ஜன.13-இல் வேலைவாய்ப்பு முகாம்
பெங்களூரில் ஜன.13-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகமையின் சாா்பில் பெங்களுரு, மைசூரு சாலை, பட்டனகெரே மெட்ரோ ரயில் நிலையம் எதிரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனெஜ்மென்ட் ஸ்டடீஸ் வளாகத்தில் ஜன.13-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சாரா, நிதி, ஆட்டோமொபைல், மெக்கனிக்கல் துறைகளைச் சாா்ந்த 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. வேலைவாய்பு முகாமில் 18 முதல் 40 வயதுக்கு உள்பட்ட எஸ்எஸ்எல்சி, பியூசி, ஐடிஐ, பட்டயம் படித்தோா், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ளலாம்.
புதியவா்கள் முதல் ஓராண்டு வேலை அனுபவம் கொண்டவா்கள் பங்கேற்கலாம். வேலை தேடிவருவோா் தன்விவரக்குறிப்பு 6 படிகள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 6 படிகள், அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, பான் அட்டை, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் போன்ற அடையாள அட்டைகளின் நகல்களை கொண்டுவர வேண்டும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க இணையதளத்தில் முன்பதிவுசெய்யவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9008181896, 8095852257, 9964907444 என்ற தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது