தயாரித்து அனுப்புமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குனர் ஜெயகுமார் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
Read More

Thursday, December 9, 2021

தகவல் தராமல் 'ஆப்சென்ட்' - அரசு பள்ளி ஆசிரியர்கள் 5 பேருக்கு நோட்டீஸ் - CEO அதிரடி

December 09, 2021 0
வேலுார் மாவட்டம், குடியாத்தம் காந்திநகர் பகுதியில் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பணி யாற்றும் ஆசிரியர்கள், பள்ளிக்கு உரிய நேரத்தில் வருகை தருவ தில்லை என முதன்மைக் கல்வி அதிகாரிக்கு புகார் சென்றது. இந்த அதிரடி நடவ டிக்கை, கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதன்மைக் கல்வி அலுவலர் நியமனம்!

December 09, 2021 0
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதன்மைக் கல்வி அலுவலர் நியமனம்!

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நாகர்கோவில் மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி.அ.ரேணுகா பதவி உயர்வு மூலம் நியமனம்!
Read More

Saturday, November 13, 2021

அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவு

November 13, 2021 0
சென்னை விடுமுறை நாட்களை ஈடுகட்ட, அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளில் வகுப்புகளை நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் பள்ளிகள் மூடப்பட்டு, 19 மாதங்களுக்கு மேலாக வகுப்புகள் நடக்கவில்லை.

அரசு பள்ளிகளில் பாடங்கள் நடத்தாமல், மாணவர்களுக்கு கற்பித்தல் குறைந்து பாதிக்கப்பட்டனர். தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும் 'ஆன்லைன்' வழியில் படித்தனர்.

இந்நிலையில், செப்டம்பர் 1 முதல், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.அதன்பின் பல்வேறு தரப்பிலும் எழுந்த கோரிக்கையால், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.அதன்பின் தீபாவளிக்காகவும், பின் மழைக்காகவும் விடுமுறை விடப்பட்டது.

இதையடுத்து, வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளை திறந்து, பாடங்களை நடத்த ஆசிரியர்கள் தயாராகி வருகின்றனர். குறிப்பாக, தனியார்பள்ளிகள் தரப்பில்முழு வீச்சில்பாடங்களை நடத்த முடிவு செய்துஉள்ளனர்.

இந்நிலையில், அரசு பள்ளிகளிலும் கற்பித்தல் பணிகளை கொஞ்சமாவது மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறந்து, பாடங்களை நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
Read More

Monday, October 4, 2021

பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் - முதன்மைக் கல்வி அதிகாரி ஆய்வு

October 04, 2021 0
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி புதுக்கோட்டை ஒன்றியத்தில் பள்ளியில் நடந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தார்.

அக்.4:புதுக் கோட்டை ஒன்றியத்தில் பள்ளிகளில் நடைபெற்ற கொரோனா சிறப்பு தடுப் பூசி முகாமினை மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் சாமி.சத்தியமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட் டம்,புதுக்கோட்டை ஒன் றியம் ஆட்டாங்குடி,சிறு நாங்குப்பட்டி மற்றும் அன்னசத்திரம் ஆகிய தொடக்கப் பள்ளிகளில் நடைபெற்ற கோவிட் 19 தடுப்பூசி சிறப்பு முகாம் களை மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்திநேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார்.பின்னர் அங்கிருந்தவர்களிடம18 வயதுக்கு மேற்ப்பட்டோர் அனைவ ரும் 100% தடுப்பூசி எடுத்துக்கொள்ள களப்பணி யாற்றிட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
Read More

Thursday, September 16, 2021

திருவள்ளூர் மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

September 16, 2021 0
திருவள்ளூர் மாவட்டம், பாவட்ட திட்ட அலுவலகம், வட்டார வள மையம் மற்றும் அனைந்து வகை அரசு பள்ளிகளின் ஒருங்கினைாந்து பள்ளிக் கல்வி திட்டத்திற்கான கணக்கு எண் நிருவள்ளூர் மாவட்டத்தில் தங்கள் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள கனாரா வங்கியில் புதிய கணக்கு துயங்கிட பார்வையிற்கண்ட செயல்முறைகளின் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன் இத்துடன் அனுப்பிவைக்கப்படுகிறது. கனரா வங்கியில் கணக்கு எண் தொடங்க கனரா வங்கி அலுவயர்களால் கூட்டம் நடத்தப்படும் கூட்டம் நடத்தப்படும் நாள், தேதி, இடம் பின்னர் அறிவிக்கப்படும். ஏற்களவே கனரா வங்கியின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்திற்காக கணக்கு எண் துவங்கியிருந்தால் அந்தக் கணக்கை புதிய "Zero Balance A/Ch துவங்கும் வரை பழைய காக்கை முடிக்கக் கூடாது.


என அறிவுறுத்தப்படுகிறது. எனலே தங்களது வட்டார வள மையத்திற்குட்பட்ட SMC / SMDC அளவில் SNA கணக்கு கனரா வங்கியில் புதிய கணக்கு எண் துவங்கிய உடன் அதன் விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்கும்படியும், மேலும் இந்தகவலை அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்க அணைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,
Read More

Saturday, September 4, 2021

திருவள்ளூர் முதன்மைக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை

September 04, 2021 0
முதன்மைக்கல்வி அலுவலகம்
திருவள்ளூர்
நாள்: 09.2021
சுற்றறிக்கை
NSP AADHARAUTHENTICATION/2021)

ஈ.எண்:1 SCHOLARSHIS

அனைத்துவகைப்பள்ளித்தலைமை ஆசிரியர்களின் ( ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலை, மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகன், அரசு அரசு உதவி பெறும் உயர்நிலை/ மேல்நிலை/சுயநிதிப்பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள், CBSE பள்ளிகள்) கவனத்திற்கு NSP PORTAL இல் அனைத்து வகைப்பள்ளிகளைச்சார்த்த INO(INSTITUTENODEL OFFICER} மற்றும் INSTITUTE HEADஇன் ஆதார் விவரங்கள் அதாவது ஆதார் எண் ஆநார்அட்டையில் உள்ளவாறு பெயர், ஆதார் அட்டையில் உள்ளவாறு தொலைபேசி எண் ஆகிய விவரங்களை NSP PORTAL தங்கள் பள்ளிக்கென வழங்கப்பட்டுள்ள USER NAME மற்றும் PASS WORD பயன்படுத்தி பதிவேற்றம் செய்ய வேண்டும்

திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2489 பள்ளிகளில் இதுவரை 628 பள்ளிகள் மட்டுமே NSP PORTAL இல் INO மற்றும் INSTITUTE HEAD இன் ஆதார் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இது மிகவும் வருந்தத்தக்கது ஆகும். NSPPORTAL இல் INO மற்றும் INSTITUTE HEAD இன் ஆதார் விவரங்கள் பதிவேற்றம் செய்தால் மட்டுமே சார்ந்தப்பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகைக்கான (MINORITY PRE MATRIC,POST MATRIC AND NMMS) விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய இயலும் மேலும் உரிய விவரங்களை NSP PORTAL இல் உள்ளீடு செய்து பதிவேற்றம் செய்வதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

எனவே அனைத்துவகைப்பள்ளித்தலைமை ஆசிரியர்களும் ( ஊராட்சி ஒன்றிய தொடக்க நடுநிலை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள்/ அரசு அரசு உதவி பெறும் உயர்நிலை/ மேல்நிலை சுயநிதிப்பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள்CBSE பள்ளிகள்) சிறப்பு கவனம் செலுத்தி 06:09.2021க்குள் தங்கள் பள்ளிகளின் INO மற்றும் INSTITUTE HEAD இன் ஆதார் விவரங்கள் NSP PORTAL இல் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Read More

கட்டணமில்லா பேருந்து பயணம் – அரசு / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் – மாணவ / மாணவியர்களுக்கு – 2021-2022 ஆம் கல்வியாண்டில் – கட்டணமில்லா – பேருந்து பயணம் தொடர நெறிமுறைகள் – வழங்குதல்

September 04, 2021 0
அரசு / நகரவை / ஆதிதிராவிட நல / நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,

கோவிட் – 19, தடையின்மையை தளர்த்தி, 01.09.2021 முதல், பள்ளிகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளதை முன்னிட்டு, அரசு உயர் / மேல்நிலை / நகரவை / ஆதிதிராவிட நல / நிதியுதவி / மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் சீருடை அல்லது சென்ற ஆண்டு பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துனர்களிடம் காண்பித்து தம் இருப்பிடங்களில் இருந்து பயிலும் பள்ளிவரை கட்டணமின்றி பயணிக்காலம்.

எனவே, வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள், மாணவ / மாணவியருக்கு, இப்பொருள் சார்ந்து தக்க அறிவுரை வழங்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
CLICK HETE TO DOWNLOAD FULL PDF
Read More

Post Top Ad

Your Ad Spot