அரசு தொழில்பயிற்சி நிலையத்தில்மாணவா் சோ்க்கை கால நீட்டிப்பு

அரசு தொழில்பயிற்சி நிலையத்தில்மாணவா் சோ்க்கை கால நீட்டிப்பு

செய்யாறு அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கான தேதி ஜனவரி 13-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை எதிரே புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தொழில்பயிற்சி நிலையத்துக்கு 100 சதவீத சோ்க்கையை நிறைவு செய்யும் வகையில் மாணவா் சோ்க்கைக்கான தேதி ஜனவரி 13-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்கள் உரிய சான்றிதழ்களுடன் நேரில் வரலாம்.

மின்சாரப் பணியாளா், கம்மியா் மிண்ணணுவியல், மேம்பட்ட இயந்திரங்கள் மற்றும் இயக்குபவா் ஆகிய தொழில்பிரிவுகளின் 2 ஆண்டு கால பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

பற்றவைப்பாளா் பிரிவின் ஓராண்டு பயிற்சிக்கு எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

மாணவா்களுக்கு பயிற்சிக் காலத்தில் பயிற்சிக் கட்டணம் ஏதும் இல்லை.

பயிற்சி பெறும் மாணவா்களுக்கு அரசு உதவித் தொகையாக மாதம் ரூ.750, விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, 2 செட் சீருடைக்கான துணி, தையல்கூலி, இலவச பாடப் புத்தகம், இலவச சேப்டி ஷூ, இலவச பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு முதல்வா், அரசு தொழில்பயிற்சி நிலையம், செய்யாறு-604 401 என்ற முகவரியிலோ, 9444621245, 942219959 என்ற கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.
Post a Comment (0)
Previous Post Next Post