CEO அலுவலக ஆய்வு உத்தரவு: தலைமையாசிரியர்கள் வரவேற்பு

முதன்மை கல்வி அலுவலகங்களில் (சி.இ.ஓ.,) நடக்கும் ஆண்டாய்வில் தலைமையாசிரியரின் 'கான்பிடன்ஷியல் ரிப்போர்ட்' (சி.ஆர்.,) பராமரிப்பை பார்வையிட உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து சி.இ.ஓ.,க் கள் அலுவலகங்களிலும் ஜூலை 31க்குள் ஆண்டாய்வு செய்ய கமிஷனர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். மதுரை, நாமக்கல்லில் இணை இயக்குனர் பி.குமார், திண்டுக்கல், துாத்துக்குடியில் இணை இயக்குனர் ஜெயக்குமார், தேனி, நீலகிரியில் இணை இயக்குனர் செல்வக்குமார், சிவகங்கை, திருப்பத்துாரில் இணை இயக்குனர் அமுதவல்லி, ராமநாதபுரத்தில் இணை இயக்குனர் சுகன்யா, விருதுநகர், தருமபுரியில் கோபிதாஸ் உட்பட கமிஷனர், இயக்குனர் என 40 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக 27 செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், 'டி.இ.ஓ.,க்கள் ஓய்வு அல்லது மாறுதல் பெற்று செல்லும்போது அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர், வட்டாரக் கல்வி அலுவலரின் சி.ஆர்., விவரம் பூர்த்தி செய்திருக்க வேண்டும்' என கமிஷனர் தெரிவித்துள்ளார்.இந்த சி.ஆர்., விவர பராமரிப்பை பெரும்பாலான டி.இ.ஓ.,க்கள் பின்பற்றுவதில்லை.

பதவி உயர்வு பேனல் தயாரிப்பின் போது தலைமையாசிரியர் அவர் பணியாற்றிய டி.இ.ஓ.,க்களை தேடி சென்று அறிக்கை பெற்று வரும் நடைமுறையே உள்ளது.தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'சி.ஆர்., பதிவு பராமரிப்பு அவசியம் என வலியுறுத்தினோம். பெரும்பாலும் பின்பற்றப்படவில்லை. தற்போது கமிஷனர் வலியுறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. இது தொடர வேண்டும்,' என்றனர்.
Post a Comment (0)
Previous Post Next Post